International News

காஸாவில் இடிபாடுகளுக்கு இடையே உடலங்களை மீட்கும் சவாலான பணி: சாதனங்கள் இன்றி திணறும் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர்

International 28 July 2026
காஸாவில் இடிபாடுகளுக்கு இடையே உடலங்களை மீட்கும் சவாலான பணி: சாதனங்கள் இன்றி திணறும் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர்

கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரச பணி நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி நீதிமன்றம் உத்தரவு!

International 27 July 2026
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரச பணி நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்க ஈரான் தாக்குதல்கள் இடைநிறுத்தம்: உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது!

International 27 July 2026
அமெரிக்க ஈரான் தாக்குதல்கள் இடைநிறுத்தம்: உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது!

2036-க்குள் பணத்தின் தேவை குறையும்? – ஈலோன் மஸ்கின் கணிப்பு

International 27 July 2026
2036-க்குள் பணத்தின் தேவை குறையும்? – ஈலோன் மஸ்கின் கணிப்பு

அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி - குழந்தை உட்பட 5 பேர் காயம்

International 27 July 2026
அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி - குழந்தை உட்பட 5 பேர் காயம்

கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது?

International 27 July 2026
கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது?

கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்: வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்

International 27 July 2026
கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்: வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்

ஈரானுடன் போரை ஆரம்பித்தமை குறித்து கவலை வெளியிட்டுள்ள பிரித்தானிய புதிய பிரதமர்

International 27 July 2026
ஈரானுடன் போரை ஆரம்பித்தமை குறித்து கவலை வெளியிட்டுள்ள  பிரித்தானிய புதிய  பிரதமர்

நோர்மாண்டி D-Day கடற்கரைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகப் பிரகடனம்!

International 26 July 2026
நோர்மாண்டி D-Day கடற்கரைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகப் பிரகடனம்!

ஹோர்முஸ் நீரிணையில் கடற் கண்ணிவெடியில் சிக்கி எண்ணெய் தாங்கி கப்பல் வெடித்துச் சிதறியது!

International 26 July 2026
ஹோர்முஸ் நீரிணையில் கடற் கண்ணிவெடியில் சிக்கி எண்ணெய் தாங்கி கப்பல் வெடித்துச் சிதறியது!

மலத்திலிருந்து மருந்து : இங்கிலாந்தில் புதிய மருத்துவச் சாதனை!

International 26 July 2026
மலத்திலிருந்து மருந்து : இங்கிலாந்தில் புதிய மருத்துவச் சாதனை!

சான் டியாகோ கொமிக்-கோன் 2026 : மார்வெல் ஸ்டுடியோஸின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

International 26 July 2026
சான் டியாகோ கொமிக்-கோன் 2026 : மார்வெல் ஸ்டுடியோஸின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

கெஸ்பியன் கடலில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: யுக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்!

International 26 July 2026
கெஸ்பியன் கடலில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: யுக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்!

சீனாவை அச்சுறுத்தும் 'நவுல்' புயல் : சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு!

International 26 July 2026
சீனாவை அச்சுறுத்தும் 'நவுல்' புயல் : சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு!

சிரியாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 35 பேர் உயிரிழப்பு – பலரின் நிலை கவலைக்கிடம்!

International 26 July 2026
சிரியாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 35 பேர் உயிரிழப்பு – பலரின் நிலை கவலைக்கிடம்!
More News
General27 July 2026

சட்டவிரோத வாகனப் பதிவு நடவடிக்கை: மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் அதிகாரி கைது

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் நிர்வாகச் சேவை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அனுமதி இன்றியும், சுங்க வரிகளைச் செலுத்தாமலும் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றை, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்து, அதன் முதலாம் உரிமையாளர் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காகச் சேவைச் சாளர எண்களை வழங்கி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ளீடு செய்ய நடவடிக்கை எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

விபரங்களுக்கு
சட்டவிரோத வாகனப் பதிவு நடவடிக்கை: மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் அதிகாரி கைது
General27 July 2026

நாட்டின் பல பகுதிகளுக்கும் கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும், அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று (27) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை, நாளை (28) காலை 11 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இந்தப் பலத்த காற்று காரணமாக வீடுகளின் கூரைகள், மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் சேதமடையக்கூடும் என்பதுடன், மரங்களின் கிளைகள் முறிந்து விழுதல் அல்லது மரங்கள் வேரோடு சாய்வதனால் பொதுமக்களுக்கும் சொத்துகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பயிர்களுக்கும் சேதம் ஏற்படக்கூடும் என்பதுடன், தாழ்நிலக் கடலோரப் பகுதிகள் கடல் அலைகளினால் பாதிக்கப்படும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், இந்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூறியுள்ளது.இதன்காரணமாக துறைமுகங்களுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள படகுகள் மோதிக்கொள்வதனால் சேதமடையும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.எனவே, பலத்த காற்றினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
நாட்டின் பல பகுதிகளுக்கும் கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை!
General27 July 2026

இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா நடைமுறை மீண்டும் அமுல்!

இந்தியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. புதிய விசா சேவை முகவர் நியமனம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை, கடந்த 7ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் ஊடாகப் பரிந்துரைக்கப்படும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட யாத்திரிகர் குழுக்களுக்கு எவ்வித விசா கட்டணமும் அறவிடப்பட மாட்டாது. இதற்கான விண்ணப்பங்களை கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்திய தூதரக சேவை மையங்களில் (ICAC) சமர்ப்பிக்க முடியும்.இந்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, 12 முதல் 70 வயதுக்குட்பட்ட பயணிகள் அனைவரும் கைரேகை உள்ளிட்ட உயிரியல் தரவுகளை (Biometrics) வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சிரேஷ்ட பிரஜைகள் நீண்டநேரம் காத்திருப்பதைத் தவிர்க்க விசேட விரைவுச் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. யாத்திரிகர்களுக்கு விசா கட்டணம் முழுமையாக விலக்களிக்கப்பட்ட போதிலும், விசா சேவை மையத்துக்கான செயலாக்கக் கட்டணமாக 1,855 இலங்கை ரூபாய் செலுத்தப்பட வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெளிவுபடுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா நடைமுறை மீண்டும் அமுல்!
General27 July 2026

தெஹிவளை - கல்கிசை துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய உந்துருளி ஓட்டுநர் சிக்கினார்

தெஹிவளை மயானத்தின் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியமை மற்றும் கல்கிசை, டெம்ப்ளர்ஸ் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றமை ஆகிய சம்பவங்களின்போது, துப்பாக்கிதாரி பயணித்த உந்துருளியைச் செலுத்திய நபர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்திடிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.கடந்த 19ஆம் திகதி ஸ்கூட்டர் ரக உந்துருளியில் வந்த இருவர் தெஹிவளை மயானத்தின் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த காவலாளி, 'சாண்டோ' எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் தந்தை என விசாரணைகளில் தெரியவந்தது. அத்துடன், திட்டமிடப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'கொஸ்மல்லி' தரப்பினராலேயே இந்தத் துப்பாக்கிச்சூடு வழிநடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை ஏற்றிவந்த உந்துருளி ஓட்டுநரை நேற்று (26) கைது செய்தனர்.கடந்த 21ஆம் திகதி கல்கிசை, டெம்ப்ளர்ஸ் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற சம்பவத்திலும் இவரே உந்துருளியைச் செலுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, திட்டமிடப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான 'படோவிட்ட அவிஷ்க' என்பவரே தன்னை வழிநடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை ஏற்றிச்செல்வதற்காக 'படோவிட்ட அவிஷ்க' தமக்கு 2 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கியதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களிலும் தான் உந்துருளியை மட்டுமே செலுத்தியதாகவும், துப்பாக்கிச்சூட்டை இரு வேறு நபர்களே மேற்கொண்டதாகவும் சந்தேகநபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.கடந்த 19ஆம் திகதி காலை தொலைபேசியில் அழைத்த 'படோவிட்ட அவிஷ்க', சாண்டோவின் தந்தை மீது துப்பாக்கிச்சூடு நடத்தத் தயாராகுமாறு கூறியதாகவும், அதற்கமைய பெல்லன்வில நடைபாதை பகுதிக்குச் சென்று உந்துருளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரையும் ஏற்றிச்சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.துப்பாக்கிச்சூட்டின் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கிரிவத்துடுவ பகுதியில் இறக்கிவிட்டு, உந்துருளியை கெஸ்பேவ வீதியில் கைவிட்டு வருமாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதேபோல், கடந்த 21ஆம் திகதி இரவு கல்கிசை, டெம்ப்ளர்ஸ் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்துவதற்காக, அதற்குரிய நபரைப் பிள்ளேவ விகாரை பகுதிக்குச் சென்று தாம் அழைத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டின் பின்னர் அவரை பொரலஸ்கமுவ பகுதியில் இறக்கிவிடுமாறு 'படோவிட்ட அவிஷ்க' வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாகத் தம்மை அறிவுறுத்தியதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுடன் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தப்பட்ட 3 கைபேசிகள், வழங்கப்பட்ட 2 இலட்சம் ரூபாயில் மீதமான 55,000 ரூபாய் பணம் மற்றும் குற்றச் செயலின்போது அணிந்திருந்த ஆடைகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பெறப்படவுள்ளது.

விபரங்களுக்கு
தெஹிவளை - கல்கிசை துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய உந்துருளி ஓட்டுநர் சிக்கினார்
General27 July 2026

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை – இன்றைய புதிய விலை விபரம்!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (27) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் (25) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து 377,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,350 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. உலகச் சந்தையில் தங்க விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலையிலும் ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை – இன்றைய புதிய விலை விபரம்!
International News

காஸாவில் இடிபாடுகளுக்கு இடையே உடலங்களை மீட்கும் சவாலான பணி: சாதனங்கள் இன்றி திணறும் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர்

International 28 July 2026
காஸாவில் இடிபாடுகளுக்கு இடையே உடலங்களை மீட்கும் சவாலான பணி: சாதனங்கள் இன்றி திணறும் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர்

கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரச பணி நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி நீதிமன்றம் உத்தரவு!

International 27 July 2026
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரச பணி நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்க ஈரான் தாக்குதல்கள் இடைநிறுத்தம்: உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது!

International 27 July 2026
அமெரிக்க ஈரான் தாக்குதல்கள் இடைநிறுத்தம்: உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது!

2036-க்குள் பணத்தின் தேவை குறையும்? – ஈலோன் மஸ்கின் கணிப்பு

International 27 July 2026
2036-க்குள் பணத்தின் தேவை குறையும்? – ஈலோன் மஸ்கின் கணிப்பு

அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி - குழந்தை உட்பட 5 பேர் காயம்

International 27 July 2026
அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி - குழந்தை உட்பட 5 பேர் காயம்

கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது?

International 27 July 2026
கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது?

கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்: வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்

International 27 July 2026
கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்: வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்

ஈரானுடன் போரை ஆரம்பித்தமை குறித்து கவலை வெளியிட்டுள்ள பிரித்தானிய புதிய பிரதமர்

International 27 July 2026
ஈரானுடன் போரை ஆரம்பித்தமை குறித்து கவலை வெளியிட்டுள்ள  பிரித்தானிய புதிய  பிரதமர்

நோர்மாண்டி D-Day கடற்கரைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகப் பிரகடனம்!

International 26 July 2026
நோர்மாண்டி D-Day கடற்கரைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகப் பிரகடனம்!

ஹோர்முஸ் நீரிணையில் கடற் கண்ணிவெடியில் சிக்கி எண்ணெய் தாங்கி கப்பல் வெடித்துச் சிதறியது!

International 26 July 2026
ஹோர்முஸ் நீரிணையில் கடற் கண்ணிவெடியில் சிக்கி எண்ணெய் தாங்கி கப்பல் வெடித்துச் சிதறியது!

மலத்திலிருந்து மருந்து : இங்கிலாந்தில் புதிய மருத்துவச் சாதனை!

International 26 July 2026
மலத்திலிருந்து மருந்து : இங்கிலாந்தில் புதிய மருத்துவச் சாதனை!

சான் டியாகோ கொமிக்-கோன் 2026 : மார்வெல் ஸ்டுடியோஸின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

International 26 July 2026
சான் டியாகோ கொமிக்-கோன் 2026 : மார்வெல் ஸ்டுடியோஸின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

கெஸ்பியன் கடலில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: யுக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்!

International 26 July 2026
கெஸ்பியன் கடலில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: யுக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்!

சீனாவை அச்சுறுத்தும் 'நவுல்' புயல் : சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு!

International 26 July 2026
சீனாவை அச்சுறுத்தும் 'நவுல்' புயல் : சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு!

சிரியாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 35 பேர் உயிரிழப்பு – பலரின் நிலை கவலைக்கிடம்!

International 26 July 2026
சிரியாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 35 பேர் உயிரிழப்பு – பலரின் நிலை கவலைக்கிடம்!
Sports Stories
Explore More
இந்திய அணியில் புவனேஷ்வர் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு? – அஸ்வின் கருத்து!

இந்திய அணியில் புவனேஷ்வர் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு? – அஸ்வின் கருத்து!

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சில் அனுபவமின்மை நிலவுவதால், மூத்த பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமாரை மீண்டும் இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வாளர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி (RCB) அணி தொடர்ந்து இரண்டு முறை கிண்ணத்தைக் கைப்பற்ற புவனேஷ்வர் குமாரின் சிறப்பான பந்துவீச்சே முக்கிய காரணம் எனக் குறிப்பிட்ட அஸ்வின், தனது யூடியூப் தளத்தில் இது குறித்துப் பேசியுள்ளார். அத்துடன் ரவிச்சந்திரன் அஸ்வின் மேலும் கூறுகையில், "தற்போது நமது வேகப்பந்துவீச்சுப் பிரிவில் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் குறைவாக உள்ளனர். இந்தச் சூழலில் புவனேஷ்வர் குமாரை மீண்டும் அணியில் சேர்ப்பது குறித்து நிச்சயம் யோசிக்க வேண்டும். மேலும் முகமது ஷமிக்கும் புவனேஷ்வர் குமாருக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. புவனேஷ்வர் குமார் கடந்த 2 பருவங்களாகத் தொடர்ந்து உடற்தகுதியுடன் விளையாடி ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். புதிய பந்தை ஸ்விங் செய்வதுடன், டெத் ஓவர்களிலும் (Death overs) சிறப்பாக வீசக்கூடியவர். மேலும் துடுப்பாட்டம் செய்யும் திறனும் அவருக்கு உண்டு. உலகக் கிண்ணத்திற்கு இன்னும் 12 மாதங்களே உள்ள நிலையில், புதிய வீரர்களைப் பரிசோதித்துக் கொண்டிருக்க முடியாது. அனுபவமும் இளமையும் கலந்த ஒரு பந்துவீச்சுப் பிரிவே உலகக் கிண்ணத்திற்குத் தேவை. எனவே, 2027 உலகக் கிண்ணத்திற்கான பரிசீலனையில் புவனேஷ்வர் குமாரின் பெயரைத் தேர்வாளர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்" என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின் முதன்முறையாக வெளியே வந்த மெஸ்ஸி!

உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின் முதன்முறையாக வெளியே வந்த மெஸ்ஸி!

2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்குப் பின்னர், ஆர்ஜென்டீனா அணியின் தலைவரான லியோனல் மெஸ்ஸி முதன்முறையாகப் வெளியே வந்துள்ளார். ஆர்ஜென்டீனாவின் ரொசாரியோ நகருக்கு அருகிலுள்ள 'அரோயோ செகோ' (Arroyo Seco) பகுதியில் நடைபெற்ற 'பிரைமேரா சி' (Primera C) நான்காம் தர லீக் போட்டியொன்றைப் பார்வையிடுவதற்காகவே அவர் வருகை தந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெஸ்ஸியின் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 'லியோன்ஸ் எஃப்.சி' (Leones FC) மற்றும் 'சென்ட்ரல் கோர்டோபா' ஆகிய அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியை, மைதானத்தின் பார்வையாளர் அரங்கில் இருந்தவாறு அவர் பார்வையிட்டுள்ளார். கறுப்பு நிற ஆடை (Hoodie) அணிந்து இரகசியமாகப் போட்டியைப் பார்க்க முயன்ற போதிலும், அவரைக் கண்டுகொண்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தியதையடுத்து, மெஸ்ஸி ரசிகர்களை நோக்கிப் புன்னகையுடன் கையசைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சி.எஸ்.கேவில் இணைகிறாரா ஹர்திக் பாண்டியா?

சி.எஸ்.கேவில் இணைகிறாரா ஹர்திக் பாண்டியா?

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகவுள்ள ஹர்திக் பாண்டியாவைக் கைப்பற்ற, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேயுடன் மேலதிக ரொக்கத் தொகையையும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கோரியதாகக் கூறப்படுகிறது. மேலும், சிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகிய இருவரையும் உள்ளடக்கிய தொகுப்பையும் (Trade deal) மும்பை இந்தியன்ஸ் எதிர்பார்க்கிறது. ஆனால், 19 வயதான ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விரும்பவில்லை. அதற்குப் பதிலாக சிவம் துபே, டெவால்ட் பிரேவிஸ் மற்றும் ரூ.10 கோடி ரொக்கம் அடங்கிய மாற்றுச் சலுகையைச் சென்னை சுப்பர் கிங்ஸ் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இரு அணிகளும் இதுவரை அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை உறுதி செய்யவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், சூழ்நிலையைக் கண்காணித்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற பிற அணிகள் ஹர்திக் பாண்டியாவைக் கைப்பற்றத் தயாராக உள்ளன.

விபரங்களுக்கு
சி.எஸ்.கே அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார்? இறுதிக்கட்டத்தில் தேர்வு – தோனி தீவிர ஆலோசனை!

சி.எஸ்.கே அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார்? இறுதிக்கட்டத்தில் தேர்வு – தோனி தீவிர ஆலோசனை!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான மகேந்திர சிங் தோனி, புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் செயல்முறையில் முக்கிய பங்காற்றி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சம கால டி20 (T20) கிரிக்கெட்டின் வேகமான ஆட்டமுறைகள், புதிய உத்திகள் மற்றும் அணியின் எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ற பயிற்சியாளரை நியமிக்க CSK நிர்வாகம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், புதிய தலைமைப் பயிற்சியாளர் யார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இருபதுக்கு 20 தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது இந்தியா!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இருபதுக்கு 20 தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது இந்தியா!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) இருபதுக்கு 20 தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஸிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது இருபதுக்கு 20 போட்டியில் பெற்ற அபார வெற்றியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியைப் பின்தள்ளி, 2ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து அணி ஒரு இடம் சரிந்து 2ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், அவுஸ்திரேலிய அணி 3ஆவது இடத்தில் உள்ளது. மேலும், இந்த தரவரிசையில் முறையே 4, 5 மற்றும் 6ஆம் இடங்களில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, இந்த தரவரிசையில் இலங்கை அணி 9ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டி : இலங்கை வீரரருக்கு குத்துச்சண்டையில்  வெற்றி!

பொதுநலவாய விளையாட்டுப் போட்டி : இலங்கை வீரரருக்கு குத்துச்சண்டையில் வெற்றி!

