மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவித்தல்

Wednesday, 20 September 2017 - 14:45

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் குறித்து மாகாண சபைகளிடம் வினவ அவசியமில்லை என சட்டமா அதிபர் கூறியதாக சபாநாயகர் அறிவித்தார்.
 
இன்று சமர்ப்பிக்கப்பட்ட குறித்த சட்டமூலத்துக்கு ஒன்றிணைந்த எதிரணியினர் எதிர்ப்பு வெளியிட்டதால், சபையில் முற்பகல் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதையடுத்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்காக சபை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் கூடியது.
 
இதன்போது, குறித்த சட்டமூலத்துக்கு துறைசார் மேற்பார்வை குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
 
இதேவேளை, பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவம் கோரி, ஆளுந்தரப்பு பெண் அமைச்சர் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இன்றைய சபைக்குள் பதாதைகளை காட்சியப்படுத்தியுள்ளனர்.
 
குறித்த சட்டமூலத்தில் பெண்களுக்கு நூற்றுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
 
இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், 'ஏன் எங்கள் மீது பயமா' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த பதாதைகளை குறித்த பெண் உறுப்பினர்கள் காட்சிப்படுத்தியதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
 
இந்த பதாதைகள் ஒன்றிணைந்த எதிரணியினரை நோக்கி காட்சிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips