வடக்கு கிழக்கு மக்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி

Tuesday, 22 January 2019 - 8:26

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார சமூக வலுவூட்டல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த செயற்திட்டத்திற்கான 2000 மில்லியன் ரூபா நிதியையும் அமைச்சரவை அனுமதித்துள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

இந்த செயற்திட்டத்தின் கீழ் பொருளாதார உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களான கிராமிய வீதிகள், மீன்பிடி இறங்குதுறைகள், பயணிகள் இறங்குதுறைகள், மின்சார இணைப்புக்கள் என்பன இடம்பெறவுள்ளன.

இதுதவிர, சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தியும் புதிதாக மீள்குடியேற்றம் நடைபெறும் பிரதேசங்களில் நீர்வழங்கல், பாடசாலை அபிவிருத்தி, வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார சுயதொழில் வேலைவாய்ப்புத் திட்டங்களும் உள்ளடக்கப்படும்.

இந்த வாழ்வாதார திட்டங்களில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளி குடும்பங்கள், காணாமல் போனோரைக் கொண்ட குடும்பங்கள், கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட குடும்பங்கள், உள்ளக இடம்பெயர்ந்த குடும்பங்கள், தாயகம் திரும்பும் அகதிகள், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் என்பவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, இந்த செயற்திட்டத்தின் ஊடாக சிறுகைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான தொழினுட்பம், சந்தைப்படுத்தல் மற்றும் விவசாயத்துறை, கடற்தொழில்துறை, கைத்தொழில்துறை மற்றும் சேவைத்துறை தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகின்ற வசதிகளும் உள்ளடக்கப்படும் என தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.







Exclusive Clips