‘இண்டர்பிராண்ட்’ : அப்பிள் முதலிடத்தில் !

Friday, 09 October 2015 - 10:31

%E2%80%98%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E2%80%99+%3A+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%21
வாடிக்கையாளர்களிடையேயான நன்மதிப்பு, நிதி ரீதியான செயற்பாடு மற்றும் வர்த்தகச் சின்னத்தின் ஸ்திரத்தன்மை ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டுமுன்னிலையில் உள்ள நூறு நிறுவனங்களின் பட்டியலொன்று வெளியாகியுள்ளது.

‘இண்டர்பிராண்ட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களே முன்னிலை பெற்றுள்ளன. வருடா வருடம் வெளியாகும் இப்பட்டியலில் உலகில் உள்ள சிறந்த நிறுவனங்கள் ( வர்த்தகச் சின்னம்) 100 பெயரிடப்படுகின்றன.

கடந்த முறையைப்போல இம்முறையும் அப்பிள் முதலிட த்தைப் பிடித்துள்ளது. அதன் சந்தைப் பெறுமதியை 170.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக ‘இண்டர்பிராண்ட்’ கணித்துள்ளது.

ஆப்பிளைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் இரண்டாம் இடத்தையும், கோகோ கோலா நிறுவனம் மூன்றாம் இடத்தையும் இந்த பட்டியலில் பிடித்துள்ளன.

இந்த நூறு நிறுவனங்களின் பட்டியலில், பதிமூன்று தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மைக்ரோசாப்ட் நான்காம் இடத்தையும், சேம்சங் ஏழாம் இடத்தையும், அமேசான் நிறுவனம் பத்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.

எனினும், பேஸ்புக் நிறுவனம் இப்பட்டியலில் 23 ஆம் இட த்தையே பிடித்துள்ளது . எனினும் அதன் பெறுமதி முன்னைய வருட த்தை விட 53 வீதத்தால் அதிகரித்துள்ளது.

முழுப்பட்டியலும் இதோ: 









Exclusive Clips