இஸ்பாஹானில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை - ஈரான்

Friday, 19 April 2024 - 22:56

%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D++
ஈரானின் - இஸ்பாஹான் பகுதியில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என ஈரான் அறிவித்துள்ளது.

அந்த நாட்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஈரான் இராணுவ தளபதி செயட் அப்துல் ரஹீம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இஸ்பாஹான் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பொருட்களை அவதானித்த தங்களது நாட்டு தரப்பினர் அவற்றை சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் ஈரானிய வான்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் இஸ்பாஹான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டது.

இது சர்வதேச ரீதியாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips