Top Story
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே சூரியன் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பெறுபேறுகள் ஒழுங்கமைக்கப்பட்டு இறுதி கட்டப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்தவார நிறைவுக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்வது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், சிரேஷ்ட கல்வி அதிகாரிகளுக்கு,கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஏதேனும் ஒரு பாடசாலையில் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதங்கள் காணப்படின், முறையான முன் திட்டமிடல் மூலம் அல்லது தேவைப்படின் மேலதிக நேரத்தை ஒதுக்கியாவது பாடத்திட்டங்களை முழுமையாக கற்பித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கல்வி நாட்காட்டியின்படி ஏற்கனவே திட்டமிடப்பட்ட திகதிகளிலேயே 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மாணவர்கள் பரீட்சைகளுக்குத் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில், பாடசாலைகள் உரிய பாடத்திட்டங்களை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் என செயலாளர் நாலக கலுவெவ தனது அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
விபரங்களுக்கு
General14 June 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பு
International News

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

International 14 June 2026
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

ரஷ்யாவின் ‘ஸ்மைர்டோஸ்’ எரிபொருள் கப்பல் பிரித்தானியாவில் இடைமறிப்பு!

International 14 June 2026
ரஷ்யாவின் ‘ஸ்மைர்டோஸ்’ எரிபொருள் கப்பல் பிரித்தானியாவில் இடைமறிப்பு!

இந்திய வான்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து

International 13 June 2026
இந்திய வான்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!

International 13 June 2026
இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியது: பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உறுதி!

International 13 June 2026
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியது: பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உறுதி!

சட்டவிரோத குடியேற்றப் பதற்றத்தைத் தணிக்க இந்தியா - பங்களாதேஷ் கூட்டு நடவடிக்கை

International 13 June 2026
சட்டவிரோத குடியேற்றப் பதற்றத்தைத் தணிக்க இந்தியா - பங்களாதேஷ் கூட்டு நடவடிக்கை

நான் அரசியலுக்கு வருகிறேன் - நடிகர் ராகவா லோரன்ஸ் அதிரடி அறிவிப்பு!

International 12 June 2026
நான் அரசியலுக்கு வருகிறேன் - நடிகர் ராகவா லோரன்ஸ் அதிரடி அறிவிப்பு!

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

International 12 June 2026
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

1.8 ட்ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச்சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்!

International 12 June 2026
1.8 ட்ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச்சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்!

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் - டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

International 12 June 2026
ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் - டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் இரட்டை வேடத்தை உலகிற்குத் தோலுரித்துக் காட்டிய ஈரான்!

International 12 June 2026
அமெரிக்காவின் இரட்டை வேடத்தை உலகிற்குத் தோலுரித்துக் காட்டிய ஈரான்!

அமெரிக்காவுக்கு இந்தியாவின் அவசர கோரிக்கை!

International 12 June 2026
அமெரிக்காவுக்கு இந்தியாவின் அவசர கோரிக்கை!

திறந்துவிடப்பட்ட சிறைக்கதவுகள் - ஹஸன் யூசுப்பின் மகன் வௌியிட்ட முக்கிய தகவல்!

International 12 June 2026
திறந்துவிடப்பட்ட சிறைக்கதவுகள் - ஹஸன் யூசுப்பின் மகன் வௌியிட்ட முக்கிய தகவல்!

அமெரிக்காவின் 18 இலக்குகளின் மீது தாக்குதல் - பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

International 12 June 2026
அமெரிக்காவின் 18 இலக்குகளின் மீது தாக்குதல் - பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

ஈரான் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக ரத்து செய்தார் டொனால்ட் ட்ரம்ப்!

International 12 June 2026
ஈரான் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக ரத்து செய்தார் டொனால்ட் ட்ரம்ப்!
More News
General14 June 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பியுங்கள் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுபவர்கள், வெறுமனே ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கி பகிரங்கக் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விடுத்து, தங்களது சான்றுகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.மதுகம மற்றும் அகலவத்தை பகுதிகளில் 'ஐ-ரோட்' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களைத் நேற்று திறந்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், தங்களின் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சட்டப்பூர்வ வழிகளின் மூலம் நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்."அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால், அவற்றை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும். உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதற்கான காரணங்களை நீதிமன்றமே விளக்கும்," என்று அவர் தெரிவித்தார்.சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி தொடர் உண்ணாவிரதமாகத் ஆரம்பிக்கப்பட்ட தற்போதைய போராட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், இந்த இயக்கம் உண்மைகளின் அடிப்படையில் அமையாததால் தற்போது சிதறடிக்கப்பட்டுள்ளது என்றார்."தாங்கள் கூறுவது பொய் என்பது அவர்களுக்கே தெரியும். அதனால்தான் அவர்களால் இந்த இயக்கத்தை ஒரே மாதிரியாகத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியாமல், தற்போது பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட முயல்கிறார்கள்," என்று அவர் கூறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்தான விசாரணைகள் முறையாக முன்னோக்கி நகர்ந்து வருவதாகவும், இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் உட்பட பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட ஒரு சிறிய குழுவினர், தற்போதைய விசாரணைச் செயல்முறைகளின் போது சுரேஷ் சலேவுக்கு நீதி கோருவதாகக் கூறி பிரசாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.நீதிமன்றச் செயல்முறைகளுக்கு இடையூறு விளைவித்த பல நபர்களுக்கு எதிராக 'நீதிமன்ற அவமதிப்பு' உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஏற்கனவே நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை மற்றும் தாக்குதல்கள் குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளுக்கு நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

விபரங்களுக்கு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பியுங்கள் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
General13 June 2026

பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்குவதாகக் கூறி, அதைவிடப் படுமோசமான PSTA சட்ட வரைவைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சி!

