International News

பீர்க்கு தட்டுப்பாடு - எங்குத் தெரியுமா?

International 03 October 2025
பீர்க்கு தட்டுப்பாடு - எங்குத் தெரியுமா?

குழந்தைகள் அறுவரின் உயிரைப் பறித்ததா இருமல் மருந்து?

International 03 October 2025
குழந்தைகள் அறுவரின் உயிரைப் பறித்ததா இருமல் மருந்து?

ட்ரம்புக்கும் புடினுக்கும் என்ன தான் பிரச்சினை? வலுக்கும் முரண்பாடு

International 03 October 2025
ட்ரம்புக்கும் புடினுக்கும் என்ன தான் பிரச்சினை? வலுக்கும் முரண்பாடு

மென்செஸ்டர் பகுதியில் யூதர்களின் வழிபாட்டுத் தலம் ஒன்றுக்கு முன்னால் கத்திக்குத்து

International 02 October 2025
மென்செஸ்டர் பகுதியில் யூதர்களின் வழிபாட்டுத் தலம் ஒன்றுக்கு முன்னால் கத்திக்குத்து

இந்தியருக்கு டுபாயில் அடித்த அதிர்ஷ்டம்

International 02 October 2025
இந்தியருக்கு டுபாயில் அடித்த அதிர்ஷ்டம்

யானையைத் திருடி பல இலட்சங்களுக்கு விற்று பணம் பார்த்த கும்பல்

International 02 October 2025
யானையைத் திருடி பல இலட்சங்களுக்கு விற்று பணம் பார்த்த கும்பல்

54 வயதில் 17 ஆவது குழந்தை

International 02 October 2025
54 வயதில் 17 ஆவது குழந்தை

ஆப்கானிஸ்தானியர்கள் மகிழ்ச்சியில்

International 01 October 2025
ஆப்கானிஸ்தானியர்கள் மகிழ்ச்சியில்

மருத்துவர்களின் கிறுக்கலுக்குத் தடை: கையெழுத்தைத் திருத்த இந்திய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

International 01 October 2025
மருத்துவர்களின் கிறுக்கலுக்குத் தடை: கையெழுத்தைத் திருத்த இந்திய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரான்ஸுக்கான தென்னாப்பிரிக்கத் தூதுவர் சடலமாக மீட்பு

International 01 October 2025
பிரான்ஸுக்கான தென்னாப்பிரிக்கத் தூதுவர் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இணையுமாறு கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் அழைப்பு

International 01 October 2025
அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இணையுமாறு கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் அழைப்பு

தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

International 01 October 2025
தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

இந்தியாவில் 15 நாட்களில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு: இருமல் மருந்துகள் காரணம் என சந்தேகம்

International 01 October 2025
இந்தியாவில் 15 நாட்களில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு: இருமல் மருந்துகள் காரணம் என சந்தேகம்

UPDATE: பிலிப்பைன்ஸில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு

International 01 October 2025
UPDATE: பிலிப்பைன்ஸில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு

பாரிய கிரிப்டோகரன்சி மோசடி: 'செல்வத்தின் தெய்வம்' குற்றவாளி என தீர்ப்பு

International 30 September 2025
பாரிய கிரிப்டோகரன்சி மோசடி: 'செல்வத்தின் தெய்வம்' குற்றவாளி என தீர்ப்பு
More News
General03 October 2025

பீர் குடித்தால் நுளம்புகள் கடிக்கும் - ஏன் தெரியுமா?

பீர் குடிப்பவர்களை நுளம்புகள் கடிக்கும் வாய்ப்பு அதிகம் என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.    நெதர்லாந்தில் உள்ள ராட்பூட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு ஒன்று, ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது.    ஆராய்ச்சியாளர்கள் ஒரு இசை விழாவில் பங்கேற்ற சுமார் 500 பேரை தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.    பங்கேற்பாளர்கள் அனைவரும் அவர்களின் சுகாதாரம், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் விழாவில் அவர்களின் நடத்தை குறித்த வினாப்பட்டியலை நிரப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.    அதன்பிறகு, பங்கேற்பாளர்களின் கைகள் நுளம்புகள் நிறைந்த, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு கூண்டுக்குள் விடப்பட்டன. இந்தக் கூண்டில் சிறிய துளைகள் இருந்ததால், நுளம்புகளால் கையின் வாசனையை உணர முடிந்ததே தவிர, கடிக்க முடியவில்லை.    எத்தனை நுளம்பகள் கடிக்க முயற்சித்தன என்பதைக் கண்காணிக்க வீடியோ கேமரா பயன்படுத்தப்பட்டது.    ஆய்வில் பீர் அருந்திய பங்கேற்பாளர்களை, பீர் அருந்தாமல் இருந்தவர்களை விட 1.35 மடங்கு அதிகமாக நுளம்புகள் ஈர்த்தன என்று கண்டறியப்பட்டுள்ளது.    நுளம்புகள் பீர் குடிப்பவர்களுக்கு அதிகப்படியான விருப்பத்தைக் காட்டின. ஒரு கிளாஸ் பீர் அருந்துவது உடலில் வியர்வையை அதிகரிக்கச் செய்கிறது மற்றும் உடலில் இருந்து எத்தனால் வெளியீட்டை ஏற்படுத்துகிறது. இவை இரண்டும் நுளம்புகளை ஈர்க்கும் சிக்னல்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.    நுளம்புகளின் ஈர்ப்புக்குப் பீர் மட்டுமல்லாமல் வேறு பல காரணிகளும் கண்டறியப்பட்டன.    தனியாக உறங்கியவர்களை விட துணையுடன் உறங்குபவர்கள் நுளம்புகளின் இலக்காக மாற அதிக வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டது.    தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, உடல் வெப்பநிலை உயர்ந்து, லாக்டிக் அமிலம் வெளியேறுகிறது. இது நுளம்புகளுக்கு மிகவும் கவர்ச்சியான சமிக்ஞையை வெளியிடுகிறது.    மனித தோலில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு நுளம்புக் கடியை தூண்டுகிறது. குறிப்பாக, கணுக்கால் மற்றும் கால்களில் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும் இடங்களை நோக்கி நுளம்புகள் ஈர்க்கப்படுகின்றன.    இருப்பினும், தோலில் பல வகையான பாக்டீரியாக்கள் இருப்பது சில சமயங்களில் பூச்சிகளை விலக்கி வைக்கவும் கூடும். ஆய்வில் சில பழக்கவழக்கங்கள் நுளம்புக் கடியை குறைப்பதும் கண்டறியப்பட்டது.    சமீபத்தில் குளித்தவர்களிடமிருந்து நுளம்புகள் விலகி இருந்தன. சன்ஸ்கிரீன் பூசிய நபர்களை நுளம்புகள் தவிர்த்தன.    இதைத் தொடர்ந்து பயன்படுத்துவது நுளம்பு கடியை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவெடுத்தனர்.    மது மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்ப்பது, தனியாக உறங்குவது மற்றும் அடிக்கடி சன்ஸ்கிரீன் பூசுவது போன்ற விவேகமான பழக்கவழக்கங்கள் நுளம்புக் கடியின் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.    நுளம்புகள் வெறும் எரிச்சலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்பி பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன.    காலநிலை மாற்றத்தால் வெப்பமான சூழ்நிலைகள் உருவாவதால், ஐரோப்பா போன்ற பகுதிகளில் கூட நுளம்புகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழல் உருவாகிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

விபரங்களுக்கு
பீர் குடித்தால் நுளம்புகள் கடிக்கும் - ஏன் தெரியுமா?
General03 October 2025

பயணச்சீட்டு வழங்காத பேருந்து நடத்துநர்கள் மீது சட்ட நடவடிக்கை

பயணச்சீட்டு வழங்காத 33 பேருந்து நடத்துநர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜாசிங்க தெரிவித்துள்ளார்.    ஒக்டோபர் முதலாம் திகதி, 347 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் 22 பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.    நேற்று 118 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் 11 பேருந்துகள் பயணச்சீட்டு வழங்காமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டதாகவும் காமினி ஜாசிங்க தெரிவித்தார்.    முன்னர், சுமார் ஐம்பது சதவீத பயணச்சீட்டுகள் வழங்கப்படவில்லை.    தற்போது நிலைமை திருப்திகரமான நிலையை எட்டியுள்ளது.    சுமார் இரண்டு வாரங்களில் இந்த நிலைமை மிகக் குறைந்த சதவீதத்திற்குக் கொண்டுவரப்படும் என்று நாங்கள் நினைக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.    இது தொடர்பான சோதனைகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.    பயணச்சீட்டு வழங்காத நடத்துநர்களின் உரிமங்களை மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் என்றும், ஒரு நாள் பயிற்சியும் வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

விபரங்களுக்கு
பயணச்சீட்டு வழங்காத பேருந்து நடத்துநர்கள் மீது சட்ட நடவடிக்கை
General03 October 2025

நாடளாவிய ரீதியில் இத்தனை வீதமானோர் மதுபானத்துக்கு அடிமையா?

இலங்கை மக்கள் தொகையில் 21 வீதமானோர் மதுபானத்துக்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மது அருந்துவதால் ஏற்படும் நோய் நிலைமைகளால் ஆண்டுதோறும் சுமார் 22,000 இலங்கையர்கள் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மது அருந்துதல் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் மது அருந்துதல் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. மது அருந்துவதன் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட நாடு தழுவிய தொடர்ச்சியான திட்டங்களுடன் உலக மது ஒழிப்பு தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.

விபரங்களுக்கு
நாடளாவிய ரீதியில் இத்தனை வீதமானோர் மதுபானத்துக்கு அடிமையா?
General03 October 2025

மாணவர்கள் குழுக்களிடையே தாக்குதல் - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலையில் இரண்டு மாணவர்கள் குழு மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 மாணவர்களை, எதிர்வரும் 10ஆம் திகதிவரை கல்முனை சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் காவலில் வைக்க கந்தளாய் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், சந்தேக நபர்கள் இன்று திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.    குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று மாணவர்களில் இருவர் அளித்த வாக்குமூலங்களில் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட 8 மாணவர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.    மேலும் தாக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரை மருத்துவ பரிசோதனைக்காக நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் அனுப்புமாறு நீதிவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.    அத்தோடு, தாக்குதலுக்குள்ளான மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.    கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர், முன்னதாக சிறுவர் நன்னடத்தை மையத்தில் இருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பாடசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.    முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்தில் கொண்ட நீதவான், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

விபரங்களுக்கு
மாணவர்கள் குழுக்களிடையே தாக்குதல் - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
General03 October 2025

மகனுக்காக நீதிமன்றை நாடிய கெஹல்பத்தர பத்மேவின் தாயார்

கெஹல்பத்தர பத்மேவின் தாயார் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனது மகனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு சட்டவிரோதமானது என்று அறிவித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறைக்கு வெளியே தனது மகன் வேறு எந்த இடத்திற்கும் மாற்றப்படுவதைத் தடுக்க இடைக்கால உத்தரவையும் அவர் கோரியுள்ளார்.

விபரங்களுக்கு
மகனுக்காக நீதிமன்றை நாடிய கெஹல்பத்தர பத்மேவின் தாயார்
International News

பீர்க்கு தட்டுப்பாடு - எங்குத் தெரியுமா?

International 03 October 2025
பீர்க்கு தட்டுப்பாடு - எங்குத் தெரியுமா?

குழந்தைகள் அறுவரின் உயிரைப் பறித்ததா இருமல் மருந்து?

International 03 October 2025
குழந்தைகள் அறுவரின் உயிரைப் பறித்ததா இருமல் மருந்து?

ட்ரம்புக்கும் புடினுக்கும் என்ன தான் பிரச்சினை? வலுக்கும் முரண்பாடு

International 03 October 2025
ட்ரம்புக்கும் புடினுக்கும் என்ன தான் பிரச்சினை? வலுக்கும் முரண்பாடு

மென்செஸ்டர் பகுதியில் யூதர்களின் வழிபாட்டுத் தலம் ஒன்றுக்கு முன்னால் கத்திக்குத்து

International 02 October 2025
மென்செஸ்டர் பகுதியில் யூதர்களின் வழிபாட்டுத் தலம் ஒன்றுக்கு முன்னால் கத்திக்குத்து

இந்தியருக்கு டுபாயில் அடித்த அதிர்ஷ்டம்

International 02 October 2025
இந்தியருக்கு டுபாயில் அடித்த அதிர்ஷ்டம்

யானையைத் திருடி பல இலட்சங்களுக்கு விற்று பணம் பார்த்த கும்பல்

International 02 October 2025
யானையைத் திருடி பல இலட்சங்களுக்கு விற்று பணம் பார்த்த கும்பல்

54 வயதில் 17 ஆவது குழந்தை

International 02 October 2025
54 வயதில் 17 ஆவது குழந்தை

ஆப்கானிஸ்தானியர்கள் மகிழ்ச்சியில்

International 01 October 2025
ஆப்கானிஸ்தானியர்கள் மகிழ்ச்சியில்

மருத்துவர்களின் கிறுக்கலுக்குத் தடை: கையெழுத்தைத் திருத்த இந்திய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

International 01 October 2025
மருத்துவர்களின் கிறுக்கலுக்குத் தடை: கையெழுத்தைத் திருத்த இந்திய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரான்ஸுக்கான தென்னாப்பிரிக்கத் தூதுவர் சடலமாக மீட்பு

International 01 October 2025
பிரான்ஸுக்கான தென்னாப்பிரிக்கத் தூதுவர் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இணையுமாறு கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் அழைப்பு

International 01 October 2025
அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இணையுமாறு கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் அழைப்பு

தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

International 01 October 2025
தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

இந்தியாவில் 15 நாட்களில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு: இருமல் மருந்துகள் காரணம் என சந்தேகம்

International 01 October 2025
இந்தியாவில் 15 நாட்களில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு: இருமல் மருந்துகள் காரணம் என சந்தேகம்

UPDATE: பிலிப்பைன்ஸில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு

International 01 October 2025
UPDATE: பிலிப்பைன்ஸில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு

பாரிய கிரிப்டோகரன்சி மோசடி: 'செல்வத்தின் தெய்வம்' குற்றவாளி என தீர்ப்பு

International 30 September 2025
பாரிய கிரிப்டோகரன்சி மோசடி: 'செல்வத்தின் தெய்வம்' குற்றவாளி என தீர்ப்பு
Sports Stories
Explore More
அதிரடி சதத்தால் தரவரிசைப்பட்டியலில் முன்னேறிய பெத்தும் நிசங்க

அதிரடி சதத்தால் தரவரிசைப்பட்டியலில் முன்னேறிய பெத்தும் நிசங்க

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான அபிஷேக் சர்மா தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளார். ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இவர் தொடரின் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். 25 வயதான அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் 931 புள்ளிகளை எட்டியுள்ளார். இது 2020ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் பெற்ற 919 புள்ளிகளை விட 12 புள்ளிகள் அதிகமாகும். இலங்கை அணிக்கெதிரான போட்டியில் 61 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் அபிஷேக் சர்மா இந்த மைல்கல்லை அடைந்தார். இதனையடுத்து தரவரிசைப்பட்டியலில் இங்கிலாந்து அணியின் பில் சால்ட் 2ஆவது இடத்தில் உள்ளதுடன், திலக் வர்மா 3 ஆவது இடத்திலுள்ளார். திலக் வர்மா ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக 49 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 69 ஓட்டங்களையும் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்தநிலையில் இந்திய அணிக்கெதிரான அதிரடி சதத்தினை தொடர்ந்து,இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிசங்க தரவரிசைப்பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். பட்டியலில் 7ஆவது இடத்திலிருந்த இவர், தனது சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் அணியின் சாஹிப்சதா ஃபர்ஹான் 11 இடங்கள் முன்னேறி 13 ஆவது இடத்தையும், இந்திய அணியின் சஞ்சு சம்சன் 8 இடங்கள் முன்னேறி 31ஆவது இடத்தையும் பிடித்துள்ளதுடன், பங்களாதேஷ் அணியின் சைப் ஹசன் 45 இடங்கள் முன்னேறி 36 ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இலங்கை - இந்திய போட்டியில் மாபெரும் சாதனை

இலங்கை - இந்திய போட்டியில் மாபெரும் சாதனை

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதலாவது போட்டி சாதனை மிக்க தொடக்கத்தை வழங்கியுள்ளது. இதன்படி தொடக்கத்தில் இந்திய மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. இதற்கமைய குறித்த போட்டியில் இந்திய மகளிர் அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தநிலையில் குறித்த போட்டியைப் பார்வையிடுவதற்கு, சுமார் 22,843 இரசிகர்கள் வருகைதந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை இடம்பெற்றுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களின் அடிப்படையில், தொடக்க ஆட்டத்தைப் பார்வையிடுவதற்கு இத்தகைய எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகைதந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். முன்னதாக 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற டி20 உலகக் கிண்ண தொடரின் போது, இந்திய மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டியைப் பார்வையிட 15,935 பார்வையாளர்கள் வருகைதந்ததே சாதனையாக இருந்தது. குறித்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை

வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை

வெளிநாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோற்றதை தொடர்ந்து, உள்ளூர் போட்டியில் வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மறுஉத்தரவு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷகீன் ஷா அப்ரிடி உள்பட 7 பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பரில் அவுஸ்திரேலியாவில் தொடங்கும் பிக் பாஷ் போட்டியில் விளையாட இருந்தனர். அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச லீக் 20 ஓவர் போட்டிக்கான ஏலத்தில் 16 பாகிஸ்தான் வீரர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. தற்போதைய உத்தரவால் அதில் அவர்கள் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
விற்பனைக்கு வரும் ஆர்சிபி அணி?

விற்பனைக்கு வரும் ஆர்சிபி அணி?

ரோயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய டியாகோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் ரோயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மதிப்பு ரூ.17,762 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி குறித்த அணியை வாங்குவதற்கு சீரம் (Serum) நிறுவனத்தின் CEO அதார் பூனாவாலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ரோயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முதலில் விஜய் மல்லையா வாங்கி இருந்தார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதன் பின்னர், டியாகோ நிறுவனம் குறித்த அணியை வாங்கியது. இவ்வருடம் இடம்பெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரோயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிண்ணத்தை சுவீகரித்து செம்பியன் பட்டம் வென்ற நிலையில் அணியின் மதிப்பு உச்சத்தில் உள்ளது. இதனால் மிகப்பெரிய தொகைக்கு ரோயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய டியாகோ கணக்கிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபரங்களுக்கு
இலங்கை மகளிர் அணிக்கு 270 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மகளிர் அணிக்கு 270 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் மோதுகின்றன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. எனினும், போட்டியின் இடையே மழை குறிப்பிட்டதால் 47 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 47 ஓவர்கள் 8 விக்கெட்டுகளை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றது. இந்தநிலையில் இலங்கை மகளிர் அணிக்கு 270 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
இந்திய அணிக்கு நிபந்தனை விதித்த மோசின் நக்வி

இந்திய அணிக்கு நிபந்தனை விதித்த மோசின் நக்வி

இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகொண்ட, ஆசியக் கிண்ணம் மற்றும் பதக்கங்களை மீள வழங்குவதற்கு தயாராக இருந்தாலும் விசேட நிபந்தனை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் அறிவித்துள்ளார். ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. எனினும், பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவரான மோசின் நக்வியிடம் இருந்து, ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்வதில்லை என இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கிண்ணம் மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு வழங்கப்படவில்லை. இந்தநிலையில், ஆசியக் கிண்ணம் மறுக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இந்தியா முறையிடும் என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஆசியக் கிண்ணம் மற்றும் பதக்கங்களை வழங்கத் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான மோசின் நக்வி கூறியுள்ளார். இதன்படி, முறையான விழா ஏற்பாடு செய்யப்பட்டால் மாத்திரமே சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது வீரர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
எதிர்வரும் உலகக் கிண்ண தொடரில் இடம்பெற வாய்ப்பில்லாத மகளிர் வீராங்கனைகளின் பட்டியல்

எதிர்வரும் உலகக் கிண்ண தொடரில் இடம்பெற வாய்ப்பில்லாத மகளிர் வீராங்கனைகளின் பட்டியல்

2027 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ண தொடரில் இடம்பெற வாய்ப்பில்லாத, ஆனால் சிறந்த அனுபவமுள்ள 11 சிரேஷ்ட மகளிர் வீராங்கனைகளைக் கொண்ட சிறப்புக் குழாமை ESPN Cricinfo பட்டியலிட்டுள்ளது.    வயதை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.    இலங்கையைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் வயதை விட திறமைக்கு முன்னுரிமை அளித்த வீராங்கனைகளாக வலியுறுத்தப்பட்டுள்ளனர்.    இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தபத்து (35), இடது கை சுழற்பந்து வீச்சாளர் இனோகா ரணவீர (39) மற்றும் வேகப்பந்து வீச்சாளர் உதேஷிகா பிரபோதனி (40) ஆகியோர் இந்த சீனியர் குழுவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.    இந்தப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் தலைவி அலிசா ஹீலி (34) மற்றும் பிரபல சகலதுறை வீராங்கனை எலிஸ் பெர்ரி (34) ஆகியோரும் அடங்குவர்.    நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் (38) மற்றும் சோஃபி டெவின் (36) மற்றும் இந்திய அணித்தலைவி ஹர்மன்பிரீத் கவுர் (36) ஆகியோரும் இந்த அனுபவம் வாய்ந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.    இந்த வீராங்கனைகள் ஒவ்வொருவரும் தங்கள் கடைசி உலகக் கிண்ணமாகக் கருதப்படும் போட்டியில் தங்கள் நாட்டிற்காக ஒரு பட்டத்தை வெல்ல மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    அந்த பட்டியலில் அலிசா ஹீலி (34) அவுஸ்திரேலியா, எலிஸ் பெர்ரி (34) அவுஸ்திரேலியா, மேகன் ஸ்கட் (32) அவுஸ்திரேலியா, சுசி பேட்ஸ் (38) நியூசிலாந்து, சோஃபி டெவின் (36) நியூசிலாந்து, சாமரி அத்தபத்து (35) இலங்கை, இனோகா ரணவீர (39) இலங்கை, உதேஷிகா பிரபோதனி (40) இலங்கை, ஹர்மன்பிரீத் கவுர் (36), இந்தியா, ஹீதர் நைட் (34) இங்கிலாந்து, மாரிசன் கெப் (35) தென்னாப்பிரிக்கா, லீ தஹுஹு (35) நியூசிலாந்து ஆகியோர் உள்ளடங்குவர்.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
ஒவ்வொரு காதல் கதையும் சொல்லப்பட வேண்டியவை - குளோசப்பின் காதல் கதை புத்தகம்

ஒவ்வொரு காதல் கதையும் சொல்லப்பட வேண்டியவை - குளோசப்பின் காதல் கதை புத்தகம்

குளோசப் இலங்கையின் முதல் கூட்டமான காதல் கதை புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது.   குளோஸ்சப், இளமை, புத்துணர்ச்சி மற்றும் அச்சமற்ற நெருக்கம் ஆகியவற்றின் உணர்விற்காக நீண்டகாலமாகக் கொண்டாடப்படும் வர்தகநாமம். இலங்கையின் முதல் கூட்ட நெரிசலான காதல் கதை புத்தகமான பிரேக் தி பேரியரை பெருமையுடன் வெளியிடுகிறது. இந்த மைல்கல் படைப்பு வெறுமனே ஒரு புத்தகம் அல்ல, ஆனால் இளம் இதயங்களின் தைரியம், சொல்லப்படாத உணர்ச்சிகளின் அழகு மற்றும் எல்லைகளைக் கடக்கத் துணியும் அன்பின் காலமற்ற சக்தி ஆகியவற்றின் வாழ்க்கைச் சான்றாகும். இந்தப் பயணம் எளிமையான ஆனால் ஆழமான உணர்தலுடன் தொடங்கியது எண்ணற்ற இளைஞர்கள் தங்கள் காதல் கதைகளை அமைதியாகக் கைப்பற்றி, பயம் மற்றும் தயக்கத்தால் அடக்கி வைத்திருக்கிறார்கள். குளோசப் அந்தக் குரல்களை விடுவிக்க முற்பட்டது. ஒரு பிரசாரமாகத் தொடங்கிய விடயம், ஒரு இயக்கமாக மலர்ந்தது, பேச்சு மொழியின் வரம்புகளைத் தாண்டிய இரண்டு மாணவர்களான லாவன் மற்றும் ஃப்ரியின் மென்மையான கதையைத் தொடர்ந்து வந்த ஒரு குறும்படத்தில் உயிரூட்டப்பட்டது. அவர்களின் கதை நாட்டின் கற்பனையைக் கவர்ந்தது. மெட்டா மற்றும் டிக்டோக்கில் சில வாரங்களுக்குள் நாற்பத்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றது, இந்த செய்தி எவ்வளவு ஆழமாக எதிரொலிக்கிறது என்பதை நிரூபிக்கும் ஒரு கலாசார தருணம். அங்கிருந்து, தடைகளைத் தாண்டி, அச்சமின்றி அன்பை வெளிப்படுத்துவது குறித்த தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இலங்கையர்களை இந்த இயக்கம் அழைத்தது. பதில் அசாதாரணமாக இருந்தது நூற்றுக்கணக்கான கதைகள் இயற்கையானதாகவும் உண்மையாகவும், தைரியத்துடனும், பாதிப்புடனும் ஒளிர்ந்தன. வசந்த துக்கன்னரல, கெலும் ஸ்ரீமல் மற்றும் யேஷா பெர்னாண்டோ உள்ளிட்ட இலக்கியக் குரல்களின் புகழ்பெற்ற குழு, மிகவும் குறிப்பிடத்தக்க நூறு கதைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்தது. இந்தக் குரல்கள் இணைந்து, இலங்கை வரலாற்றில் முதல் கூட்ட நெரிசலான காதல் கதை புத்தகமான பிரேக் தி பேரியரை உருவாக்குகின்றன. அந்த புத்தகம் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வெளியிடப்பட்டது. யுனிலீவரின் தனிப்பட்ட பராமரிப்பு, அழகு மற்றும் நல்வாழ்வுக்கான சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷாமரா சில்வா கலந்து கொண்டார் 'குளோசப்பில், ஒவ்வொரு காதல் கதையும் கேட்கத் தகுதியானது என்று நாங்கள் நம்புகிறோம். மௌனத் தடை உண்மையானது, ஆனால் அந்தத் தடைகளை உடைக்க நம் இளைஞர்களுக்குள் இருக்கும் தைரியமும் அப்படித்தான். இந்த பிரசாரமும் இந்தப் புத்தகமும் அந்தத் துணிச்சலுக்கு ஒரு மௌனத்தைக் கலைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தத் துணிந்த அனைவருக்கும். இளைஞர்களுடனும், இதயத்தில் இளமையாக இருப்பவர்களுடனும் நிற்கும் வர்த்தகநாமமாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அவர்களுக்கு அந்த தருணத்தைக் கைப்பற்றி அவர்களின் இதயங்களுக்கு உண்மையாக இருக்க புதிய நம்பிக்கையை அளிக்கிறோம். யுனிலீவர் ஸ்ரீலங்கா லிமிடெட் டியோடரன்ட பிரிவுத் தலைவர் மிகார கீம்பியகே மேலும் கூறியதாவது, குளோசப் எப்போதும் வாய்வழி பராமரிப்புக்கு மேலாக நிற்கிறது.இளைஞர்களை அவர்களின் உண்மையாகவும் சுயமாகவும் இருக்க ஊக்குவிக்கவும்,அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் நாங்கள் இங்கு இருக்கிறோம். 'பிரேக் தி பேரியர்' என்பது வெறும் பிரசாரம் அல்ல இது எங்கள் இளைஞர்கள் அச்சமின்றி அன்பைத் தழுவ உதவும் ஒரு இயக்கம். எங்கள் முகவர் பங்காளிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் படைப்பாற்றல், ஆர்வம் மற்றும் இடைவிடாத அர்ப்பணிப்பு இந்த பிரசாரத்தை ஒரு யதார்த்தமாக்கியது மற்றும் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான இதயங்களை அடைய எங்களுக்கு உதவியது. ஒன்றாக, நாம் தடைகளை உடைக்கும்போது, அன்பு, ஏற்றுக்கொள்ளல் மற்றும் உண்மையான இணைப்புக்கான இடத்தை உருவாக்குகிறோம் என்பதைக் காட்டியுள்ளோம். இந்தப் புத்தகம் ஒவ்வொரு காதல் கதையும் சொல்லப்பட வேண்டிய ஒன்று என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

விபரங்களுக்கு
சியபத பினான்ஸ்,  தம்புத்தேகமவின் அமைதியான சூழலில் தடம் பதிக்கிறது

சியபத பினான்ஸ், தம்புத்தேகமவின் அமைதியான சூழலில் தடம் பதிக்கிறது

பிரதம நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தம்புத்தேகமவில் தனது 57வது கிளையை திறந்து வைத்தது, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அமைதியான நகரத்தினுள் தடம் பதித்து அதன் வலையமைப்பை மென்மேலும் விரிவுபடுத்தியது. கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர்ஆனந்த செனவிரத்ன, சிரேஷ்ட நிர்வாகம் மற்றும் ஊழியர்கள், தம்புத்தேகம பிரதேச செயலாளர் சுமித் சோமரத்ன , காவல்துறை போக்குவரத்து அதிகாரி என்.ஏ. திலக்கரத்ன, கிராம சேவையாளர் ஏ.எம்.டீ.ஆர். அதிகாரி , வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ பத்மசிறி, அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர். இலங்கையின் வட மத்திய மாகாணத்தில், அனுராதபுரத்திலிருந்து சுமார் 45 கிலோமீற்றர் தொலைவிலும் கொழும்பிலிருந்து 160 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள தம்புத்தேகம, வளமான மண் மற்றும் எல்லையற்ற தங்க நெல் வயல்களால் சூழப்பட்டுள்ளது. தொன்மையான கலாசார பாரம்பரியம் மற்றும் ஆழமாக வேரூன்றிய பாரம்பரியங்களின் மதிப்புகளுடன் உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத பங்கை வகிக்கின்றன, இது பிராந்தியத்தின் பண்டைய வரலாற்றுடன் ஒன்றுபட்ட ஒரு சமூகத்தை பிரதிபலிக்கிறது தம்புத்தேகமவின் பொருளாதார நிலப்பரப்பு, பிராந்தியத்தின் விவசாய முக்கியத்துவம் மற்றும் தலைமுறைகளாக நாட்டின் நெல் விளைச்சலுக்கு அளித்த பங்களிப்பை அடிப்படையாக கொண்டது. 16 முதல் 64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான தனிநபர்களின் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான மக்கள்தொகையுடன், தொழிலாளர் தொகுப்பில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினரின் வாழ்வாதாரம் விவசாய நடவடிக்கைகளை சுற்றியே உள்ளது. இன்று, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தம்புத்தேகம பொருளாதார மையத்தால் உருவாக்கப்பட்ட ஏராளமான வாய்ப்புகளால் மேலும் பலப்படுத்தப்பட்டு, உள்ளூர்வாசிகள் தன்னிறைவு மற்றும் செழிப்பின் யதார்த்தத்தை கற்பனை செய்கிறார்கள். நிகழ்வில் பேசிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கூறுகையில், “ஒரு நிதி நிறுவனமாக, இவ்வளவு துடிப்பான உள்ளூர் சமூகத்தால் வரவேற்கப்படுவதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தம்புத்தேகம கிராமப்புற வசீகரத்திற்கும் நவீன முன்னேற்றங்களுக்கும் இடையிலான இணக்கமான ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கிறது. தேசிய அளவில் ஒரு முக்கிய விவசாய மையமாக வளர்ச்சியடைவதில் இந்தப் பகுதி பெரும் ஆற்றலைக் காட்டுகிறது. தனிநபர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் நம்பகமான நிதி ஆதரவிற்கான வளர்ந்து வரும் தேவையை கண்டுள்ளதால், சவால்களை தாண்டி முன்னோக்கிச் செல்ல ஒரு படிக்கல்லை உருவாக்கவும், யாவரும் உயர்ந்த இலக்கை அடைய முடியும் என்பதை நினைவூட்டவும் இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்துகிறோம்.” எனக் கூறினார். புதிய கிளை குத்தகை, நிலையான வைப்புத்தொகை, சேமிப்பு, தங்கக்கடன் நிதி, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவு வரைவுகள் மற்றும் ஸ்மார்ட் பே பில் செலுத்தும் வசதி வரை பல்வேறு முழுமையான நிதி தீர்வுகளை வழங்குகிறது, இது பிராந்தியத்திற்குள் ஒரு வலுவான மற்றும் பாதுகாப்பான ஆதரவு அமைப்பை உருவாக்கும். சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள்; மூலம் 'A(LKa)' என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது. புதிய கிளையை தொடர்பு கொள்ள, 025 753 4805 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும் அல்லது இல. 17/S, ரஜின சந்தி, தம்புத்தேகம என்ற முகவரியில் உள்ள கிளைக்கு வாருங்கள். சியபத பினான்ஸ் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.siyapatha.lk இற்கு விஜயம் செய்யுங்கள்.

விபரங்களுக்கு
சியபத பினான்ஸின் 56 ஆவது கிளை மஹியங்கனையில்

சியபத பினான்ஸின் 56 ஆவது கிளை மஹியங்கனையில்

சியபத பினான்ஸ், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை நகரில் தனது புதிய கிளையை புதிதாக ஆரம்பித்துள்ளது.   உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது முழுமையான சேவைகளை பண்டைய விவசாய மையமான மஹியங்கனைக்கு விரிவுபடுத்தி, அதன் 56வது கிளையை வெற்றிகரமாகத் திறந்துள்ளது.   தனது பங்குதாரர்களுக்குப் பொருத்தமான மதிப்பை வழங்குவதற்கான நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போகும் வகையில், புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, சேமிப்பு, தங்க நிதி, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவு வரைவு மற்றும் தரகுச் சேவை முதல் ஸ்மார்ட் பே வசதி வரை பரந்த அளவிலான வசதிகளை வழங்குகிறது.   இது பிராந்தியத்தில் ஒரு ஒப்பற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குகிறது.     சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்னவினால், சியபத பினான்ஸ் பிஎல்சியின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் டி சில்வா, சிரேஷ்ட நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மற்றும் மஹியங்கனை பிரதேச செயலாளர் விமன்ச செனவிரத்ன, காவல்துறை பரிசோதகர் பி.எஸ்.கே. டி சில்வா, கிராம உத்தியோகத்தர் ஆர்.என்.எஸ். ரணவக்க, வர்த்தக சங்கத் தலைவர் சரத் மஹிந்த குமார, அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.   சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது   இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது   கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.   புதிய கிளையை தொடர்பு கொள்ள, 055 760 5005 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும் அல்லது இல. 08, பதியதலாவ வீதி , மஹியங்கனை என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்யவும்.   சியபத பினான்ஸ் பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.siyapatha.lk ஐப் பார்வையிடவும்.  

விபரங்களுக்கு
சியபத பினான்ஸின் 55வது கிளை அம்பலாங்கொடையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது

சியபத பினான்ஸின் 55வது கிளை அம்பலாங்கொடையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது

இலங்கையின் வங்கி சாரா நிதித் துறையில் முன்னணி நிறுவனமும், சம்பத் வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமுமான சியபத பினான்ஸ் பிஎல்சி, அம்பலங்கொடையில், தனது 55வது கிளையை திறப்பதாக அறிவித்துள்ளது.   இது நாடு முழுவதும் உள்ள அனைத்து சமூகத்தினரும் அணுகக்கூடிய, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதி தீர்வுகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டின் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கின்றது.   இந்தத் திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன, பணிப்பாளர்கள் திரு.ஜயநாத் குணவர்தன, திருமதி.சிறியாணி ரணதுங்க, தலைமை செயற்பாட்டு அதிகாரி திரு. ராஜீவ் டி சில்வா, சிரேஸ்ட நிர்வாக உறுப்பினர்கள், அம்பலங்கொடை பிரதேச செயலாளர் திருமதி. அசந்தி நிரோசினி, நகர சபையின் செயலாளர், அம்பலங்கொடை பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.ரணவீர, வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு.சரத் டிசில்வா, கிராம சேவகர் திரு.அன்ச குமார டிசில்வா, பொது மற்றும் தனியார் வங்கி, காப்புறுதி மற்றும் நிதித் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   இலங்கையின் தெற்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள அம்பலங்கொடை, காலி மாவட்டத்தில் உள்ள ஒரு செயலாற்றல் மிகுந்த நகரமாகும், இது அதன் கலாசார செழுமை, முகமூடி தயாரிக்கும் மரபுகள், வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித் தொழில்களுக்கு பெயர் பெற்றது.   61,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன், பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கும் 15-64 வயதுக்கிடைப்பட்ட 65.7% துடிப்பான பணியாளர்களைக் கொண்ட இந்த நகரம், நிதி சேவைகளுக்கான அதிக சாத்தியத்தையுடைய சந்தையாக விளங்குகிறது.   “அம்பலங்கொடை பன்முகத்தன்மை கொண்ட பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது” என்று சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன கூறினார்.   மேலும் “எங்கள் அம்பலங்கொடை கிளையை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்த பிராந்தியத்தில் நிதி அணுகல் இடைவெளியைக் குறைப்பதற்கும், தனிநபர்கள் மற்றும் வணிகங்களை ஆதரிக்கும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட, நெகிழ்வான தீர்வுகளை வழங்குவதற்கும் நாங்கள் தீர்மானித்துள்ளோம்.” என்று குறிப்பிட்டார்.   சியபத பினான்ஸின் புதிய அம்பலங்கொடை கிளை, பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட விரிவான நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கொண்டுள்ளது.   குத்தகை தீர்வுகள், நிலையான வைப்பு, தங்கக்கடன், வணிக மற்றும் தனிப்பட்ட கடன்கள் இதில் அடங்கும். வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் செயல்திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் பே விலைப்பட்டியல் செலுத்தும் வசதியுடன், விரைவான வரைவு மற்றும் காரணி சேவைகளையும் வழங்கும்.   சேவைத் துறையில் 43.3மூ பங்களிப்பு விவசாயம் மற்றும் தொழில்துறைகள் ஊடாகக் கிடைக்கின்றன. நகரத்தின் பொருளாதார அமைப்பு அணுகக்கூடிய வகையிலான, புத்தாக்கமான நிதித் தெரிவுகளைக் கோருகிறது.   SME கடன்கள், மீன்பிடி உபகரணங்களுக்கான குத்தகை வசதிகள், தனிநபர் மற்றும் வணிகக் கடன்கள், நிலையான சுற்றுலா மற்றும் விவசாயத்திற்கான பசுமை நிதி போன்ற சேவைகள் மூலம் உள்ளுர் வளர்ச்சியை ஆதரிக்க சியபத பினான்ஸ் தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.   இந்த விரிவாக்கத்துடன், சியபத பினான்ஸ் நிறுவனம் அதன் வலையமைப்பில் உள்ள 32 கிலோமீட்டர் புவியியல் இடைவெளியை நிவர்த்தி செய்து, அதன் நாடு முழுவதற்குமான வாடிக்கையாளர் வசதிக்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.   கிளை திறப்புடன் இணைந்து, சியபத பினான்ஸ் நிறுவனம் "சியபதேன் மிகிகதட்ட" என்ற கூட்டுறவு சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஒரு சமூக ஈடுபாட்டு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.   இந்த முயற்சியில் அம்பலங்கொடை, சீனிகம, சிறி அபயதிஸ்ஸ வித்தியாலயத்திற்கு கணனி மற்றும் கருவிகள் நன்கொடையுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அம்பலங்கொடையில் மரம் நடும் பிரச்சாரமும் இடம்பெற்றது.   இந்த முயற்சி எழுத்தறிவு திறன்களை மேம்படுத்துவதையும், அப்பகுதியில் உள்ள பின்தங்கிய மாணவர்களுக்கான கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.   இவ்வாறான நடவடிக்கைகள் சியபத பினான்ஸ் நிறுவனம் தான் சேவை செய்யும் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் நிலையான வளர்ச்சி இலக்குகளை ஆதரிப்பதற்கும் பரந்த அர்ப்பணிப்பை வழங்குவதை பிரதிபலிக்கின்றன.   சம்பத் வங்கி குழுமத்தின் முழுமையான உரிமம் கொண்ட சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் 55 கிளைகளைக் கொண்ட வலையமைப்பைக் கொண்டுள்ளது, இதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்குகின்றன.   பிட்ச் மதிப்பீடுகளில் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சிப் பாதையை பிரதிபலிக்கிறது.   கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் முயற்சிகளின் வளர்ச்சிக்கும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.   இலக்கம் 0917605235 வழியாக சியபத பினான்ஸ் அம்பலாங்கொடை கிளையைத் தொடர்பு கொள்ள முடியும்.   அல்லது இல 29, காலி வீதி, அம்பலாங்கொடை என்ற முகவரியில் கிளை அமைந்துள்ளது.   சியபத பினான்ஸ் பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.siyapatha.lk ஐப் பார்வையிடவும்.

விபரங்களுக்கு
ஏர் கனடா - தாய் ஏர்வேஸ் விமான நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

ஏர் கனடா - தாய் ஏர்வேஸ் விமான நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையுடனும், இந்தியாவுடனும் இணைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், ஏர் கனடா மற்றும் தாய் ஏர்வேஸ் ஆகிய இரு விமான நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.    இதன்படி, கொழும்பு, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் பெங்கோக்கிற்கு தடையின்றி விமானச் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.    எதிர்வரும் 21ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஏர் கனடா மற்றும் தாய் ஏர்வேஸ் ஆகிய இரு விமான நிறுவனங்களும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.    இந்த புதிய ஒப்பந்தத்துக்கு அமைய, இரு விமானச் சேவைகளும் புதிய நகரங்களுக்கும் பயணத்தை முன்னெடுக்கவுள்ளன.

விபரங்களுக்கு
டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு பிரசாரம் தம்புள்ளையில்

டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு பிரசாரம் தம்புள்ளையில்

2025 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு பிரசாரம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது இந்த பிரசார நிகழ்வு ஓகஸ்ட் முதலாம் மற்றும் 2 ஆம் திகதிகளில் முற்பகல் 9.30 முதல் மாலை 7 மணி வரை தம்புள்ளை பிரத்தியேக பொருளாதார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது. நிதி உள்ளடக்கத்தை செயல்படுத்துவதில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் வகிக்கும் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, 'டிஜிட்டல் கொடுப்பனவுகள் மூலம் எதிர்காலத்தை வடிவமைத்தல்' என்ற கருப்பொருளின் கீழ், மத்திய வங்கி நாடு தழுவிய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. பணத்திற்கு பாதுகாப்பான, மிகவும் வசதியான மற்றும் திறமையான மாற்றான டிஜிட்டல் கொடுப்பனவுகளைச் செய்வதற்கான அறிவு மற்றும் அனுபவத்துடன் இலங்கையர்களை மேம்படுத்துவதே இந்த பிரசாரத்தின் நோக்கமாகும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
63 வயது சூப்பர் ஸ்டாருக்கு விண்வெளியில் திருமணம்

63 வயது சூப்பர் ஸ்டாருக்கு விண்வெளியில் திருமணம்

63 வயதாகும் ஹொலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ், உலக அளவில் ரசிகர்களை கொண்டிருக்கிறார்.    1981இல் வெளியான ‘Endless love’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.    ‘மிஷன் இம்பாசிபிள்’ சீரிஸ் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றார்.    அண்மையில் வெளியான இவரது ‘மிஷன் இம்பாசிபிள்’ சீரிஸின் இறுதி பாகம் உலக அளவில் ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.    ஹொலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் அனா டி அர்மாஸ் 2006 இல் வெளியான ‘Virgin rose’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.    37 வயதான அனா டி அர்மாஸ் 2022இல் வெளியான ‘தி க்ரே மேன்’ படத்தில் நடித்துள்ளார்.    இந்த திரைப்படத்தில் தனுஷ் நடித்தது குறிப்பிடத்தக்கது.    இந்தநிலையில் இந்த இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல் வெளியானது.    இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகின.    சாகசத்தை விரும்பும் இந்த ஜோடிகள் தங்கள் திருமணம் வழக்கமாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.    அதன்படி தங்கள் திருமணத்தை விண்வெளியில் நடத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    டாம் குரூஸை பொறுத்தவரை விண்வெளி பயணம், சாகசங்களின் காதலன்.    இதனால் விண்வெளியில் திருமணம் செய்துகொள்ளப்போகும் முதல் ஜோடி என்ற யோசனை அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.    அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.    டாம் குரூஸ் 3 முறை திருமணமானவர்.    அனா டி அர்மாஸ்க்கு 2011 இல் திருமணம் நடந்து 2013 இல் விவாகரத்து பெற்றவர் ஆவார்.

விபரங்களுக்கு
கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகை யார் தெரியுமா?

கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகை யார் தெரியுமா?

இந்திய சினிமாவின் திரை பிரபலங்கள் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை திரைப்படங்களின் வசூலை தாண்டி, சமூக வலைதளங்களில் அவர்களை எத்தனை பேர் தேடினார்கள்? என்ற விவரத்தை வைத்தும் மதிப்பிடப்படுகிறார்கள்.    அந்தவகையில் கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர் - நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.    இதில் ஷாருக்கான், சல்மான் கான், விஜய், பிரபாஸ் என முன்னணி நடிகர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி பொலிவுட் நடிகை தீபிகா படுகோனே பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.    ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், இர்பான்கான், அமீர்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய்குமார் முறையே அடுத்தடுத்த இடங்களில் தொடருகிறார்கள்.    இந்த பட்டியலில் சமந்தா 13 ஆம் இடத்திலும், தமன்னா 16 ஆம் இடத்திலும், நயன்தாரா 18 ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.    பிரபாஸ் 29 ஆம் இடமும், தனுஷ் 30 ஆம் இடமும் பிடித்து இருக்கின்றனர்.    மற்ற தமிழ் நடிகர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

விபரங்களுக்கு
மீண்டும் அம்மன் அவதாரம் எடுத்த நயன்தாரா

மீண்டும் அம்மன் அவதாரம் எடுத்த நயன்தாரா

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் வெற்றியையடுத்து தற்போது அந்த திரைப்படத்தின் 2 ஆம் பாகம் படமாக்கப்பட்டு வருகிறது.    மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்திலும் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.    ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்' படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது.    இப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.    'மூக்குத்தி அம்மன்' முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும், ஆர்.ஜே. பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.    இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.    இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்குகிறார்.    நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.    இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.    இந்த நிலையில், 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் முதற் பார்வையைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

விபரங்களுக்கு
இட்லி கடை வெற்றியா? விமர்சனங்களுடனான பார்வை

இட்லி கடை வெற்றியா? விமர்சனங்களுடனான பார்வை

கிராமத்துப் பின்னணியில் அமைந்த குடும்ப படமான 'இட்லி கடை' இன்று (01) வெளியானது.    குறித்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ளார்.    'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.    திரைப்படத்தின் முதல் பாதியில் வரும் தனுஷ், ராஜ்கிரண் இடையிலான காட்சிகளே படத்தின் பலம் எனவும் இடைவேளைக்குப் பிறகு படத்தின் காட்சிகள் ஊகிக்கக் கூடியதாக அமைந்ததே மிகப் பெரிய பலவீனம் என்று தமிழக முன்னணி நாளிதழ்கள் விமர்சிக்கின்றன.    எனினும், நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.    இயக்குநராக நோக்கிய பயணத்தில் தனுஷ் சற்று மும்முரமாகியிருக்கிறார் என பாராட்டப்படுகிறது.    குடும்ப பாங்கான படமாக இட்லி கடை அமைவதால் அனைவரும் சென்று பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விபரங்களுக்கு
வருடத்துக்கு 30 திரைப்படங்கள், 80 நடிகைகளுடன் இணைந்து நடித்த ஒரே நடிகர் யார் தெரியுமா?

வருடத்துக்கு 30 திரைப்படங்கள், 80 நடிகைகளுடன் இணைந்து நடித்த ஒரே நடிகர் யார் தெரியுமா?

வருடத்திற்கு சுமார் 30 படங்களில், சுமார் 80 நடிகைகளுடன் இணைந்து நடித்து தென்னிந்திய நடிகர் பிரேம் நசீர்தான் சாதனை படைத்துள்ளார்.    30 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். பிரேம் நசீர் தனது திரை வாழ்க்கையில் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்,      இது இந்திய திரைத்துறையின் வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகும்.    ஒரு வருடத்தில் 30 திரைப்படங்களில் நடித்தார் என்ற வியக்கத்தக்க சாதனையை இவர் ஒரே முறை அல்லாமல், இரண்டு முறை நிகழ்த்தியுள்ளார்.    ஒரு வருடத்தில் 5-6 படங்களில் நடிப்பதே கடினமான பணிச்சுமையாகக் கருதப்படும் நிலையில், இது மிக முக்கியமான சாதனையாகும் இவர் சுமார் 40 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.    80 கதாநாயகிகளுடன் திரையில் நடித்துள்ள பிரேம் நசீர், நடிகை ஷீலாவுடன் இணைந்து 130 படங்களில் நடித்ததன் மூலம் மிக வெற்றிகரமான திரைப் ஜோடியாகப் பார்க்கப்பட்டார்.    இந்திய திரைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, 1983 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.    பிரேம் நசீர் தனது 62வது வயதில், 1989 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி சென்னையில் உள்ள விஜயா மருத்துவமனையில் காலமானார்.

விபரங்களுக்கு
அன்று ஒருவேளை உணவுக்கே வழியில்லை - இன்று 5 நிமிட பாடலுக்கு பல கோடி ஊதியம் பெறும் நடிகை!

அன்று ஒருவேளை உணவுக்கே வழியில்லை - இன்று 5 நிமிட பாடலுக்கு பல கோடி ஊதியம் பெறும் நடிகை!

வெறும் 5 ஆயிரம் ரூபாயுடன் இந்தியா வந்து ஒரு காலத்தில் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட நடிகை ஒருவர், தற்போது வெறும் 5 நிமிடங்கள் நடித்தாலே பல கோடி வருமானம் ஈட்டுகிறார். அவர் யார் தெரியுமா?    கனடாவில் பிறந்து வளர்ந்த இந்த அழகி ரூ.5000 உடன் இந்தியா வந்துள்ளார். பல கஷ்டங்களுக்குப் பிறகு சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தன.    இப்போது ஐந்து நிமிடப் பாடலுக்கு நடனமாடுவதற்காகப் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.    அவர் வேறு யாருமல்ல, கனேடிய நடனக் கலைஞரும் நடிகையுமான நோரா ஃபதேஹி தான்.    பாகுபலியில் "மனோஹரி" பாடலுக்கு ஆட்டம் போட்ட நோரா ஃபதேஹி, இந்தியாவிற்கு வந்த புதிதில் பல சிரமங்களை எதிர்கொண்டார்.    ஆரம்ப நாட்களில் சாப்பிடுவதற்கே வழியில்லாத நிலை. ஆனால் இப்போது அவர் பெரிய அளவில் சம்பாதிக்கிறார்.    இவர் சல்மான் கான், வருண் தவான் போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்துள்ளார். சினிமாவில் 5 நிமிடம் நடித்தாலும் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்.    நோரா ஒரு சிறந்த நடனக் கலைஞர். மிகவும் கடின உழைப்பாளியும் கூட. இவையே இத்துறையில் அவரது வெற்றிக்குக் காரணம்.    ஒரு நேர்காணலில் பேசிய அவர், இந்தியா வந்தபோது நிறைய கஷ்டங்களை சந்தித்ததாக கூறினார்.    அந்த நேரத்தில், நோரா ஒரு நாளைக்கு ஒரு முட்டை மற்றும் ரொட்டியை மட்டுமே சாப்பிட்டார்.    தனக்குக் கிடைத்த பணத்தின் பெரும்பகுதியைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வாங்கித் தரும் முகவர்கள் எடுத்துக் கொண்டதாகவும், அவர்கள் தனக்கு மிகக் குறைந்த சம்பளமே கொடுத்ததாகவும் அவர் கூறினார்.    தற்போது ஒரு படத்துக்கு ரூ.1 கோடியும், ஒரு பாடலுக்கு ரூ.2 கோடியும் வசூலிக்கிறார் நோரா.    அண்மையில் ‘மடகான் எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்தார்.    ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், பொக்ஸ் ஒபிஸில் வெற்றி பெறவில்லை.    நோரா ஃபதேஹி விரைவில் 'டான்சிங் டாட்' படத்தில் நடிக்கவுள்ளார்.

விபரங்களுக்கு
ஸ்ரீமத் இராமாயணம் தொடரில் நடித்த குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு

ஸ்ரீமத் இராமாயணம் தொடரில் நடித்த குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு

சோனி தொலைக்காட்சியில் ஸ்ரீமத் இராமாயணம் இந்தி தொடரில் நடித்துப் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் வீர் சர்மா (10 வயது) விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.    தமிழில் பிரபல தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இவர் வீர ஹனுமான் தொடரில் லட்சுமணனாகவும் நடித்துள்ளார்.    சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் சிறுவயது சைஃப் அலிகானாகவும் நடித்திருந்தார்.    ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்காவது மாடியில் உள்ள வீட்டில் வீர் சர்மா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடியிருப்பில் சார்ட் சர்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.    விபத்து நடந்த நேரத்தில், தந்தையான ஜிதேந்திர சர்மா பஜனை நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தார்.    தாயார் ரீட்டா சர்மா வேலை விஷயமாக மும்பையில் இருந்தார். தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வீர் மற்றும் அவரது சகோதரர் சௌரியா, புகை மூட்டத்தால் மூச்சுத் திணறிச் சுயநினைவை இழந்தனர்.    வீட்டின் அறையிலிருந்து புகை வந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.    மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.    சிறுவர்களின் விருப்பத்தின்படி, அவர்களது குடும்பத்தினர் இருவரின் கண்களையும் தானம் செய்தனர்.    கோட்டா காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes