Top Story
வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளமையினால் பொதுமக்கள் மட்டுமன்றி, பல எரிபொருள் நிலையங்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு எரிபொருள் நிலையத்தையும் நடத்துவதற்கு மாதாந்த செலவு ஏற்படுவதாகவும், எரிபொருள் கிடைக்காமையினால் அவற்றை தொடர்ந்தும் நடத்துவது கடினமாகியுள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக எரிபொருள் நிலைய ஊழியர்களுக்கு வேதனம் வழங்குவதும் சிக்கலாகியுள்ளதால், நிலவும் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு வழங்குமாறு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகள் மற்றும் போர்கள் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இதனால் உலகளாவிய ரீதியில் கப்பல் கட்டணங்கள் மற்றும் கடல்சார் காப்பீட்டுக் கட்டணங்கள் (shipping costs) அதிகரித்துள்ளன.

சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்முதல் செய்து, உள்நாட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால், தனியார் வெளிநாட்டு எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கு ஒரு லீற்றர் டீசலுக்கு சுமார் 170 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே தாங்கள் சந்திக்கும் நிதி இழப்பைக் குறைப்பதற்காக, செலவுக்கு ஏற்ற வகையில் எரிபொருள் விலையை மாற்றியமைக்க கோரி, அரசாங்கத்தின் முடிவு வரும் வரை எரிபொருள் விநியோகத்தை அந்த நிறுவனங்கள் கட்டுப்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
விபரங்களுக்கு
General14 September 2026
வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியதால் பாதிப்பு!
Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

இலங்கை - தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து : சட்டபூர்வ பாதுகாப்புடன் 10,000 வேலைவாய்ப்புகள்

General 14 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து : சட்டபூர்வ பாதுகாப்புடன் 10,000 வேலைவாய்ப்புகள்

எல் நினோ அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாரா? - அணுகுமுறையை மாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

General 14 September 2026
எல் நினோ அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாரா? - அணுகுமுறையை மாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

அளுத்கமவில் விளாம்பழம் என நினைத்து கூரையை பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி

General 14 September 2026
அளுத்கமவில் விளாம்பழம் என நினைத்து கூரையை பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி

தேசிய மக்கள் சக்தியின் தொடர் பேரணிகளுக்கான காரணம் என்ன? - பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்

General 14 September 2026
தேசிய மக்கள் சக்தியின் தொடர் பேரணிகளுக்கான காரணம் என்ன? - பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்

செம்மணி ஆய்வில் சர்வதேச உதவி - விசாரணையில் சர்வதேச தரம்: இலங்கையை வலியுறுத்தும் பிரித்தானியா!

General 14 September 2026
செம்மணி ஆய்வில் சர்வதேச உதவி - விசாரணையில் சர்வதேச தரம்: இலங்கையை வலியுறுத்தும் பிரித்தானியா!

எரிபொருள் விலை திருத்தம் குறித்து அமைச்சர் தகவல்!

General 14 September 2026
எரிபொருள் விலை திருத்தம் குறித்து அமைச்சர் தகவல்!
International News

வெனிஸ் விழாவில் விருது பெற்ற ஆவணப்படம்: சொந்த நாட்டு இயக்குநர்கள் மீது பாயும் ‘தேசதுரோக’ குற்றம்!

International 14 September 2026
வெனிஸ் விழாவில் விருது பெற்ற ஆவணப்படம்: சொந்த நாட்டு இயக்குநர்கள் மீது பாயும் ‘தேசதுரோக’ குற்றம்!

மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

International 14 September 2026
மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு!

International 14 September 2026
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு!

உண்மையான மீனைப் போல நீந்தும் ரோபோ மீன் – சீனாவில் அறிமுகம்!

International 14 September 2026
உண்மையான மீனைப் போல நீந்தும் ரோபோ மீன் – சீனாவில் அறிமுகம்!

601 கிலோ பிரம்மாண்ட லட்டு – விநாயகர் சதுர்த்தியில் வியக்கவைக்கும் காட்சி!

International 14 September 2026
601 கிலோ பிரம்மாண்ட லட்டு – விநாயகர் சதுர்த்தியில் வியக்கவைக்கும் காட்சி!

நடுவானில் நிலைகுலைந்த வானூர்தி... மரண பயத்தில் அலறிய பயணிகள்!

International 14 September 2026
நடுவானில் நிலைகுலைந்த வானூர்தி... மரண பயத்தில் அலறிய பயணிகள்!

AI குறித்து சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை – மனிதகுலத்திற்கு பேராபத்து ஏற்படலாம்!

International 14 September 2026
AI குறித்து சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை – மனிதகுலத்திற்கு பேராபத்து ஏற்படலாம்!

'கில்லி' கபடி வீரர் முதல் முதலமைச்சர் விஜய் சைகை வரை : ரசிகர்களைக் கிறங்கடித்த விநாயகர் சிலைகள்!

International 14 September 2026
'கில்லி' கபடி வீரர் முதல் முதலமைச்சர் விஜய் சைகை வரை : ரசிகர்களைக் கிறங்கடித்த விநாயகர் சிலைகள்!

22 ஆண்டுகள் உறைநிலையிலிருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்!

International 14 September 2026
22 ஆண்டுகள் உறைநிலையிலிருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்!

லண்டனில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் : அஜித்துக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு என்ன தெரியுமா?

International 14 September 2026
லண்டனில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் : அஜித்துக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு என்ன தெரியுமா?

சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் : உலகளவில் 4% எண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம்!

International 14 September 2026
சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் : உலகளவில் 4% எண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம்!

அமெரிக்காவில் தட்டம்மையால் பெண் பலி: இந்த ஆண்டில் 3-வது உயிரிழப்பு

International 14 September 2026
அமெரிக்காவில் தட்டம்மையால் பெண் பலி: இந்த ஆண்டில் 3-வது உயிரிழப்பு

சிறார்களின் முறையற்ற படங்களை வைத்திருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி லண்டனில் இருந்து வெளியேற்றம்!

International 14 September 2026
சிறார்களின் முறையற்ற படங்களை வைத்திருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி லண்டனில் இருந்து வெளியேற்றம்!

வரலாற்றில் முதன்முறை: இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்

International 13 September 2026
வரலாற்றில் முதன்முறை: இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்

24 வயதில் உயிரிழந்த பிரபல முஃபாங் இன்ஃப்ளூயன்சர் – இறுதிப் பதிவு ஏற்படுத்திய அதிர்ச்சி!

International 13 September 2026
 24 வயதில் உயிரிழந்த பிரபல முஃபாங் இன்ஃப்ளூயன்சர் – இறுதிப் பதிவு ஏற்படுத்திய அதிர்ச்சி!
More News
General14 September 2026

தியாகத்தின் அடையாளம் வேறு, ஊழல் குற்றச்சாட்டு வேறு : மண்டேலாவுடன் நாமலை ஒப்பிடுவது பொருத்தமானதா ? - நஜித் இந்திக கேள்வி

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சிறை வாழ்க்கைக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சிறை வாசத்திற்கும் இடையே எந்தவொரு ஒப்பீடும் செய்ய முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை குறிப்பிட்டு நெல்சன் மண்டேலாவின் கூற்றை மேற்கோள் காட்டியிருந்தார். "சிலரை கஷ்டங்கள் உடைத்துவிடும், ஆனால் சிலரை அது வலிமையாக்கும்" என்ற மண்டேலாவின் வார்த்தைகளை அவர் குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள நஜித் இந்திக, தென்னாபிரிக்காவின் இனவெறி ஆட்சிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவருடன் நாமல் ராஜபக்ச தன்னை ஒப்பிட்டுக்கொள்வது பொருத்தமானதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.நெல்சன் மண்டேலா அடக்குமுறைக்கும் இனவெறி முறைமைக்கும் எதிராக போராடியதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டார் என்றும், பின்னர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகி நாட்டின் மாற்றத்திற்கு தலைமை தாங்கினார் என்றும் சுட்டிக்காட்டிய நஜித் இந்திக, ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிப் பதிவுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் மண்டேலாவை மேற்கோள் காட்டுவது மறைந்த அந்தத் தலைவருக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

விபரங்களுக்கு
தியாகத்தின் அடையாளம் வேறு, ஊழல் குற்றச்சாட்டு வேறு : மண்டேலாவுடன் நாமலை ஒப்பிடுவது பொருத்தமானதா ? - நஜித் இந்திக கேள்வி
General14 September 2026

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அப்துல் வாஸித் பதவி விலகல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாஸித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.எம்.எஸ். அப்துல் வாஸித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக சமர்ப்பித்த கடிதத்திற்கு அமைவாக, அவரது பதவி விலகல் 2026 செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது என்றும் பதில் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதன்படி, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவுக்கு அமைவாக, பத்தாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அப்துல் வாஸித் பதவி விலகல்
General14 September 2026

நாடளாவிய ரீதியில் தீவிரமடையும் டெங்கு - இதுவரை 97,000 பேர் பாதிப்பு!

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 7 மாகாணங்களை உள்ளடக்கிய விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் இன்று (14) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.அதிகளவில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள 7 மாகாணங்களில் உள்ள 62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில், இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.நுளம்புகள் பரவும் வீதத்தின் அடிப்படையில், 62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டிய இடங்களை கண்டறிய அதிகாரிகள் விசேட பரிசோதனைகளை நடத்தியுள்ளனர்.இதேவேளை நடப்பு ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் சுமார் 97,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மருத்துவர் கன்னங்கர சுட்டிக்காட்டினார்.செப்டம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் நாட்டில் 2,146 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விபரங்களுக்கு
நாடளாவிய ரீதியில் தீவிரமடையும் டெங்கு - இதுவரை 97,000 பேர் பாதிப்பு!
General14 September 2026

நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட சட்டமா அதிபர் அறிவுறுத்தல்!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் (Airbus) ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அறிவுறுத்தியுள்ளார்.குறித்த வானூர்தி கொள்முதல் கொடுக்கல் வாங்கலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் பெறப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

விபரங்களுக்கு
நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட சட்டமா அதிபர் அறிவுறுத்தல்!
General14 September 2026

புஷ்பிகாவின் கிரீடத்தைப் பறித்த விவகாரம்: கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரன் விடுதலை!

கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற Mrs. Sri Lanka அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில், வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தைப் பலவந்தமாக அகற்றி, அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் Mrs. Sri Lanka கரோலின் ஜூரி மற்றும் ஆடை வடிவமைப்பு கலைஞர் சூலா பத்மேந்திரன் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரம இந்தத் தீர்ப்பை வழங்கினார்.தீர்ப்பை அறிவித்த பிரதம நீதவான், சந்தேகநபர்களான இருவருக்கும் எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பு தவறியமையினால், இருவரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டார்.இதேவேளை, இந்த வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான ஆடை வடிவமைப்பு கலைஞர் சூலா பத்மேந்திரன் தற்போது காலமாகிவிட்டதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்காக பிணையாளி இன்று மன்றில் முன்னிலையானார்.

விபரங்களுக்கு
புஷ்பிகாவின் கிரீடத்தைப் பறித்த விவகாரம்: கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரன் விடுதலை!
International News

வெனிஸ் விழாவில் விருது பெற்ற ஆவணப்படம்: சொந்த நாட்டு இயக்குநர்கள் மீது பாயும் ‘தேசதுரோக’ குற்றம்!

International 14 September 2026
வெனிஸ் விழாவில் விருது பெற்ற ஆவணப்படம்: சொந்த நாட்டு இயக்குநர்கள் மீது பாயும் ‘தேசதுரோக’ குற்றம்!

மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

International 14 September 2026
மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு!

International 14 September 2026
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு!

உண்மையான மீனைப் போல நீந்தும் ரோபோ மீன் – சீனாவில் அறிமுகம்!

International 14 September 2026
உண்மையான மீனைப் போல நீந்தும் ரோபோ மீன் – சீனாவில் அறிமுகம்!

601 கிலோ பிரம்மாண்ட லட்டு – விநாயகர் சதுர்த்தியில் வியக்கவைக்கும் காட்சி!

International 14 September 2026
601 கிலோ பிரம்மாண்ட லட்டு – விநாயகர் சதுர்த்தியில் வியக்கவைக்கும் காட்சி!

நடுவானில் நிலைகுலைந்த வானூர்தி... மரண பயத்தில் அலறிய பயணிகள்!

International 14 September 2026
நடுவானில் நிலைகுலைந்த வானூர்தி... மரண பயத்தில் அலறிய பயணிகள்!

AI குறித்து சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை – மனிதகுலத்திற்கு பேராபத்து ஏற்படலாம்!

International 14 September 2026
AI குறித்து சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை – மனிதகுலத்திற்கு பேராபத்து ஏற்படலாம்!

'கில்லி' கபடி வீரர் முதல் முதலமைச்சர் விஜய் சைகை வரை : ரசிகர்களைக் கிறங்கடித்த விநாயகர் சிலைகள்!

International 14 September 2026
'கில்லி' கபடி வீரர் முதல் முதலமைச்சர் விஜய் சைகை வரை : ரசிகர்களைக் கிறங்கடித்த விநாயகர் சிலைகள்!

22 ஆண்டுகள் உறைநிலையிலிருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்!

International 14 September 2026
22 ஆண்டுகள் உறைநிலையிலிருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்!

லண்டனில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் : அஜித்துக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு என்ன தெரியுமா?

International 14 September 2026
லண்டனில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் : அஜித்துக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு என்ன தெரியுமா?

சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் : உலகளவில் 4% எண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம்!

International 14 September 2026
சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் : உலகளவில் 4% எண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம்!

அமெரிக்காவில் தட்டம்மையால் பெண் பலி: இந்த ஆண்டில் 3-வது உயிரிழப்பு

International 14 September 2026
அமெரிக்காவில் தட்டம்மையால் பெண் பலி: இந்த ஆண்டில் 3-வது உயிரிழப்பு

சிறார்களின் முறையற்ற படங்களை வைத்திருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி லண்டனில் இருந்து வெளியேற்றம்!

International 14 September 2026
சிறார்களின் முறையற்ற படங்களை வைத்திருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி லண்டனில் இருந்து வெளியேற்றம்!

வரலாற்றில் முதன்முறை: இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்

International 13 September 2026
வரலாற்றில் முதன்முறை: இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்

24 வயதில் உயிரிழந்த பிரபல முஃபாங் இன்ஃப்ளூயன்சர் – இறுதிப் பதிவு ஏற்படுத்திய அதிர்ச்சி!

International 13 September 2026
 24 வயதில் உயிரிழந்த பிரபல முஃபாங் இன்ஃப்ளூயன்சர் – இறுதிப் பதிவு ஏற்படுத்திய அதிர்ச்சி!
Sports Stories
Explore More
டயோகோ ஜோட்டா பெயரைக் கூறி முழக்கமிட்ட ரசிகர்கள்: ஆயுட்கால தடை கோருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

டயோகோ ஜோட்டா பெயரைக் கூறி முழக்கமிட்ட ரசிகர்கள்: ஆயுட்கால தடை கோருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

சவூதி புரோ லீக் போட்டியில் ரூபன் நெவஸை (Ruben Neves) இலக்கு வைத்து, மறைந்த கால்பந்து வீரர் டயோகோ ஜோட்டாவின் (Diogo Jota) பெயரைப் பயன்படுத்தி தகாத முறையில் முழக்கமிட்ட ரசிகர்களுக்கு ஆயுட்கால மைதானத் தடை விதிக்க வேண்டும் என கிறிஸ்டியானோ ரொனால்டோ வலியுறுத்தியுள்ளார். சவூதி அரேபியாவின் புராட்டாவில் (Buraydah) அல்-தாவூன் (Al-Taawoun) மற்றும் அல்-ஹிலால் (Al-hilal) அணிகளுக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்ற போட்டியின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நெவஸின் நெருங்கிய நண்பரும் சக வீரருமான டயோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா ஆகியோர் கடந்த 2025 ஜூலை 3 அன்று ஸ்பெயினில் ஏற்பட்ட சிற்றுந்து விபத்தில் உயிரிழந்தனர். ஜோட்டாவின் இறுதிச்சடங்கில் நெவஸ் பூதவுடலைச் சுமந்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் ஜோட்டாவின் பெயரைச் சொல்லி முழக்கமிட்டனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நெவஸ், தனது கண்ணைச் சுட்டிக்காட்டி வானத்தை நோக்கிச் சைகை செய்தார். சமூக வலைதளத்தில் வெளியான இந்த காணொளியின் கீழ் கருத்து பதிவிட்ட ரொனால்டோ, "சவூதி லீக் நிர்வாகம் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கால்பந்து அல்ல, இதற்கெல்லாம் ஒரு எல்லை உண்டு. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இனி ஒருபோதும் மைதானத்திற்குள் அனுமதிக்கக் கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விபரங்களுக்கு
மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: பரிசளிப்பு நிகழ்வில் சர்ச்சை; கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி

மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: பரிசளிப்பு நிகழ்வில் சர்ச்சை; கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 8-வது முறையாகக் செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இருப்பினும் போட்டியின் நிறைவுக்குப் பின் நடைபெற்ற பரிசளிப்பு விழா மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி ஆசியக் கிரிக்கட் சபை தலைவரும் பாகிஸ்தானின் உள்நாட்டு விவகார அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து (Mohsin Naqvi)வெற்றி பெற்றதற்கான கிண்ணத்தையும் பதக்கங்களையும் பெற மறுத்துவிட்டது. இந்த முடிவு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் எடுக்கப்பட்டது என்பதை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் மற்றும் செயலாளர் தேவஜித் சாய்கியா ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். முன்னதாக, போட்டிகள் முடிவடைந்த பிறகு பரிசளிப்பு விழா தொடங்குவதில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாகத் தாமதம் ஏற்பட்டது. மேடையில் நக்வி நின்றுகொண்டிருக்கஇ இலங்கை அணிக்குக் இரண்டாம் இடத்துக்கான பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து அதனை பெற்றுக்கொண்டார். ஆட்ட நாயகி (Pடயலநச ழக வாந ஆயவஉh) மற்றும் தொடர் நாயகி (Pடயலநச ழக வாந வுழரசயெஅநவெ) போன்ற தனிஆள் விருதுகள் எதுவும் மேடையில் வழங்கப்படவில்லை. இந்திய வீராங்கனைகள் பரிசளிப்பு மேடைக்கு வரவில்லை. இதன்போது துணைத் தலைவரான காலித் அல் ஜரூனி மூலமாகவோ அல்லது வெற்றி பெற்ற சபையின் பிரதிநிதி மூலமாகவோ கிண்ணத்தை வழங்கலாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும், அதனை நக்வி ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக,கடந்த ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியிலும் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற இந்திய ஆடவர் அணி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2025 ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய - பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் பதற்றங்கள் காரணமாக இருநாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் பரஸ்பர கைகுலுக்கலைத் தவிர்ப்பது போன்ற கட்டுப்பாடுகளை இந்திய அணி பின்பற்றி வருகிறது. இந்தநிலையில், இந்திய வீராங்கனைகள் மைதானத்தில் தங்கள் சொந்தக் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு ஆடை மாற்றும் அறைக்குத் திரும்பினர். அத்துடன் தாங்கள் செம்பியன்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
சொந்த மண்ணில் ஏமாற்றம் அடைந்த பென் ஷெல்டன்: அமெரிக்க ஓபன் கோப்பையைக் தட்டிச் சென்ற ஸ்வரேவ்!

சொந்த மண்ணில் ஏமாற்றம் அடைந்த பென் ஷெல்டன்: அமெரிக்க ஓபன் கோப்பையைக் தட்டிச் சென்ற ஸ்வரேவ்!

நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் (Alexander Zverev) அமெரிக்காவின் பென் ஷெல்டனை (Ben Shelton) வீழ்த்தி செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் அமெரிக்க ரசிகர்கள் மற்றும் பென் ஷெல்டனின் கிராண்ட் ஸ்லாம் கனவு தகர்க்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6-3 7-6 (2) 5-7 6-2 என்ற செட் கணக்கில் ஸ்வரேவ் அபார வெற்றி பெற்றார். முதன்மை வரிசை (Top Seed) வீரராகக் களம் கண்ட ஸ்வரேவ் நேற்றைய வெற்றியின் மூலம், இந்த ஆண்டில் தனது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். முன்னதாக இந்த ஆண்டின் பிரெஞ் பகிரங்கப் பட்டத்தையும் அவர் வென்றிருந்தார். அதேநேரம் 2020-ஆம் ஆண்டு அமெரிக்க பகிரங்க மென்னிஸ் ஆடவர் இறுதியில் தோல்வியைத் தழுவிய ஸ்வரேவ் இந்த முறை பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

விபரங்களுக்கு
மகளிர் ஆசியக் கிண்ணம் 2026: செம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை!

மகளிர் ஆசியக் கிண்ணம் 2026: செம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை!

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் (Women's Asia Cup 2026) இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷஃபாலி வர்மா (68ஓட்டங்கள் ) மற்றும் ஸ்மிருதி மந்தனா (59 ஓட்டங்கள்) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 129 ஓட்டங்கள் சேர்த்து அதிரடியான அடித்தளம் அமைத்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் குவித்தது. 184 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியின்,அணித் தலைவி சாமரி அத்தபத்து அதிகபட்சமாக 36 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 8-வது முறையாக ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றி தனது சாதனைப் பயணத்தைத் தொடர்ந்துள்ளது.

விபரங்களுக்கு
நீண்ட நாள் காதலி எமிலி ரெட்வுட்டை கரம்பிடித்தார் அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் கெமரூன் கிரீன்!

