Top Story
மஹர சிறைச்சாலை வளாகத்தில் இன்று (1) பிற்பகல் திடீரென ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகக் காயமடைந்த சிறைக் கைதிகளில் 7 பேர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அத்துடன், பதற்றமான சூழ்நிலை காரணமாக, சிறைச்சாலையிலுள்ள கட்டடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிறைச்சாலைக்குள் நிலவும் அசாதாரண மற்றும் பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையின் (STF) பல குழுக்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, மஹர சிறைச்சாலை வளாகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபரங்களுக்கு
General01 August 2026
மஹர சிறைச்சாலை பதற்றம்: ஒருவர் பலி, 6 பேர் காயம் - கட்டடமொன்றில் தீ பரவல்!
Video of the Day
Latest TV News Bulletin
International News

பனிச்சரிவில் உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மரணித்தமை உறுதியானது!

International 01 August 2026
பனிச்சரிவில் உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மரணித்தமை உறுதியானது!

ஹமாஸின் ஆயுதக்களைவு, இஸ்ரேலின் படைவிலகல்: தடைகள் நிறைந்த கள நிலவரம்

International 01 August 2026
ஹமாஸின் ஆயுதக்களைவு, இஸ்ரேலின் படைவிலகல்: தடைகள் நிறைந்த கள நிலவரம்

ஸ்பெயினின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரே நாளில் ஊடுருவிய 60ஆயிரம் ஏதிலிகள்

International 01 August 2026
ஸ்பெயினின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரே நாளில் ஊடுருவிய 60ஆயிரம் ஏதிலிகள்

ஃபிஃபா என்ற உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தலைவர் ஜான்னி இன் உலகக் கிண்ணப் பங்குகள் விற்பனை திட்டத்திற்கு தீவிர எதிர்ப்பு: முக்கிய அதிகாரி குற்றச்சாட்டு: மூத்த ஆலோசகர் பதவி விலகினார்.

International 01 August 2026
ஃபிஃபா என்ற உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தலைவர் ஜான்னி இன் உலகக் கிண்ணப் பங்குகள் விற்பனை திட்டத்திற்கு தீவிர எதிர்ப்பு: முக்கிய அதிகாரி குற்றச்சாட்டு: மூத்த ஆலோசகர் பதவி விலகினார்.

கொங்கோவில் மீண்டும் தீவிரமடையும் எபோலா: 3,500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; உலகின் 2-வது மிகப்பெரிய பேரழிவு என எச்சரிக்கை!

International 01 August 2026
கொங்கோவில் மீண்டும் தீவிரமடையும் எபோலா: 3,500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; உலகின் 2-வது மிகப்பெரிய பேரழிவு என எச்சரிக்கை!

சிறுவயதில் பெற்றோருக்கு தொலைபேசியில் பேசி செய்து குறும்புத்தனம் செய்வேன்: ஜேசன் சஞ்சய் கூறும் சுவாரஸ்ய தகவல்!

International 01 August 2026
சிறுவயதில் பெற்றோருக்கு தொலைபேசியில் பேசி செய்து குறும்புத்தனம் செய்வேன்: ஜேசன் சஞ்சய் கூறும் சுவாரஸ்ய தகவல்!

பாகிஸ்தானில் பனிச்சரிவு: காணாமல் போன மலையேற்ற வீரர்களில் நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு!

International 31 July 2026
பாகிஸ்தானில் பனிச்சரிவு: காணாமல் போன மலையேற்ற வீரர்களில் நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு!

மொரோக்கோ - ஸ்பெயின் எல்லையில் பரபரப்பு! ஒரே நாளில் 49,000 புலம்பெயர்ந்தோர்கள் ஊடுருவல்

International 31 July 2026
மொரோக்கோ - ஸ்பெயின் எல்லையில் பரபரப்பு! ஒரே நாளில் 49,000 புலம்பெயர்ந்தோர்கள் ஊடுருவல்

புதிய அவதாரம் எடுக்கும் ராய் லட்சுமி – நடிகையாக அல்ல

International 31 July 2026
புதிய அவதாரம் எடுக்கும் ராய் லட்சுமி – நடிகையாக அல்ல

10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளையடித்த எலி

International 31 July 2026
10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளையடித்த எலி

அமித் ஷா உடனடியாக பதவி விலகுமாறு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் அதிரடி கோரிக்கை!

International 31 July 2026
அமித் ஷா உடனடியாக பதவி விலகுமாறு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் அதிரடி கோரிக்கை!

அதிகரிக்கும் வெப்பநிலைக்கு மத்தியில், உடற்பயிற்சி குறைவதால் நீண்டகால ஆரோக்கியத்திற்கு ஆபத்து – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

International 31 July 2026
அதிகரிக்கும் வெப்பநிலைக்கு மத்தியில், உடற்பயிற்சி குறைவதால் நீண்டகால ஆரோக்கியத்திற்கு ஆபத்து – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

காஸா ஆயுதக் களைவு ஒப்பந்தம்: டொனால்ட் டிரம்பின் முக்கிய அறிவிப்பு

International 31 July 2026
காஸா ஆயுதக் களைவு ஒப்பந்தம்: டொனால்ட் டிரம்பின் முக்கிய அறிவிப்பு

பாகிஸ்தானில், நிலக்கரி சுரங்க விபத்து: 11 பேர் பலி

International 31 July 2026
பாகிஸ்தானில், நிலக்கரி சுரங்க விபத்து: 11 பேர் பலி

கெஷ்ம் மரணங்களுக்கு அமெரிக்கா, விலை செலுத்திவேண்டியிருக்கும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார்!

International 31 July 2026
கெஷ்ம் மரணங்களுக்கு அமெரிக்கா, விலை செலுத்திவேண்டியிருக்கும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார்!
More News
General01 August 2026

தொடருந்து திணைக்களத்தின் குறைபாடுகள் : உரிய தீர்வு வழங்காவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்!

தொடருந்து திணைக்களத்தின் சமிஞ்சை மற்றும் செயற்பாட்டுப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தீவிர சமிஞ்சை தொழிநுட்பப் பிரச்சினைகள் இருந்தபோதிலும் தலைமன்னார் வழித்தடத்தில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மதவாச்சி மற்றும் தலைமன்னார் இடையேயான தொடருந்துகள், சமிஞ்சை பழுதுபார்க்கும் போது தற்காலிக நடவடிக்கையாகப் பயன்படுத்தப்படும் 'பயலட் முறைமையின்' கீழ் ஒற்றைப் பாதையில் இயங்குவதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளை, இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
தொடருந்து திணைக்களத்தின் குறைபாடுகள் :  உரிய தீர்வு வழங்காவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்!
General01 August 2026

இலங்கைக்கு அப்பால் கப்பலிலிருந்து 17 வெற்று சரக்குக் கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன!

கொழும்பு துறைமுகத்துக்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பகுதியில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 வெற்று சரக்கு கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து வருவதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.தற்போது நிலவும் கடல் நீரோட்டத்தின் தன்மையைக் கருத்திற்கொண்டு, இந்த கொள்கலன்கள் பேருவளையிலிருந்து நீர்கொழும்பு ஊடாகப் புத்தளம் வரையிலான கடற்பரப்பை நோக்கி அடித்துச் செல்லப்பட்டு, கரைசேரும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, குறித்த கடற்பகுதிகளில் கடற்றொழில் ஈடுபடுவோர் மற்றும் கடற் பயணங்களை மேற்கொள்பவர்கள் அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மிதக்கும் கொள்கலன்கள் எவையேனும் தென்பட்டால் அதுகுறித்து உடனடியாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலிச் செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள கடற்றொழில் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
இலங்கைக்கு அப்பால் கப்பலிலிருந்து 17 வெற்று சரக்குக் கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன!
General01 August 2026

நீர்கொழும்பு கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர் உடலமாக மீட்பு : மேலும் 3 படகுகள் தேடப்படுகின்றன!

நீர்கொழும்பு கடற் பகுதியில் மேலும் மூன்று படகுகள் காணாமல்போயுள்ளதாக, கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா சூரியன் செய்திப் பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, நீர்கொழும்பு துறைமுகத்தில் படகொன்று காணாமல் போயிருந்தது. குறித்தப் படகில், 4 பேர் பயணித்துள்ள நிலையில், மூன்று பேர் காணாமல் போனதாக கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவரிடன் உடலம் மீட்க்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், குறித்த படகில் பயணித்த ஒருவர் பாதுகாப்பாக கரை வந்து சேர்ந்ததாக இந்திக டி சில்வா குறிப்பிட்டார். இதனையடுத்து, இன்றைய தினம் மேலும் மூன்று படகுகள் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் சூரியன் செய்திப் பரிவுக்கு கூறினார். அதற்கமைய, நீர்கொழும்பு துறைமுக கடற்பகுதியில், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

விபரங்களுக்கு
நீர்கொழும்பு கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர் உடலமாக மீட்பு : மேலும் 3 படகுகள் தேடப்படுகின்றன!
General01 August 2026

நீர்கொழும்பு கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர்களை மீட்கக் கூட்டு நடவடிக்கை

நீர்கொழும்பு கடலில் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் கடற்றொழில் படகுகளை மீட்பதற்காக வான் படையும் கடற்படையும் இணைந்து கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா குறிப்பிட்டுள்ளார். இதற்காக வான்படையின் பெல் 412 வகையைச் சேர்ந்த உலங்குவானூர்தி ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற கடற்றொழிலாளர் குழுவொன்று காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
நீர்கொழும்பு கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர்களை மீட்கக் கூட்டு நடவடிக்கை
General01 August 2026

இங்கினியாகலவில் மின்னல் தாக்கியதில் வீடொன்று முற்றாக தீக்கிரை!

அம்பாறை, இங்கினியகல காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்கந்த பகுதியில் பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பிடித்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.குறித்த பகுதியில் நேற்று (31) மாலை பெய்த கனமழையின் போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.சம்பவத்தின்போது, வீட்டிலிருந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள மற்றொரு வீட்டுக்குச் சென்றிருந்ததுடன், அவர்களது தந்தை கொழும்புக்கும் தாய் அருகிலுள்ள தையல் நிலையம் ஒன்றுக்கும் பணிக்காக சென்றிருந்தார் என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். மின்னல் தாக்கத்தினால் வீட்டிக்குள் தீ பரவியதையடுத்து, பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் உபகரணங்களும் தீக்கிரையாகியுள்ளன.

விபரங்களுக்கு
இங்கினியாகலவில் மின்னல் தாக்கியதில் வீடொன்று முற்றாக தீக்கிரை!
International News

பனிச்சரிவில் உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மரணித்தமை உறுதியானது!

International 01 August 2026
பனிச்சரிவில் உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மரணித்தமை உறுதியானது!

ஹமாஸின் ஆயுதக்களைவு, இஸ்ரேலின் படைவிலகல்: தடைகள் நிறைந்த கள நிலவரம்

International 01 August 2026
ஹமாஸின் ஆயுதக்களைவு, இஸ்ரேலின் படைவிலகல்: தடைகள் நிறைந்த கள நிலவரம்

ஸ்பெயினின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரே நாளில் ஊடுருவிய 60ஆயிரம் ஏதிலிகள்

International 01 August 2026
ஸ்பெயினின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரே நாளில் ஊடுருவிய 60ஆயிரம் ஏதிலிகள்

ஃபிஃபா என்ற உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தலைவர் ஜான்னி இன் உலகக் கிண்ணப் பங்குகள் விற்பனை திட்டத்திற்கு தீவிர எதிர்ப்பு: முக்கிய அதிகாரி குற்றச்சாட்டு: மூத்த ஆலோசகர் பதவி விலகினார்.

