மருத்துவமனைகளின் நாளாந்த செயற்பாடுகள் பாதிப்பு

Thursday, 22 August 2019 - 13:19

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாட்டிலுள்ள பல மருத்துவமனைகளின் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
தரம் குறைந்த ஒளடதம் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை எட்டு மணி முதல் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.

இதன் காரணமாக நாட்டிலுள்ள பல மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருத்துவ சிகிச்சை பிரிவு என்பனவற்றின் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும்இ சிறுவர்இ மகளீர், மஹரகம அபேக்ஷா மருத்துவமனை உள்ளிட்ட விஷேட தேவையுடைய மருத்துவமனைகளின் செயற்பாடுகள் வழமை போல் இடம்பெற்றுள்ளன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் திடீர் விபத்து பிரிவின் பிரதி பணிப்பாளர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips