Top Story
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு விடயதான அமைச்சர் என்ற ரீதியில் தாம் முழுமையான பொறுப்பை ஏற்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அதற்கமைய, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் அனுதாபங்களையும் தாம் தெரிவிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்பாராதவிதமாக இடம்பெற்ற இந்த சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏன்?, யாரால், என்ன நோக்கத்திற்காக இந்த மோதல் நிலை உருவாக்கப்பட்டது என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, இந்த மோதல் நிலையை வழிநடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த கைதிகளை ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் விரிவான அறிக்கையை நாளைய தினத்துக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றைய தினம் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேரும் சிறைக்கைதிகள் 19 பேருமாக மொத்தமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் 18 பேர் கம்பஹா, வெலிசர ராகம ஆகிய மருத்துவமனைகளுக்கும் 4 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கும் மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சிறைச்சாலையில் நேற்றைய தினமும் சில கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சம்பவத்தின் போதும், இரு கைதிகள் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபரங்களுக்கு
General06 July 2026
பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு - சம்பவத்துக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்!
Live Football Scores
International News

பாலினப் பாகுபாடான கருத்து - பாதிக்கப்பட்ட பிரான்ஸ் பெண்ணுக்குக் கிடைத்த சர்வதேச நீதி!

International 06 July 2026
பாலினப் பாகுபாடான கருத்து - பாதிக்கப்பட்ட பிரான்ஸ் பெண்ணுக்குக் கிடைத்த சர்வதேச நீதி!

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ : வீடுகளை விட்டு ஓடும் மக்கள்!

International 06 July 2026
ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ : வீடுகளை விட்டு ஓடும் மக்கள்!

மெக்சிகோவில் 36வது பிறந்தநாளைக் கொண்டாடிய 'சின் சின்' பண்டா கரடி!

International 06 July 2026
மெக்சிகோவில் 36வது பிறந்தநாளைக் கொண்டாடிய 'சின் சின்' பண்டா கரடி!

500 கோடி ஆண்டுகளில் சூரியன் அழியும் போது பூமி தப்பிக்குமா? : பெல்ஜியம் விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு!

International 06 July 2026
500 கோடி ஆண்டுகளில் சூரியன் அழியும் போது பூமி தப்பிக்குமா? : பெல்ஜியம் விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு!

மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு அதிரடி உத்தரவு : இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை உடனடியாக நீக்கக் கெடு!

International 06 July 2026
மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு அதிரடி உத்தரவு : இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை உடனடியாக நீக்கக் கெடு!

வெனிசுவேலா இரட்டை நிலநடுக்கம் : உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு – ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் மாயம்!

International 06 July 2026
வெனிசுவேலா இரட்டை நிலநடுக்கம் : உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு – ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் மாயம்!

தங்கப் பிரியர்களுக்கு முக்கிய செய்தி : சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!

International 06 July 2026
தங்கப் பிரியர்களுக்கு முக்கிய செய்தி : சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் சரிவு!

International 06 July 2026
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் சரிவு!

நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கி விபத்து: 10 பேர் மீட்பு

International 06 July 2026
நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் வானூர்தி ஒன்று  அவசரமாகத் தரையிறங்கி விபத்து: 10 பேர் மீட்பு

சிகாகோவில் தரையிறங்கிய போது டெல்டா வானூர்தி மீது வான வேடிக்கை வெடிப்பொருள் தாக்கம்- மக்கள் அதிர்ச்சி

International 06 July 2026
சிகாகோவில் தரையிறங்கிய போது டெல்டா வானூர்தி மீது வான வேடிக்கை வெடிப்பொருள் தாக்கம்- மக்கள் அதிர்ச்சி

இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவரின் உயிருக்கு ஆபத்து: மகன் அவசர கோரிக்கை

International 06 July 2026
இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவரின் உயிருக்கு ஆபத்து: மகன் அவசர கோரிக்கை

ஈரானின் மறைந்த உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கில் எதற்காக சிவப்பு கொடிகள்?

International 06 July 2026
ஈரானின் மறைந்த உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கில் எதற்காக சிவப்பு கொடிகள்?

சீனப் போட்டியால் சரிவைச் சந்திக்கும் ஜெர்மனியின் நடுத்தர உற்பத்தித் துறை!

International 05 July 2026
சீனப் போட்டியால் சரிவைச் சந்திக்கும் ஜெர்மனியின் நடுத்தர உற்பத்தித் துறை!

தள்ளாடும் வயதிலும் தளராத மன உறுதியுடன் திருப்பதி மலை ஏறிய 116 வயது மூதாட்டி

International 05 July 2026
தள்ளாடும் வயதிலும் தளராத மன உறுதியுடன் திருப்பதி மலை ஏறிய 116 வயது மூதாட்டி

"வரலாற்றைத் திரித்தால் கடும் எதிர்விளைவுகள்" - ஜூனியர் என்டிஆர் திரைப்படத்திற்கு சீமான் எச்சரிக்கை!

International 05 July 2026
"வரலாற்றைத் திரித்தால் கடும் எதிர்விளைவுகள்" - ஜூனியர் என்டிஆர் திரைப்படத்திற்கு சீமான் எச்சரிக்கை!
More News
General06 July 2026

தங்கப் பிரியர்களுக்கு நிம்மதிச் செய்தி : தொடர் ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியில் தங்க விலையில் சரிவு!

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (06) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் (04) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 382,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 351,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,938 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களின் தாக்கத்தால், அண்மைய நாட்களாக உள்நாட்டு தங்க விலையும் ஏற்ற, இறக்கங்களுடன் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
தங்கப் பிரியர்களுக்கு நிம்மதிச் செய்தி : தொடர் ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியில் தங்க விலையில் சரிவு!
General06 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : கவலைக்கிடமான 4 சிறை அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 4 சிறை அதிகாரிகள், மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனை தரப்புக்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. காயமடைந்த அதிகாரிகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, விசேட மருத்துவ சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

விபரங்களுக்கு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : கவலைக்கிடமான 4 சிறை அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்!
General06 July 2026

எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடரும்

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர் (QR) குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை எந்தவித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,நாட்டில் எதிர்காலத்திலும் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய விநியோக முறைமையில் மாற்றங்கள் ஏற்படலாம் எனப் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை அதிகரிப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை.மறுஅறிவித்தல் வரை தற்போதைய ஒதுக்கீட்டு எல்லைகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடரும்
General06 July 2026

பொருளாதார, வர்த்தக சக்திகளால் மறைமுக ஆக்கிரமிப்பு : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு!

நாட்டினதும், பிராந்தியத்தினதும் ஒருமைப்பாடு பாதிக்கப்படும் போது, அதனை மௌனமாக பார்வையிட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார். கதிர்காமத்திற்கு வழிபாடுகளுக்குச் சென்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் மிக நுட்பமான முறையில் நாட்டில் ஏகாதிபத்தியம் கடைப்பிடிக்கப்படுவதாகவும் எதிர்கட்சித் தலைவர் கூறியுள்ளார். முன்னர் நேரடியாக நாடு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், தற்போது, பொருளாதார மற்றும் வர்த்தக சக்திகளைப் பயன்படுத்தி மறைமுக ஆக்கிரமிப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். உலக நாடுகள் மாத்திரமின்றி, சர்வதேச நிறுவனங்களும் நாட்டின் தேசிய செயற்றிட்டங்கள் மீது ஆளுகை செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, எந்தவித பாகுபாடும் இன்றி, இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
பொருளாதார, வர்த்தக சக்திகளால் மறைமுக ஆக்கிரமிப்பு : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு!
General06 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலையால் இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.சிறைச்சாலை அதிகாரிகள் ஐந்து பேரும், கைதிகள் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனையின் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று இடம்பெற்று வரும் மோதலை கருத்திற்கொண்டு மேலதிக பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவ வீரர்கள் சிறைச்சாலை வளாகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

விபரங்களுக்கு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு
International News

பாலினப் பாகுபாடான கருத்து - பாதிக்கப்பட்ட பிரான்ஸ் பெண்ணுக்குக் கிடைத்த சர்வதேச நீதி!

International 06 July 2026
பாலினப் பாகுபாடான கருத்து - பாதிக்கப்பட்ட பிரான்ஸ் பெண்ணுக்குக் கிடைத்த சர்வதேச நீதி!

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ : வீடுகளை விட்டு ஓடும் மக்கள்!

International 06 July 2026
ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ : வீடுகளை விட்டு ஓடும் மக்கள்!

மெக்சிகோவில் 36வது பிறந்தநாளைக் கொண்டாடிய 'சின் சின்' பண்டா கரடி!

International 06 July 2026
மெக்சிகோவில் 36வது பிறந்தநாளைக் கொண்டாடிய 'சின் சின்' பண்டா கரடி!

500 கோடி ஆண்டுகளில் சூரியன் அழியும் போது பூமி தப்பிக்குமா? : பெல்ஜியம் விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு!

International 06 July 2026
500 கோடி ஆண்டுகளில் சூரியன் அழியும் போது பூமி தப்பிக்குமா? : பெல்ஜியம் விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு!

மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு அதிரடி உத்தரவு : இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை உடனடியாக நீக்கக் கெடு!

International 06 July 2026
மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு அதிரடி உத்தரவு : இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை உடனடியாக நீக்கக் கெடு!

வெனிசுவேலா இரட்டை நிலநடுக்கம் : உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு – ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் மாயம்!

International 06 July 2026
வெனிசுவேலா இரட்டை நிலநடுக்கம் : உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு – ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் மாயம்!

தங்கப் பிரியர்களுக்கு முக்கிய செய்தி : சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!

International 06 July 2026
தங்கப் பிரியர்களுக்கு முக்கிய செய்தி : சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் சரிவு!

International 06 July 2026
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் சரிவு!

நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கி விபத்து: 10 பேர் மீட்பு

International 06 July 2026
நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் வானூர்தி ஒன்று  அவசரமாகத் தரையிறங்கி விபத்து: 10 பேர் மீட்பு

சிகாகோவில் தரையிறங்கிய போது டெல்டா வானூர்தி மீது வான வேடிக்கை வெடிப்பொருள் தாக்கம்- மக்கள் அதிர்ச்சி

International 06 July 2026
சிகாகோவில் தரையிறங்கிய போது டெல்டா வானூர்தி மீது வான வேடிக்கை வெடிப்பொருள் தாக்கம்- மக்கள் அதிர்ச்சி

இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவரின் உயிருக்கு ஆபத்து: மகன் அவசர கோரிக்கை

International 06 July 2026
இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவரின் உயிருக்கு ஆபத்து: மகன் அவசர கோரிக்கை

ஈரானின் மறைந்த உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கில் எதற்காக சிவப்பு கொடிகள்?

International 06 July 2026
ஈரானின் மறைந்த உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கில் எதற்காக சிவப்பு கொடிகள்?

சீனப் போட்டியால் சரிவைச் சந்திக்கும் ஜெர்மனியின் நடுத்தர உற்பத்தித் துறை!

International 05 July 2026
சீனப் போட்டியால் சரிவைச் சந்திக்கும் ஜெர்மனியின் நடுத்தர உற்பத்தித் துறை!

தள்ளாடும் வயதிலும் தளராத மன உறுதியுடன் திருப்பதி மலை ஏறிய 116 வயது மூதாட்டி

International 05 July 2026
தள்ளாடும் வயதிலும் தளராத மன உறுதியுடன் திருப்பதி மலை ஏறிய 116 வயது மூதாட்டி

"வரலாற்றைத் திரித்தால் கடும் எதிர்விளைவுகள்" - ஜூனியர் என்டிஆர் திரைப்படத்திற்கு சீமான் எச்சரிக்கை!

International 05 July 2026
"வரலாற்றைத் திரித்தால் கடும் எதிர்விளைவுகள்" - ஜூனியர் என்டிஆர் திரைப்படத்திற்கு சீமான் எச்சரிக்கை!
Sports Stories
Explore More
கால்பந்து தொடர் 2026 : மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலாண்ட் ஒரே தொடரில் தலா 7 கோல்கள் – புதிய வரலாற்றுச் சாதனை!

கால்பந்து தொடர் 2026 : மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலாண்ட் ஒரே தொடரில் தலா 7 கோல்கள் – புதிய வரலாற்றுச் சாதனை!

கால்பந்து கிண்ண வரலாற்றில் இதுவரை இடம்பெறாத புதிய சாதனை ஒன்று நடப்பு தொடரில் முதன்முறையாகப் பதிவாகியுள்ளது. அதன்படி, ஒரே கால்பந்து கிண்ணத் தொடரில் 3 வீரர்கள் தலா 7 கோல்களைப் பதிவு செய்திருப்பது கால்பந்து வரலாற்றில் முதல் முறையாகும். இந்த வரலாற்றுச் சாதனையை லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé) மற்றும் எர்லிங் ஹாலாண்ட் (Erling Haaland) ஆகியோர் தலா 7 கோல்களை அடித்துப் படைத்துள்ளனர். இந்த வீரர்களின் அபாரமான கோல் வேட்டை, நடப்பு கால்பந்து கிண்ணத் தொடரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதனிடையே, நோர்வே அணி கால்பந்து கிண்ண வரலாற்றில் முதன்முறையாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி மற்றுமொரு வரலாற்றுச் சாதனையையும் பதிவு செய்துள்ளது.

விபரங்களுக்கு
பிரேசில் அதிர்ச்சித் தோல்வியுடன் வெளியேற்றம் - சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மார்!

பிரேசில் அதிர்ச்சித் தோல்வியுடன் வெளியேற்றம் - சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மார்!

கால்பந்து கிண்ணத் தொடரின் 16 சிறந்த அணிகளுக்கான சுற்றில் நோர்வே அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் நோர்வே அணியின் எர்லிங் ஹாலண்ட் இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்ய, போட்டியின் இறுதிக்கட்டத்தில் பிரேசில் அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நெய்மார் கோலாக மாற்றினார்.எனினும், பிரேசில் அணி 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கிண்ணத் தொடரில் மிக ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். இந்த தோல்வியைத் தொடர்ந்து, பிரேசில் அணியின் 34 வயது நட்சத்திர வீரர் நெய்மார், தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக மைதானத்திலேயே கண்ணீருடன் உருக்கமாக அறிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு இதே மைதானத்தில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியின் மூலம் அறிமுகமான அவர், எங்கு தனது பயணத்தைத் தொடங்கினாரோ அங்கேயே அதனை முடித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான உபாதைகளால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரேசில் கால்பந்து வரலாற்றில் பல வரலாற்றுச் சாதனைகளுடன் நெய்மார் விடைபெறுகிறார். பிரேசில் அணிக்காக 130 போட்டிகளில் விளையாடி 80 கோல்களை அடித்துள்ள அவர், கால்பந்து மாவீரர் பெலேயின் (77 கோல்கள்) சாதனையை முறியடித்து பிரேசில் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராகத் திகழ்கிறார். அத்துடன், பெலேவுக்கு அடுத்தபடியாக நான்கு வெவ்வேறு உலகக் கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த இரண்டாவது பிரேசில் வீரர் என்ற பெருமையையும், காபுவுக்கு அடுத்தபடியாக அதிக போட்டிகளில் பங்கேற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
மெக்சிக்கோ வெளியேற்றம் - இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!

மெக்சிக்கோ வெளியேற்றம் - இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!

கால்பந்து கிண்ணத் தொடரின் 16 அணிகளின் (Round of 16) சுற்றில்,மெக்சிக்கோ அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. மெக்சிக்கோ சிட்டியிலுள்ள மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் 36 மற்றும் 38ஆவது நிமிடங்களில் இங்கிலாந்து வீரர் ஜூட் பெலிங்ஹாம் (Jude Bellingham) அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து பதிலடி கொடுத்த மெக்சிக்கோ அணியின் ஜூலியன் குய்னோனஸ் (Julián Quiñones) 42ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது.இரண்டாம் பாதியின் 54ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து தற்காப்பு ஆட்டக்காரர் ஜாரெல் குவான்சா (Jarel Quansah) சிவப்பு அட்டை (Red Card) பெற்று வெளியேற்றப்பட்டதால் இங்கிலாந்து அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.எனினும், 60ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன் (Harry Kane) கோலாக மாற்றி அணியின் புள்ளியை 3-1 என உயர்த்தினார். பின்னர் 69ஆவது நிமிடத்தில் மெக்சிக்கோ அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அதன் நட்சத்திர வீரர் ரவுல் ஜிமினெஸ் (Raúl Jiménez) கோலாக மாற்றினார்.போட்டியின் இறுதி நிமிடங்கள் வரை மெக்சிக்கோ அணி சமநிலை கோலை அடிக்க தீவிரமாக முயற்சித்த போதிலும், இங்கிலாந்து அணியின் வலுவான தற்காப்பு ஆட்டம் காரணமாக மேலும் கோல்கள் எதுவும் புகுத்தப்படவில்லை. இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணி 3-2 என வெற்றியை உறுதி செய்தது.இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளதுடன், அடுத்ததாக நோர்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது.

விபரங்களுக்கு
3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் மே.இ.தீவுகள் 318 ஓட்டங்களை பெற்றது!

3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் மே.இ.தீவுகள் 318 ஓட்டங்களை பெற்றது!

இலங்கைக்கு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.நோர்த் சவுண்டில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்டுகளை இழந்து 549 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.மேற்கிந்திய தீவுகள் தமது முதலாவது இன்னிங்ஸுக்காக தற்போது துடுப்பாடுகிறது. ஆரம்ப வீரர்களாகக் களம் இறங்கிய பிரண்டன் கிங் 17 ஓட்டங்களுடனும், ஜோன் கெம்ப்பெல் 72 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கவேம் ஹாட்ஜ் 31 ஓட்டங்களையும், அமீர் ஜங்கு 9 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, மேற்கிந்திய தீவுகள் அணி 144 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.ஐந்தாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தினால் மேற்கிந்திய தீவுகள் அணி சரிவிலிருந்து மீண்டது. இன்றைய ஆட்ட நேர முடிவில் ஷாய் ஹோப் 86 ஓட்டங்களுடனும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 85 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அசித்த பெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 231 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

விபரங்களுக்கு
பிரேசில் வெளியேற்றம் - நோர்வே காலிறுதிக்கு முன்னேற்றம்!

பிரேசில் வெளியேற்றம் - நோர்வே காலிறுதிக்கு முன்னேற்றம்!

கால்பந்து கிண்ணத் தொடரின் 16 அணிகளின் (Round of 16) சுற்றில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக வீழ்த்தி நோர்வே அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.நியூயோர்க் நியூ ஜேர்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி நிமிடங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டங்களை மாறி மாறி வெளிப்படுத்திய போதிலும், முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் எதனையும் அடிக்க முடியவில்லை.இதனால் முதல் பாதி ஆட்டம் 0 - 0 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றது.இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் போக்கை மாற்றிய நோர்வே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் (E. Haaland) 79 ஆவது நிமிடத்தில் அணியின் முதலாவது கோலை அடித்து முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.தொடர்ந்து ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் அவர் தனது இரண்டாவது கோலையும் அடித்து பிரேசில் அணிக்கு அதிர்ச்சியளித்தார். நோர்வே 2 - 0 என முன்னிலையில் இருந்த நிலையில், போட்டியின் மேலதிக இழப்பீட்டு நேரத்தில் (90'+10 ஆவது நிமிடத்தில்) பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்தது. இதனைச் சாதகமாக்கிக் கொண்ட பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் ஒரு கோலை அடித்தார்.எனினும், போட்டியின் இறுதிவரை பிரேசில் அணியால் ஆட்டத்தைச் சமநிலைப்படுத்த முடியாமல் போனதால், 2 - 1 என்ற கோல் கணக்கில் நோர்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

விபரங்களுக்கு
மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலியா மீண்டும் செம்பியன்!

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலியா மீண்டும் செம்பியன்!

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று (5) நடைபெற்ற ஐசிசி மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி அவுஸ்திரேலிய மகளிர் அணி மீண்டும் உலகக் கிண்ணத்தைச் தமதாக்கியுள்ளது.போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.துடுப்பாட்டத்தில் அணித்தலைவி நாட் ஷிவர்-பிரண்ட் (Nat Sciver-Brunt) ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 58 ஓட்டங்களையும், அலிஸ் கேப்சி 23 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஃபிரேயா கெம்ப் 28 பந்துகளில் 44 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் கிம் கார்த், லூசி ஹாமில்டன், சோஃபி மோலினக்ஸ் மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் வீழ்த்தினர்.இதனைத் தொடர்ந்து 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி, 17.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றது.அந்த அணி சார்பில் அதிகபடியாக பெத் மூனி 64 ஓட்டங்களையும் லிட்ச்ஃபீல்ட் 48 ஓட்டங்களையும் குவித்தனர்.பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் லோரன் பெல், சார்லி டீன் மற்றும் சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.இதன் மூலம் 17 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகளால் இங்கிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலிய மகளிர் அணி, 2026ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

விபரங்களுக்கு
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக மீண்டும் பாபர் அசாம் நியமனம்!

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக மீண்டும் பாபர் அசாம் நியமனம்!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் மீண்டும் டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.    உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளியியலில் அணியின் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், ஷான் மசூதிற்குப் பதிலாக அவர் இந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.   தேர்வுக்குழுவினர் அணியில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளதுடன், நான்கு அறிமுக வீரர்களையும் சேர்த்துள்ளனர்.    இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அலி உஸ்மான், துடுப்பாட்ட வீரர் மொஹமட் அவாய்ஸ் ஜாபர், வேகப்பந்து வீச்சாளர் உபெய்ட் ஷா மற்றும் விக்கெட் காப்பாளர் மொஹமட் காசி கோரி ஆகியோரே அந்த நான்கு வீரர்களாவர்.   ஷான் மசூதின் தலைமைத்துவ காலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது.    அவர் தலைமையில் விளையாடிய 16 டெஸ்ட் போட்டிகளில் 12 போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது.    மேலும், இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

விபரங்களுக்கு
நோர்வேக்கு எதிரான வரலாற்று சாபத்தை உடைக்குமா பிரேசில்?

நோர்வேக்கு எதிரான வரலாற்று சாபத்தை உடைக்குமா பிரேசில்?

உலகக் கிண்ணக் கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.   நடப்பு செம்பியன் அர்ஜென்டினா, எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் ஆகிய அணிகள் பலமாக முன்னேறி வரும் நிலையில், 5 முறை செம்பியனான பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறும் நோக்கில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஆனால், பிரேசிலின் காலிறுதி கனவுக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது நோர்வே அணி. சர்வதேச கால்பந்து வரலாற்றில் பிரேசில் அணி இதுவரை நோர்வேயை வீழ்த்தியதே இல்லை. இரு அணிகளும் மோதிய 5 போட்டிகளில், 3 போட்டிகள் சமநிலையிலும் (Draw), 2 போட்டிகளில் நோர்வேயும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 1998 உலகக் கிண்ணத் தொடரில் நோர்வே 2-1 என பிரேசிலை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது. இந்தநிலையில் பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளர் கார்லோ அன்செலோட்டி (Carlo Ancelotti), பிரேசில் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். நட்சத்திர வீரர் நெய்மார் தற்போது முழு உடற்தகுதியுடன் 90 நிமிடங்களும் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற்றுள்ள நோர்வே அணி, ஈராக் மற்றும் செனகல் அணிகளை வீழ்த்தி knockout சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிரான்சுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் முன்னணி வீரர்களான ஏர்லிங் ஹாலாண்ட் மற்றும் மார்ட்டின் ஒடேகார்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் தற்போது பிரேசிலை எதிர்கொள்ள முழு பலத்துடன் தயாராக உள்ளனர்.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
71 வயதான ஜாக்கி ஜான் எடுத்த அதிரடி முடிவு : இறுதி அஞ்சலி நிகழ்வில் ஒலிக்கக் காத்திருக்கும் இரகசியப் பாடல்!

71 வயதான ஜாக்கி ஜான் எடுத்த அதிரடி முடிவு : இறுதி அஞ்சலி நிகழ்வில் ஒலிக்கக் காத்திருக்கும் இரகசியப் பாடல்!

உலகப் புகழ்பெற்ற தற்காப்புக் கலை மற்றும் திரைப்பட நட்சத்திரமான 71 வயதுடைய ஜாக்கி ஜான் , தனது இறுதிச் சடங்கில் ஒலிக்க வேண்டிய இரகசியப் பாடல் ஒன்றைப் பதிவு செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தான் மறைந்த பிறகே இந்த பாடல் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையுடன் அவர் இதனைப் பதிவு செய்துள்ளார். தனது வாழ்க்கைப் பயணத்தையும், உலகிற்கு அவர் கூற நினைக்கும் இறுதிச் செய்தியையும் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தனது இறுதி அஞ்சலி நிகழ்வின் போது இந்தப் பாடல் கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டும் என அவர் விரும்பியதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

விபரங்களுக்கு
'கணவரையே அதிகம் நேசியுங்கள்' : பெண் ரசிகைக்கு ஷாருக்கான் கூறிய அறிவுரை வைரல்!

'கணவரையே அதிகம் நேசியுங்கள்' : பெண் ரசிகைக்கு ஷாருக்கான் கூறிய அறிவுரை வைரல்!

பொலிவுட் நடிகர் ஷாருக்கான், மங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், "என் கணவரைவிட உங்களைத்தான் அதிகம் நேசிக்கிறேன்" என்று கூறிய பெண் ரசிகைக்கு அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. அதற்குப் பதிலளித்த ஷாருக்கான், "நான் உங்கள் வாழ்க்கையில் எதையும் செய்யப்போவதில்லை. ஆனால் உங்கள் கணவர்தான் உங்களுடன் எல்லா தருணங்களிலும் இருப்பார். எனவே, என்னை ரசிப்பது போதும், உங்கள் கணவரையே அதிகமாக நேசியுங்கள்" என்று அறிவுரை வழங்கினார். அத்துடன், அந்தப் பெண்ணை அவரது கணவரிடம் அனைவரின் முன்னிலையிலும் "ஐ லவ் யூ" என்று சொல்லவும் ஷாருக்கான் ஊக்குவித்தார். ஷாருக்கானின் இந்த முதிர்ச்சியான பதில் மற்றும் குடும்ப உறவை மதிக்கும் வகையிலான அறிவுரை, சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டைப் பெற்று வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு
பாக்யராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய வைரமுத்து : நேரில் நடந்த நெகிழ்ச்சியான சந்திப்பு!

பாக்யராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய வைரமுத்து : நேரில் நடந்த நெகிழ்ச்சியான சந்திப்பு!

மறைந்த திரைப்படக் கலைஞர் பாக்யராஜின் இறுதி ஆசையை, கவிஞர் வைரமுத்து நிறைவேற்றியுள்ளார். தனது சுயசரிதை நூலுக்கு முன்னுரை எழுதுமாறு, மறைவுக்கு முன்னதாகவே பாக்யராஜ் வைரமுத்துவிடம் கேட்டுக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கிணங்க, அந்த நூலுக்கான முன்னுரையை எழுதிய வைரமுத்து, பாக்யராஜின் மனைவி பூர்ணிமாவை நேரில் சந்தித்து அதனை வழங்கியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட வைரமுத்து, "இது உயிர்த்துடிப்புள்ள புத்தகம்... யார் வெளியிட்டாலும் உடனே வெளியிடுங்கள்." என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னுரை வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் பாக்யராஜின் குடும்பத்தினரும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாக்யராஜின் இறுதி ஆசையை மதித்து வைரமுத்து மேற்கொண்ட இந்தச் செயல், திரைப்பட மற்றும் கலை உலகில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விபரங்களுக்கு
3ஆவது முறையாகத் திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகர் அமீர் கான்

3ஆவது முறையாகத் திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகர் அமீர் கான்

பொலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான் (61), தனது நீண்டகால காதலியான தொழில்முனைவோர் கௌரி ஸ்ப்ராட்டை இன்று (05) மும்பையில் உள்ள தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்.மும்பை, பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ள அமீர் கானின் இல்லத்தில் இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணப் பதிவு இன்று முறைப்படி நடைபெற்றது. ஜூலை 5ஆம் திகதி இரு குடும்பத்தினர் மற்றும் முக்கிய நண்பர்களின் பங்கேற்புடன் வீட்டில் எளிமையான முறையில் திருமணம் நடைபெறவுள்ளதாக முன்னதாக அமீர் கான் தெரிவித்திருந்தார்.பெங்களூரைச் சேர்ந்த கௌரி ஸ்ப்ராட், வடிவமைப்பு மற்றும் அழகுக்கலை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு தொழில்முனைவோர் ஆவார். கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாக இருந்த இவர்களது நட்பு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது 60ஆவது பிறந்தநாளின் போது அமீர் கான், கௌரியை ஊடகங்களுக்குத் தனது துணையாக அறிமுகப்படுத்தியிருந்தார்.பொலிவுட்டின் வழக்கமான ஆடம்பரத் திருமணங்களைப் போலன்றி, முற்றிலும் தனிப்பட்ட முறையில் இந்த திருமண நிகழ்வு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பொலிவுட்டின் பிரபல இயக்குநர்களான ராஜ்குமார் ஹிரானி, அசுதோஷ் கோவாரிகர், ராஜ்குமார் சந்தோஷி உள்ளிட்ட மிக முக்கிய பிரபலங்கள் சிலரே கலந்துகொண்டனர்.

விபரங்களுக்கு
ஆடை நிறுவனம் மீது அதிருப்தி வெளியிட்ட நடிகை த்ரிஷா – இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரல்!

ஆடை நிறுவனம் மீது அதிருப்தி வெளியிட்ட நடிகை த்ரிஷா – இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரல்!

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, பிரபல ஆடை நிறுவனம் ஒன்றின் சேவை குறித்து தனது அதிருப்தியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளிப்படுத்தியுள்ளார். 40 வயதைக் கடந்த பின்னரும் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகத் தொடர்ந்து வெற்றிகரமாக வலம் வரும் த்ரிஷா, அண்மைக் காலமாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றுள்ளார். மேலும், அவரது புதிய திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரபல ஆடை நிறுவனமான Zara-வை குறியிட்டு (Tag) பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்ட ஆடைகளில் உடல் நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றம் மிகவும் மோசமாக உள்ளது. இது தொடர்ந்து மூன்றாவது முறையாக நடக்கிறது. மிகவும் அருவருப்பாக இருக்கிறது. குறைந்தபட்சம் பொதியிடுவதற்கு (Pack) முன் ஆடைகளைச் சரிபார்த்து அனுப்புங்கள்." என அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். த்ரிஷாவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆடை நிறுவனத்தின் தரக் கட்டுப்பாடு குறித்து பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை, இந்த விவகாரம் தொடர்பாக Zara நிறுவனம் எந்தவொரு உத்தியோகபூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.

விபரங்களுக்கு
நீண்ட நாள் கனவு நனவானது - சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணைவது குறித்து சிம்ரன் நெகிழ்ச்சி!

நீண்ட நாள் கனவு நனவானது - சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணைவது குறித்து சிம்ரன் நெகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173ஆவது திரைப்படமான 'தர்மன்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகை சிம்ரன் தீவிரமாகத் தயாராகி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'பேட்ட' திரைப்படத்திற்குப் பிறகு, இவர்கள் இருவரும் மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் நடைபெற்ற 'தர்மன்' திரைப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழாவில் கலந்துகொண்ட சிம்ரன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். "பேட்ட படத்திற்குப் பிறகு ரஜினி சாரைச் சந்தித்தபோது, அவருடன் மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கூறினேன். இந்த வாய்ப்பிற்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன், தற்போது அது நனவாகியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஜினிகாந்துடன் தனது திரைப்பயணத்தின் மற்றுமொரு அழகான அத்தியாயத்தைத் தொடங்குவதில் பெருமிதம் கொள்வதாகவும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கமல்ஹாசனின் 'ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை, 'ஓ மை கடவுளே' திரைப்பட புகழ் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். மூன்று இயக்குநர்கள் மாற்றத்திற்குப் பிறகு அஸ்வத் மாரிமுத்துவின் கைகளுக்கு இந்த திரைப்படம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் First look poster சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு
திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்த கருப்பு

திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்த கருப்பு

நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், திரையரங்குகளில் 50 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த திரைப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. தமிழகம் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் வசூல் வேட்டை நடத்திய இந்த திரைப்படம், நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவான குறித்த திரைப்படத்தில் திரிஷா, சுவாசிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உலகளவில் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ள இந்த திரைப்படம், ஓடிடியில் வெளியான பின்னரும் தற்போதும் சில திரையரங்குகளில் ரசிகர்களின் வருகையுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. குறித்த திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, இது ஒரு மாபெரும் வெற்றி எனக் குறிப்பிட்டு தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் விசேட போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
அனிருத் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு - எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

அனிருத் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு - எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

மாநகரம், கைதி, விக்ரம், லியோ மற்றும் கூலி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராக அவதாரமெடுத்துள்ளார்.   அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘DC’ திரைப்படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கதாபாத்திரத்திலும், அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதன்படி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘DC’ திரைப்படம் எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தநிலையில், குறித்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வெளியான 'Raga of Revenge' பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ‘DC’ திரைப்படத்தின் அடுத்த பாடல் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////