நீண்ட நாள் காதலி எமிலி ரெட்வுட்டை கரம்பிடித்தார் அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் கெமரூன் கிரீன்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான 27 வயதான கெமரூன் கிரீன் (Cameron Green), தனது நீண்ட நாள் காதலியான எமிலி ரெட்வுட்டை (Emily Redwood) திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவர்களது திருமணம் அண்மையில் பெர்த் நகரில் உள்ள கொட்டெஸ்லோ சிவிக் சென்டர் மைதானத்தில் (Cottesloe’s Civic Centre Grounds) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இவர்களுக்கு இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 18 மாதங்களுக்குப் பிறகு இவர்கள் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.உணவுமுறை நிபுணராகவும் (Dietitian) கலாநிதி பட்ட (PhD) ஆய்வாளராகவும் இருக்கும் எமிலி ரெட்வுட், வெள்ளை நிறத் திருமண ஆடையில் காட்சியளித்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்று வருகின்றன.இந்த திருமண நிகழ்வில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.அவுஸ்திரேலிய அணிக்காக இதுவரை 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கெமரூன் கிரீன், இம்மாத இறுதியில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
முதல் இருபதுக்கு 20: அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கப்போகும் வீரர் யார் ? சூர்யவன்ஷியா ?  சாம்சனா ?

முதல் இருபதுக்கு 20: அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கப்போகும் வீரர் யார் ? சூர்யவன்ஷியா ? சாம்சனா ?

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டி புதுடெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்தப்போட்டியில் அபிஷேக் சர்மாவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கப் போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 15 வயதே ஆன இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறும் பட்சத்தில், சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் விளையாடும் மிக இளம் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார். அபிஷேக் சர்மாவுடன் முன்னணி வீரர் சஞ்சு சாம்சன் களமிறங்குவாரா அல்லது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்பதில் அணி நிர்வாகத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு இது மிக முக்கிய சர்வதேச தொடராகப் பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரண்டு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.

விபரங்களுக்கு
டெஸ்ட் கிரிக்கெட்: ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை முறியடித்து ஜோ ரூட் முதலிடம்!

டெஸ்ட் கிரிக்கெட்: ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை முறியடித்து ஜோ ரூட் முதலிடம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் காப்பாளர் அல்லாத களத்தடுப்பாளராக அதிக பிடியெடுப்புகளை (Caught) எடுத்த வீரர் என்ற புதிய உலகச் சாதனையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோ ரூட் படைத்துள்ளார். அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை முறியடித்த அவர் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, முதன்மை ஸ்லிப் திசையில் அபாரமாக பிடியெடுப்பினை எடுத்து ஜோ ரூட் இந்த வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் இதுவரை 220 பிடியெடுப்புகளை எடுத்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 219 பிடியெடுப்புகளுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரைப் பின்தள்ளி ஜோ ரூட் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். இதேவேளை, நடப்பு உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரில் அதிக ஓட்டங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் சக வீரரான ஹாரி புரூக்கை 1 ஓட்டம் பின்தள்ளி ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார். துடுப்பாட்டத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் ஜோ ரூட், தற்போது களத்தடுப்பிலும் உலகச் சாதனை படைத்து அசத்தியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விபரங்களுக்கு
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் சவாலாக இருக்கும்: ஆப்கானிஸ்தான் தலைவர் இப்ராஹிம் சத்ரான் கூற்று!

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் சவாலாக இருக்கும்: ஆப்கானிஸ்தான் தலைவர் இப்ராஹிம் சத்ரான் கூற்று!

இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான துடுப்பாட்டம் தங்களுக்கு சவாலாக இருக்கும் எனவும், அவரின் விக்கெட்டை வீழ்த்த சிறப்பு திட்டங்கள் வைத்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் இருபதுக்கு 20 அணியின் தலைவர் இப்ராஹிம் சத்ரான் (Ibrahim Zadran) தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், போட்டியின் முன்னோட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் இப்ராஹிம் சத்ரான் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி மிகச்சிறந்த திறமைசாலி. இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் சமீபத்திய தொடர்களில் அவர் காட்டிய அதிரடி ஆட்டம் மற்றும் பயமற்ற அணுகுமுறை கவனத்தை ஈர்த்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் அவருடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர்களின் அனுபவம் மற்றும் அவரது துடுப்பாட்ட காணொளி பதிவுகளை ஆய்வு செய்ததன் மூலம், வைபவ் சூர்யவன்ஷியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய திட்டமிட்டுள்ளோம். போட்டியில் தேவையற்ற அழுத்தங்களை எடுத்துக்கொள்ளாமல், சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார். ரஷீத் கானுக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் இருபதுக்கு 20 அணியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இப்ராஹிம் சத்ரானுக்கு, இந்த இந்திய தொடர் ஒரு முக்கிய பரிசோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2026 ஆம் ஆண்டில் தொடர்ந்து வலிமையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.அதன்படி, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ஈட்டப்பட்ட மதிப்பிடப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 10.49 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.5 சதவீத அதிகரிப்பாகும்.ஒட்டுமொத்த ஏற்றுமதிச் செயல்பாட்டிற்குப் பொருட்கள் ஏற்றுமதியே அதிக பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தத் துறை 8.19 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.05 சதவீத அதிகரிப்பாகும். இலங்கை சுங்கத் திணைக்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி மதிப்புகளின் அடிப்படையில், 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. எனினும், இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 1.3 சதவீத சிறிய வீழ்ச்சியைக் குறிக்கிறது.இதற்கிடையில், சேவை ஏற்றுமதித் துறையும் தனது நேர்மறையான வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இந்தத் துறை 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிடப்பட்ட வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.02 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேவை ஏற்றுமதியானது தொடர்ந்து விரிவடைந்து, 2026 ஜூலை மாதத்தில் சுமார் 351.92 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.75 சதவீத அதிகரிப்பாகும்.இதன் விளைவாக, 2026 ஜூலை மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டின் மூலமான இலங்கையின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி வருமானம் சுமார் 1.64 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், 'சீயான்' விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் (63 ஆவது படம் ) தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு, இந்தப் படத்திற்கு 'பவர் ஹவுஸ்' (Power House) எனப் பெயரிடப்பட்டுள்ளது.'இருமுகன்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஆனந்த் சங்கருடன் விக்ரம் இரண்டாவது முறையாக இணையும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தலைப்பு அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு

"ராஜ ராஜ சோழன் நான்" பாடலைத் தமிழில் பாடி அசத்திய மிருணாள் தாக்குர்: வைரலாகும் காணொளி!

இந்தியளவில் நட்சத்திர நடிகையாக ஜொலிப்பதுடன் ஹிந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாக்குர் ஆவார். பிரபலமான நடிகையென்பதால் எப்போதும் அவரைச் சுற்றி காதல் கிசுகிசுக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன், நடிகர் தனுஷும் மிருணாளும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. மேலும், கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வாலை மிருணாள் டேட்டிங் செய்வதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மிருணாள் தாக்குர் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவான "ராஜ ராஜ சோழன் நான்" பாடலை ஒலிக்கவிட்டு அதனுடன் இணைந்து தமிழிலேயே இவரும் பாடியுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

விபரங்களுக்கு
'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் வெளியானது

'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் வெளியானது

சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் திரையரங்கு வெளியீட்டுத் திகதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் திகதி 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி வருகிறது. பிரபல இயக்குநர் சுந்தர் சி இப்படத்தை இயக்குவதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விபரங்களுக்கு
ஏழையாக இறப்பது உன் தவறு – வாழ்க்கையில் முன்னேறுவது குறித்து நடிகர் கருணாஸ் கருத்து!

ஏழையாக இறப்பது உன் தவறு – வாழ்க்கையில் முன்னேறுவது குறித்து நடிகர் கருணாஸ் கருத்து!

சென்னையில் உணவுக்கே வழியில்லாமல் தவித்த நிலையை நினைவுகூர்ந்து, வாழ்க்கையில் சாதிப்பது குறித்த தனது கருத்துக்களை நடிகர் கருணாஸ் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ஒரு காலத்தில் தங்க இடமின்றியும், மாற்றுத் துணி இல்லாமலும், அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையிலும் தான் சென்னையில் வாழ்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், இன்று 26 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது குடும்பத்தைக் கௌரவமாக வாழ வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "வீடு, பங்களா, பீச் ஹவுஸ் போன்ற ஆடம்பரங்களைப் பற்றி யாரும் நாளைக்கு பேசப் போவதில்லை. நீ என்ன சாதித்தாய்? எத்தனை படங்களில் நடித்தாய்? என்ன நிரூபித்தாய்? என்ன விருதுகளைப் பெற்றாய்? என்பதை மட்டுமே மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மனிதர்கள் தங்களது கடைசி காலத்தில் வறுமையில் சிக்காமலும், மருத்துவச் செலவுக்குக்கூட வழியில்லாமல் போகாமலும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். "ஏழையாகப் பிறப்பது உன்னுடைய தவறு இல்லை; ஆனால் ஏழையாக இறப்பது உன்னுடைய தவறு மட்டும்தான்" என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
அஜித்தின் பந்தயத்தை பார்க்க வந்த விஜய்: சர்ப்ரைஸ் கொடுத்த த்ரிஷா!

அஜித்தின் பந்தயத்தை பார்க்க வந்த விஜய்: சர்ப்ரைஸ் கொடுத்த த்ரிஷா!

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் (Silverstone) ஓடுதளத்தில் சர்வதேச அளவிலான உந்துருளி பந்தயப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் தீவிரமாகப் பங்கேற்றுப் போட்டியிட்டு வருகிறார். இந்த நிலையில், லண்டனில் நடைபெறும் நடிகர் அஜித்தின் உந்துருளி பந்தயத்தை நேரில் சென்று கண்டு களிப்பதற்காக நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய் அங்கு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நடிகை த்ரிஷாவும் அதே பகுதிக்கு வருகை தந்துள்ளார். இருவரும் அருகருகே நின்றவாறு உந்துருளி பந்தயப் போட்டியைக் கண்டுகளித்துள்ளனர். சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் விஜய்யும் த்ரிஷாவும் இணைந்து பந்தயத்தை பார்வையிட்ட இந்தத் தருணங்கள் நிழற்படங்களாகவும் காணொளிகளாகவும் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
லண்டன் செல்கிறாரா கீர்த்தி சுரேஷ்? நக்கலாக பதிலடி

லண்டன் செல்கிறாரா கீர்த்தி சுரேஷ்? நக்கலாக பதிலடி

கனடாவில் நடைபெறும் புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (Toronto International Film Festival - TIFF) 'டோரோதி' திரைப்படத்தின் திரையிடலுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பயணித்த போது எடுக்கப்பட்ட வானூர்தி நிலைய காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின. அந்தநேரத்தில், அவர் லண்டன் செல்வதாக பரவிய வதந்திகளுக்கும் தவறான செய்திகளுக்கும் கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நக்கலாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆமா சரிதான் லண்டனில் தானே டொராண்டோ பிலிம் பெஸ்டிவல் நடக்குது!" எனக் குறிப்பிட்டு, பரப்பப்பட்ட வதந்திகளுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த நக்கலான பதிவு தற்போது இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு
ஒரே நாளில் மோதிக்கொண்ட சர்தார் 2 மற்றும் மண்டாடி: வசூலில் சாதனை படைத்த விபரங்கள்!

ஒரே நாளில் மோதிக்கொண்ட சர்தார் 2 மற்றும் மண்டாடி: வசூலில் சாதனை படைத்த விபரங்கள்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படமும், நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படமும் நேற்று ஒரே நாளில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. வெளியான முதல் நாளில் உலகளவில் ‘சர்தார் 2’ திரைப்படம் இந்திய மதிப்பில் 6.80 கோடி ரூபாயும், ‘மண்டாடி’ திரைப்படம் 6.55 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாகக் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் நகைச்சுவை நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கி, தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ள சூரி, முன்னணி நடிககரான கார்த்திக் க்கு கடுமையான போட்டி (டஃப்) கொடுக்கும் அளவிற்குத் திரையுலகில் வளர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இணையத்தில் தீயாய் பரவும் செல்ஃபி: அஜித்குமாரின் பந்தயத்தை நேரில் காண்பாரா த்ரிஷா?

இணையத்தில் தீயாய் பரவும் செல்ஃபி: அஜித்குமாரின் பந்தயத்தை நேரில் காண்பாரா த்ரிஷா?

நடிகர் அஜித்குமாரின் சிற்றூந்து பந்தயப் பயிற்சி இடம்பெறும் சில்வர்ஸ்டோன் பகுதியில் நடிகை ராதிகா இருப்பது போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில், நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை த்ரிஷாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.இதனால், நாளை சில்வர்ஸ்டோனில் நடைபெறவுள்ள சிற்றூந்து பந்தயத்தை நடிகை த்ரிஷாவும் நேரில் பார்வையிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோனில் நடைபெறும் Michelin Le Mans Cup சிற்றூந்து பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளதாக Le Mans Cup நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பில் அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளும் தகவல்களும் பரவி வருகின்றன.இந்தநிலையில், த்ரிஷா தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.எனினும், நடிகை த்ரிஷா குறித்த சிற்றூந்து பந்தயத்தை நேரில் பார்வையிடவுள்ளதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////