Top Story
ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மொஹமட் பாகர் காலிபாப் ஆகியோரால் இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்டது என்றும், ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளதால், சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இரு நாட்டுப் பேச்சுவார்த்தைக் குழுக்களும் திட்டமிட்டபடி சந்திக்கவிருந்த போதிலும், அங்கு நேரில் கையெழுத்திடும் அதிகாரப்பூர்வ நிகழ்வு எதுவும் நடைபெறாது என ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் சில போக்குவரத்து சலுகைகளை வழங்குவதற்கு ஈடாக, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை 30 நாட்களுக்குள் நீக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், தஹியே (Dahiyeh) பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்த ஈரானின் அச்சுறுத்தல்களை அடுத்து, அவசரப் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த நடைமுறை முடுக்கிவிடப்பட்டது.

இதன் பலனாக, தற்போது அமெரிக்காவின் கடற்படை முற்றுகை உடனடியாக நீக்கப்பட்டு, ஈரானிய கப்பல்கள் எந்தவித தடங்கலும் இன்றி துறைமுகங்களுக்குள் வந்து செல்கின்றன.

ஈரானின் உள்நாட்டு நலன்களுக்கு இணையாக, லெபனானில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஈரான் முக்கியத்துவம் அளித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதலாவது பிரிவில் 'லெபனான்' என்ற பெயர் மூன்று முறை குறிப்பிடப்பட்டுள்ளதுடன், லெபனானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய இறையாண்மை கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும் என்பதும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆரம்பக் கட்டத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் மட்டுமே ஈரான் கவனம் செலுத்தியுள்ளதால், அணுசக்தி விவகாரம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அணுசக்தி திட்டம் மற்றும் தடைகளை நீக்குவது குறித்து மாத்திரம் பிரத்தியேகமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 60 நாட்கள் கால அவகாசம் இந்த ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் இக்காலப்பகுதியை நீடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஈரானின் தற்காப்புத் திறன்கள் மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் குறித்து எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்பட மாட்டாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. "ஈரானின் ஏவுகணைகள் ஏவுவதற்கே தவிர, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அல்ல" என்று குறிப்பிட்டுள்ள செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய், நாட்டின் பாதுகாப்பு சொத்துக்கள் குறித்து எந்தவொரு தரப்புடனும் விவாதிக்கப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
விபரங்களுக்கு
General18 June 2026
கடல்வழி முற்றுகையை விலக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் இலத்திரனியல் கையெழுத்திட்டன!
Video of the Day
Latest TV News Bulletin
International News

வீசி எறிந்த மீன்களுக்குள் இருந்த ரகசியம் : கேரளக் கடலில் சிக்கிய புதிய வகை சுறா - விஞ்ஞானிகள் சாதனை!

International 18 June 2026
வீசி எறிந்த மீன்களுக்குள் இருந்த ரகசியம் : கேரளக் கடலில் சிக்கிய புதிய வகை சுறா - விஞ்ஞானிகள் சாதனை!

மொஸ்கோ மீது யுக்ரைன் தாக்குதல்: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இலக்கு, வானூர்தி நிலையங்கள் முடக்கம்

International 18 June 2026
மொஸ்கோ மீது யுக்ரைன் தாக்குதல்: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இலக்கு, வானூர்தி நிலையங்கள் முடக்கம்

பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கை!

International 18 June 2026
பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கை!

உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி : இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு!

International 18 June 2026
உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி : இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு!

சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை : சர்வதேச சந்தையில் இன்றைய அதிரடி மாற்றம்!

International 18 June 2026
சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை : சர்வதேச சந்தையில் இன்றைய அதிரடி மாற்றம்!

முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் மத்திய வங்கி நடவடிக்கை

International 18 June 2026
முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் மத்திய வங்கி நடவடிக்கை

அமெரிக்க முற்றுகையை கடந்து ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாதுகாப்பாக வெளியேறிய ஈரானிய எண்ணெய் கப்பல்கள்!

International 17 June 2026
அமெரிக்க முற்றுகையை கடந்து ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாதுகாப்பாக வெளியேறிய ஈரானிய எண்ணெய் கப்பல்கள்!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி : இயற்கை எரிவாயு விலை உயர்வு!

International 17 June 2026
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி : இயற்கை எரிவாயு விலை உயர்வு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹிஸ்புல்லாவை கையாளும் விதம் தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை என, ட்ரம்ப் கூறுகிறார்.

International 17 June 2026
 லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹிஸ்புல்லாவை கையாளும் விதம் தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை என, ட்ரம்ப் கூறுகிறார்.

இஸ்லாமாபாத்தில் ஒவ்வொரு 4 வீடுகளிலும் ஒரு சிறுவர் தொழிலாளி: பாகிஸ்தானில் அதிர்ச்சித் தகவல்

International 16 June 2026
இஸ்லாமாபாத்தில் ஒவ்வொரு 4 வீடுகளிலும் ஒரு சிறுவர் தொழிலாளி: பாகிஸ்தானில் அதிர்ச்சித் தகவல்

வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு - பலர் கைது!

International 16 June 2026
வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு - பலர் கைது!

புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை : இன்றைய அதிரடி உயர்வு!

International 16 June 2026
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை : இன்றைய அதிரடி உயர்வு!

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 6.3 மெக்னிடியூட் அளவில் அதிர்வு!

International 16 June 2026
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 6.3 மெக்னிடியூட் அளவில் அதிர்வு!

உலக அளவில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியினால் ஆபத்தில் : யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை!

International 16 June 2026
உலக அளவில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியினால் ஆபத்தில் : யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை!

கேரளாவில் வேகமெடுக்கும் ஷிகெல்லா தொற்று : 5 பேர் உயிரிழப்பு!

International 16 June 2026
கேரளாவில் வேகமெடுக்கும் ஷிகெல்லா தொற்று : 5 பேர் உயிரிழப்பு!
More News
General18 June 2026

கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு? : தமிழக முதலமைச்சரை சந்திக்கும் அமைச்சர் சந்திரசேகர்!

இலங்கை மற்றும் இந்திய தமிழக கடற்றொழிலாளர்களுக்கிடையில் நீடித்து வரும் கடல் எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணும் நோக்கில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கடந்த 06 மாதங்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகைகள் குறைவடைந்திருந்த போதிலும், எதிர்காலத்தில் மீண்டும் எல்லை தாண்டிய கடற்றொழில் நடவடிக்கைகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற எல்லை தாண்டி நுழைவுகளை தடுப்பதற்காக இலங்கை கடற்படை மூலம் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும், இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜூலை மாதத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட, முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். திரைப்படங்களில் நீதிக்காகப் போராடும் ஒரு போராளியாகச் சித்தரிக்கப்பட்டதன் வெளிப்பாடாகவே விஜய் தற்போது முதலமைச்சராக வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், திரைப்படங்களில் காட்டிய அதே நேர்மையை அவர் அரசியலிலும் வெளிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இரண்டு நாடுகளின் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளங்களின் நிலைத்தன்மையையும் கருத்தில் கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்றை எட்ட முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதும், கடல் வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமையுமாயின், நீண்டகாலமாக நிலவி வரும் இலங்கை – தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிலையான தீர்வை எட்டுவதற்கான முக்கிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு? : தமிழக முதலமைச்சரை சந்திக்கும் அமைச்சர் சந்திரசேகர்!
General18 June 2026

வாகன இறக்குமதி கட்டுப்பாடு: வெளிநாட்டு செலாவணி வெளியேற்றம் வீழ்ச்சி

வாகன இறக்குமதிக்கான சுங்க இறக்குமதி வரிகள் மீது தற்காலிக கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் வாகன இறக்குமதிக்கான தினசரி வெளிநாட்டுச் செலாவணி வெளியேற்றம் 4 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் கீழ் குறைந்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் தாக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், இக்கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், ஒரேநாளில் 88 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த கொள்கை மாற்றமானது இறக்குமதி சார்ந்த வெளிநாட்டுச் செலாவணிச் செலவினங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, கடந்த ஆண்டில் வாகன இறக்குமதிக்காக இலங்கை நாளொன்றுக்கு சராசரியாக 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில், வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்பட்ட கடன் கடிதங்களின் மதிப்பு அதிகரித்ததன் காரணமாக, இந்தத் தொகை நாளொன்றுக்கு சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்தது. இருப்பினும்ட தற்போது இது குறைந்து வருகின்றது. உதாரணமாக, ஜூன் மாதத்தில் தினசரி சராசரி செலவினம் 4 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே காணப்பட்டது. எனவே, இதன் தாக்கம் தெரிகின்றதுடன், நாம் சரியான தீர்மானங்களை எடுத்துள்ளோம் என்றே நம்புகிறோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சானது, குறிப்பிட்ட சில இறக்குமதிப் பொருட்களுக்குப் பொருந்தக்கூடிய சுங்க இறக்குமதி வரிகள் மீது 50 வீத தற்காலிக கூடுதல் கட்டணத்தை 2026 மே 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தியிருந்தது.1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 235) 10ஏ பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
வாகன இறக்குமதி கட்டுப்பாடு: வெளிநாட்டு செலாவணி வெளியேற்றம் வீழ்ச்சி
General18 June 2026

உலகக் கிண்ணக் கால்பந்து : உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி கொலம்பியா அபார வெற்றி

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் குழு K க்கான லீக் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே கொலம்பியா அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் கொலம்பியா அணியின் டேனியல் முஞோஸ் (Daniel Muñoz) முதலாவது கோலை அடித்துத் தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதற்பாதி ஆட்டம் 1 - 0 என கொலம்பியாவுக்கு சாதகமாக நிறைவடைந்தது.தொடர்ந்து நடைபெற்ற விறுவிறுப்பான இரண்டாம் பாதி ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில், உஸ்பெகிஸ்தான் அணியின் அப்போஸ்பெக் ஃபாய்குல்லாயேவ் (Abbosbek Fayzullaev) ஒரு கோலை அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார். எனினும், அடுத்த சில நிமிடங்களிலேயே கொலம்பியா அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் டயஸ் (Luis Díaz) ஒரு கோலை அடித்து மீண்டும் அணியை முன்னிலைப்படுத்தினார்.ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் கொலம்பியாவின் ஜமிண்டன் காம்பாஸ் (Jaminton Campaz) மற்றுமொரு கோலை அடிக்க, கொலம்பியா அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.இந்த வெற்றியின் மூலம் கொலம்பியா அணி குழு K இன் புள்ளிகள் பட்டியலில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
உலகக் கிண்ணக் கால்பந்து : உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி கொலம்பியா அபார வெற்றி
General18 June 2026

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நானுஓயா – பதுளை இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

டிட்வா சூறாவளியின் பின்னர், நானுஓயா முதல் பதுளை வரையிலான மலையகத் தொடருந்து சேவைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த தொடருந்து பாதையில் அண்மைய நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதனைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையிலான தொடருந்து சேவைகள் அனைத்தும் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் வழமை போன்று இயங்கும் என தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நானுஓயா – பதுளை இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
General18 June 2026

சிற்றூந்தில் மீட்கப்பட்ட பெண் உடலம்: விடுதி சிசிடிவி காட்சிகள் வெளிப்படுத்தும் உண்மை

தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் சிற்றூந்து ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பெண் தனது காதலன் எனக் கூறப்படும் நபருடன் நுவரெலியா பகுதியிலுள்ள விடுதியொன்றிற்கு நேற்று முன்தினம் சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்திருந்தது. இதனைத் தொடர்ந்து, குறித்த காதலன் அந்தப் பெண்ணின் உடலத்தை அன்றைய தினம் இரவே சிற்றூந்தில் ஏற்றி, நேற்று காலை தெல்தெனிய பகுதிக்குக் கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில், குறித்த பெண்ணும் அவரது காதலனும் தங்கியிருந்த விடுதியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில், அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து குறித்த பெண்ணைத் தூக்கிச் சென்று சிற்றூந்தில் ஏற்றிச் சென்றதாக, விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அப்பெண்ணின் மூத்த சகோதரர் நுவரெலியா காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.அதனடிப்படையில், நுவரெலியா தடயவியல் காவல்துறையினரின் உதவியுடன் குறித்த இருவரும் தங்கியிருந்த தனியார் விடுதியின் தடயங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விடுதி ஊழியர்களின் வாக்குமூலங்கள், மற்றும் தொலைபேசி அழைப்புத் தரவுகளைச் சேகரித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
சிற்றூந்தில் மீட்கப்பட்ட பெண் உடலம்: விடுதி சிசிடிவி காட்சிகள் வெளிப்படுத்தும் உண்மை
International News

வீசி எறிந்த மீன்களுக்குள் இருந்த ரகசியம் : கேரளக் கடலில் சிக்கிய புதிய வகை சுறா - விஞ்ஞானிகள் சாதனை!

International 18 June 2026
வீசி எறிந்த மீன்களுக்குள் இருந்த ரகசியம் : கேரளக் கடலில் சிக்கிய புதிய வகை சுறா - விஞ்ஞானிகள் சாதனை!

மொஸ்கோ மீது யுக்ரைன் தாக்குதல்: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இலக்கு, வானூர்தி நிலையங்கள் முடக்கம்

International 18 June 2026
மொஸ்கோ மீது யுக்ரைன் தாக்குதல்: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இலக்கு, வானூர்தி நிலையங்கள் முடக்கம்

பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கை!