International 01 August 2026
ஃபிஃபா என்ற உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தலைவர் ஜான்னி இன் உலகக் கிண்ணப் பங்குகள் விற்பனை திட்டத்திற்கு தீவிர எதிர்ப்பு: முக்கிய அதிகாரி குற்றச்சாட்டு: மூத்த ஆலோசகர் பதவி விலகினார்.

கொங்கோவில் மீண்டும் தீவிரமடையும் எபோலா: 3,500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; உலகின் 2-வது மிகப்பெரிய பேரழிவு என எச்சரிக்கை!

International 01 August 2026
கொங்கோவில் மீண்டும் தீவிரமடையும் எபோலா: 3,500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; உலகின் 2-வது மிகப்பெரிய பேரழிவு என எச்சரிக்கை!

சிறுவயதில் பெற்றோருக்கு தொலைபேசியில் பேசி செய்து குறும்புத்தனம் செய்வேன்: ஜேசன் சஞ்சய் கூறும் சுவாரஸ்ய தகவல்!

International 01 August 2026
சிறுவயதில் பெற்றோருக்கு தொலைபேசியில் பேசி செய்து குறும்புத்தனம் செய்வேன்: ஜேசன் சஞ்சய் கூறும் சுவாரஸ்ய தகவல்!

பாகிஸ்தானில் பனிச்சரிவு: காணாமல் போன மலையேற்ற வீரர்களில் நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு!

International 31 July 2026
பாகிஸ்தானில் பனிச்சரிவு: காணாமல் போன மலையேற்ற வீரர்களில் நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு!

மொரோக்கோ - ஸ்பெயின் எல்லையில் பரபரப்பு! ஒரே நாளில் 49,000 புலம்பெயர்ந்தோர்கள் ஊடுருவல்

International 31 July 2026
மொரோக்கோ - ஸ்பெயின் எல்லையில் பரபரப்பு! ஒரே நாளில் 49,000 புலம்பெயர்ந்தோர்கள் ஊடுருவல்

புதிய அவதாரம் எடுக்கும் ராய் லட்சுமி – நடிகையாக அல்ல

International 31 July 2026
புதிய அவதாரம் எடுக்கும் ராய் லட்சுமி – நடிகையாக அல்ல

10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளையடித்த எலி

International 31 July 2026
10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளையடித்த எலி

அமித் ஷா உடனடியாக பதவி விலகுமாறு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் அதிரடி கோரிக்கை!

International 31 July 2026
அமித் ஷா உடனடியாக பதவி விலகுமாறு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் அதிரடி கோரிக்கை!

அதிகரிக்கும் வெப்பநிலைக்கு மத்தியில், உடற்பயிற்சி குறைவதால் நீண்டகால ஆரோக்கியத்திற்கு ஆபத்து – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

International 31 July 2026
அதிகரிக்கும் வெப்பநிலைக்கு மத்தியில், உடற்பயிற்சி குறைவதால் நீண்டகால ஆரோக்கியத்திற்கு ஆபத்து – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

காஸா ஆயுதக் களைவு ஒப்பந்தம்: டொனால்ட் டிரம்பின் முக்கிய அறிவிப்பு

International 31 July 2026
காஸா ஆயுதக் களைவு ஒப்பந்தம்: டொனால்ட் டிரம்பின் முக்கிய அறிவிப்பு

பாகிஸ்தானில், நிலக்கரி சுரங்க விபத்து: 11 பேர் பலி

International 31 July 2026
பாகிஸ்தானில், நிலக்கரி சுரங்க விபத்து: 11 பேர் பலி

கெஷ்ம் மரணங்களுக்கு அமெரிக்கா, விலை செலுத்திவேண்டியிருக்கும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார்!

International 31 July 2026
கெஷ்ம் மரணங்களுக்கு அமெரிக்கா, விலை செலுத்திவேண்டியிருக்கும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார்!
Sports Stories
Explore More
தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவராக இலங்கையின் ஜஸ்வர் உமர் தெரிவு!

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவராக இலங்கையின் ஜஸ்வர் உமர் தெரிவு!

தெற்காசிய கால்பந்துச் சம்மேளனத்தின் துணை தலைவராக, இலங்கை கால்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்துச் சம்மேளனத்தின் (SAFF) நிறைவேற்று குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.சார்க் பிராந்தியத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பு நாடுகளின் ஏகமனதான ஆதரவுடன் கிடைத்துள்ள இந்தப் பதவியானது, இலங்கை கால்பந்து வரலாற்றில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அவரது தலைமையின் கீழ் இலங்கையின் FIFA உலகத் தரவரிசை 207 ஆவது இடத்திலிருந்து 187 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.தெற்காசிய கால்பந்துச் சம்மேளனத்தின் துணைத் தலைவர் பதவிக்கு மேலதிகமாக, அவர் ஏற்கனவே FIFA அடிமட்ட கால்பந்துக் குழு மற்றும் ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் (AFC) வளர்ச்சிக் குழு ஆகியவற்றிலும் உறுப்பினராகச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
20 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு தங்கம்: ருமேஷ் தரங்கவின் சாதனை

20 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு தங்கம்: ருமேஷ் தரங்கவின் சாதனை

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில்,ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இறுதிச் சுற்றில் ஈட்டியை 89.75 மீட்டர் தூரம் எறிந்து அவர் முதலிடத்தைப் பிடித்தார். இந்தப்போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இரண்டாம் இடத்தையும் யஸ்வீர் சிங் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்; இதன்படி, பொதுநலவாய போட்டிகளின் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தங்கப் பதக்கம் வென்று 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ருமேஷ் தரங்கவின் இந்த வெற்றி நாட்டின் விளையாட்டு வரலாற்றில் சாதனையாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2006 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற பொதுநலவாயப்போட்டியில் பளுதூக்குதல் வீரர் சிந்தன விதானகே இலங்கைக்காகத் தங்கம் வென்றார்.

விபரங்களுக்கு
பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைக்குமா இலங்கை மகளிர் அணி?

பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைக்குமா இலங்கை மகளிர் அணி?

சுற்றுலா பாகிஸ்தான் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று (31) ஆரம்பமாகிறது.தொடரின் முதல் போட்டி இன்று முற்பகல் 10 மணிக்கு தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.இந்தத் தொடருக்கான இலங்கை அணியில், சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இதுவரை அறிமுகமாகாத வீராங்கனைகளான சமுதி பிரபோதா மற்றும் சஞ்சனா கவிந்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேவேளை, அண்மையில் நிறைவடைந்த மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடிய அணியுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தான் அணி எட்டு மாற்றங்களைச் செய்துள்ளது.அந்த அணியில், துடுப்பாட்ட வீராங்கனைகளான இமான் மற்றும் மஹம் ஆகியோர் இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் முதல் முறையாக இடம்பெறுகின்றனர்.இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் மூன்றாவது இருபதுக்கு 20 போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 2 மற்றும் 4 ஆம் திகதிகளில் தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலேயே நடைபெறவுள்ளன.முன்னதாக, கடந்த திங்கட்கிழமை ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் பாகிஸ்தானை 2 க்கு1 என்ற கணக்கில் வீழ்த்தி இலங்கை அணி தொடரைக் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
 இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் நியமனம்!

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் நியமனம்!

இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் ஃப்ளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து தொடரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து பிரெண்டன் மெக்கல்லம் அந்தபொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து ஃப்ளெமிங் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது. சர்வதேச அணிக்கு முதன்முறையாகப் பயிற்சியாளராகும் ஃப்ளெமிங், சிஎஸ்கே உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களில் நீண்ட அனுபவம் கொண்டவர். நியூசிலாந்தின் வெற்றிகரமான டெஸ்ட் தலைவரான இவர், 80 போட்டிகளில் 28 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு முன் இவரை நியமித்துள்ளது. மெக்கல்லம் வெள்ளைப்பந்து போட்டிகளுக்குப் பயிற்சியாளராகத் தொடர்வார். பென் ஸ்டோக்ஸின் ஓய்வுக்குப் பின் காலியாக உள்ள டெஸ்ட் தலைவரைத் தேர்வு செய்வதிலும் ஸ்டீபன் ஃப்ளெமிங் செயல்படுவார்.

விபரங்களுக்கு
 2026 உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடர்: அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை

2026 உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடர்: அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை

2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடரின் போது இடம்பெற்ற பல விதிமீறல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக, அர்ஜென்டினா காற்பந்து சங்கம் (AFA) மற்றும் வீரர்கள் மீது சர்வதேச காற்பந்து சம்மேளனம் ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் “லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்” (“ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானது”) என்ற வாசகம் அடங்கிய பதாகையைக் காட்சிப்படுத்தினர். இதனையடுத்து,விளையாட்டு நிகழ்வுகளை விளையாட்டு அல்லாத அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்குப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஒழுங்குமுறை விதியை இந்தச் செயல் மீறியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை, தொடர் முழுவதும் அர்ஜென்டினா அணி போட்டிகளின் போது பாகுபாடு காட்டும் கோஷங்கள் மற்றும் சைகைகள், போட்டிகள் தாமதமாகத் தொடங்கப்பட்டமை, பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியமை மற்றும் ரசிகர்கள் மைதானத்திற்குள் பொருட்களை வீசியமை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்பெயின் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கூடுதல் நேரத்தில் 0-1 எனத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மைதானத்தில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாகவும் தனியாக ஒழுங்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
தலையில் ஊசி குத்தப்பட்ட நிலையிலும் பிரியாணி சாப்பிட்ட சல்மான் கான்!

தலையில் ஊசி குத்தப்பட்ட நிலையிலும் பிரியாணி சாப்பிட்ட சல்மான் கான்!

பொலிவூட்டின் பிரபல நடிகரான சல்மான் கான், தமது இளமைத் தோற்றத்தைப் பராமரிப்பதற்காகச் செய்யும் சிகிச்சைகள் குறித்து அவரது நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான சைலேந்திர சிங் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 60 வயதிலும் இளமையாகத் தோற்றமளிக்கும் சல்மான் கான், முடி உதிர்வைத் தடுப்பதற்காகவும் தலைமுடி அடர்த்தியாக இருப்பதற்காகவும் பிளேட்லெட்-ரிச் பிளாஸ்மா (PRP) சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். இது குறித்துப் பேசிய சைலேந்திர சிங், "ஒரு நாள் தான் சல்மான் கானின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் சாப்பாட்டு அறையில் கண்ணாடிக்கு முன்பாகச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரது தலையிலும் நெற்றியிலும் பல ஊசிகள் குத்தப்பட்டிருந்தன. அந்த வலியையும் பொருட்படுத்தாமல், அவர் மிகவும் இயல்பாகச் சிக்கன் பிரியாணி சாப்பிட்டவாறே அனைவருடனும் பேசிக் கொண்டிருந்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இளமைத் தோற்றத்தையும் உடலமைப்பையும் தக்கவைத்துக்கொள்ள சல்மான் கான் இதுபோன்ற பல கடினமான மருத்துவச் சிகிச்சைகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
சீதைக்குப் பின்னால் ஒரு தேவதை: இணையத்தில் வைரலாகும் அடையாளம் தெரியாத பெண்!

சீதைக்குப் பின்னால் ஒரு தேவதை: இணையத்தில் வைரலாகும் அடையாளம் தெரியாத பெண்!

ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் "ராமாயணா". இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 29 ஆம் திகதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் ராமாயண் பட ட்ரெய்லரில் ரன்பீர் கபூர், யாஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தைத் தாண்டி, சீதைக்குப் பின்னால் நிற்கும் பெண்ணின் முகம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்தப் பெண் யார் என ஆராய்ந்த ரசிகர்கள், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுரபி தாஸ் என்ற நடிகைதான் அவர் எனக் கண்டுபிடித்துள்ளனர். இந்தநிலையில் குறித்த பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளதுடன் அவரின் நிழற்படம் வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு
சினிமாவில் இருந்து அரசியல் வரை: தந்தை தனக்குக் கற்றுக்கொடுத்த பாடம் - தந்தை குறித்து மனம் திறந்த ஜேசன் சஞ்சய்

