Video of the Day
Latest TV News Bulletin
Most Top News
International News

ட்ரம்பின் பேச்சை வைத்து கோடிகளில் பந்தயம்: 172,000 டொலருக்கும் அதிகமான அபராதம் !

International 30 August 2026
ட்ரம்பின் பேச்சை வைத்து கோடிகளில் பந்தயம்: 172,000 டொலருக்கும் அதிகமான அபராதம் !

சேறும் சகதியுமாக மாறிவரும் இமயமலை எல்லைப் பகுதி : உயர் எச்சரிக்கையில் நேபாளம் !

International 30 August 2026
சேறும் சகதியுமாக மாறிவரும் இமயமலை எல்லைப் பகுதி : உயர் எச்சரிக்கையில் நேபாளம் !

நப்லூஸில் தொடரும் பதற்றம்: மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு பாலஸ்தீனியர்கள் முற்றுகை!

International 30 August 2026
நப்லூஸில் தொடரும் பதற்றம்: மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு பாலஸ்தீனியர்கள் முற்றுகை!

ஐஸ்லாந்தில் பரபரப்பான கட்டத்தை எட்டிய பொதுவாக்கெடுப்பு :ஐரோப்பிய ஒன்றிய இணைப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா?

International 30 August 2026
ஐஸ்லாந்தில் பரபரப்பான கட்டத்தை எட்டிய பொதுவாக்கெடுப்பு :ஐரோப்பிய ஒன்றிய இணைப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா?

இரவோடு இரவாக வெடித்து சிதறிய ஆயுதக்கிடங்கு : 37 பேர் உடலங்கள் மீட்பு 50 வீடுகள் தரைமட்டம்!

International 30 August 2026
இரவோடு இரவாக வெடித்து சிதறிய ஆயுதக்கிடங்கு : 37 பேர் உடலங்கள் மீட்பு 50 வீடுகள் தரைமட்டம்!

மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்தது தமிழக அரசு!

International 29 August 2026
மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்தது தமிழக அரசு!

நேபாள வெள்ளப்பெருக்கு: வெள்ளத்திற்கு இடையே உறுதியாக நின்ற பச்சை நிற வீடு !

International 29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு:  வெள்ளத்திற்கு இடையே உறுதியாக நின்ற பச்சை நிற வீடு !

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கித் தப்பிய தமிழகப் பயணிகளின் திகிலூட்டும் கண்ணீர் வாக்குமூலம்!

International 29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கித் தப்பிய தமிழகப் பயணிகளின் திகிலூட்டும் கண்ணீர் வாக்குமூலம்!

34 வயதில் காலமானார் உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நியாம்பா: உகாண்டாவில் சோகம்!

International 29 August 2026
34 வயதில் காலமானார் உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நியாம்பா: உகாண்டாவில் சோகம்!

உயிரியல் ரீதியாகத் தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அவுஸ்திரேலியப் பெண்!

International 29 August 2026
உயிரியல் ரீதியாகத் தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அவுஸ்திரேலியப் பெண்!

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 12,921 இடங்களில் தீவிர கண்காணிப்பு: 'சிங்கப்பெண்' சிறப்புப் படை ரோந்து தீவிரம்!

International 29 August 2026
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 12,921 இடங்களில் தீவிர கண்காணிப்பு: 'சிங்கப்பெண்' சிறப்புப் படை ரோந்து தீவிரம்!

நேபாள வெள்ளப்பெருக்கு – இந்திய ஆற்றில் மிதந்து வந்த உடலங்கள்

International 29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு – இந்திய ஆற்றில் மிதந்து வந்த உடலங்கள்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' மாநில ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : முன்னாள் நிதியமைச்சர் கூற்று!

International 29 August 2026
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' மாநில ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : முன்னாள் நிதியமைச்சர் கூற்று!

திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிரடி மாற்றங்கள் – உதயநிதியின் கைகளுக்குச் செல்லும் அதிகாரங்கள்?

International 29 August 2026
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிரடி மாற்றங்கள் – உதயநிதியின் கைகளுக்குச் செல்லும் அதிகாரங்கள்?

வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு

International 29 August 2026
வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு
More News
General29 August 2026

ஐ.நா எழுப்பிய கவலைகளுக்கு இலங்கை பதில்!

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் சட்டமூலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் எழுப்பிய கவலைகளுக்கு இலங்கை அரசு விளக்கமளித்துள்ளது.அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின்படி, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 இல் இருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இல் இருந்து 65 ஆகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன், பிரதம நீதியரசர் தனது 67வது வயதிலோ அல்லது நீதியரசராக நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து 6 ஆண்டுகள் பூர்த்தியடையும் போதோ ஓய்வுபெறுவார். அதேநேரம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 19 இல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.அதேவேளை, நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூலம் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இல் இருந்து 63 ஆக உயர்த்தப்படுவதோடு, ஏனைய நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் கட்டாய ஓய்வுபெறும் வயது 62 ஆக நிர்ணயிக்கப்படவுள்ளது. மேலும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 110 இல் இருந்து 120 ஆக அதிகரிக்கப்படும். இவ்விரு சட்டமூலங்களும் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டன.முன்னதாக, நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் குறித்த ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் அனுப்பிய கடிதத்தில், பதவி வகிக்கும் நீதிபதிகளுக்கு இம்மாற்றங்களைப் பயன்படுத்துவது நீதித்துறை சுதந்திரம் மற்றும் அதிகாரப் பகிர்வைப் பாதிக்கும் எனக் கவலை வெளியிட்டிருந்தார்.இதற்குப் பதிலளித்துள்ள அரசாங்கம், குறிப்பிட்ட சில நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்கும் நோக்கத்திலோ அல்லது நீதித்துறையின் அமைப்பை உடனடியாக மாற்றும் நோக்கத்திலோ இந்தச் சட்டமூலங்கள் கொண்டுவரப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் நிலையில், அனுபவமிக்க நீதிபதிகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்காகவே தற்போதைய நீதிபதிகளுக்கும் ஓய்வுபெறும் வயது உயர்வு பொருந்தும் வகையில் செய்யப்பட்டுள்ளதாக அரசு நியாயப்படுத்தியுள்ளது.இந்த மாற்றங்கள் மூலம் நிறைவேற்று அதிகாரம் நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்பதால், இது சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளுக்கு உட்பட்டே அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதனிடையே, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்தச் சட்டமூலங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அரசாங்கம், உயர் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, நீதித்துறை சுதந்திரத்தைப் பேணத் தொடர்ந்து உறுதியளிப்பதாகவும் ஐ.நா.விடம் குறிப்பிட்டுள்ளது.

விபரங்களுக்கு
ஐ.நா எழுப்பிய கவலைகளுக்கு இலங்கை பதில்!
General29 August 2026

எல் நினோவின் தாக்கம் – செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்படலாம்

இலங்கையில் வளிமண்டலத்தின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி எஸ். அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார். ‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தற்போது இலங்கையில் தென்மேற்கு பருவக்காற்று நிலவி வருகின்ற போதிலும், அதன் தாக்கம் காரணமாக வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளில் மட்டுமே மழைப்பொழிவு கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, வழக்கமாக வடகிழக்குப் பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு மாறாக, இம்முறை அந்தப் பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணிகளாக உள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.புவி வெப்பமடைதலின் பின்னணியில் எல் நினோ (El Niño) போன்ற காலநிலை காரணிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக வழக்கமாக மிதமான வெப்பநிலை நிலவ வேண்டிய காலப்பகுதிகளிலும் 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையான அதிக வெப்பநிலை பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனால் நீர்நிலைகள் வற்றுவதுடன், விலங்குகள் மற்றும் விவசாயத் துறையும் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும், எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடிக்கடி காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகி, அவை வலுப்பெற்று சூறாவளி மற்றும் கனமழைக்கு வழிவகுக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
எல் நினோவின் தாக்கம் – செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்படலாம்
General29 August 2026

ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரொட்டி, பரோட்டா மற்றும் சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிப்பின் தாக்கத்தை கருத்திற்கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, இன்று நள்ளிரவு முதல் குறித்த உணவுப் பொருட்களின் புதிய விலைகள் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு
General29 August 2026

