Top Story
இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை "விரைவில்" நடத்த வேண்டும் என்றும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் அரசியலமைப்பு விதிகளை "முழுமையாக அமுல்படுத்த" வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் இலங்கை விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், 'டிட்வா' (Ditwah) சூறாவளிப் பாதிப்பில் இருந்து இலங்கை மீள்வதற்கான இந்தியாவின் உதவிகள், எரிசக்தித் துறையிலான ஒத்துழைப்புகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அடையாளத் திட்டம், திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக உருவாக்குதல் மற்றும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கி புனரமைத்தல் உள்ளிட்ட இந்திய நிதியுதவியிலான திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவது குறித்தும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பிலும் இரு தரப்பும் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, இரு நாடுகளுக்கும் பரஸ்பர பலன்களை அளிக்கும் வகையில் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தே பேச்சுவார்த்தை அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

எனினும், மாகாண சபைத் தேர்தல் குறித்து எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெற்றதாக அதில் குறிப்பிடப்படவில்லை.

அத்துடன், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தியாவின் ஆதரவையும் "முழு ஒத்துழைப்பையும்" ஜனாதிபதி கோரியதுடன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுக்கூட்டமைப்பு, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து வலியுறுத்தியிருந்த பின்னணியில் இந்தியாவும் இந்த விடயத்தில் அழுத்தம் கொடுத்துள்ளது.

நாட்டின் ஒன்பது மாகாண சபைகளின் பதவிக்காலமும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் முடிவடைந்த போதிலும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தேர்தலை காலம் தாழ்த்தி வருகின்றன.

2024 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபரங்களுக்கு
General06 August 2026
மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்து!
Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

நெடுந்தீவு அருகே இந்திய கடற்றொழிலாளர்களின் படகு விபத்து - மீட்பு நடவடிக்கையில் கடற்படை

General 06 August 2026
நெடுந்தீவு அருகே  இந்திய கடற்றொழிலாளர்களின் படகு விபத்து - மீட்பு நடவடிக்கையில் கடற்படை

சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

General 06 August 2026
சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

அநுராதபுரத்தில் ஒரேயொரு தமிழ் பாடசாலையின் காணியை பாதுகாக்க பெரும் போராட்டம்!

General 06 August 2026
அநுராதபுரத்தில் ஒரேயொரு தமிழ் பாடசாலையின் காணியை பாதுகாக்க பெரும் போராட்டம்!

புத்தாண்டு அழகி போட்டியில் மலைப்பாம்புடன் நடனமாடிய பெண் உட்பட இருவருக்கு அபராதம்!

General 06 August 2026
புத்தாண்டு அழகி போட்டியில் மலைப்பாம்புடன் நடனமாடிய பெண் உட்பட இருவருக்கு அபராதம்!

‘TM App’ செயலி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக அறிவிப்பு: பட்டியலை புதுப்பித்தது இலங்கை மத்திய வங்கி!

General 06 August 2026
‘TM App’ செயலி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக அறிவிப்பு: பட்டியலை புதுப்பித்தது இலங்கை மத்திய வங்கி!

கோப் குழு கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அதிகாரிகள் இருவர் மன்னிப்பு கோரினர்!

General 06 August 2026
கோப் குழு கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அதிகாரிகள் இருவர் மன்னிப்பு கோரினர்!
International News

சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

International 06 August 2026
சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

குடியிருப்புகளின் பாதுகாப்பிற்கு 'ரோபோட் நாய்கள்' அறிமுகம் : குற்றத் தடுப்பில் புதிய தொழில்நுட்ப முயற்சி!

International 06 August 2026
குடியிருப்புகளின் பாதுகாப்பிற்கு 'ரோபோட் நாய்கள்' அறிமுகம் : குற்றத் தடுப்பில் புதிய தொழில்நுட்ப முயற்சி!

மெக்சிகோவில் டிக்டொக் பிரபலம் நேரலையில் துப்பாக்கிச் சூட்டில் பலி!

International 06 August 2026
மெக்சிகோவில் டிக்டொக் பிரபலம் நேரலையில் துப்பாக்கிச் சூட்டில் பலி!

சொந்த படையின் தாக்குதலை எதிரி என நினைத்து ஏவுகணையை ஏவியது இஸ்ரேல்!

International 06 August 2026
சொந்த படையின் தாக்குதலை எதிரி என நினைத்து ஏவுகணையை ஏவியது இஸ்ரேல்!

செங்கடல் கப்பல்கள் மீதான ஹூதி தாக்குதல்: ஏமன் வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா தூதர் ஆலோசனை!

International 06 August 2026
செங்கடல் கப்பல்கள் மீதான ஹூதி தாக்குதல்: ஏமன் வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா தூதர் ஆலோசனை!

அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகள் இலக்கு வைக்கப்படும்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

International 06 August 2026
அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகள் இலக்கு வைக்கப்படும்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

ஈரானுக்கு எதிரான தடை: 48 வணிகக் கப்பல்களைத் திசைதிருப்பியதாக அமெரிக்கா அறிவிப்பு!

International 06 August 2026
ஈரானுக்கு எதிரான தடை: 48 வணிகக் கப்பல்களைத் திசைதிருப்பியதாக அமெரிக்கா அறிவிப்பு!

ஜெர்மன் வானூர்தி நிலையத்தில் வெடிபொருளுடன் ஆளில்லா வானூர்தி கண்டுபிடிப்பு: காவல்துறை தீவிர விசாரணை!

International 06 August 2026
ஜெர்மன் வானூர்தி நிலையத்தில் வெடிபொருளுடன் ஆளில்லா வானூர்தி கண்டுபிடிப்பு: காவல்துறை தீவிர விசாரணை!

ஃப்ளை பாக்தாத் வானூர்தி நிறுவனம் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா!

International 05 August 2026
ஃப்ளை பாக்தாத் வானூர்தி நிறுவனம் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணை கப்பல் பாதை குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே உடன்பாடு!

International 05 August 2026
ஹோர்முஸ் நீரிணை கப்பல் பாதை குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே உடன்பாடு!

ஆளுமை உரிமை மீறல் குற்றச்சாட்டு - 15 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு

International 05 August 2026
ஆளுமை உரிமை மீறல் குற்றச்சாட்டு - 15 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு

உதயநிதி கைது முதல் விடுதலை வரை: அரசியல் மேடையில் புதிய விவாதம் – கங்கனா ரனாவத்தின் எதிர்வினை வைரல்

International 05 August 2026
உதயநிதி கைது முதல் விடுதலை வரை: அரசியல் மேடையில் புதிய விவாதம் – கங்கனா ரனாவத்தின் எதிர்வினை வைரல்

போலி புகைப்படங்களால் கொதித்த மிருனாள் தாகூர்- இணையத்தில் வைரலாகும் எச்சரிக்கை

International 05 August 2026
போலி புகைப்படங்களால் கொதித்த மிருனாள் தாகூர்- இணையத்தில் வைரலாகும் எச்சரிக்கை

பிரித்தானிய அரச குடும்பத்தில் புதிய மகிழ்ச்சி - இளவரசி யூஜினிக்கு பெண் குழந்தை

International 05 August 2026
பிரித்தானிய அரச குடும்பத்தில் புதிய மகிழ்ச்சி - இளவரசி யூஜினிக்கு பெண் குழந்தை

கோட்-சூட் இல்லை... : எளிமையான தோற்றத்தில் சட்டமன்றம் வந்த முதலமைச்சர் விஜய்!

International 05 August 2026
கோட்-சூட் இல்லை... : எளிமையான தோற்றத்தில் சட்டமன்றம் வந்த முதலமைச்சர் விஜய்!
More News
General06 August 2026

வலுவான எல் நினோ தாக்கத்தால் உலகளவில் மேலும் 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கை

சக்திவாய்ந்த எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியங்களில் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் சுமார் 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக்கூடும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வு ஏற்படுவதற்கு 81 சதவீத வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இந்த முகவரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுபிக் சமுத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலை 1982 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாகவும், இது 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்படும் மிகவும் சக்திவாய்ந்த எல் நினோ நிகழ்வாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பசுபிக் சமுத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலை அவ்வப்போது வெப்பமடைவதையே எல் நினோ என அழைக்கிறோம். இது உலகளாவிய வானிலை முறைகளை மாற்றியமைப்பதுடன், தென் ஆபிரிக்காவில் வறட்சி, ஆசியாவின் சில பகுதிகளில் தாமதமான பருவமழை மற்றும் பிற இடங்களில் சீரற்ற மழைவீழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது."கடந்த காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் பாரியளவிலான பட்டினிப் பஞ்சத்தை தூண்டியுள்ளன" என உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு சேவையின் பணிப்பாளர் ஜீன்-மார்ட்டின் பாவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.எல் நினோவின் மோசமான விளைவுகளால் பாதிக்கப்படக்கூடிய 45 நாடுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை சுமார் 49 மில்லியனால் அதிகரித்து, மொத்தம் 274 மில்லியன் மக்களாக உயரும் என உலக உணவுத் திட்டம் மதிப்பிட்டுள்ளது. இது ஏற்கனவே தீவிர உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் 22 சதவீத அதிகரிப்பாகும்.மத்திய அமெரிக்கா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களே இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பற்ற மக்களின் எண்ணிக்கை மத்திய அமெரிக்காவில் 83 சதவீதமாகவும், தென் ஆபிரிக்காவில் சுமார் 75 சதவீதமாகவும் அதிகரிக்கும் என அறிக்கை கூறுகிறது.தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் தலா 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்திற்குள் தள்ளப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, கிழக்கு ஆரிக்காவின் சில பகுதிகள், சாஹெல் (Sahel), மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பகுதிகளில் மழைவீழ்ச்சி பற்றாக்குறை ஏற்படும் என தற்போதைய கணிப்புகள் சுட்டிக்காட்டுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சோமாலியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கக்கூடும்.தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் கணிசமான தாக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அங்கு வறட்சி அபாயம், ஒழுங்கற்ற பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாய உற்பத்தி பாதிக்கப்படலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த முன்னறிவிப்புகளில் நிச்சயமற்ற தன்மைகள் இருப்பதாகவும், பிராந்தியங்களுக்கு ஏற்ப தாக்கங்கள் மாறுபடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள உலக உணவுத் திட்டம் அரசாங்கங்களும் நிவாரண முகவரகங்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.18 நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை திட்டங்களை உலக உணவுத் திட்டம் விரிவுபடுத்தியுள்ளதாக அதன் காலநிலை மற்றும் மீள்கட்டியெழுப்பல் சேவையின் பணிப்பாளர் ரிச்சர்ட் சூலார்டன் தெரிவித்தார். தீவிர வானிலை பாதிப்புகளின் போது உதவுவதற்காக இந்த ஆண்டு இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பண உதவி மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

விபரங்களுக்கு
வலுவான எல் நினோ தாக்கத்தால் உலகளவில் மேலும் 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கை
General06 August 2026

அடுத்த இரண்டு வருடங்களில் டெங்குவை முற்றாக ஒழிக்க திட்டமிட்ட தேசிய திட்டம் அவசியம்: அமைச்சர் வலியுறுத்தல்

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் டெங்கு நோயை முழுமையாக ஒழிப்பதை இலக்காகக் கொண்டு, திட்டமிடப்பட்ட தேசிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அதிக அவதானமிக்க சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தற்போதைய டெங்கு நிலைமையை மீளாய்வு செய்வதற்கும், நுளம்பு கட்டுப்பாட்டு திட்டங்களை வலுப்படுத்துவதற்கும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று (5) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.முந்தைய டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் காணப்பட்ட குறைபாடுகளை அடையாளம் காணுதல், அதிக அவதானமிக்க பகுதிகளைக் கண்டறிதல், கூட்டு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல், தொழில்நுட்ப ஆதரவை விரிவுபடுத்துதல், சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் டெங்கு தொடர்பான மரணங்களைக் குறைத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.அண்மை காலமாக டெங்கு மரணங்கள் குறைந்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை எனக் குறிப்பிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையும் காலங்களிலும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.மேலும், சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டம் வரை கட்டமைக்கப்பட்ட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இதனிடையே, டெங்கு அபாயம் தொடர்ந்தபோதிலும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 1,300 இலிருந்து 350 முதல் 400 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் (4) வரை இலங்கையில் மொத்தம் 87,536 டெங்கு நோயாளர்களும் 63 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.வரவிருக்கும் மழைக்காலம் மற்றும் வானிலை மாற்றத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

விபரங்களுக்கு
அடுத்த இரண்டு வருடங்களில் டெங்குவை முற்றாக ஒழிக்க திட்டமிட்ட தேசிய திட்டம் அவசியம்: அமைச்சர் வலியுறுத்தல்
General05 August 2026

செம்மணியில் திறந்த நீதிமன்ற அமர்வு: புதிதாக மேலும் 8 என்புக்கூடுகள்; இதுவரை 489 என்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வின் நிர்வாக ரீதியான செயல்பாடுகளை ஆராய்வதற்கான விசேட திறந்த நீதிமன்ற அமர்வு இன்று (5) சித்துப்பாத்தி மயான வளாகத்தில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் நீதவான் லெனின்குமார் முன்னிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த அமர்வு ஆரம்பமானது.இந்த கலந்துரையாடலில் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்க சட்டத்தரணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது GPR ரேடார் (Ground Penetrating Radar) பயன்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையையும், அகழ்ந்தெடுக்கப்பட்ட ஏனைய சான்றுப் பொருட்கள் தொடர்பான முழுமையான அறிக்கையையும் நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அகழ்வுப் பணி தொடர்பான மேலதிக கலந்துரையாடல் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களின் பாதுகாப்பை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.இதேவேளை, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றைய தினம் (5) புதிதாக 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 44 ஆவது நாள் அகழ்வுப் பணிகளே இன்று இடம்பெற்றன.அதற்கமைய, இன்றைய தினம் அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புக்கூடுகளுடன் சேர்த்து இதுவரை மொத்தமாக 489 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இதுவரை 491 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
செம்மணியில் திறந்த நீதிமன்ற அமர்வு: புதிதாக மேலும் 8 என்புக்கூடுகள்; இதுவரை 489 என்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
General05 August 2026

சுரேஷ் சலே வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு - விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அசங்க நவரத்ன உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையையும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளையும் பாதிக்கும் வகையில், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.குறித்த கருத்துகளை வெளியிட்டவர்களில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகியோர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இவ்வாறான கருத்துகள் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கக்கூடும் எனவும், 2026ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் திகதி முதல் ஒளிபரப்பான சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் செம்மைப்படுத்தப்படாத காணொளிகளை ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
சுரேஷ் சலே வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு - விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை!
General05 August 2026

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ, மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று (05) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

விபரங்களுக்கு
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்
International News

சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

International 06 August 2026
சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

குடியிருப்புகளின் பாதுகாப்பிற்கு 'ரோபோட் நாய்கள்' அறிமுகம் : குற்றத் தடுப்பில் புதிய தொழில்நுட்ப முயற்சி!

International 06 August 2026
குடியிருப்புகளின் பாதுகாப்பிற்கு 'ரோபோட் நாய்கள்' அறிமுகம் : குற்றத் தடுப்பில் புதிய தொழில்நுட்ப முயற்சி!

மெக்சிகோவில் டிக்டொக் பிரபலம் நேரலையில் துப்பாக்கிச் சூட்டில் பலி!

International 06 August 2026
மெக்சிகோவில் டிக்டொக் பிரபலம் நேரலையில் துப்பாக்கிச் சூட்டில் பலி!

சொந்த படையின் தாக்குதலை எதிரி என நினைத்து ஏவுகணையை ஏவியது இஸ்ரேல்!

International 06 August 2026
சொந்த படையின் தாக்குதலை எதிரி என நினைத்து ஏவுகணையை ஏவியது இஸ்ரேல்!

செங்கடல் கப்பல்கள் மீதான ஹூதி தாக்குதல்: ஏமன் வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா தூதர் ஆலோசனை!

International 06 August 2026
செங்கடல் கப்பல்கள் மீதான ஹூதி தாக்குதல்: ஏமன் வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா தூதர் ஆலோசனை!

அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகள் இலக்கு வைக்கப்படும்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

International 06 August 2026
அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகள் இலக்கு வைக்கப்படும்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

ஈரானுக்கு எதிரான தடை: 48 வணிகக் கப்பல்களைத் திசைதிருப்பியதாக அமெரிக்கா அறிவிப்பு!

International 06 August 2026
ஈரானுக்கு எதிரான தடை: 48 வணிகக் கப்பல்களைத் திசைதிருப்பியதாக அமெரிக்கா அறிவிப்பு!

ஜெர்மன் வானூர்தி நிலையத்தில் வெடிபொருளுடன் ஆளில்லா வானூர்தி கண்டுபிடிப்பு: காவல்துறை தீவிர விசாரணை!

International 06 August 2026
ஜெர்மன் வானூர்தி நிலையத்தில் வெடிபொருளுடன் ஆளில்லா வானூர்தி கண்டுபிடிப்பு: காவல்துறை தீவிர விசாரணை!

ஃப்ளை பாக்தாத் வானூர்தி நிறுவனம் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா!

International 05 August 2026
ஃப்ளை பாக்தாத் வானூர்தி நிறுவனம் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணை கப்பல் பாதை குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே உடன்பாடு!

International 05 August 2026
ஹோர்முஸ் நீரிணை கப்பல் பாதை குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே உடன்பாடு!

ஆளுமை உரிமை மீறல் குற்றச்சாட்டு - 15 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு

International 05 August 2026
ஆளுமை உரிமை மீறல் குற்றச்சாட்டு - 15 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு

உதயநிதி கைது முதல் விடுதலை வரை: அரசியல் மேடையில் புதிய விவாதம் – கங்கனா ரனாவத்தின் எதிர்வினை வைரல்

International 05 August 2026
உதயநிதி கைது முதல் விடுதலை வரை: அரசியல் மேடையில் புதிய விவாதம் – கங்கனா ரனாவத்தின் எதிர்வினை வைரல்

போலி புகைப்படங்களால் கொதித்த மிருனாள் தாகூர்- இணையத்தில் வைரலாகும் எச்சரிக்கை

International 05 August 2026
போலி புகைப்படங்களால் கொதித்த மிருனாள் தாகூர்- இணையத்தில் வைரலாகும் எச்சரிக்கை

பிரித்தானிய அரச குடும்பத்தில் புதிய மகிழ்ச்சி - இளவரசி யூஜினிக்கு பெண் குழந்தை

International 05 August 2026
பிரித்தானிய அரச குடும்பத்தில் புதிய மகிழ்ச்சி - இளவரசி யூஜினிக்கு பெண் குழந்தை

கோட்-சூட் இல்லை... : எளிமையான தோற்றத்தில் சட்டமன்றம் வந்த முதலமைச்சர் விஜய்!

International 05 August 2026
கோட்-சூட் இல்லை... : எளிமையான தோற்றத்தில் சட்டமன்றம் வந்த முதலமைச்சர் விஜய்!
Sports Stories
Explore More
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்: ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம்!

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்: ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம்!

குயின்ஸ் பார்க் ஓவல் (Queen's Park Oval) மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 344 ஓட்டங்களை பெற்றது.இதையடுத்து தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் 387 ஓட்டங்களை பெற்றது.இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை பெற்றதையடுத்து 75 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 77 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியுள்ளது.இந்த வெற்றியின் மூலம் வெளிநாட்டு மண்ணில் கடந்த 8 டெஸ்ட் போட்டிகளாக வெற்றி பெறாமல் இருந்த பின்னடைவுக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.மேலும், கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தான் அணி பதிவு செய்த முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.இந்த வெற்றியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (2025-2027) புள்ளிப்பட்டியலுக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி 8 ஆம் இடத்தில் உள்ளது.இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி மோதவுள்ள இந்திய மற்றும் இலங்கை அணிகள் புள்ளிப்பட்டியலில் முறை 5 மற்றும் 6 ஆம் இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இங்கிலாந்து, அயர்லாந்து தொடர் தோல்விகள்: பிசிசிஐயின் ஆய்வுக் கூட்டம் தள்ளிப்போவது ஏன்?

இங்கிலாந்து, அயர்லாந்து தொடர் தோல்விகள்: பிசிசிஐயின் ஆய்வுக் கூட்டம் தள்ளிப்போவது ஏன்?

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடர்கள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகள் குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) நடத்தவிருந்த முக்கிய ஆய்வுக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளரான தேவஜித் சைகியா (Devajit Saikia) திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளதே இந்த ஆய்வுக் கூட்டம் தாமதமாவதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு விரைவில் நடைபெறும் என்றும், அதில் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கெளதம் கம்பீர் இணையவழியில் (virtually) பங்கேற்பார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற இருபதுக்கு 20 தொடர்களில் அயர்லாந்திடம் 2-0 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்த இந்திய அணி, அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடர்களையும் இழந்தது. 2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற தலைவர் சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் புதிய டி20 தலைவராகப் பொறுப்பேற்ற நிலையில், இந்திய அணி சந்தித்த தொடர்ச்சியான பின்னடைவுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. இந்த தோல்விகள் குறித்துப் பேசிய தேவஜித் சைகியா, "இது இந்திய அணி சந்தித்துள்ள தற்காலிகமான ஒரு மோசமான கட்டம் மட்டுமே" என்று தெரிவித்துள்ளார். அதேவேளை வரவிருக்கும் ஆய்வுக் கூட்டத்தில் அணியின் செயல்பாடுகள் மற்றும் தவறுகளைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து மட்டுமே தீவிரமாக ஆலோசிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இலங்கை வரவுள்ள சாய் சுதர்சன்: இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என எதிர்பார்ப்பு!

இலங்கை வரவுள்ள சாய் சுதர்சன்: இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என எதிர்பார்ப்பு!

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் இந்திய அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான சாய் சுதர்சன், இந்த வார இறுதிக்குள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெருவிரலில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) தேசிய சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்  தற்போது அவர் மீண்டும் துடுப்பாட்ட பயிற்சியைத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவக் குழுவின் இறுதி அனுமதி கிடைத்தவுடன் இலங்கை வந்து சேரவுள்ள நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி மைதானத்தில் தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் முழு உடற்தகுதியுடன் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என ஏதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
போட்டிபோடும் அணிகள் : வாய்ப்பை தக்கவைப்பாரா வினீசியஸ் ஜூனியர் ?

போட்டிபோடும் அணிகள் : வாய்ப்பை தக்கவைப்பாரா வினீசியஸ் ஜூனியர் ?

பிரேஸில் கால்பந்தாட்ட அணியின் ஆட்டக்காரரான வினீசியஸ் ஜூனியரை (Vinicius Jr) அணியில் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் (Real Madrid) கால்பந்து கழகம் அவருக்கு மேம்படுத்தப்பட்ட புதிய ஒப்பந்த முன்மொழிவை வழங்கியுள்ளது. 26 வயதான வினீசியஸ் ஜூனியரின் ஒப்பந்தத்தில் கடைசி 12 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அவரை ஒப்பந்தம் செய்ய இங்கிலாந்தின் ஆர்சனல் (Arsenal) கால்பந்து கழகம் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது ரியல் மெட்ரிட் வழங்கியுள்ள புதிய நிபந்தனைகளை வினீசியஸ் ஜூனியர் சாதகமாகப் பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீண்டும் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள ஜோஸ் மொரின்ஹோ (Jose Mourinho) உள்ளிட்ட ரியல் மெட்ரிட் அணியின் உயர்மட்ட நிர்வாகிகள், வினீசியஸ் ஜூனியர் புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஒருவேளை அவர் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தால், அவரை வாங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த ஆர்சனல் (Arsenal) கால்பந்து கழகம் தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
விராட் கோலி களத்தில் கோபப்படுவது ஏன்? உண்மையை உடைத்த நடுவர்!

விராட் கோலி களத்தில் கோபப்படுவது ஏன்? உண்மையை உடைத்த நடுவர்!

விராட் கோலி போன்ற உத்வேகம் கொண்ட ஆளுமைகள் கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யத்திற்கு மிகவும் அவசியமானவர்கள் என முன்னாள் சர்வதேச நடுவர் அனில் சௌத்ரி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "சின்ன வயதிலிருந்தே கோலியின் போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளதால் அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் கோபமாக நடந்துகொண்டாலும் அதில் எந்த துர்நோக்கமும் இருக்காது. சரியான தீர்ப்பு வழங்கினால் பாராட்டுவார். மைதானம் சுவாரஸ்யமாக இருக்க அவரைப்போன்ற வீரர்கள் அவசியம்" என அனில் சௌத்ரி குறிப்பிட்டார்.  

விபரங்களுக்கு
சென்னையில் அதிவேக உந்துருளியில் சீறிப்பாய்ந்த மகேந்திர சிங் தோனி: வைரலாகும் காணொளி!

சென்னையில் அதிவேக உந்துருளியில் சீறிப்பாய்ந்த மகேந்திர சிங் தோனி: வைரலாகும் காணொளி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனி, சென்னை இருங்காட்டுக்கோட்டையிலுள்ள மெட்ராஸ் சர்வதேச பந்தய களத்தில் (Madras International Circuit) அதிவேகமாக உந்துருளியை ஓட்டிச் சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விளம்பர நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்தடைந்த தோனி, ரேசிங் மைதானத்தில் அந்த நிறுவனத்தின் புதிய சில்லுகளைப் பரிசோதிக்கும் வகையில் அதிவேகமாக உந்துருளியை இயக்கியுள்ளார். பந்தய களத்தில் சுற்றுகளை நிறைவு செய்து 'பிட் லேன்' (pit lane) பகுதிக்கு திரும்பிய தோனி, தனது தலைக்கவசத்தைக் கழற்றி அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். ஐ.பி.எல் போட்டிகளுக்குப் பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டு வரும் தோனி, தனது மோட்டார் சைக்கிள் ஆர்வத்தின் காரணமாக இந்த நிகழ்வில் உற்சாகத்துடன் பங்கேற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் பதவியிலிருந்து விலகிய நிலையில், 2027ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே மீண்டும் அதிகரித்துள்ளது.

விபரங்களுக்கு
பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இணையும் ஆகிப் நபி

பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இணையும் ஆகிப் நபி

இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஜஸ்ப்ரீத் பும்ராவிற்குப் பதிலாக, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்படி, இந்திய மூத்த டெஸ்ட் அணியில் இடம்பெறும் வாய்ப்பைப் பெறும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 3ஆவது கிரிக்கெட் வீரர் ஆகிப் நபி ஆவார். இதற்கு முன்னர் பர்வேஸ் ரசூல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் வெள்ளைப் பந்து போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பும்ராவின் இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பின்னர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் கல்லூரியில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், முழங்காலில் தொடர்ந்து அசௌகரியம் உணரப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரைத் தொடரிலிருந்து விலக்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மருத்துவக் குழு தீர்மானித்துள்ளது. ஆகிப் நபி, ரஞ்சி கிண்ண உள்ளூர் டெஸ்ட் தொடரின் கடந்த இரண்டு பருவங்களில் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜம்மு-காஷ்மீர் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் கீழ்வரிசையில் பயனுள்ள ஓட்டங்களைச் சேர்க்கும் துடுப்பாட்டத் திறனையும் அவர் கொண்டுள்ளார். இந்த நிலையில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கும் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
தமிழக பாதீடு அறிக்கை தாக்கலில் ஜெபமாலை : அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பிய விவாதம்!

தமிழக பாதீடு அறிக்கை தாக்கலில் ஜெபமாலை : அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பிய விவாதம்!

தமிழக பாதீடு அறிக்கை தாக்கலின்போது நிதி அமைச்சர் ஜெபமாலையுடன் வந்தது அவரது தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசியல் விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ஒருவரின் தனிப்பட்ட மத நம்பிக்கையை அரசியல் சர்ச்சையாக மாற்றக் கூடாது என்ற கருத்தையும் முன்வைத்தார். இதனையடுத்து, அரசியல் விமர்சகர் மருத்துவர் ஷர்மிளா சமூக வலைத்தளத்தில் பதிலளித்து, "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இராமர் சிலையுடன் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ வந்தாலும் இதையே சொல்வீர்களா சேர்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் தரப்புகளிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
தனது பெயர் மற்றும் உருவத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய பிரபல நடிகை!

தனது பெயர் மற்றும் உருவத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய பிரபல நடிகை!

பிரபல பொலிவுட் நடிகை தபு, தனது பெயர், நிழற்படம், உருவம் மற்றும் நற்பெயரை அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது ஆளுமை உரிமைகள் (Personality Rights) மீறப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது பெயர் மற்றும் உருவத்தை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு நிரந்தரத் தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் (Deepfake) காணொளிகள், படங்கள் மற்றும் பிற டிஜிட்டல் முறைகேடு உள்ளடக்கங்களை இணையத் தளங்களிலிருந்து அகற்றுவதற்கும் உரிய உத்தரவு பிறப்பிக்குமாறும் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தபு எடுத்துள்ள இந்த சட்ட நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.

விபரங்களுக்கு
'ராமாயணா' படத்தில் சீதையாக நடிக்க மறுத்தேனா? - நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்!

'ராமாயணா' படத்தில் சீதையாக நடிக்க மறுத்தேனா? - நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்!

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கத் தான் மறுத்ததாகப் பரவி வரும் தகவல்களுக்கு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தின் முதற்கட்ட விளம்பரப் பதிவுகள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.இருப்பினும், சீதை கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி பொருத்தமாக இல்லை எனச் சமூக வலைதளங்களில் சில விமர்சனங்கள் எழுந்தன. அதேவேளையில், இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் 'கே.ஜி.எஃப்' பட புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவரே அதனை நிராகரித்ததால் சாய் பல்லவிக்கு அந்த வாய்ப்பு சென்றதாகவும் தகவல்கள் பரவின.இந்நிலையில், இந்த வதந்திகள் குறித்துப் பேசியுள்ள நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி,சீதையாக நடிக்க எனக்கு முதலில் வாய்ப்பு வந்ததாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. நான் அந்தப் படத்திற்கான தேர்வில் கலந்து கொண்டேன், ஆனால் தேர்வு செய்யப்படவில்லை. என்னால்தான் சாய் பல்லவிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறப்படுவதும் முற்றிலும் தவறான தகவல். இது வெறும் வதந்தி மட்டுமே, எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார் : திரையுலகம் இரங்கல்!

பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார் : திரையுலகம் இரங்கல்!

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களிடையே தனித்துவமான இடம்பிடித்த நடிகர் பிரதீப் ராவத் (74) காலமானார். பல தசாப்தங்களாக நீண்ட திரைப்பயணத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது வலுவான நடிப்பால் இந்திய திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்திருந்தார். தமிழ் திரையுலகில் 'கஜினி', 'தொட்டி ஜெயா', 'வீரம்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த பிரதீப் ராவத், தனது வில்லன் நடிப்பின் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் சமூக ஊடகங்களில் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது? - நடிகர் சூர்யா அதிரடி பதில்

ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது? - நடிகர் சூர்யா அதிரடி பதில்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ரோலெக்ஸ்' (Rolex) திரைப்படம் எப்போது தொடங்கும் என்பது குறித்து நடிகர் சூர்யா சுவாரஸ்யமான பதிலளித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனின் திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றார். அதனைத் தொடர்ந்து 'விக்ரம் 2' திரைப்படமும் அவரது பட்டியலில் உள்ளது. இருப்பினும், நேர்காணல்களின் போது 'ரோலெக்ஸ்' திரைப்படம் நிச்சயமாக உருவாக்கப்படும் என்றும், அதற்கான கதையை எழுதி வருவதாகவும் லோகேஷ் கூறி வருகின்றார். எனவே, 'ரோலெக்ஸ்' திரைப்படம் எப்போது அதிகாரப்பூர்வமாக உருவாகும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
எங்கள் வீட்டில் சினிமா பேச்சே இல்லை

எங்கள் வீட்டில் சினிமா பேச்சே இல்லை" - குழந்தைகள் குறித்து மனம் திறந்த சூர்யா - ஜோதிகா

நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா தம்பதி, தங்களது திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளனர். இதனை முன்னிட்டு, இருவரும் இணைந்து தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், குடும்ப வாழ்க்கை மற்றும் தங்களது குழந்தைகள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.இதன்போது பேசிய சூர்யா, "எங்கள் வீட்டில் திரைப்படங்கள் குறித்து அதிகமாக பேசுவதில்லை. குழந்தைகளுக்கும் சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.மேலும், குழந்தைகள் மிகவும் தெளிவான சிந்தனையுடன் வளர்ந்து வருவதாகவும், அவர்களின் எளிமையான அணுகுமுறை தங்களுக்கு பெருமை அளிப்பதாகவும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.அத்துடன், தங்களது மகள் தியா, அமெரிக்காவில் கல்லூரியில் சேர்வதற்காக தனியாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியதாகவும், அதனை முழுமையாகத் தானே திட்டமிட்டு நிறைவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.குழந்தைகளின் தனித்துவமான ஆர்வங்களையும் முயற்சிகளையும் கண்டு தாங்கள் பெருமைப்படுவதாக சூர்யா - ஜோதிகா தம்பதி தெரிவித்துள்ளனர்.

விபரங்களுக்கு
வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே’

வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே’

அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியான முதலாவது வார இறுதியில் ‘ஸ்பைடர் மேன்பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படம் 360 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக வசூலித்து, சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ (Avengers: Endgame) திரைப்படம் ஈட்டிய 357 மில்லியன் அமெரிக்க டொலர்களே அதிகபட்ச சாதனையாக இருந்தது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக அளவில், ‘ஸ்பைடர் மேன்’ வரிசையின் இந்த புதிய திரைப்படம் 932 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்துள்ளது. இருப்பினும், இது ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தின் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் உலகளாவிய சாதனையை விட சற்று குறைவாகும்.

விபரங்களுக்கு
ஒரு சம்பவத்தால் மட்டுமே சூர்ப்பணகை அறியப்படுகிறார் - ராமாயணா குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்

ஒரு சம்பவத்தால் மட்டுமே சூர்ப்பணகை அறியப்படுகிறார் - ராமாயணா குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர், சூர்ப்பணகை போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க உங்களைத் தூண்டியது என்ன? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு பதிலளித்த ரகுல் ப்ரீத் சிங், சூர்ப்பணகை கதாபாத்திரத்தின் சிக்கலான தன்மையே தன்னை அந்த வேடத்தை ஏற்கத் தூண்டியதாக தெரிவித்துள்ளார்.மேலும் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் காரணமாகவே சூர்ப்பணகை பெரும்பாலும் நினைவுகூரப்படுகிறார். ஆனால், அவரது கதையில் அதற்கும் அப்பாற்பட்ட பல அம்சங்கள் உள்ளன.ஒரு நடிகையாக, மக்களின் பார்வையை மாற்றக்கூடிய மற்றும் சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. ‘ராமாயணா’ திரைப்படம் வெளியாகும் போது, ரசிகர்கள் திறந்த மனதுடன் இந்தக் கதாபாத்திரத்தை அணுகுவார்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தில், ரன்பீர் கபூர் இராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் இராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் 2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////