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் நேற்று (25) இரவு நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.60 கிலோகிராம் 'லைட் வெயிட்' பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் ரவிந்து ஜயநாத், சொலமன் தீவுகளின் மக்கானா மெக்ஸ் என்பவரை 5 - 0 என்ற சுற்றுப் புள்ளிக் கணக்கில் தோற்கடித்து இந்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.இதேவேளை, கலைநய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கேற்ற டியானா சுமனசேகர 28 ஆவது இடத்தையும், நூயாரா பெர்னாண்டோ 35 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இஷான் கிஷன் அதிரடி: 2ஆவது T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

இஷான் கிஷன் அதிரடி: 2ஆவது T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஹராரேவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் இஷான் கிஷன் அதிகபட்சமாக 81 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இந்தநிலையில் 220 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 17.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஸிம்பாப்வே அணி சார்பில் பிரையன் பென்னட் அதிகபட்சமாக 32 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அபிஷேக் ஷர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்படி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் மற்றும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

விபரங்களுக்கு
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி - விஷ்மி, ஹர்ஷிதா சதமடித்து சாதனை!

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி - விஷ்மி, ஹர்ஷிதா சதமடித்து சாதனை!

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது.274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 46.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது.இந்தப் போட்டியில் இலங்கை அணி சார்பில் விஷ்மி குணரத்ன 123 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் குவித்தனர். இவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டுக்காகப் பகிர்ந்த 203 ஓட்டங்கள், இலங்கை மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய இணைப்பாட்டச் சாதனையாகப் பதிவாகியுள்ளது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
தெலுங்கு நடிகர் ராம் சரண் மருத்துவமனையில் அனுமதி!

தெலுங்கு நடிகர் ராம் சரண் மருத்துவமனையில் அனுமதி!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் ராம் சரண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் அறுவை சிகிச்சைக்காக இந்தியாவின் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, அவரது கை மணிக்கட்டுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறும் இந்த அறுவை சிகிச்சையின் போது உடனிருப்பதற்காக அவரது தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்துள்ளனர்.

விபரங்களுக்கு
துப்பாக்கி சுடும் வீரராகக் களமிறங்கும் சூர்யா: வைரலாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ புதிய செய்தி!

துப்பாக்கி சுடும் வீரராகக் களமிறங்கும் சூர்யா: வைரலாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ புதிய செய்தி!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எதிர்வரும் ஒகஸ்ட் 14-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, படக்குழு தற்போது விளம்பரப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, படத்தின் ட்ரைலர் எதிர்வரும் ஒகஸ்ட் 2-ஆம் திகதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில், 40 வயதைக் கடந்த சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான 'சஞ்சய் விஸ்வநாத்' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ட்ரைலர் வெளியீட்டுத் திகதி தொடர்பாகப் படக்குழுவினரிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

விபரங்களுக்கு
'ஜனநாயகன்' எதிர்பார்த்த வசூலை எட்டாதது ஏன்? – சினிமா தரப்புகளின் விளக்கம்!

'ஜனநாயகன்' எதிர்பார்த்த வசூலை எட்டாதது ஏன்? – சினிமா தரப்புகளின் விளக்கம்!

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த 23ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகியது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தபோதிலும், படம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறவில்லை என சினிமா தரப்புகள் தெரிவிக்கின்றன. தகவல்களின்படி, திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன், வெளியான மூன்று நாட்களில் ரூ.160 கோடி வசூலை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவை எட்டாததற்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டதால், குடும்ப பார்வையாளர்கள் மற்றும் 18 வயதிற்குக் குறைவான ரசிகர்கள் திரையரங்குகளில் படம் பார்ப்பதற்கான வாய்ப்பு குறைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், படம் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்ததும் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக சினிமா தரப்புகள் தெரிவிக்கின்றன. அத்துடன், தெலுங்கு திரைப்படமான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்ற கருத்து பரவியதால், புதிய கதைக்கான எதிர்பார்ப்பு குறைந்ததாகவும், குறிப்பாக தெலுங்கு சந்தையில் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், பிற மொழி ரசிகர்களை ஈர்க்கும் வகையில் பான் இந்தியா நட்சத்திரங்கள் இடம்பெறாததும், வெளியீட்டுத் திகதி மாற்றப்பட்டதும் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக திரை வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், மேற்கண்ட காரணங்கள் சினிமா மற்றும் திரை வர்த்தக தரப்புகளின் மதிப்பீடுகளாகும். படத்தின் வசூல் மற்றும் அதன் பின்னடைவு தொடர்பாக தயாரிப்பாளர் தரப்பிலோ அல்லது படக்குழுவினரிடமிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

