Top Story
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமை காரணமாக காணாமல் போயுள்ளவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளதாக நேபாளக் காவல்துறை அறிவித்துள்ளது.

அத்துடன், காணாமல் போயுள்ளவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 113 நேபாள நாட்டவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்புப் பணிகளை நேபாளப் பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
விபரங்களுக்கு
General26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு -காணாமல்போனோர் எண்ணிக்கை 579 ஆக அதிகரிப்பு
Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

செம்மணி குறித்து சுயாதீன விசாரணைக்கு அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!

General 27 August 2026
செம்மணி குறித்து சுயாதீன விசாரணைக்கு அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!

நீதித்துறைச் செயல்பாட்டை விரைவுபடுத்தவே புதிய திருத்தம்: ஜனாதிபதி திட்டவட்டம்

General 27 August 2026
நீதித்துறைச் செயல்பாட்டை விரைவுபடுத்தவே புதிய திருத்தம்: ஜனாதிபதி திட்டவட்டம்

இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றித் தாயகம் திரும்பலாம்!

General 27 August 2026
இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றித் தாயகம் திரும்பலாம்!

நுவரெலியா - கிரெகரி வாவியின் நீரை குடிப்பதால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

General 27 August 2026
நுவரெலியா - கிரெகரி வாவியின் நீரை குடிப்பதால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கினால் 95 பேர் பலி - நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட பனிச்சரிவே காரணமாம்!

General 26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கினால் 95 பேர் பலி - நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட பனிச்சரிவே காரணமாம்!

சமூக ஊடகங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் விற்பனை - பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை

General 26 August 2026
சமூக ஊடகங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் விற்பனை - பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை
International News

தனது சாதனைகளை தொடர்ந்து புதுப்பிக்கும் எந்திரன் - இறுதிப் போட்டியிலும் சாதனை!

International 27 August 2026
தனது சாதனைகளை தொடர்ந்து புதுப்பிக்கும் எந்திரன் - இறுதிப் போட்டியிலும் சாதனை!

பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடை!

International 27 August 2026
பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடை!

பிரபல ஹொலிவூட் நடிகர் டிம் கரி காலமானார்

International 27 August 2026
பிரபல ஹொலிவூட் நடிகர் டிம் கரி காலமானார்

அமெரிக்காவின் புதிய தடைகள் 'அரச மற்றும் பொருளாதார பயங்கரவாதம்' - ஈரான் கடும் கண்டனம்!

International 27 August 2026
அமெரிக்காவின் புதிய தடைகள் 'அரச மற்றும் பொருளாதார பயங்கரவாதம்' - ஈரான் கடும் கண்டனம்!

ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!

International 27 August 2026
ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!

காஸா அமைதி சபை தோல்வியடைந்துவிட்டது- சர்வதேச அமைப்புகள் கவலை!

International 27 August 2026
காஸா அமைதி சபை தோல்வியடைந்துவிட்டது- சர்வதேச அமைப்புகள் கவலை!

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 384 பயணிகள் மாயம்!

International 26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 384 பயணிகள் மாயம்!

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம் : குழந்தை பராமரிப்புக்காக ரூ.53 இலட்சம் வரை நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு!

International 26 August 2026
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம் : குழந்தை பராமரிப்புக்காக ரூ.53 இலட்சம் வரை நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு!

பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு

International 26 August 2026
பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு

காதலின் வெளிப்பாடா அல்லது சட்ட மீறலா? சிற்றூந்தில் 3,400 முத்தக் குறியீடுகளைப் பதித்த இளம் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

International 26 August 2026
காதலின் வெளிப்பாடா அல்லது சட்ட மீறலா? சிற்றூந்தில் 3,400 முத்தக் குறியீடுகளைப் பதித்த இளம் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

திருமாவளவனின் அறிவிப்பு: கண்டுகொள்ளாத விஜய் -குமுறும் தொண்டர்கள்

International 26 August 2026
திருமாவளவனின் அறிவிப்பு: கண்டுகொள்ளாத விஜய் -குமுறும் தொண்டர்கள்

விஜய் பிரதமர் வேட்பாளர் விவகாரம்: காங்கிரஸ் - தமிழக வெற்றிக்கழகம் இடையில் விரிசல்?

International 26 August 2026
விஜய் பிரதமர் வேட்பாளர் விவகாரம்: காங்கிரஸ் - தமிழக வெற்றிக்கழகம் இடையில் விரிசல்?

அருகில் வைத்து சுடப்பட்ட பரிதாபம் : கர்நாடகாவில் 3 தமிழர்கள் மரணமான வழக்கில் வெளியான திடுக்கிடும் பிரேதப் பரிசோதனை அறிக்கை!

International 26 August 2026
அருகில் வைத்து சுடப்பட்ட பரிதாபம் : கர்நாடகாவில் 3 தமிழர்கள் மரணமான வழக்கில் வெளியான திடுக்கிடும் பிரேதப் பரிசோதனை அறிக்கை!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

International 26 August 2026
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் மீது உயிர் அச்சுறுத்தல்: அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் பிரிவு விசாரணை!

International 26 August 2026
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் மீது உயிர் அச்சுறுத்தல்:  அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் பிரிவு விசாரணை!
More News
General26 August 2026

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இலங்கை அணி தொடர்ந்தும் தடுமாற்றம்

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்தை சந்திதுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 9 விக்கெட்டுகளுக்கு 503 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.தேவ்தட் படிக்கல் 117 ஓட்டங்களையும், துருவ் ஜூரல் 115 ஓட்டங்களையும் பெற்று சதம் அடித்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.சோனல் தினுஷா 103 ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டார 80 ஓட்டங்களையும் பெற்றனர்.இதன் மூலம் இந்திய அணி 213 ஓட்டங்கள் முன்னிலை பெற்றதால், இலங்கை அணி follow-on முறையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.இதன்படி, இலங்கை அணி இந்திய அணியை விட 16 ஓட்டங்கள் மாத்திரமே முன்னிலையில் உள்ளது.பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இதனிடையே, இன்னும் 4 விக்கெட்டுகள் மாத்திரமே இலங்கை அணியிடம் இருக்கும் நிலையில், நாளைய இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

விபரங்களுக்கு
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இலங்கை அணி தொடர்ந்தும் தடுமாற்றம்
General26 August 2026

செப்டம்பர் 14 முதல் யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்படும்

யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்படும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, செப்டம்பர் 14 முதல் ஒக்டோபர் 15 வரை யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்படும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது

விபரங்களுக்கு
செப்டம்பர் 14 முதல்  யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்படும்
General26 August 2026

கடந்த 24 மணி நேரத்தில் சோகம்: வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் நான்கு பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 வயது சிறுமி உட்பட இரு பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடம்பன், வெடித்தலத்தீவு 10ஆம் பிரிவு மற்றும் மாத்தளை–ரத்தோட்டை வீதியின் வெரகம ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.மேலும், கிராண்ட்பாஸ் இங்குருகடை சந்திக்கு அருகில் பாதசாரிக் கடவையை கடக்க முயன்ற பெண் ஒருவர் டிப்பர் ரக வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, தெஹியத்தகண்டிய களுவெவ பகுதியில் நீராடிக்கொண்டிருந்த 43 வயதுடைய ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.அத்துடன், கற்பிட்டி ஜனசவிபுர கடற்கரைப் பகுதியில் கடற்றொழிலுக்காகச் சென்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
கடந்த 24 மணி நேரத்தில் சோகம்: வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு!
General26 August 2026

அரசாங்கம் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்காது - ஆனந்த விஜேபால

ஊழல் மற்றும் கையூட்டல் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்காது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.கல்கமுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் தமது கடமைகளை நிறைவேற்றும் காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தலையிடத் தயாராக உள்ளது. நேர்மையாகச் செயற்பட்ட போதிலும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கும் அதிகாரிகளுக்குத் தேவையான ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் கையூட்டல் , ஊழல் மற்றும் மோசடி போன்ற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எத்தகைய சகிப்புத்தன்மையையும் காட்டாது.சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதும், நீதி மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதும் அரசாட்சியின் முக்கிய பொறுப்புகளாகும்.இதற்காக காவல்துறை, சிறைச்சாலைகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை போன்ற நிறுவனங்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் மீதுள்ள அரசியல் செல்வாக்குகளைத் தகர்த்து, குற்றக்குழுக்களுக்கும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் இடையிலான தொடர்புகளை வெளிக்கொணர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 67 முக்கிய குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
 அரசாங்கம் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்காது - ஆனந்த விஜேபால
General26 August 2026

எல்நினோ காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவில் குடிநீர் தட்டுப்பாடு

எல்நினோ காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர் தாங்கிகள் மூலம் அங்கு நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, எல்நினோ காலநிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, 26 ஆயிரத்து 457 குடும்பங்களை சேர்ந்த 84 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ள 22 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 75 ஆயிரத்து 734 பேருக்கு நீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மொனராகலை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 74 குடும்பங்களை சேர்ந்த 35 ஆயிரத்து 639 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 ஆயிரத்து 547 குடும்பங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 523 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வரும் சுமார் 9 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
எல்நினோ காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவில் குடிநீர் தட்டுப்பாடு
International News

தனது சாதனைகளை தொடர்ந்து புதுப்பிக்கும் எந்திரன் - இறுதிப் போட்டியிலும் சாதனை!

International 27 August 2026
தனது சாதனைகளை தொடர்ந்து புதுப்பிக்கும் எந்திரன் - இறுதிப் போட்டியிலும் சாதனை!

பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடை!

International 27 August 2026
பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடை!

பிரபல ஹொலிவூட் நடிகர் டிம் கரி காலமானார்

International 27 August 2026
பிரபல ஹொலிவூட் நடிகர் டிம் கரி காலமானார்

அமெரிக்காவின் புதிய தடைகள் 'அரச மற்றும் பொருளாதார பயங்கரவாதம்' - ஈரான் கடும் கண்டனம்!

International 27 August 2026
அமெரிக்காவின் புதிய தடைகள் 'அரச மற்றும் பொருளாதார பயங்கரவாதம்' - ஈரான் கடும் கண்டனம்!

ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!

International 27 August 2026
ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!

காஸா அமைதி சபை தோல்வியடைந்துவிட்டது- சர்வதேச அமைப்புகள் கவலை!

International 27 August 2026
காஸா அமைதி சபை தோல்வியடைந்துவிட்டது- சர்வதேச அமைப்புகள் கவலை!

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 384 பயணிகள் மாயம்!

International 26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 384 பயணிகள் மாயம்!

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம் : குழந்தை பராமரிப்புக்காக ரூ.53 இலட்சம் வரை நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு!

International 26 August 2026
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம் : குழந்தை பராமரிப்புக்காக ரூ.53 இலட்சம் வரை நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு!

பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு

International 26 August 2026
பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு

காதலின் வெளிப்பாடா அல்லது சட்ட மீறலா? சிற்றூந்தில் 3,400 முத்தக் குறியீடுகளைப் பதித்த இளம் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

International 26 August 2026
காதலின் வெளிப்பாடா அல்லது சட்ட மீறலா? சிற்றூந்தில் 3,400 முத்தக் குறியீடுகளைப் பதித்த இளம் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

திருமாவளவனின் அறிவிப்பு: கண்டுகொள்ளாத விஜய் -குமுறும் தொண்டர்கள்

International 26 August 2026
திருமாவளவனின் அறிவிப்பு: கண்டுகொள்ளாத விஜய் -குமுறும் தொண்டர்கள்

விஜய் பிரதமர் வேட்பாளர் விவகாரம்: காங்கிரஸ் - தமிழக வெற்றிக்கழகம் இடையில் விரிசல்?

International 26 August 2026
விஜய் பிரதமர் வேட்பாளர் விவகாரம்: காங்கிரஸ் - தமிழக வெற்றிக்கழகம் இடையில் விரிசல்?

அருகில் வைத்து சுடப்பட்ட பரிதாபம் : கர்நாடகாவில் 3 தமிழர்கள் மரணமான வழக்கில் வெளியான திடுக்கிடும் பிரேதப் பரிசோதனை அறிக்கை!

International 26 August 2026
அருகில் வைத்து சுடப்பட்ட பரிதாபம் : கர்நாடகாவில் 3 தமிழர்கள் மரணமான வழக்கில் வெளியான திடுக்கிடும் பிரேதப் பரிசோதனை அறிக்கை!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

International 26 August 2026
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் மீது உயிர் அச்சுறுத்தல்: அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் பிரிவு விசாரணை!

International 26 August 2026
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் மீது உயிர் அச்சுறுத்தல்:  அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் பிரிவு விசாரணை!
Sports Stories
Explore More
இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்

இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்

இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் மீது ,ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இங்கிலாந்தில் கடந்த மே மாதம் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.பெர்க்ஷயரைச் சேர்ந்த 31 வயதான ரஹீம் ஸ்டெர்லிங் மீது, முறையற்ற நுகர்வுக்காக நைட்ரஸ் ஒக்சைட்டை வைத்திருந்தமை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு மாதிரியை வழங்க மறுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில் அவர் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.செல்சியா அணியிலிருந்து விலகிய பின்னர், நெதர்லாந்து அணியான ஃபெயெனூர்ட் (Feyenoord) அணிக்காக விளையாடிய ஸ்டெர்லிங், கடந்த பருவத்தில் எந்த அணியுடனும் ஒப்பந்தத்தை செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
பங்களாதேஷுக்கு எதிரான மாபெரும் சாதனை: பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஸ்டார்க்

பங்களாதேஷுக்கு எதிரான மாபெரும் சாதனை: பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஸ்டார்க்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க் மொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.இதன் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் முதன்முறையாக ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.36 வயதான ஸ்டார்க், முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதற்காக ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளைப் பெற்றார்.இதன்படி, ஸ்டார்க் 10 புள்ளிகள் முன்னிலையில் பும்ராவை முந்தியுள்ளார். பும்ரா தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக விளையாடவில்லை.இதனிடையே, இலங்கை வீரர்களான அசித பெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் தலா 5 இடங்கள் முன்னேறி, முறையே 15ஆவது மற்றும் 16ஆவது இடங்களைப் பிடித்துள்ளனர்.

விபரங்களுக்கு
3 பிள்ளைகளுக்கு அப்பாவான பின் திடீர் திருமணம் : தடகள உலகை அதிரவிட்ட உசைன் போல்ட்டின் காதலுக்கு கிடைக்கும் மகுடம்!

3 பிள்ளைகளுக்கு அப்பாவான பின் திடீர் திருமணம் : தடகள உலகை அதிரவிட்ட உசைன் போல்ட்டின் காதலுக்கு கிடைக்கும் மகுடம்!

8 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற தடகள ஜாம்பவான் உசைன் போல்ட், தனது நீண்டகால காதலியான காசி பென்னட்டை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். உசைன் போல்ட்டின் 40ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, காசி பென்னட்டிற்கு 5 கரட் வைர மோதிரம் அணிவித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நீண்டகால காதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து திருமண வாழ்க்கையில் இணையவுள்ள உசைன் போல்ட் மற்றும் காசி பென்னட்டிற்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி: follow on பெற்றது இலங்கை அணி

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி: follow on பெற்றது இலங்கை அணி

சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கொழும்பு சிங்களே விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இலங்கை அணி Follow on முறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இதன்படி இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 1 விக்கெட் இழப்பிற்கு 12 ஓட்டங்களை பெற்றுள்ளது. முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 503 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 290 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கையின் துடுப்பாட்டத்தில் சொனால் தினுஷ தமது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்குகள் கேட்டு தோனி நிபந்தனை? - தொடரும் பேச்சுவார்த்தை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்குகள் கேட்டு தோனி நிபந்தனை? - தொடரும் பேச்சுவார்த்தை!

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ஆலோசகர் பதவியை ஏற்பதற்காக, அணியின் பங்குகளில் கணிசமான பங்கை வழங்குமாறு முன்னாள் இந்திய அணியின் தலைவர் தோனி கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிஎஸ்கே அணியின் ஆலோசகராகப் பொறுப்பேற்கத் தயாராக உள்ள தோனி, ஆரம்பத்தில் அணியின் 25 சதவீத பங்குகளைக் கோரியுள்ளார். இதனையடுத்து, அது குறித்து பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. தோனி கேட்ட சதவீதத்தை வழங்குவதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆரம்பத்தில் மறுப்புத் தெரிவித்த நிலையில், இறுதியில் தோனி 18 சதவீத பங்குகளைக் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், 5.5 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க முன்வந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், தோனியின் இந்த பங்குரிமை விவகாரம் மற்றும் ஐபிஎல்லின் அடுத்த பருவத்தில் அவரது பங்களிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
$95 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார் பிரைட்டன் வீரர் கார்லோஸ் பலேபா!

$95 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார் பிரைட்டன் வீரர் கார்லோஸ் பலேபா!

பிரைட்டன் (Brighton) அணியைச் சேர்ந்த கெமரூன் நாட்டு நடுவரிசை வீரர் கார்லோஸ் பலேபாவை (Carlos Baleba) மன்செஸ்டர் யுனைடெட் (Manchester United) அணி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளது. 22 வயதான பலேபா, 2031 ஜூன் வரை மன்செஸ்டர் யுனைடெட் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தத்தை மேலும் ஒரு ஆண்டு நீடிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு $95 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கோடைகால நாணய மாற்று சந்தையில் மன்செஸ்டர் யுனைடெட்டின் நடுவரிசை பலபடுத்துவதற்கான செலவு 150 மில்லியனை பவுண்டுகளைத் தாண்டிவிட்டது. கடந்த பிரீமியர் லீக் சீசனில் பிரைட்டன் அணிக்காக சிறப்பாக விளையாடிய பலேபா, அதிக தடுப்பாட்டங்கள் (Tackles) மற்றும் பந்துகளை மீட்டெடுத்ததில் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

விபரங்களுக்கு
உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த சீனாவின் 'தியாங்கோங் அல்ட்ரா' ரோபோ!

உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த சீனாவின் 'தியாங்கோங் அல்ட்ரா' ரோபோ!

பீஜிங்கில் நடைபெற்று வரும் உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளில் சீனாவின் 'தியாங்கோங் அல்ட்ரா' (Tiangong Ultra) மனித வடிவிலான ரோபோ, 100 மீட்டர் தூரத்தை வெறும் 8.86 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் (Usain Bolt) 2009ஆம் ஆண்டு நிர்ணயித்த 9.58 வினாடிகள் என்ற மனித உலக சாதனையை விட இது 0.7 வினாடிகளுக்கு மேல் வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்தத் தொடரின் ஆரம்ப நாளில் இதே ரோபோ 9.39 வினாடிகளில் 100மீற்றர் இலக்கைக் கடந்து உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்திருந்தது. இந்தநிலையில், தற்போது அரையிறுதிப் போட்டியில் தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்து, 100 மீற்றர் துாரத்தை 8.86 வினாடிகளில் கடந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் இதே ரோபோ 21.50 வினாடிகளில் இந்த 100 மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தது. பீஜிங் ஹியூமனாய்ட் ரோபோ இன்னோவேஷன் சென்டர் (Beijing Humanoid Robot Innovation Center) தயாரித்துள்ள இந்த ரோபோ, பெரிய அளவிலான ரோபோக்களுக்கான பிரிவில் இந்த சாதனையைப் படைத்துள்ளது. இந்தத் தொடரில் 666 அணிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கால்பந்து, நடனம் மற்றும் தொழில்துறைப் போட்டிகள் உள்ளிட்ட 51 பிரிவுகளில் போட்டியிட்டு வருகின்றன. 100 மீட்டர் ஓட்டம் மட்டுமின்றி, 400 மீட்டர் ஓட்டம், 1,500 மீட்டர், மற்றும் 2.88 மீட்டர் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட நான்கு மனித உலக சாதனைகளையும் இந்தத் தியாங்கோங் ரோபோக்கள் ஏற்கனவே முறியடித்துள்ளதாக இதன் தயாரிப்பு மையம் தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More

"உங்களிடம் நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் - சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை வியந்து பாராட்டிய நடிகர் தனுஷ்!

‘இருமுடி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நக்ஷத்ராவின் நடிப்புக்கு நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். திரைப்படத்தைப் பார்த்த தனுஷ், நக்ஷத்ராவுடன் காணொளி அழைப்பில் பேசியுள்ளார். அப்போது, “ஒருநாள் உன்னிடம் நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும். மிகவும் அருமையாக நடித்திருக்கிறாய். உன்னுடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது” எனப் பாராட்டியுள்ளார்.மேலும், “ஒரு நாள் நாம் சந்திப்போம். சிறப்பாக செய்கிறாய். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” எனக் கூறி அவரை ஊக்கப்படுத்தியுள்ளார்.இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.சிவா நிர்வாணா இயக்கியுள்ள ‘இருமுடி’ படத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குறித்த திரைப்படத்தின் வசூல் ரூ.80 கோடியை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
சமூக வலைத்தள சர்ச்சைகள் : நடிகை தர்ஷா குப்தா மீது வழக்கு பதிவு

சமூக வலைத்தள சர்ச்சைகள் : நடிகை தர்ஷா குப்தா மீது வழக்கு பதிவு

சமூக வலைத்தளங்களில் இளம் வயதினரைப் பாதிக்கும் வகையில் தவறான கருத்துகள் மற்றும் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் மாநகர சைபர் குற்றவியல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சேலம் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிலர் 18 வயதுக்குட்பட்டவர்களைப் பாதிக்கக்கூடிய வகையில் தவறான கருத்துகள் மற்றும் உள்ளடக்கங்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக, திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பெண்கள் சமூக வலைத்தளங்களில் நேரலை மற்றும் பதிவுகள் மூலம் தவறான எண்ணங்களைத் தூண்டும் வகையில் பேசுவதாகவும், இதுபோன்ற உள்ளடக்கங்கள் இளைஞர்களைப் பாதிக்கும் வாய்ப்புள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இதுபோன்ற உள்ளடக்கங்களை வெளியிடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணி அஜித் கோரிக்கை விடுத்துள்ளார்.இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், சமூக வலைத்தளங்களில் தவறான உள்ளடக்கங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த வழக்குத் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
முதலமைச்சர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரின் பிறந்தநாள் : வெளிநாட்டிலிருந்து திடீரென வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மருமகள்

முதலமைச்சர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரின் பிறந்தநாள் : வெளிநாட்டிலிருந்து திடீரென வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மருமகள்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் தாயாரும், பிரபல பின்னணி பாடகியும், எழுத்தாளருமான சோபா சந்திரசேகரின் 78வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி தனது 78 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய சோபா சந்திரசேகருக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வெளிநாட்டில் வசித்து வரும் அவரது மருமகள் எதிர்பாராத விதமாக நேரில் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காணொளியும் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. எனினும், விஜய்யின் மனைவி சங்கீதா சோபா சந்திரசேகருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாரா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், தனது தாயாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தாரா என்பது குறித்த உறுதியான தகவல்களோ, நிழற்படங்களோ இதுவரை வெளியாகவில்லை. இதனால், சோபா சந்திரசேகரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
நம்பவே முடியவில்லை – கயாடு லோஹருக்கு வானூர்தியில் கிடைத்த அரிய வாய்ப்பு