புதிய " அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம்" (PSTA) பழைய சட்டத்தை விட பல மடங்கு ஆபத்தானது என ஜனாதிபதி சட்டத்தரணி கே. தவராசா எச்சரிக்கை விடுத்துள்ளார். சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். "மக்களை முட்டாள்கள் ஆக்கக் கூடாது, சீட்டை மாற்றுவது போல் ஆள் மாறக் கூடாது" என அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த புதிய சட்ட வரைவில் ஒளிந்திருக்கும் பாரதூரமான ஆபத்துகள் குறித்து விபரித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததற்குப் பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கங்களும், சர்வதேசத்திற்கும் உள்நாட்டு மக்களுக்கும் வழங்கிய பிரதான வாக்குறுதி "பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) நீக்கப்படும்" என்பதாகும். ஆனால், நடைமுறையில் ஒரு அரசு அந்தச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிவிட்டு ATA (Anti-Terrorism Act) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. மற்றொரு அரசு Counter-Terrorism Act-ஐ பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டு வர முயன்றது. தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரும், "இப்படியான கடுமையான சட்டங்களை வைத்துக் கொண்டு தங்களுக்கு ஆட்சி செய்ய வேண்டிய அவசியமில்லை, எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம்" என அண்மையில் அறிவித்திருந்தார். அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், இதன் பின்னணியில் அதைவிடப் பாரதூரமான சதி ஒன்று அரங்கேறி வருவதாக சட்டத்தரணி கே. தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) வெறும் 25 முதல் 28 பக்கங்களை மட்டுமே கொண்டிருந்த நிலையில், இந்த புதிய PSTA வரைவு 105 பக்கங்களைக் கொண்டு, படுகடுமையான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய சட்டத்தின் பிரதான பிரிவான 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சட்டத்தை அடிப்படையாக வைத்தே இந்த புதிய வரைவும் எழுதப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின்படி, ஒருவரது தடுப்புக்காவல் காலம் 18 மாதங்களில் இருந்து ஒரு வருடமாகக் குறைக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய PSTA சட்டத்தின் 28 ஆவது பிரிவின் கீழ், சந்தேகநபர் ஒருவரை ஒரு வருடம் தடுப்புக்காவலிலும், மேலும் ஒரு வருடம் சிறையிலும் என மொத்தம் இரண்டு வருடங்கள் தடுத்து வைத்திருக்க முடியும். இந்த சட்ட வரைவின் 39 ஆவது பிரிவின்படி, ஒருவருக்கு எதிராக சாட்சியம் இருப்பதாக காவல்துறையினர் சட்டமா அதிபருக்கு அறிக்கை அனுப்பி, மேல் நீதிமன்றத்தின் மூலம் உத்தரவைப் பெற்றால், விசாரணை முடியும் வரை (கைது செய்த நாளில் இருந்து இறுதி வரை) காலவரையறையின்றி சந்தேகநபரை தடுத்து வைக்க முடியும். பழைய சட்டத்தின் கீழ், பயங்கரவாதச் செயல் குறித்து தகவல் வழங்கத் தவறினால் அதிகபட்சமாக 7 வருட சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால், புதிய PSTA சட்ட வரைவின்படி, தகவல் வழங்கத் தவறினால் 7 வருட சிறைத்தண்டனையுடன் சேர்த்து 70 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம். ஒருவேளை தெரியாமல் தவறான தகவல் வழங்கப்பட்டால் 2 வருட சிறையும் 20 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் இன்னும் 2000 பேர் சிறையிலேயே அடைப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்தையும் விட விசித்திரமான அம்சம் என்னவென்றால், வன்முறையற்ற சாத்வீக பொதுப் போராட்டங்கள் மற்றும் சிவில் சமூக செயல்பாடுகளைக் கூட பயங்கரவாதத்தின் கீழ் முடக்கும் ஆபத்தான பிரிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தவராசா கவலை வெளியிட்டுள்ளார். இதன்படி போராட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவிடல் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுதல் என்பனவும் இந்த சட்டத்தின்கீழ் குற்றங்களாக கருதப்படும் என்று அவர் குறி்ப்பிட்டுள்ளார். இந்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனையை வழங்குவதற்கும் சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்குவதாக வழங்கும் வாக்குறுதி உண்மையானதாக இருக்க வேண்டுமாயின், அதற்குப் பதிலாக அதைவிடவும் படுகடுமையான இந்த PSTA சட்ட வரைவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொண்டு வரமாட்டோம் என்ற உறுதியான வாக்குறுதியையும் அரசாங்கத்திடமிருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற வேண்டும் என்பதே தற்போதைய பிரதான கோரிக்கையாகும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்குவதாகக் கூறி, அதைவிடப் படுமோசமான PSTA சட்ட வரைவைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சி!
General13 June 2026

மண்சரிவு அபாயம்: 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று மாலை 4:00 மணி முதல் நாளை மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் வகையில், 3 மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (மஞ்சள்) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த மழைவீழ்ச்சி 75 மில்லிமீட்டரையும், மண் நீர் குறியீடு 100 மில்லிமீட்டரையும் தாண்டியுள்ளதால், மழை தொடரும் பட்சத்தில் மண்சரிவு, சாய்வுகள் இடிந்து விழுதல், பாறைகள் விழுதல் மற்றும் தரை உள்ளிறக்கம் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்: களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர மற்றும் அகலவத்தை பிரதேச செயலக பிரிவுகள். நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ பிரதேச செயலக பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள். இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மதுள, கொடகவெல, எலபாத, கலவான, இரத்தினபுரி மற்றும் நிவித்திகல பிரதேச செயலக பிரிவுகள்.

விபரங்களுக்கு
மண்சரிவு அபாயம்: 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
General13 June 2026

சீனாவில் கையேந்தி யாசகம் செய்யும் ரோபோ: இணையத்தில் தீயாய் பரவும் காணொளி !

சீனாவில் ரோபோ ஒன்று சாலையில் மண்டியிட்டு, கைகூப்பி பிச்சை எடுக்கும் காணொளி காட்சி இணையதளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, "AI ரோபோக்களால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று பயந்தோம், ஆனால் அவை பிச்சை எடுக்கும் வேலையையும் விட்டுவைக்கவில்லை" என்று இணையவாசிகள் பலரும் நகைச்சுவையாகவும் கவலையுடனும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
சீனாவில் கையேந்தி யாசகம் செய்யும் ரோபோ: இணையத்தில் தீயாய் பரவும் காணொளி !
General13 June 2026

நடிகர் ரஜினியின் பெயர் மற்றும் படங்களை பயன்படுத்த பிற அமைப்புகளுக்கு தடை

நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக்கூடாது என தலைவரின் உத்தரவுப்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரங்களிலும் அரசியல் நிகழ்வுகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்களின் சமூக ஊடகப் பிரசாரங்களில் ரஜினிகாந்தின் முகத்தையும் பெயரையும் பயன்படுத்தி வருவதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன. இதனைத் தடுக்கும் பொருட்டும், ரசிகர்களிடையே தேவையற்ற அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், "தலைவர் ரஜினிகாந்தின் நேரடி உத்தரவின் பேரில்" இந்த அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரசிகர் மன்ற தலைமைத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
நடிகர் ரஜினியின் பெயர் மற்றும் படங்களை பயன்படுத்த பிற அமைப்புகளுக்கு தடை
International News

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

International 14 June 2026
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

ரஷ்யாவின் ‘ஸ்மைர்டோஸ்’ எரிபொருள் கப்பல் பிரித்தானியாவில் இடைமறிப்பு!

International 14 June 2026
ரஷ்யாவின் ‘ஸ்மைர்டோஸ்’ எரிபொருள் கப்பல் பிரித்தானியாவில் இடைமறிப்பு!

இந்திய வான்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து

International 13 June 2026
இந்திய வான்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!

International 13 June 2026
இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியது: பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உறுதி!

International 13 June 2026
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியது: பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உறுதி!

சட்டவிரோத குடியேற்றப் பதற்றத்தைத் தணிக்க இந்தியா - பங்களாதேஷ் கூட்டு நடவடிக்கை

International 13 June 2026
சட்டவிரோத குடியேற்றப் பதற்றத்தைத் தணிக்க இந்தியா - பங்களாதேஷ் கூட்டு நடவடிக்கை

நான் அரசியலுக்கு வருகிறேன் - நடிகர் ராகவா லோரன்ஸ் அதிரடி அறிவிப்பு!

International 12 June 2026
நான் அரசியலுக்கு வருகிறேன் - நடிகர் ராகவா லோரன்ஸ் அதிரடி அறிவிப்பு!

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

International 12 June 2026
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

1.8 ட்ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச்சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்!

International 12 June 2026
1.8 ட்ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச்சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்!

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் - டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

International 12 June 2026
ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் - டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் இரட்டை வேடத்தை உலகிற்குத் தோலுரித்துக் காட்டிய ஈரான்!

International 12 June 2026
அமெரிக்காவின் இரட்டை வேடத்தை உலகிற்குத் தோலுரித்துக் காட்டிய ஈரான்!

அமெரிக்காவுக்கு இந்தியாவின் அவசர கோரிக்கை!

International 12 June 2026
அமெரிக்காவுக்கு இந்தியாவின் அவசர கோரிக்கை!

திறந்துவிடப்பட்ட சிறைக்கதவுகள் - ஹஸன் யூசுப்பின் மகன் வௌியிட்ட முக்கிய தகவல்!

International 12 June 2026
திறந்துவிடப்பட்ட சிறைக்கதவுகள் - ஹஸன் யூசுப்பின் மகன் வௌியிட்ட முக்கிய தகவல்!

அமெரிக்காவின் 18 இலக்குகளின் மீது தாக்குதல் - பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

International 12 June 2026
அமெரிக்காவின் 18 இலக்குகளின் மீது தாக்குதல் - பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

ஈரான் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக ரத்து செய்தார் டொனால்ட் ட்ரம்ப்!

International 12 June 2026
ஈரான் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக ரத்து செய்தார் டொனால்ட் ட்ரம்ப்!
Sports Stories
Explore More
துருக்கியை 2-0 என வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி!

துருக்கியை 2-0 என வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி!

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் குழு 'D' பிரிவிற்கான இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் துருக்கி அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் துருக்கி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்ற இந்த போட்டியின் 26ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலிய அணியின் நெஸ்டோரி இரான்குண்டா ( Nestory irankunda)முதலாவது கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கொன்னர் மெட்கால்ஃபெ (Connor Metcalfe )அவுஸ்திரேலிய அணி சார்பாக இரண்டாவது கோலை அடித்தார். இறுதிவரை துருக்கி அணியால் எந்தவொரு கோலையும் அடிக்க முடியாமல் போனதை அடுத்து, அவுஸ்திரேலிய அணி 2-0 என வெற்றியைத் தன்வசப்படுத்தியது.

விபரங்களுக்கு
மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது 20 க்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.இதனைத் தொடர்ந்து 195 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இலங்கை அணியின் பந்துவீச்சுகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமநிலைப்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
மகளிர் இருபதுக்கு20 உலகக் கிண்ணம்: இலங்கையை வீழ்த்தி வென்றது இங்கிலாந்து

மகளிர் இருபதுக்கு20 உலகக் கிண்ணம்: இலங்கையை வீழ்த்தி வென்றது இங்கிலாந்து

மகளிர் இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் இலங்கை அணியை 87 ஓட்டங்களால் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.இலங்கை அணி பங்கேற்கும் அடுத்த போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
மகளிர் டி20 உலகக் கிண்ணம்: இங்கிலாந்துக்கு எதிரான ஆரம்பப் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 உலகக் கிண்ணம்: இங்கிலாந்துக்கு எதிரான ஆரம்பப் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் ஆரம்பமாகியுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை எதிர் கொள்ளும் இலங்கை அணியின் 11 வீராங்கனைகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பர்மிங்ஹாமின் எஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியில்,சமரி அத்தபத்து (அணித்தலைவர்)விஷ்மி குணரத்னஇமேஷா துலானிஹர்ஷிதா சமரவிக்ரமஹன்சிமா கருணாரத்னகவிஷா தில்ஹாரிநிலக்ஷிகா சில்வாகௌஷினி நுத்தியங்கனா சுகந்திகா தாஸநாயக்கமல்கி மதாராமிதாலி அயோத்யாஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே, சவாலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இலங்கை மகளிர் அணி முழு வீச்சில் தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் களம் இறங்கும் விராட் கோலி

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் களம் இறங்கும் விராட் கோலி

இங்கிலாந்து அணிக்கு எதிராக எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி விளையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து அவர் விலகியிருந்தார்.தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் அவர் மீண்டும் சர்வதேசப் போட்டிகளுக்குத் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட நாட்களின் பின்னர் விராட் கோலி மீண்டும் ஒருநாள் போட்டிகளில் களம் இறங்கவுள்ளமை அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி!

இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி!

கிங்ஸ்டன், ஜமைக்காவில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 9 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது.இலங்கை அணி சார்பில் அதிகப்படியான ஓட்டங்களாக கமிந்து மென்டிஸ் 39 பந்துகளுக்கு 51 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 23 பந்துகளுக்கு 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், இஷான் மலிங்க 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.தொடர்ந்தும் 150 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 149 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகப்படியான ஓட்டங்களாக ஷாய் ஹோப் 54 பந்துகளுக்கு 65 ஓட்டங்களையும், பிரண்டன் கிங் 22 பந்துகளுக்கு 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

விபரங்களுக்கு
இலங்கை தடகள வரலாற்றில் புதிய மைல்கல் : உலக அளவில் 3ஆவது இடத்தைப் பிடித்தார் ருமேஷ் தரங்க!