விபரங்களுக்கு
அனிருத் - காவ்யா மாறன் பார்சிலோனாவில் இரகசியத் திருமணம்? வெளியானது புதுத் தகவல்!

அனிருத் - காவ்யா மாறன் பார்சிலோனாவில் இரகசியத் திருமணம்? வெளியானது புதுத் தகவல்!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் வருகிற நவம்பர் 9 ஆம் திகதி ஸ்பெயினின் பார்சிலோனாவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக நெருங்கிய தரப்புக்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தகவல்களின்படி, இந்தத் திருமணம் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சுமார் 100 விருந்தினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திருமணத்திற்குப் பின்னர் சென்னையில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக நடிகரும் தயாரிப்பாளருமான ஒய்.ஜி. மகேந்திரன், அனிருத் – காவ்யா மாறன் திருமணம் தொடர்பான தகவலைப் பொதுவெளியில் உறுதிப்படுத்தியிருந்தார். எனினும், அனிருத் அல்லது காவ்யா மாறன் தரப்பிலிருந்து திருமணத் திகதி மற்றும் நிகழ்வு தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

விபரங்களுக்கு
தட்டிக்கொடுங்கள், தட்டி விடாதீர்கள்: தேசிய விருதுக்கு எழுந்த சர்ச்சைகளுக்குப் பதிலளித்த நடிகர் தனுஷ்!

தட்டிக்கொடுங்கள், தட்டி விடாதீர்கள்: தேசிய விருதுக்கு எழுந்த சர்ச்சைகளுக்குப் பதிலளித்த நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த 'ராயன்' திரைப்படம் குறித்து அறிவிக்கப்பட்ட தேசிய விருது மற்றும் அது தொடர்பான சர்ச்சைகள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான 'ராயன்' திரைப்படம், ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது. இருப்பினும், விமர்சன ரீதியாகக் கலவையான கருத்துகளையே பெற்றிருந்தது. இந்த நிலையில், சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது 'ராயன்' படத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் திரைத்துறையிலும் பல விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, அதே ஆண்டில் வெளியான 'மெய்யழகன்', 'மகாராஜா' ஆகிய திரைப்படங்களுக்கு விருது கிடைக்காததைச் சுட்டிக்காட்டி ரசிகர்களும் திரைத்துறையினரும் ஆதங்கம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் தனுஷ், "ராயன் திரைப்படத்திற்குத் தேசிய விருது கிடைத்ததால் எழுந்த சர்ச்சைகளை நான் கவனித்தேன். மெய்யழகன், மகாராஜா ஆகிய திரைப்படங்கள் ராயனை விடச் சிறந்த படங்கள் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், என்னுடைய 'புதுப்பேட்டை', 'ராஞ்சனா', 'மரியான்', 'வடசென்னை', 'கர்ணன்' ஆகிய திரைப்படங்களுக்குத் தேசிய விருது கிடைக்காதபோது, இது குறித்து யாரும் ஆதங்கப்படவில்லை. இப்போது ராயனுக்குக் கிடைத்ததும் 90 சதவீதம் பேர் எதிராகக் கருத்து கூறுகின்றனர். இதில் 10 சதவீதம் பேராவது அன்று எனக்கு ஆதரவாகப் பேசவில்லை. இந்த முறை ராயனுக்குச் சூழல் அமைந்ததால் கிடைத்திருக்கிறது, அவ்வளவுதான். தட்டிக்கொடுங்கள், தட்டிவிட்டு விடாதீர்கள்" எனக் கூறியுள்ளார். நடிகர் தனுஷின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு
4 நாட்களில் 200 கோடி வசூலைத் தாண்டிய 'ஜனநாயகன்'

