Top Story
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (16) உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்கு பிணை வழங்குவது தொடர்பிலான உத்தரவு அன்றைய தினம் வழங்கப்படும் என்றும் நீதவான் அறிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நீதிமன்றில் விடயங்களை சமர்ப்பித்த பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார, இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதால், இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தாமதமின்றி தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த விசாரணை நடவடிக்கைகளுக்காக எயர் பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்து வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் பிரதி மன்றாடியார் நாயகம்  மேலும் சுட்டிக்காட்டினார்.
விபரங்களுக்கு
General16 September 2026
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்
International News

லண்டன் பயணத்தில் கிடைத்தது என்ன? : நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் விஜய்!

International 16 September 2026
லண்டன் பயணத்தில் கிடைத்தது என்ன? : நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் விஜய்!

உடல் முழுவதும் பச்சை குத்தி கின்னஸ் சாதனை

International 16 September 2026
உடல் முழுவதும் பச்சை குத்தி கின்னஸ் சாதனை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சுகாதார அபாயம்: பாகிஸ்தான் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை

International 16 September 2026
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சுகாதார அபாயம்: பாகிஸ்தான் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை

இந்திய மதிப்பில் ரூ.100 கோடி மோசடி வழக்கு: தமிழக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை

International 16 September 2026
இந்திய மதிப்பில் ரூ.100 கோடி மோசடி வழக்கு: தமிழக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை

நேரலையில் கோர விபத்து : அமெரிக்காவில் செய்தி நிறுவன உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு!

International 16 September 2026
நேரலையில் கோர விபத்து : அமெரிக்காவில் செய்தி நிறுவன உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு!

மெக்காவை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது : சவூதி கூட்டுப்படை விளக்கம்!

International 16 September 2026
மெக்காவை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது : சவூதி கூட்டுப்படை விளக்கம்!

ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!

International 16 September 2026
ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்!

International 16 September 2026
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்!

ஈரான் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் பயணம்: சமரசத் தூதராகப் செயல்படுமா சீனா?

International 16 September 2026
ஈரான் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் பயணம்: சமரசத் தூதராகப் செயல்படுமா சீனா?

இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை

International 16 September 2026
இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை

அஞ்சல் மூல வாக்களிப்பு கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

International 16 September 2026
அஞ்சல் மூல வாக்களிப்பு கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் அறிக்கை: த.வெ.க வினருக்குக் கடும் கண்டனம்!

International 16 September 2026
நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் அறிக்கை: த.வெ.க வினருக்குக் கடும் கண்டனம்!

விண்வெளியில் புதிய ஆயுதம்: அமெரிக்காவின் அறிவிப்பால் பதற்றம்!

International 16 September 2026
விண்வெளியில் புதிய ஆயுதம்: அமெரிக்காவின் அறிவிப்பால் பதற்றம்!

சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: ஜித்தா தூதரகம் வெளியிட்ட அதிரடி தகவல்!

International 15 September 2026
சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: ஜித்தா தூதரகம் வெளியிட்ட அதிரடி தகவல்!

உணவுப் பட்டியலிலிருந்து மறையும் மாட்டிறைச்சி: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு செய்தி!

International 15 September 2026
உணவுப் பட்டியலிலிருந்து மறையும் மாட்டிறைச்சி: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு செய்தி!
More News
General16 September 2026

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச இன்று நள்ளிரவு (16) சிங்கப்பூருக்குப் புறப்பட்டார். எதிர்வரும் 24ஆம் திததி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வெளிநாடு சென்றதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் அவருடன் ரோஹித ராஜபக்சவின் அத்தையும் புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இன்று நள்ளிரவு 01.10-க்கு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து சிங்கப்பூர் எயார்லைன்ஸ் வானூர்தி SQ-469 மூலம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

விபரங்களுக்கு
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்
General16 September 2026

எல் நினோ தாக்கம் : அடுத்த 2 மாதங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரிய காலநிலை மாற்றம்!