சினிமாவில் இருந்து அரசியல் வரை: தந்தை தனக்குக் கற்றுக்கொடுத்த பாடம் - தந்தை குறித்து மனம் திறந்த ஜேசன் சஞ்சய்

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தந்தை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில் தொகுப்பாளர் ஜேசன் சஞ்சய்யிடம் "உங்கள் தந்தை சினிமாவில் ஆளுமை, இப்போது தமிழ்நாடு அரசியலிலும் தவிர்க்க முடியாத ஆளுமை. அவரிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் எதனை கற்று கொள்வீர்கள்" எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், "முதலில், இப்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சி நடந்துள்ளது. எனக்கும், என் சகோதரிக்கும், எங்கள் குடும்பத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் கூடுதல் பொறுப்பும் பாரம்பரியத்தை காக்கும் கடமையும் இருக்கிறது. அதை பாதுகாப்பது எங்களின் பொறுப்பு. அதனால், நாங்கள் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும். அப்படியான சூழல்தான் தற்போது நடக்கிறது" என்றார். மேலும், "அப்பா தனக்கு கொடுத்த அறிவுரை தான் எனக்கென்று ஒரு தனி அடையாளத்தையும், தனி பெயரையும் உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். தானும் அதே எண்ணத்தில்தான் இருந்தேன். எங்கள் இருவரின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருந்தது. 'உனக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை அணுகலாம். ஆனால், நீயே முன்வந்து முயற்சி செய்ய வேண்டும். தான் வந்து கேட்க மாட்டேன்' என்று அப்பா கூறினார். வாழ்க்கையில் வரும் அனுபவங்களை நீயே சந்தித்து, அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. எனக்கு எப்போதும் துணையாக இருந்த அப்பா, அம்மா மற்றும் என் குடும்பத்தினருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்." என்று வெளிப்படுத்தினார்.

விபரங்களுக்கு
ஆகஸ்ட் 8 இல் 'Toxic' டிரெய்லர் வெளியீடு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆகஸ்ட் 8 இல் 'Toxic' டிரெய்லர் வெளியீடு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கன்னடத் திரையுலகின் பிரபல நடிகர் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'டாக்சிக்' (Toxic: A Fairytale for Grown-Ups) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'கே.ஜி.எஃப்' படங்களின் வெற்றிக்குப் பிறகு, கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிக்கும் இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக மார்ச் மாதம் வெளியாகவிருந்து ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், தற்போது திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. அதனடிப்படையில், குறித்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ஆம் திகதி உலகளவில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ரஜினிகாந்த் கொடுத்த பரிசு :  ‘ஹோம்வொர்க்’ செய்யும் நடிகை ராஷி கண்ணா!

ரஜினிகாந்த் கொடுத்த பரிசு : ‘ஹோம்வொர்க்’ செய்யும் நடிகை ராஷி கண்ணா!

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனக்கு அளித்த பரிசு குறித்தும் அது தொடர்பான அனுபவங்களையும் நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘தர்மன்’ படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்தும் நடிகை ராஷி கண்ணாவும் தியானம் மற்றும் ஆன்மிகம் குறித்துப் பேசியுள்ளனர். இதன் போது நடிகர் ரஜினிகாந்த், ராஷி கண்ணாவிடம் "Living with the Himalayan Masters" என்ற ஆன்மிகப் புத்தகத்தைப் படித்திருக்கிறாயா எனக் கேட்டார். அதற்கு ராஷி இல்லை எனத் தெரிவித்ததை அடுத்து, இரண்டு நாட்களில் அந்தப் புத்தகத்தின் புதிய பிரதியை வாங்கி, அதில் தனது கையெழுத்திட்டு நடிகை ராஷி கண்ணாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பரிசாக வழங்கியுள்ளார். இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படிக்குமாறும், அது குறித்துப் பின்னர் கேள்வி கேட்பேன் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளதால், நடிகை ராஷி கண்ணா தீவிரமாக அந்தப் புத்தகத்தைப் படித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கூறிய பதில்: இணையத்தில் வைரலாகிறது

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கூறிய பதில்: இணையத்தில் வைரலாகிறது

தமிழக முதல்வர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தான் இயக்கும் முதல் திரைப்படத்தின் விளம்பர நேர்காணலில்,தனது தந்தை விஜய் குறித்துப் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான கருத்துக்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. "ஹொலிவுட் பிரபல அதிரடி நடிகர் ஜேசன் ஸ்டேதம், உங்களை அழைத்து, ' நாம் இரண்டு பேரும் ஒரு திரைப்படம் தயாரிக்கலாம். அதற்காக இந்தியாவிலிருந்து ஒரு நடிகரை அழைத்து வாருங்கள்' எனக் கூறினால், யாரை அழைத்துச் செல்வீர்கள் என்று ஜேசன் சஞ்சய்யிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஜேசன் சஞ்சய், தனக்கு முதலில் மனதில் தோன்றுவது தமது அப்பா தான்! இருவரும் இணைந்தால் அது மிகவும் சிறப்பான கூட்டணையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். சிறுவயதில் இருந்தே படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்று வந்ததால் திரைப்படங்கள் மீது இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டதாகக் கூறிய ஜேசன் சஞ்சய்;, ஆரம்பத்தில் வானூர்தி ஓட்டுநர்; அல்லது கிரிக்கெட் வீரராக வர விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் பின்னர் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கதை சொல்வதிலும், திரைப்பட உருவாக்கத்திலும் ஆர்வம் பெற்று கனடாவில் திரைப்படக் கல்வியைப் பயின்றதாக தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு

"30 வருஷமா முயற்சித்தும் முடியவில்லை..." பிரதமர் மோடியிடம் சுந்தர் சி பற்றி குஷ்பு சொன்ன சுவாரஸ்ய உண்மை!

இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பு தம்பதியரின் மகளின் திருமணம் கடந்த ஜூன் 25-ஆம் திகதி கோவாவில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், திருமணத்திற்காகப் பிரதமர் மோடியைக் குஷ்புவின் குடும்பத்தினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடி பேசியது குறித்து நடிகை குஷ்பு நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். "பிரதமர் மோடி எங்களிடம் ஒரு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே பேசுவார் என நினைத்தோம். ஆனால், அந்தச் சந்திப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. எனது கணவர் சுந்தர் சி, எனது மகள் அவந்திகா மற்றும் மருமகன் ஷ்ரவன் ஆகியோரிடம் பிரதமர் மோடி முதலில் 'உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?' என்றுதான் கேட்டார். ஷ்ரவன் கொஞ்சம் தடுமாறி இந்தியில் பேசினார்; சுந்தர் சிக்கு ஹிந்தி தெரியவில்லை. 'தமிழ்நாட்டில் ஹிந்தி வேண்டாம் என்று சொன்னதால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்; தெரியாமல் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன்' என்று சுந்தர் சி பிரதமர் மோடியிடம் கூறினார். உடனே, 'என்னைப் பார்த்தாவது நீங்கள் அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கலாமே?' எனப் பிரதமர் என்னிடம் கேட்க, '30 வருடங்களாக முயற்சித்தும் முடியவில்லை' எனக் கூறினேன். எனது மகளுக்கு ஹிந்தி தெரியும்; பள்ளியில் அவளது இரண்டாவது மொழி இந்திதான். அதை அவள் பிரதமரிடம் கூறியதும், 'மிகவும் நன்று. நீங்கள் உங்கள் அப்பாவுக்கும் கணவருக்கும் ஹிந்தி சொல்லிக் கொடுங்கள்' என்று கூறிய பிரதமர், கணவன் - மனைவி எப்படி வாழ வேண்டும் என்றும் மணமக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்" என அந்தச் சந்திப்பில் நடந்தவை குறித்துக் குஷ்பு விவரித்துள்ளார்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////