4 நாட்களில் 200 கோடி வசூலைத் தாண்டிய 'ஜனநாயகன்'

எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' கடந்த 23 ஆம் திகதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜனவரி 09 ஆம் திகதி வெளியாகவிருந்த இந்த திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் பிரச்சினை காரணமாக வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின்னர், ஜனநாயகன் முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்து திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 217 கோடி இந்திய ரூபாய் வசூலித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் ரூ. 145.98 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 71.50 கோடியும் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ராமாயணா' திரைப்படத்தின் முன்னோட்டம் திரையிடல்: வைரலாகும் ரசிகையின் சிறப்புப் பரிசு காணொளி!

ராமாயணா' திரைப்படத்தின் முன்னோட்டம் திரையிடல்: வைரலாகும் ரசிகையின் சிறப்புப் பரிசு காணொளி!

அமெரிக்காவில் நடைபெற்ற சான் டியாகோ காமிக்-கான் (San Diego Comic-Con ) 2026 நிகழ்வில், மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ராமாயணா' திரைப்படத்தின் முன்னோட்டம் அங்கு கலந்துகொண்ட ரசிகர்களுக்காக பிரத்யேகமாகத் திரையிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பெண் ஒருவர், ராமாயணா படக்குழுவினரிடமிருந்து பெற்ற சிறப்புப் பரிசைப் பிரித்துப் பார்க்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. தாமரை வடிவமைப்பு கொண்ட இளஞ்சிவப்பு நிறப் பெட்டியில் வழங்கப்பட்ட அந்தப் பரிசுக்குள், இந்தியப் பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட தங்க நிறச் சங்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு ராமாயணாவை திரைக்குக் கொண்டுவரத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டு, தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா மற்றும் பிரைம் ஃபோகஸ் குழுவினர் வழங்கிய வாழ்த்துக் குறிப்பும் அதில் இருந்தது. இதற்கிடையே, படம் திட்டமிட்டதை விட முன்னதாகவே வெளியாகும் என்ற வதந்திகளைப் படக்குழுவினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர். நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, சன்னி தியோல் மற்றும் ரவி துபே ஆகியோர் நடித்துள்ள 'ராமாயணா: பாகம் 1' 2026 தீபாவளிக்கு உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

விபரங்களுக்கு
பிரபாஸின் 'ஸ்பிரிட்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு திரையுலகில் கத்ரீனா கைப்?

பிரபாஸின் 'ஸ்பிரிட்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு திரையுலகில் கத்ரீனா கைப்?

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'ஸ்பிரிட்' திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்காக பிரபல ஹிந்தி நடிகை கத்ரீனா கைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், காவல்துறை பின்னணியைக் கொண்ட அதிரடி சண்டைக் கதைக் களமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு பணிகள் தற்போது சுமார் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நடிகை கத்ரீனா கைப் - விக்கி கௌஷல் தம்பதியினருக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 'விஹ்ரான் கௌஷல்' என்ற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை பிறந்து 8 மாதங்களே ஆவதால், கத்ரீனா கைப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்துக் குழந்தையைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்தநிலையில், சில சிறப்பு நிபந்தனைகளுடன் 'ஸ்பிரிட்' திரைப்படத்தில் நடிப்பதற்கு அவர் சிலநிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப படப்பிடிப்பை நடத்துவது குறித்துத் தயாரிப்புக் குழுவினர் பரிசீலனை செய்து வருகின்றனர்.ஒருவேளை கத்ரீனா கைப் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தெலுங்குத் திரையுலகிற்கு திரும்பும் படமாக இது அமையும். முன்பாக, கடந்த 2005 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக 'அல்லரி பிடுகு' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரமாண்டமாக உருவாகிவரும் 'ஸ்பிரிட்' திரைப்படம் 2027 மார்ச் 5 ஆம் திகதி பல மொழிகளில் உலகளவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////