International 18 June 2026
பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கை!

உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி : இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு!

International 18 June 2026
உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி : இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு!

சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை : சர்வதேச சந்தையில் இன்றைய அதிரடி மாற்றம்!

International 18 June 2026
சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை : சர்வதேச சந்தையில் இன்றைய அதிரடி மாற்றம்!

முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் மத்திய வங்கி நடவடிக்கை

International 18 June 2026
முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் மத்திய வங்கி நடவடிக்கை

அமெரிக்க முற்றுகையை கடந்து ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாதுகாப்பாக வெளியேறிய ஈரானிய எண்ணெய் கப்பல்கள்!

International 17 June 2026
அமெரிக்க முற்றுகையை கடந்து ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாதுகாப்பாக வெளியேறிய ஈரானிய எண்ணெய் கப்பல்கள்!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி : இயற்கை எரிவாயு விலை உயர்வு!

International 17 June 2026
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி : இயற்கை எரிவாயு விலை உயர்வு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹிஸ்புல்லாவை கையாளும் விதம் தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை என, ட்ரம்ப் கூறுகிறார்.

International 17 June 2026
 லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹிஸ்புல்லாவை கையாளும் விதம் தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை என, ட்ரம்ப் கூறுகிறார்.

இஸ்லாமாபாத்தில் ஒவ்வொரு 4 வீடுகளிலும் ஒரு சிறுவர் தொழிலாளி: பாகிஸ்தானில் அதிர்ச்சித் தகவல்

International 16 June 2026
இஸ்லாமாபாத்தில் ஒவ்வொரு 4 வீடுகளிலும் ஒரு சிறுவர் தொழிலாளி: பாகிஸ்தானில் அதிர்ச்சித் தகவல்

வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு - பலர் கைது!

International 16 June 2026
வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு - பலர் கைது!

புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை : இன்றைய அதிரடி உயர்வு!

International 16 June 2026
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை : இன்றைய அதிரடி உயர்வு!

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 6.3 மெக்னிடியூட் அளவில் அதிர்வு!

International 16 June 2026
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 6.3 மெக்னிடியூட் அளவில் அதிர்வு!

உலக அளவில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியினால் ஆபத்தில் : யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை!

International 16 June 2026
உலக அளவில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியினால் ஆபத்தில் : யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை!

கேரளாவில் வேகமெடுக்கும் ஷிகெல்லா தொற்று : 5 பேர் உயிரிழப்பு!

International 16 June 2026
கேரளாவில் வேகமெடுக்கும் ஷிகெல்லா தொற்று : 5 பேர் உயிரிழப்பு!
Sports Stories
Explore More
சூர்யவன்ஷி மீது நடவடிக்கையா? பிசிசிஐ விளக்கம்

சூர்யவன்ஷி மீது நடவடிக்கையா? பிசிசிஐ விளக்கம்

அண்மையில் நடைபெற்ற இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான போட்டியின் போது, இலங்கை வீரர் விஷேன் ஹலம்பகேவுடன் ஏற்பட்ட கள மோதல் காரணமாக இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மறுத்துள்ளார். இலங்கை வீரரின் தூண்டல் கருத்துக்களைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், சூர்யவன்ஷி அவ்வீரரை பிடித்துத் தள்ளியுள்ளார். இது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்குப் பதிலளித்துள்ள பிசிசிஐ செயலாளர்,"BCCI ஒன்றும் போட்டியின் நடுவர் கிடையாது. சமூக ஊடகங்களில் பிசிசிஐ நடவடிக்கை எடுக்கப் போவதாகப் பல கதைகள் உலா வருகின்றன. ஆடுகளத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் போட்டி நடுவர்களுக்கு மாத்திரமே உண்டு. அந்த எல்லைக்குள் பிசிசிஐ தலையிடாது. அங்கு என்ன நடந்திருந்தாலும் அது விளையாட்டின் ஒரு பகுதி. தவறு ஏதேனும் நடந்திருந்தால் அதற்கான முறையான கட்டமைப்பின் கீழ் போட்டி நடுவர்களே முடிவெடுப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
குரோஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

குரோஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

கால்பந்து தொடரின் குழு 'எல்' ஆட்டத்தில், குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.டல்லாஸ் மைதானத்தில் 70,389 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதின.ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, அந்த அணியின் எச். கேன் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து பதிலடி கொடுக்க முயன்ற குரோஷியா அணிக்கு, 36 ஆவது நிமிடத்தில் பி. சுசிக் உதவியுடன் எம். பதுரினா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.இதன்பின், 42 ஆவது நிமிடத்தில் டி. ரைஸ் கொடுத்த பந்தைக் கொண்டு எச். கேன் மீண்டும் ஒரு கோல் அடித்து இங்கிலாந்தை முன்னிலைப்படுத்தினார். ஆனால், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45'+5 நிமிடங்கள்) ஐ. பெரிசிக் கடத்திய பந்தின் மூலம் குரோஷியாவின் பி. மூசா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய உடனே இங்கிலாந்து அணி தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது. 47 ஆவது நிமிடத்தில் இ. ஆண்டர்சன் (E. Anderson) உதவியுடன் ஜே. பெலிங்ஹாம் (J. Bellingham) இங்கிலாந்து அணிக்கான 3 ஆவது கோலை அடித்தார்.தொடர்ந்து ஆட்டத்தின் 85 ஆவது நிமிடத்தில் பி. சாகா (B. Saka) கொடுத்த பந்தை, எம். ராஷ்ஃபோர்ட் கோலாக மாற்றினார். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி வெற்றியைத் தன்வசப்படுத்தியது.

விபரங்களுக்கு
கொங்கோ குடியரசுடன் போர்த்துக்கல் அதிர்ச்சி சமநிலை: ரொனால்டோ ஏமாற்றம்!

கொங்கோ குடியரசுடன் போர்த்துக்கல் அதிர்ச்சி சமநிலை: ரொனால்டோ ஏமாற்றம்!

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் 'K' குழுவின் ஆரம்பப் போட்டியில், பலம்மிக்க போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைப்படுத்தி கொங்கோ ஜனநாயக குடியரசு அதிர்ச்சி கொடுத்துள்ளது. போட்டியின் 6ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் அணியின் ஜோவா நெவ்ஸ் தலையால் முட்டி கோல் அடித்து தனது அணிக்கு ஆரம்ப முன்னிலையைப் பெற்றுக்கொடுத்தார். எனினும், ஆட்டத்தின் பெரும்பகுதி பந்துப் பரிமாற்றத்தை போர்த்துக்கல் தன்வசம் வைத்திருந்தபோதிலும், அவர்களால் அதனை மேலதிக கோல்களாக மாற்ற முடியாமல் போனது.இதற்குத் தண்டனையாக, முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+5' நிமிடம்) கொங்கோ அணியின் யோவான் விசா மிகச் சிறப்பான முறையில் கோல் அடித்து ஆட்டத்தைச் சமப்படுத்தினார். உலகத் தரவரிசையில் 46ஆவது இடத்தில் இருக்கும் கொங்கோ அணி உலகக் கிண்ண வரலாற்றில் பதிவு செய்த முதலாவது கோல் இதுவாகும்.இந்த போட்டியில் போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு இணையாகத் தனது 6ஆவது உலகக் கிண்ணத் தொடரில் களம் கண்டு சாதனை படைத்துள்ளார். அத்துடன், உலகக் கிண்ணப் போட்டியொன்றில் களமிறங்கிய மிக வயதான வெளிக்கள வீரர் (41 வயது 132 நாட்கள்) என்ற பெருமையையும் அவர் பெற்றார். முழுப் போட்டியிலும் விளையாடிய ரொனால்டோவுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைத்த போதிலும், அவரால் பந்தைக் கோலாக மாற்ற முடியாமல் போனது.இதனால் 6 வெவ்வேறு உலகக் கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நோக்கி அவர் இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, 'K' குழுவின் அடுத்த போட்டிகளில் போர்த்துக்கல் அணி எதிர்வரும் 23 ஆம் திகதி உஸ்பெகிஸ்தானையும், கொங்கோ அணி எதிர்வரும் 24 ஆம் திகதி கொலம்பியாவையும் எதிர்கொள்ளவுள்ளன.

விபரங்களுக்கு
ஹலம்பகே மற்றும் சூர்யவன்ஷிக்கு 50% அபராதம் விதிக்க போட்டி நடுவர் பரிந்துரை

ஹலம்பகே மற்றும் சூர்யவன்ஷிக்கு 50% அபராதம் விதிக்க போட்டி நடுவர் பரிந்துரை

தம்புள்ளையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்தியா 'A' மற்றும் இலங்கை 'A' அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு அபராதம் விதிக்குமாறு போட்டி நடுவர் (Match Referee) பரிந்துரைத்துள்ளார். இதன்படி, ஹலம்பகே மற்றும் வைபவ் சூர்யவன்ஷிக்கு 50% அபராதமும் திலக் வர்மாவிற்கு 30% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன் நிரோஷன் டிக்வெல்லவிற்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'A' அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளின்படி, போட்டி நடுவர் பரிந்துரைக்கும் இவ்வாறான ஒழுக்காற்று தடைகளை அமுல்படுத்தும் அதிகாரம் அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (பிசிசிஐ மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்) உரியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் கண்ணீர் சிந்தியதற்கான காரணத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி

அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் கண்ணீர் சிந்தியதற்கான காரணத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி

கால்பந்து தொடரின் குழு 'ஜே' தொடக்க ஆட்டத்தில் அல்ஜீரியாவுக்கு எதிராக தனது முதல் கோலை அடித்த பின்னர், ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி மைதானத்தில் கண்ணீர் சிந்திய காணொளி தற்போது வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் தனது முதலாவது கால்பந்து தொடருக்கான ஹெட்ரிக்கை பதிவு செய்து, மிரோஸ்லாவ் குளோசேயின் கால்பந்து தொடர் அதிக கோல் சாதனையை சமன் செய்த போதிலும், அவரது இந்த அழுகை ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து போட்டிக்குப் பின்னர் பேசிய மெஸ்ஸி, தனது கண்ணீருக்கும் கால்பந்தாட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். "அது கால்பந்து சார்ந்த விடயம் அல்ல, கடந்த சில நாட்களாக நான் மிகவும் கடினமான மற்றும் சிக்கலான காலகட்டத்தைக் கடந்து வந்தேன். அது முற்றிலும் விளையாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப்பட்ட விடயம்," என்று மெஸ்ஸி கூறினார். மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உறுதுணையாக இருந்த சக வீரர்கள் மற்றும் ஆர்ஜென்டினா கால்பந்து குழுவினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். தனது தற்போதைய கால்பந்து வாழ்க்கையை அவர் ‘கேக்கின் மீதான செர்ரி பழம்’ (Cherry on top) என வர்ணித்ததுடன், இந்த அற்புதமான அணியுடன் விளையாடுவதை மிகவும் ரசிப்பதாகவும் குறிப்பிட்டார்.

விபரங்களுக்கு
ஜோர்டானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரியா வெற்றி

ஜோர்டானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரியா வெற்றி

கால்பந்து தொடரின் குழு J பிரிவின் ஆட்டத்தில் ஆஸ்திரியா மற்றும் ஜோர்டான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 28 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் கால்பந்து தொடருக்குத் தகுதி பெற்றுள்ள ஆஸ்திரியா அணி, இந்த வெற்றியின் மூலம் தனது கால்பந்து தொடர் பயணத்தை பலமாகத் தொடங்கியுள்ளது. மறுபுறம், வரலாற்றில் முதன்முறையாக கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ள ஜோர்டான் அணி, தோல்வியைத் தழுவினாலும் பலத்த போராட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டம் தொடங்கிய 21 ஆவது நிமிடத்தில் ஆஸ்திரிய அணியின் ரொமானோ ஷ்மிட் பந்தை தூரத்திலிருந்து உதைத்து ஒரு கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய உடனே, 50 ஆவது நிமிடத்தில் ஜோர்டான் அணியின் அலி ஒல்வான் எதிர்-தாக்குதல் மூலம் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது ஆட்டத்தின் 76 ஆவது நிமிடத்தில் ஜோர்டான் வீரர் யாசன் அல்-அரப் எதிர்பாராதவிதமாகத் தனது சொந்த இலக்கிலேயே கோல் (Own Goal) அடித்ததால் ஆஸ்திரியா 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (Stoppage Time) ஆஸ்திரியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்திய மார்கோ அர்னாடோவிக் பந்தை வலைக்குள் தள்ளி ஆஸ்திரியாவின் 3-1 என்ற வெற்றியை உறுதி செய்தார்.

விபரங்களுக்கு
பிரான்சில் மதீஷ பத்திரனவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவு

பிரான்சில் மதீஷ பத்திரனவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவு

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரனவுக்கு, இடது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரான்சில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது முழுமையான குணமடையும் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்தத் தகவலை உறுதிப்படுத்திய மதீஷ பத்திரனவின் முகாமையாளர் அமில களுக்கலகே, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், அவர் மீண்டும் களமிறங்குவதற்கான அடுத்தகட்டப் பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, "இந்தச் செயல்முறை முழுவதும் அவரது நல்வாழ்வுக்காகச் சிறந்த ஆதரவையும் அர்ப்பணிப்பையும் வழங்கிய இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகத்திற்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் விரைவில் முழு பலத்துடன் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அதற்காகக் கடினமாக உழைத்து, முழு கவனத்துடன் செயல்பட்டு மீண்டும் தனக்குப் பிடித்தமான கிரிக்கெட் களத்திற்குத் திரும்புவார். முன்னெப்போதையும் விட வலிமையோடு அவர் களம் திரும்புவதைக் காண நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார். மதீஷ பத்திரன, அடுத்ததாகத் தீவிர உடற்தகுதிப் பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, அவர் மீண்டும் போட்டிகளில் பங்கேற்பது குறித்துத் தீர்மானிக்கப்படும். எனினும், அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்குத் திரும்புவதற்கான காலக்கெடு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
தமிழக முதலமைச்சர் விஜய்யை குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகை சிம்ரன்!

தமிழக முதலமைச்சர் விஜய்யை குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகை சிம்ரன்!

தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை, பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் இணைந்து நடித்து, ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற சூப்பர் ஹிட் ஜோடிகளுள் ஒருவரான விஜய் மற்றும் சிம்ரன் ஆகியோரின் இந்த திடீர் சந்திப்பு தற்பொழுது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யை நேரில் சந்தித்த நடிகை சிம்ரன், தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இச்சந்திப்பின் போது நடிகை சிம்ரனின் கணவர் தீபக் பாகா மற்றும் அவர்களது மகன்கள் உடனிருந்தனர். முன்னாள் சக நடிகை என்ற ரீதியிலும், நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையிலும் இந்த சந்திப்பு மிகவும் சுமுகமான முறையில் நடந்து முடிந்துள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய்யுடன், நடிகை சிம்ரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து எடுத்துக்கொண்ட இந்த பிரத்தியேகப் புகைப்படம் தற்பொழுது இணையத்திலும், சினிமா ரசிகர்களிடையேயும் வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு
அஜித்தை பாராட்டிய விஜய் : குடும்பத்துடன் கொண்டாடிய ஷாலினி!

அஜித்தை பாராட்டிய விஜய் : குடும்பத்துடன் கொண்டாடிய ஷாலினி!

பிரான்சில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 24 மணி நேர லெ மான்ஸ் (24 Hours of Le Mans) சிற்றூந்து பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் 'அஜித் குமார் ரேசிங்' அணி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது. பிரான்சில் உள்ள புகழ்பெற்ற 'சர்க்யூட் டெஸ் 24 ஹவர்ஸ் டு மான்ஸ்' (Circuit des 24 Heures du Mans) ஓடுதளத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச அளவிலான கடுமையான சிற்றூந்து பந்தயத்தில், அஜித் குமாரின் அணி பங்கேற்று கவனம் ஈர்த்தது. குறிப்பாக, லெ மான்ஸ் பந்தய வரலாற்றில் முதன்முறையாக பங்கேற்ற இந்திய அணியாக 'அஜித் குமார் ரேசிங்' அணி இடம்பிடித்துள்ளது. மொத்தம் 62 சிற்றூந்துகள் பங்கேற்ற இந்த சவாலான போட்டியில், அஜித் அணியின் இரண்டு வாகனங்களும் சிறப்பான நிலைகளைப் பெற்றுள்ளன. அதன்படி, சிற்றூந்து எண் 16 தனது பிரிவில் 9-வது இடத்தை பெற்றது. சிற்றூந்து எண் 36 ஒட்டுமொத்த தரவரிசையில் 13-வது இடத்தை பிடித்தது. இந்த சாதனையைத் தொடர்ந்து, அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித், குடும்பத்தினருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இயக்குநர் விஜய் தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் போட்டியை நேரில் கண்டு, அதைப் பதிவு செய்ய அழைத்ததற்காக அஜித் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். அஜித் குமாரின் இந்த சாதனை இந்திய மோட்டார் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

விபரங்களுக்கு
'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!

'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!

தமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நட்சத்திரமான அஜித் குமாரின் 64-ஆவது திரைப்படமான 'AK 64' குறித்த புதிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்காக நடிகர் அஜித்துக்கு பிரம்மாண்ட தொகை வேதனமாக பேசப்பட்டு வருவதாக கொலிவூட் தரப்புக்கள் தெரிவிக்கின்றன. அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள இந்த புதிய திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக சில முன்னணி கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்களும், புதிய தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்குமாருக்கு 187 கோடி ரூபாய் வேதனமாக வழங்குவதற்கு தயாரிப்பு தரப்பு முன்வந்துள்ளதாகத் தெரியவருகிறது. இது தமிழ் சினிமாவின் மிக உயர்ந்த வேதனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தொகை குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது, நடிகர் அஜித் தரப்பிலிருந்து மிகவும் கடுமையான நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தனக்கு வழங்கப்படும் முழு வேதனத்தையும் தனது அதிகாரபூர்வ வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும் என அஜித் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்படையான கண்டிஷன் தற்போது சினிமா தரப்புக்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. "விடாமுயற்சி" மற்றும் "குட் பேட் அக்லி" ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, அஜித்தின் 64-ஆவது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
த்ரிஷாவின் கழுத்தில் ‘மின்னு’ தாலி? : ரகசிய திருமணமா என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

த்ரிஷாவின் கழுத்தில் ‘மின்னு’ தாலி? : ரகசிய திருமணமா என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷாவின் புகைப்படமொன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தில், த்ரிஷாவின் கழுத்தில் கேரள கிறிஸ்தவ பாரம்பரியத்தை ஒத்த ‘மின்னு’ மாங்கல்யம் போன்ற டாலர் சங்கிலி காணப்படுவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதையடுத்து, நடிகை த்ரிஷா யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் நடைபெற்றிருந்தால், அவரது வாழ்க்கைத் துணை யார் என்பது குறித்தும் பல்வேறு ஊகங்கள் மற்றும் கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. எனினும், மற்றொரு தரப்பினர் இது த்ரிஷா தற்போது நடித்து வரும் புதிய திரைப்படம் அல்லது தொடர் ஒன்றுக்கான கதாபாத்திர தோற்றமாக இருக்கக்கூடும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் த்ரிஷா அல்லது அவரது நிர்வாகக் குழுவினரிடமிருந்து எந்தவொரு உத்தியோகபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. அதனால், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் தற்போது ஊகங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்பதுடன், த்ரிஷாவின் தரப்பிலிருந்து விளக்கம் வெளியாகும் வரை இந்த விவகாரத்தின் உண்மை நிலை உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், இந்த விவகாரம் கொலிவூட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.

விபரங்களுக்கு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மகன், மருமகனுடன் சந்தித்தார் நடிகர் பிரபு!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மகன், மருமகனுடன் சந்தித்தார் நடிகர் பிரபு!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, பிரபல மூத்த நடிகர் பிரபு இன்று (08) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது நடிகர் பிரபுவுடன் அவரது மகன் விக்ரம் பிரபு மற்றும் அவரது மருமகனும் உடனிருந்தனர். அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோசப் விஜய்யை, தமிழ் திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி மூத்த நடிகர்களில் ஒருவரான பிரபு, தனது குடும்பத்தினருடன் சென்று முதல்வருக்குத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இச்சந்திப்பின் போது, அவர்கள் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதுடன், சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். இச்சந்திப்புத் தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சினிமா மற்றும் அரசியல் தரப்புகளில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
கமல்ஹாசன் தயாரிப்பில் 'தலைவர் 173' : அதிரடிப் பாடலுடன் விரைவில் தொடங்குகிறது படப்பிடிப்பு!

கமல்ஹாசன் தயாரிப்பில் 'தலைவர் 173' : அதிரடிப் பாடலுடன் விரைவில் தொடங்குகிறது படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தின் ('தலைவர் 173') படப்பிடிப்பு, ரஜினிக்கான சிறப்பு அதிரடிப் பாடல் காட்சியுடன் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகநாயகன் கமல்ஹாசனின் 'ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது. சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, ரஜினிகாந்தின் பிரம்மாண்ட ஓப்பனிங் பாடலுடன் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு அதிரடிப் பாடலுக்குப் பிரபல நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் நடனம் அமைக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தரப்புகள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தின் முறையான படப்பிடிப்புப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு ஆளுமைகளின் கூட்டணியில் இத்திரைப்படம் உருவாவதால், கோலிவுட் தரப்புகளில் தற்போதே பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

விபரங்களுக்கு
ரவி மோகன் - மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

ரவி மோகன் - மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிள்ளைகளின் கல்வி செலவிற்காக இடைக்கால ஜீவனாம்சமாக மாதம் (இந்திய மதிப்பில்) ரூ.40 லட்சம் வழங்க வேண்டும் எனக் கோரி அவரது மனைவி ஆர்த்தி தாக்கல் செய்திருந்த மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில், ஆர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி ரவி மோகன் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ரவி மோகனின் கோரிக்கையை ஏற்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////