எல் நினோ காலநிலையின் தாக்கத்தால் எதிர்வரும் மாதங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிலச்சரிவு அபாயம் கொண்ட மாவட்டங்களில் பேரிடர் ஆயத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற எல் நினோ காலநிலை தொடர்பான ஐந்தாவது சிறப்பு அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிலவிய வறட்சியான காலநிலை, எதிர்வரும் இரண்டு மாதங்களில் அதிக மழைப்பொழிவு கொண்ட ஈரப்பதமான காலநிலையாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அவசர காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பேரிடர் ஆயத்தப் பயிற்சிகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தியமான பேரிடர் நிலைமைகளின்போது மக்கள் துரிதமாகச் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில், பிரதேச செயலக மட்டத்தில் செயல்பாட்டு மையங்களை அமைப்பது தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
எல் நினோ தாக்கம் : அடுத்த 2 மாதங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரிய காலநிலை மாற்றம்!
General16 September 2026

மீண்டும் டெங்கு தலைதூக்கலாம் -விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பூச்சியியல் ஆய்வுகள் மூலம் டெங்கு பரவும் இடங்கள் தொடர்ந்தும் கண்டறியப்பட்டு வருகின்றன. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் நிலவிய அதிக ஆபத்தான சூழ்நிலையுடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. எனினும், எதிர்வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை, எல் நினோ காலநிலை மற்றும் இடைப் பருவமழை ஆகியவற்றால் டெங்கு மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதற்காக, நேற்று முதல் ஒரு வார கால சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னர் தினசரி 1,200 முதல் 1,300 வரை பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பினால் தற்போது தினசரி சராசரியாக 159 ஆகக் குறைந்துள்ளது. இந்தநிலையில் சிறப்பு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 6 மாகாணங்கள், 15 மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேவேளை, அதிகாரிகள் நிலமையை விரைவாகக் கட்டுப்படுத்தியிருந்தாலும், மாவட்டங்கள் தோறும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்கள் இன்னமும் கண்டறியப்படுவதால் பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர எச்சரித்துள்ளார்.

விபரங்களுக்கு
மீண்டும் டெங்கு தலைதூக்கலாம் -விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
General16 September 2026

களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

அனுராதபுரம் புனித நகருக்குச் செல்வதற்காக களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்தை நோக்கி தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள், தொடருந்து மோதியதில் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 53 மற்றும் 58 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!
General16 September 2026

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு : இறுதி கெடு அறிவிப்பு - தவறினால் அபராதம் மற்றும் வட்டி!

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதிப் பணத்தைச் செலுத்துவதற்கான கடைசித் திகதி 2026 செப்டம்பர் 30 என வரி செலுத்துவோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது. அபராதங்கள் மற்றும் வட்டி விதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், வருமான வரி செலுத்த வேண்டிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது வரிகளை செப்டம்பர் 30-க்கு முன்னதாக அல்லது அன்றைய தினத்திற்குள் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு நிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி மற்றும் பங்கான்மை வருமான வரி ஆகியவற்றுக்குப் பொருந்தும். வரிகளை IRD இன் இணையவழி வரி செலுத்தும் தளம் (Online Tax Payment Platform) மூலமாகச் செலுத்தலாம். அத்துடன், நிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி மற்றும் பங்கான்மை வருமான வரிகளை இலங்கை வங்கியின் (Bank of Ceylon) எந்தவொரு கிளையிலும் செலுத்த முடியும். வரிகளைச் செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படும் என்றும், தாமதமாகச் செலுத்துவதற்காக விதிக்கப்படும் வட்டியைத் தள்ளுபடி செய்யவோ குறைக்கவோ முடியாது என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது. இந்தநிலையில், உதவி தேவைப்படும் வரி செலுத்துவோர் 1944 என்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு : இறுதி கெடு அறிவிப்பு - தவறினால் அபராதம் மற்றும் வட்டி!
International News

லண்டன் பயணத்தில் கிடைத்தது என்ன? : நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் விஜய்!

International 16 September 2026
லண்டன் பயணத்தில் கிடைத்தது என்ன? : நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் விஜய்!

உடல் முழுவதும் பச்சை குத்தி கின்னஸ் சாதனை

International 16 September 2026
உடல் முழுவதும் பச்சை குத்தி கின்னஸ் சாதனை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சுகாதார அபாயம்: பாகிஸ்தான் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை

International 16 September 2026
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சுகாதார அபாயம்: பாகிஸ்தான் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை

இந்திய மதிப்பில் ரூ.100 கோடி மோசடி வழக்கு: தமிழக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை

International 16 September 2026
இந்திய மதிப்பில் ரூ.100 கோடி மோசடி வழக்கு: தமிழக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை

நேரலையில் கோர விபத்து : அமெரிக்காவில் செய்தி நிறுவன உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு!

International 16 September 2026
நேரலையில் கோர விபத்து : அமெரிக்காவில் செய்தி நிறுவன உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு!

மெக்காவை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது : சவூதி கூட்டுப்படை விளக்கம்!

International 16 September 2026
மெக்காவை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது : சவூதி கூட்டுப்படை விளக்கம்!

ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!

International 16 September 2026
ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்!

International 16 September 2026
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்!

ஈரான் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் பயணம்: சமரசத் தூதராகப் செயல்படுமா சீனா?

International 16 September 2026
ஈரான் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் பயணம்: சமரசத் தூதராகப் செயல்படுமா சீனா?

இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை

International 16 September 2026
இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை

அஞ்சல் மூல வாக்களிப்பு கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

International 16 September 2026
அஞ்சல் மூல வாக்களிப்பு கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் அறிக்கை: த.வெ.க வினருக்குக் கடும் கண்டனம்!

International 16 September 2026
நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் அறிக்கை: த.வெ.க வினருக்குக் கடும் கண்டனம்!

விண்வெளியில் புதிய ஆயுதம்: அமெரிக்காவின் அறிவிப்பால் பதற்றம்!

International 16 September 2026
விண்வெளியில் புதிய ஆயுதம்: அமெரிக்காவின் அறிவிப்பால் பதற்றம்!

சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: ஜித்தா தூதரகம் வெளியிட்ட அதிரடி தகவல்!

International 15 September 2026
சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: ஜித்தா தூதரகம் வெளியிட்ட அதிரடி தகவல்!

உணவுப் பட்டியலிலிருந்து மறையும் மாட்டிறைச்சி: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு செய்தி!

International 15 September 2026
உணவுப் பட்டியலிலிருந்து மறையும் மாட்டிறைச்சி: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு செய்தி!
Sports Stories
Explore More
ஐபிஎல் ஏலத்தை மீண்டும்  இந்தியாவில் நடத்த திட்டம்

ஐபிஎல் ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த திட்டம்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 2027 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்தை இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐபிஎல் தொடரின் மூலம் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்படுகின்றனர்.அதன்படி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், அணிகளுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்வதற்காக ஆண்டுதோறும் மெகா ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் இந்தியாவில் நடைபெற்ற நிலையில், 2024ஆம் ஆண்டு டுபாயிலும், 2025ஆம் ஆண்டு ஜெட்டாவிலும், 2026ஆம் ஆண்டு அபுதாபியிலும் ஏலங்கள் நடைபெற்றன.இந்தநிலையில், அடுத்த ஆண்டுக்கான ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அணிகளின் நிர்வாகக் குழுவினர் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களை கருத்தில்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.எவ்வாறாயினும், 2027ஆம் ஆண்டுக்கான ஏலத்தை இந்தியாவில் நடத்த திட்டமிட்ட போதிலும், எந்த நகரில் நடத்தப்படும் என்பது குறித்த முடிவுகள் உறுதி செய்யப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை 2028ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தை மீண்டும் வெளிநாட்டில் நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபரங்களுக்கு
முதல் இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

முதல் இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சவுத்தம்டனில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ஓட்டங்களை பெற்றது. 255 ஓட்டங்கள் என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியின் தலைவர் ஹெரி புரூக் 49 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 6 ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களை விளாசினார். இவருடன் இணைப்பாட்டத்தில் இருந்த ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 80 ஓட்டங்களை குவித்தார். இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர் 12 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 33 ஓட்டங்களை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 எனக் முன்னிலை பெற்றுள்ளது.

விபரங்களுக்கு
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இருபதுக்கு 20 தொடரை வென்றது இந்தியா: டெல்லி போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி!

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இருபதுக்கு 20 தொடரை வென்றது இந்தியா: டெல்லி போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. டெல்லி அருண் ஜேட்லி (Arun Jaitley) மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் (Toss) வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இப்ராஹிம் சத்ரான் (Ibrahim Zadran) 37 ஓட்டங்களும், டார்விஷ் ரசூலி (Darwish Rasooli) 26 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 160 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்கள் மற்றும் 4 நான்கு ஓட்டங்களுடன் 57 ஓட்டங்களை பெற்றார். மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 39 ஓட்டங்களை பெற்றார். அடுத்து வந்த இஷான் கிஷன் 38 ஓட்டங்களை பெற்ற நிலையில், இந்திய அணி 14.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்று இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுத் தொடரை உறுதி செய்துள்ளது. போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நிதிஷ் குமார் ரெட்டி 'ஆட்டநாயகன்' (Player of the Match) விருதைப் பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி இருபதுக்கு 20 போட்டி செப்டம்பர் 17 ஆம் திகதி அன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இங்கிலாந்து எதிர் இலங்கை : சவுத்தம்டனில் இங்கிலாந்து அதிரடி

இங்கிலாந்து எதிர் இலங்கை : சவுத்தம்டனில் இங்கிலாந்து அதிரடி

சவுத்தம்டனில் நடைபெற்றுவரும் முதல் இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணியின் தலைவர் ஹெரி புரூக் 49 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 06 ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களை விளாசினார். இவருடன் இணைப்பாட்டத்தில் இருந்த ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள் மற்றம் , 3 ஆறு ஓட்டங்களுடன் 80 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க (1/34) மற்றும் இஷான் மலிங்க (1/41) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இலங்கை அணிக்கு 255 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
இந்திய வீராங்கனை கிராந்தி கௌட்டுக்கு அபராதம் விதிப்பு!

இந்திய வீராங்கனை கிராந்தி கௌட்டுக்கு அபராதம் விதிப்பு!

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் 2026 இறுதிப்போட்டியில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய சகலதுறை ஆட்ட வீராங்கனை கிராந்தி கௌட் (Kranti Gaud) தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.பந்துவீச்சாளர்கள் அல்லது களத்திலிருக்கும் வீரர்கள், ஆட்டமிழந்து செல்லும் துடுப்பாட்ட வீரரை அவமதிக்கும் வகையிலோ அல்லது கோபமூட்டும் வகையிலோ சைகை செய்வதைத் தடுக்கும் நடத்தை விதிகளின் பிரிவை கிராந்தி கௌட் மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இலங்கை அணியின் முதலாவது ஓவரில், ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை இமேஷா துலானியை ஆட்டமிழக்கச் செய்த கிராந்தி கௌட், அவர் பார்வையாளர் அரங்கை நோக்கிச் செல்லுமாறு சுட்டிக்காட்டிச் சைகை செய்தார்.இந்தச் சம்பவத்துக்காக அவருக்குப் போட்டித் தொகையிலிருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவரது ஒழுங்கு நடவடிக்கை பதிவில் ஒரு தகுதியீர்ப்புப் புள்ளியும் (Demerit point) சேர்க்கப்பட்டது.போட்டியின் நடுவர் சுப்ரியா ராணி தாஸ் விதித்த இந்த தண்டனையைக் கிராந்தி கௌட் ஒப்புக்கொண்டதால், முறைப்படியான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

விபரங்களுக்கு
ஆசிய விளையாட்டுப் போட்டி: பங்களாதேஷை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வடகொரியா மகளிர் கால்பந்து அணி அபார வெற்றி!

ஆசிய விளையாட்டுப் போட்டி: பங்களாதேஷை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வடகொரியா மகளிர் கால்பந்து அணி அபார வெற்றி!

ஜப்பானின் ஓசாக்கா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கால்பந்து ஆரம்ப ஆட்டத்தில் வடகொரிய மகளிர் அணி 10-0 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. வடகொரிய ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆதரவு அளித்த நிலையில் வடகொரியா இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இளையோர் சர்வதேச போட்டிகளில் தொடர் சாதனைகளைப் படைத்துள்ள வடகொரிய அணி இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியிலேயே 7 கோல்களை அடித்து பங்களாதேஷை வீழ்த்தியது. இந்தநிலையில், குழு எஃப் (Group F) பிரிவில் இடம்பெற்றுள்ள வடகொரிய மகளிர் அணி செப்டம்பர் 21 அன்று தென்கொரியாவை எதிர்கொள்கிறது. ஆண்கள் அணி புதன்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் சீனாவை எதிர்த்து விளையாடவுள்ளது. நாகோயா-ஐச்சி (Nagoya-Aichi) பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் செப்டம்பர் 19 அன்று உத்தியோகபூர்வ தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதில் 14 விளையாட்டுப் பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்கள் பங்கேற்கின்றனர்.

விபரங்களுக்கு
“பாகிஸ்தானுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்”: ஆசியக் கிண்ண சர்ச்சைக்குப் பின் மதன் லால் கருத்து!

“பாகிஸ்தானுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்”: ஆசியக் கிண்ண சர்ச்சைக்குப் பின் மதன் லால் கருத்து!

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் சபையின் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வியிடம் (Mohsin Naqvi) இருந்து கிண்ணத்தை வாங்க மறுத்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மதன் லால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணியின் வீரரான மதன் லால், “மீண்டும் அதே பழைய கதைதான் அரங்கேறியுள்ளது. நாம் தொடர்ந்து இப்படியே நடந்துகொள்ளப் போகிறோம் என்றால், பாகிஸ்தானுடன் தொடர்களில் விளையாடுவதையே தவிர்த்துவிடலாம். இருப்பினும் இது கிரிக்கெட் சபையின் முடிவு என்பது எனக்குத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார். ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) தலைமையிலான இந்திய மகளிர் அணி, இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 8 ஆவது முறையாக ஆசியக் கிண்ணத் தொடரை கைப்பற்றிய போதிலும், பரிசு அளிப்பு விழாவில் நக்வியிடம் இருந்து கிண்ணத்தை பெற மைதானத்திற்கு வரவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சராகவுள்ள மொஹ்சின் நக்வியிடம் இருந்து ஆசியக் கிண்ணத்தைப் பெற மறுப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு இந்திய ஆண்கள் அணி நக்வியிடம் இருந்து கிண்ணத்தை வாங்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2026 ஆம் ஆண்டில் தொடர்ந்து வலிமையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.அதன்படி, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ஈட்டப்பட்ட மதிப்பிடப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 10.49 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.5 சதவீத அதிகரிப்பாகும்.ஒட்டுமொத்த ஏற்றுமதிச் செயல்பாட்டிற்குப் பொருட்கள் ஏற்றுமதியே அதிக பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தத் துறை 8.19 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.05 சதவீத அதிகரிப்பாகும். இலங்கை சுங்கத் திணைக்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி மதிப்புகளின் அடிப்படையில், 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. எனினும், இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 1.3 சதவீத சிறிய வீழ்ச்சியைக் குறிக்கிறது.இதற்கிடையில், சேவை ஏற்றுமதித் துறையும் தனது நேர்மறையான வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இந்தத் துறை 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிடப்பட்ட வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.02 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேவை ஏற்றுமதியானது தொடர்ந்து விரிவடைந்து, 2026 ஜூலை மாதத்தில் சுமார் 351.92 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.75 சதவீத அதிகரிப்பாகும்.இதன் விளைவாக, 2026 ஜூலை மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டின் மூலமான இலங்கையின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி வருமானம் சுமார் 1.64 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
20 வருட காதல் பயணம் : மீண்டும் ஒருமுறை திருமண பந்தத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா!

20 வருட காதல் பயணம் : மீண்டும் ஒருமுறை திருமண பந்தத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா!

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முன்னிட்டு மீண்டும் ஒருமுறை திருமண உறுதிமொழி புதுப்பிப்பு நிகழ்வை (Vow Renewal) நடத்தியுள்ளனர். சூர்யா - ஜோதிகா தம்பதியினர் கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்நிலையில், தங்களது 20ஆவது திருமண ஆண்டு நிறைவையொட்டி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த சிறப்பு நிகழ்வை நடத்தியுள்ளனர். கிறிஸ்தவ தேவாலய திருமண பாணியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜோதிகா வெள்ளை நிற திருமண ஆடையிலும், சூர்யா வெள்ளை நிற உடையிலும் கலந்துகொண்டனர். நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சூர்யா - ஜோதிகா தம்பதியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த நிகழ்வு தொடர்பான நெகிழ்ச்சியான பதிவொன்றை ஜோதிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ...” என்ற பாடல் வரிகளுடன், தங்களது 20 ஆண்டுகால அன்பு மற்றும் வாழ்க்கைப் பயணத்தை நினைவு கூர்ந்துள்ளார். தற்போது சூர்யா - ஜோதிகாவின் திருமண உறுதிமொழி புதுப்பிப்பு நிகழ்வின் நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதையடுத்து, திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
ஒரே வருடத்தில் திருமணம் கைக்கூடும்: 'புனித மருதாணி' பெறக் குவிந்த மக்கள்!

ஒரே வருடத்தில் திருமணம் கைக்கூடும்: 'புனித மருதாணி' பெறக் குவிந்த மக்கள்!

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஜெய்ப்பூர் மோதி துங்ரி கணேஷ் கோவிலில் 'புனித மருதாணி' (Sacred Henna) பெறுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருதாணியைப் பெற்றுச் சென்றுள்ளனர். திருமணம் ஆகாதவர்கள் இந்தச் சிறப்பு மருதாணியை அணிந்து கொண்டால், அடுத்த ஒரு வருடத்திற்குள் அவர்களுக்குப் பொருத்தமான வரன் அமைந்து திருமணம் நிச்சயமாகும் என்பது பக்தர்களின் தீவிர நம்பிக்கையாகும். இது தொடர்பான ஆளில்லா வானுர்தி (Drone) பதிவுக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலைச் சுற்றி மிக நீண்ட வரிசையில் கட்டுக்கோப்புடன் காத்திருந்து மருதாணியைப் பெற்றுச் சென்றுள்ளனர். கோவில் நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்ட சுமார் 3,500 கிலோ எடையுள்ள மருதாணி, பக்தர்களின் அதிகப்படியான கூட்டத்தின் காரணமாக வெறும் மூன்று மணி நேரத்திற்குள் முழுமையாகப் வழங்கி முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
IMAX வசூலில் வரலாறு படைத்த ‘The Odyssey’ திரைப்படம்!

IMAX வசூலில் வரலாறு படைத்த ‘The Odyssey’ திரைப்படம்!

பிரபல சர்வதேச இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan) இயக்கத்தில் உருவாகியுள்ள ‘The Odyssey’ திரைப்படம், IMAX திரையரங்குகளில் மட்டும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக வசூலித்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், IMAX திரையரங்குகளில் மட்டும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்த உலகின் முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘The Odyssey’ பெற்றுள்ளது. இதற்கு முன்னர், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘Avatar’ திரைப்படம் IMAX திரையரங்குகளில் 271 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், அதன் இரண்டாம் பாகமான ‘Avatar: The Way of Water’ 259 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வசூலித்திருந்தது. இந்நிலையில், அந்த வசூல் சாதனைகளை முறியடித்துள்ள ‘The Odyssey’, IMAX வசூலில் புதிய சாதனையைப் படைத்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்களுக்கு உலகளவில் காணப்படும் வரவேற்பையும், IMAX தொழில்நுட்பத்தில் திரைப்படங்களைப் பார்ப்பதற்கான ரசிகர்களின் ஆர்வத்தையும் இந்த வசூல் சாதனை வெளிப்படுத்துவதாக சினிமா தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

விபரங்களுக்கு
ஒரே திகதியில் விஜய் - த்ரிஷா & ஜேசன் சஞ்சய் : ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து!

ஒரே திகதியில் விஜய் - த்ரிஷா & ஜேசன் சஞ்சய் : ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து!

ஒக்டோபர் 2ஆம் திகதி காந்தி ஜெயந்தி மட்டுமல்லாது, நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா ரசிகர்களுக்கும் சிறப்பான நாளாக அமையவுள்ளது. விஜய் – த்ரிஷா நடிப்பில் பேரரசு இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான ‘திருப்பாச்சி’ திரைப்படம் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒக்டோபர் 2ஆம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் – த்ரிஷா கெமிஸ்ட்ரி மற்றும் அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட காட்சிகளுக்காக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படத்தின் மறு வெளியீட்டுக்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படமும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 31ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் வெளியீட்டுத் திகதி மாற்றப்பட்டது. இதனால் ஒக்டோபர் 2ஆம் திகதி ‘திருப்பாச்சி’ மறு வெளியீடும், ‘சிக்மா’ திரைப்பட வெளியீடும் ஒரே நாளில் இடம்பெறவுள்ளதால், விஜய், த்ரிஷா மற்றும் ஜேசன் சஞ்சய் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக அமையவுள்ளது.

விபரங்களுக்கு
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், 'சீயான்' விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் (63 ஆவது படம் ) தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு, இந்தப் படத்திற்கு 'பவர் ஹவுஸ்' (Power House) எனப் பெயரிடப்பட்டுள்ளது.'இருமுகன்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஆனந்த் சங்கருடன் விக்ரம் இரண்டாவது முறையாக இணையும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தலைப்பு அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு

"ராஜ ராஜ சோழன் நான்" பாடலைத் தமிழில் பாடி அசத்திய மிருணாள் தாக்குர்: வைரலாகும் காணொளி!

இந்தியளவில் நட்சத்திர நடிகையாக ஜொலிப்பதுடன் ஹிந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாக்குர் ஆவார். பிரபலமான நடிகையென்பதால் எப்போதும் அவரைச் சுற்றி காதல் கிசுகிசுக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன், நடிகர் தனுஷும் மிருணாளும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. மேலும், கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வாலை மிருணாள் டேட்டிங் செய்வதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மிருணாள் தாக்குர் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவான "ராஜ ராஜ சோழன் நான்" பாடலை ஒலிக்கவிட்டு அதனுடன் இணைந்து தமிழிலேயே இவரும் பாடியுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

விபரங்களுக்கு
'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் வெளியானது

'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் வெளியானது

சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் திரையரங்கு வெளியீட்டுத் திகதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் திகதி 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி வருகிறது. பிரபல இயக்குநர் சுந்தர் சி இப்படத்தை இயக்குவதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விபரங்களுக்கு
ஏழையாக இறப்பது உன் தவறு – வாழ்க்கையில் முன்னேறுவது குறித்து நடிகர் கருணாஸ் கருத்து!

ஏழையாக இறப்பது உன் தவறு – வாழ்க்கையில் முன்னேறுவது குறித்து நடிகர் கருணாஸ் கருத்து!

சென்னையில் உணவுக்கே வழியில்லாமல் தவித்த நிலையை நினைவுகூர்ந்து, வாழ்க்கையில் சாதிப்பது குறித்த தனது கருத்துக்களை நடிகர் கருணாஸ் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ஒரு காலத்தில் தங்க இடமின்றியும், மாற்றுத் துணி இல்லாமலும், அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையிலும் தான் சென்னையில் வாழ்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், இன்று 26 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது குடும்பத்தைக் கௌரவமாக வாழ வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "வீடு, பங்களா, பீச் ஹவுஸ் போன்ற ஆடம்பரங்களைப் பற்றி யாரும் நாளைக்கு பேசப் போவதில்லை. நீ என்ன சாதித்தாய்? எத்தனை படங்களில் நடித்தாய்? என்ன நிரூபித்தாய்? என்ன விருதுகளைப் பெற்றாய்? என்பதை மட்டுமே மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மனிதர்கள் தங்களது கடைசி காலத்தில் வறுமையில் சிக்காமலும், மருத்துவச் செலவுக்குக்கூட வழியில்லாமல் போகாமலும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். "ஏழையாகப் பிறப்பது உன்னுடைய தவறு இல்லை; ஆனால் ஏழையாக இறப்பது உன்னுடைய தவறு மட்டும்தான்" என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////