இலங்கை தடகள வரலாற்றில் புதிய மைல்கல் : உலக அளவில் 3ஆவது இடத்தைப் பிடித்தார் ருமேஷ் தரங்க!

உலக தடகள சம்மேளனம், வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் உலக தரவரிசையில், இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க உலக அளவில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில், இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற 'டயமண்ட் லீக்' தடகளத் தொடரில், 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அவர் புதிய இலங்கை சாதனையையும், போட்டிச் சாதனையையும் படைத்திருந்தார். இதன்மூலம், உலக தடகள தரவரிசையில் 1,324 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதனிடையே, ஜேர்மனியின் ஜூலியன் வெபர் 1,360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கிரெனடாவின் எண்டர்சன் பீட்டர்ஸ் 1,326 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். உலகப் புகழ்பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 5 ஆவது இடத்திலும், பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் 10 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப் பயணத்தின் போது நடைபெற்ற ஒரேயொரு போட்டிக் கொண்ட டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்கள் என்ற பாரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.சண்டிகரின் நியூ சண்டிகர் மைதானத்தில் கடந்த 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 564 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியின் பலம் வாய்ந்த பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் திணறி 152 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.முதலாவது இன்னிங்ஸில் 412 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்ததால் ஃபலோ-ஒன் (Follow-on) முறைக்கு உள்ளாகி, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆப்கானிஸ்தான் அணி, வெறும் 112 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.இதன்படி, ஆப்கானிஸ்தான் அணியை இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 264 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்களால் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!

'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!

தமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நட்சத்திரமான அஜித் குமாரின் 64-ஆவது திரைப்படமான 'AK 64' குறித்த புதிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்காக நடிகர் அஜித்துக்கு பிரம்மாண்ட தொகை வேதனமாக பேசப்பட்டு வருவதாக கொலிவூட் தரப்புக்கள் தெரிவிக்கின்றன. அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள இந்த புதிய திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக சில முன்னணி கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்களும், புதிய தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்குமாருக்கு 187 கோடி ரூபாய் வேதனமாக வழங்குவதற்கு தயாரிப்பு தரப்பு முன்வந்துள்ளதாகத் தெரியவருகிறது. இது தமிழ் சினிமாவின் மிக உயர்ந்த வேதனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தொகை குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது, நடிகர் அஜித் தரப்பிலிருந்து மிகவும் கடுமையான நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தனக்கு வழங்கப்படும் முழு வேதனத்தையும் தனது அதிகாரபூர்வ வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும் என அஜித் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்படையான கண்டிஷன் தற்போது சினிமா தரப்புக்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. "விடாமுயற்சி" மற்றும் "குட் பேட் அக்லி" ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, அஜித்தின் 64-ஆவது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
த்ரிஷாவின் கழுத்தில் ‘மின்னு’ தாலி? : ரகசிய திருமணமா என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

த்ரிஷாவின் கழுத்தில் ‘மின்னு’ தாலி? : ரகசிய திருமணமா என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷாவின் புகைப்படமொன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தில், த்ரிஷாவின் கழுத்தில் கேரள கிறிஸ்தவ பாரம்பரியத்தை ஒத்த ‘மின்னு’ மாங்கல்யம் போன்ற டாலர் சங்கிலி காணப்படுவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதையடுத்து, நடிகை த்ரிஷா யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் நடைபெற்றிருந்தால், அவரது வாழ்க்கைத் துணை யார் என்பது குறித்தும் பல்வேறு ஊகங்கள் மற்றும் கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. எனினும், மற்றொரு தரப்பினர் இது த்ரிஷா தற்போது நடித்து வரும் புதிய திரைப்படம் அல்லது தொடர் ஒன்றுக்கான கதாபாத்திர தோற்றமாக இருக்கக்கூடும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் த்ரிஷா அல்லது அவரது நிர்வாகக் குழுவினரிடமிருந்து எந்தவொரு உத்தியோகபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. அதனால், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் தற்போது ஊகங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்பதுடன், த்ரிஷாவின் தரப்பிலிருந்து விளக்கம் வெளியாகும் வரை இந்த விவகாரத்தின் உண்மை நிலை உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், இந்த விவகாரம் கொலிவூட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.