நம்பவே முடியவில்லை – கயாடு லோஹருக்கு வானூர்தியில் கிடைத்த அரிய வாய்ப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆக்‌ஷன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ‘படையப்பா’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ ஆகிய திரைப்படங்களின் அம்சங்களை உள்ளடக்கிய வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து முன்னதாகத் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், கன்னடத் திரையுலகம் மூலம் நடிகையாக அறிமுகமான கயாடு லோஹர், தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்தும் கயாடு லோஹரும் வானூர்தி பயணத்தின்போது எதிர்பாராத விதமாக அருகருகே அமர்ந்து பயணம் செய்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படத்தை கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில், ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகை எனக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்பாராத விதமாக அவருக்கு அருகில் அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது தன்னால் நம்பவே முடியாத அனுபவமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.மேலும், ரஜினிகாந்தைப் பார்த்த அந்த நொடியில் தனது மனதில் ‘சுந்தரி’ பாடல் ஒலிக்கத் தொடங்கியதாகவும், அந்தத் தருணம் தன்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் கயாடு லோஹர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.ரஜினிகாந்தை எதிர்பாராத விதமாகச் சந்தித்த அனுபவத்தை கயாடு லோஹர் பகிர்ந்துள்ள பதிவு, தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

விபரங்களுக்கு
தொடர்பு கொண்டு அழைத்தாலும் எந்தவித பதிலும் இல்லை: 'பென்ஸ்' படக்குழுவினர் மீது நடிகர் நிவின் பாலி அதிருப்தி

தொடர்பு கொண்டு அழைத்தாலும் எந்தவித பதிலும் இல்லை: 'பென்ஸ்' படக்குழுவினர் மீது நடிகர் நிவின் பாலி அதிருப்தி

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து, தற்போது உருவாகி வரும் அதிரடித் த்ரில்ல "பென்ஸ்" திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலி 'ட்வின் ஃபிஷ் வால்டர்' (Twin Fish Walter) என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்தநிலையில் நடிகர் நிவின் பாலி 'பென்ஸ்' படக்குழுவினர் மீது தனது அதிருப்தியை நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 'பென்ஸ்' படத்திற்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தால், கடைசி 2 படங்களுமே தான் ஒரே தோற்றத்தில் (Look) நடித்துள்ளதாக நிவின் பாலி குறிப்பிட்டுள்ளார். 'பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். படக்குழுவினரைத் தொடர்பு கொண்டு அழைத்தாலும் எந்தவித பதிலும் இல்லை என அவர் கவலை தெரிவித்துள்ளார். இந்தப் நேர்காணலை பார்த்து தனது சூழலைப் புரிந்துகொண்டு படக்குழுவினர் தகுந்த முடிவெடுக்க வேண்டும் என நிவின் பாலி கோரிக்கை விடுத்துள்ளார்.

விபரங்களுக்கு
இணையத்தை கலக்கும் சாய் அபயங்கரின் 'ரதிமா' - 30 இலட்சம் பார்வைகளைக் கடந்து வரவேற்பு!

இணையத்தை கலக்கும் சாய் அபயங்கரின் 'ரதிமா' - 30 இலட்சம் பார்வைகளைக் கடந்து வரவேற்பு!

சமீப காலமாக தனியிசைப் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், தனியிசை ஆல்பங்கள் மூலம் பிரபலமடைந்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அபயங்கர். இவரது 'கட்சி சேர', 'ஆச கூட' உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து, இவரது முந்தைய தனியிசை ஆல்பமான 'பவழமல்லி'யும் ஹிட்டானது.இந்த வரிசையில், சாய் அபயங்கரின் 6ஆவது தனியிசை ஆல்பமாக 'ரதிமா' தற்போது வெளியாகியுள்ளது.இந்தப் பாடலுக்கு சாய் அபயங்கரே இசையமைத்து பாடியுள்ளதோடு வரிகளை விவேக் எழுதியுள்ளார். இந்த ஆல்பத்தை தேஜோ இயக்கியுள்ளார்.பொதுவாக சாய் அபயங்கரின் ஆல்பங்களில் இடம்பெறும் நடிகைகளும் பரவலாக அறியப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆல்பத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் சாய் அபயங்கருடன் இணைந்து நடித்துள்ளார்.யுடியூப்பில் வெளியான இந்த ஆல்பப் பாடல், வெளியான 20 மணி நேரத்திற்குள் 30 இலட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபரங்களுக்கு

"கலாசாரம் ஆடையில் இல்லை, உணர்வில் உள்ளது.." - கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதில்

பொலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகையான கிருத்தி சனோன், தன் ஆடைத் தேர்வு மீதான விமர்சனத்துக்கு அவர் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நகைக்கடை விளம்பரம் ஒன்றில் ரக்சாபந்தன் பண்டிகையை முன்னிட்டு கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தியப் பாரம்பரியப் பண்டிகைக்கு இத்தகைய ஆடைகள் உகந்ததல்ல என்று இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், "பெண்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அணியும் சுதந்திரம் இருந்தாலும், சில எல்லைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.இந்த விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் கிருத்தி சனோன் பதிலளித்துள்ளார். "பண்டிகையின் சாரம்சம் என்பது நாம் உடுத்தும் உடையில் இல்லை. அந்த பாரம்பரியத்துக்கு நாம் அளிக்கும் அர்த்தம் மற்றும் உணர்வுகளில் தான் எல்லாமே அடங்கியிருக்கிறது.ரக்சா பந்தன் என்பது பாதுகாப்பைப் பற்றிய ஒரு பிணைப்பு. நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொள்கிறோம். ஒரு சகோதரன் இருப்பதால் ஏற்படும் பாதுகாப்பு போலவே எங்களால் ஒருவரை ஒருவர் பாதுகாத்து கொள்ள முடியும் என நம்புகிறோம்.பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான மரியாதையைக் கணிப்பது சரியல்ல. பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்த போகிறோம்..?காலத்திற்கு ஏற்ப பாரம்பரிய ஆடைகளின் பாணியிலும் மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால், இன்றும் கலாசாரத்தின் மீதான மரியாதை என்பது பெண்ணின் ஆடையை வைத்தே அளவிடப்படுகிறது.பண்பாடும், பாரம்பரியமும் ஒரு பெண்ணின் மனதில் தான் இருக்கிறதே தவிர, அவளுடைய கழுத்துப் பகுதியில் அல்ல " என தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
டொக்சிக் படக்குழுவின் அதிரடி வேண்டுகோள்: இரசிகர்கள் செய்யக்கூடாதவை என்ன?

டொக்சிக் படக்குழுவின் அதிரடி வேண்டுகோள்: இரசிகர்கள் செய்யக்கூடாதவை என்ன?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டொக்ஸிக்’ திரைப்படம் இன்று(26) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹீமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தநிலையில் , 'டொக்ஸிக்' படக்குழுவினர் இரசிகர்களுக்கு சில முக்கியமான கோரிக்கைகளை விடுத்துள்ளனர். A Fairy Tale for Grown-Ups என்பது வெறும் திரைப்படமன்று, இது பல ஆண்டுகளாக , காட்சி காட்சியாக, தேர்வு தேர்வாகக் கட்டியெழுப்பப்பட்ட உலகமாகும். இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர், நடிகர் மற்றும் பணியாளர்களின் நோக்கம், இரசிகர்களும் இதே போன்ற கூட்டு அனுபவத்தைப் பெரிய திரையில் பெற வேண்டும் என்பதே ஆகும். திரையரங்குகளில் படம் பார்க்கும்போது காட்சிகளையும் காணொளிகளையும் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என படக்குழு வலியுறுத்துகிறது. படத்தின் கதையமைப்பை முன்கூட்டியே வெளிப்படுத்துவதோ அல்லது படத்தின் காட்சிகளை பரப்பி மற்றவர்களின் திரையரங்க அனுபவத்தைக் கெடுப்பதோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகால உழைப்பில் உருவான இந்த படத்தை பெரிய திரையில் முழுமையாக அனுபவித்து ரசிக்க வேண்டும் என படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////