விபரங்களுக்கு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மகன், மருமகனுடன் சந்தித்தார் நடிகர் பிரபு!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மகன், மருமகனுடன் சந்தித்தார் நடிகர் பிரபு!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, பிரபல மூத்த நடிகர் பிரபு இன்று (08) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது நடிகர் பிரபுவுடன் அவரது மகன் விக்ரம் பிரபு மற்றும் அவரது மருமகனும் உடனிருந்தனர். அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோசப் விஜய்யை, தமிழ் திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி மூத்த நடிகர்களில் ஒருவரான பிரபு, தனது குடும்பத்தினருடன் சென்று முதல்வருக்குத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இச்சந்திப்பின் போது, அவர்கள் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதுடன், சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். இச்சந்திப்புத் தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சினிமா மற்றும் அரசியல் தரப்புகளில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
கமல்ஹாசன் தயாரிப்பில் 'தலைவர் 173' : அதிரடிப் பாடலுடன் விரைவில் தொடங்குகிறது படப்பிடிப்பு!

கமல்ஹாசன் தயாரிப்பில் 'தலைவர் 173' : அதிரடிப் பாடலுடன் விரைவில் தொடங்குகிறது படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தின் ('தலைவர் 173') படப்பிடிப்பு, ரஜினிக்கான சிறப்பு அதிரடிப் பாடல் காட்சியுடன் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகநாயகன் கமல்ஹாசனின் 'ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது. சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, ரஜினிகாந்தின் பிரம்மாண்ட ஓப்பனிங் பாடலுடன் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு அதிரடிப் பாடலுக்குப் பிரபல நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் நடனம் அமைக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தரப்புகள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தின் முறையான படப்பிடிப்புப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு ஆளுமைகளின் கூட்டணியில் இத்திரைப்படம் உருவாவதால், கோலிவுட் தரப்புகளில் தற்போதே பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

விபரங்களுக்கு
ரவி மோகன் - மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

ரவி மோகன் - மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிள்ளைகளின் கல்வி செலவிற்காக இடைக்கால ஜீவனாம்சமாக மாதம் (இந்திய மதிப்பில்) ரூ.40 லட்சம் வழங்க வேண்டும் எனக் கோரி அவரது மனைவி ஆர்த்தி தாக்கல் செய்திருந்த மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில், ஆர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி ரவி மோகன் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ரவி மோகனின் கோரிக்கையை ஏற்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

விபரங்களுக்கு
பிரபல நடிகர் சலீம் குமார் காலமானார்!

பிரபல நடிகர் சலீம் குமார் காலமானார்!

மலையாள திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வளம் வந்த நடிகர் சலீம் குமார் உடல்நலக்குறைவால் தனது 57ஆவது வயதில் காலமானார்.   திடீர் உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அவரின் இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகிற்குள் நுழைந்த அவர், 1997இல் 'இஷ்டமானு நூறு வட்டம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சலீம் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
பெத்தி திரைப்படம் ஒரு நாளில் 135 கோடிக்கும் மேல் வசூல் சாதனை

பெத்தி திரைப்படம் ஒரு நாளில் 135 கோடிக்கும் மேல் வசூல் சாதனை

ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரின் பிரதான நடிப்பில், புஜ்ஜி பாபு சனாவின் இயக்கத்தில் உருவான ‘பெத்தி’ திரைப்படம் நேற்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, போமன் இரானி, திவ்யேந்து உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 135.36 கோடி ரூபாவிற்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வார இறுதி நாட்களைக் கடக்கும் போது, ‘பெத்தி’ திரைப்படம் மேலும் பாரிய வசூல் சாதனைகளை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////