கொழும்பு துறைமுகத்தின் பாரிய வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கொள்கலன் கையாளுதலில் 11.9 சதவீத வளர்ச்சியை கொழும்பு துறைமுகம் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், கொழும்பு துறைமுகம் (Port of Colombo) உலகின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களின் தரவரிசையில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அல்பலீனர் என்ற தரவுத்தளம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கொழும்பு துறைமுகம் 4,444,034 இருபது அடி சமமான அலகுகளை கையாண்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 3,972,053 அலகுகளாக இருந்தது. இது 11.9% வீத வளர்ச்சியாகும். இதன்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளவில் 26 வது இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், தற்போது 20 வது இடத்திற்கு முன்னேறி குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மையப் பகுதி: கிழக்கு ஆசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் ஒரு முக்கிய கப்பல் போக்குவரத்து மையமாக (transshipment hub) கொழும்பு துறைமுகம் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
கொழும்பு துறைமுகத்தின் பாரிய வளர்ச்சி
General28 August 2026

கொழும்பு துறைமுக நகரில் சீன நபர் உயிரிழந்த சம்பவம்: சீகிரியாவில் பதுங்கியிருந்த மேலும் இரு சீனர்கள் கைது

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவரை கடத்திச் சென்று உயிரைப் பறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சீன நாட்டவர்கள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) சீகிரியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் சீன நாட்டின் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் பின்னர், சீன நாட்டவர் ஒருவர் பலவந்தமாக கடத்தப்பட்டதுடன், பின்னர் அவரது உடலம் எஹலியகொட பகுதியில் உள்ள வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதுடன் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருந்த ஏனைய சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டனர். இதற்கமைய, சீகிரியா பகுதியில் பதுங்கியிருந்த வேளை கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சீன நாட்டவர்களிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர்

விபரங்களுக்கு
கொழும்பு துறைமுக நகரில் சீன நபர் உயிரிழந்த சம்பவம்: சீகிரியாவில் பதுங்கியிருந்த மேலும் இரு சீனர்கள் கைது
International News

ட்ரம்பின் பேச்சை வைத்து கோடிகளில் பந்தயம்: 172,000 டொலருக்கும் அதிகமான அபராதம் !

International 30 August 2026
ட்ரம்பின் பேச்சை வைத்து கோடிகளில் பந்தயம்: 172,000 டொலருக்கும் அதிகமான அபராதம் !

சேறும் சகதியுமாக மாறிவரும் இமயமலை எல்லைப் பகுதி : உயர் எச்சரிக்கையில் நேபாளம் !

International 30 August 2026
சேறும் சகதியுமாக மாறிவரும் இமயமலை எல்லைப் பகுதி : உயர் எச்சரிக்கையில் நேபாளம் !

நப்லூஸில் தொடரும் பதற்றம்: மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு பாலஸ்தீனியர்கள் முற்றுகை!

International 30 August 2026
நப்லூஸில் தொடரும் பதற்றம்: மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு பாலஸ்தீனியர்கள் முற்றுகை!

ஐஸ்லாந்தில் பரபரப்பான கட்டத்தை எட்டிய பொதுவாக்கெடுப்பு :ஐரோப்பிய ஒன்றிய இணைப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா?

International 30 August 2026
ஐஸ்லாந்தில் பரபரப்பான கட்டத்தை எட்டிய பொதுவாக்கெடுப்பு :ஐரோப்பிய ஒன்றிய இணைப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா?

இரவோடு இரவாக வெடித்து சிதறிய ஆயுதக்கிடங்கு : 37 பேர் உடலங்கள் மீட்பு 50 வீடுகள் தரைமட்டம்!

International 30 August 2026
இரவோடு இரவாக வெடித்து சிதறிய ஆயுதக்கிடங்கு : 37 பேர் உடலங்கள் மீட்பு 50 வீடுகள் தரைமட்டம்!

மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்தது தமிழக அரசு!

International 29 August 2026
மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்தது தமிழக அரசு!

நேபாள வெள்ளப்பெருக்கு: வெள்ளத்திற்கு இடையே உறுதியாக நின்ற பச்சை நிற வீடு !

International 29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு:  வெள்ளத்திற்கு இடையே உறுதியாக நின்ற பச்சை நிற வீடு !

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கித் தப்பிய தமிழகப் பயணிகளின் திகிலூட்டும் கண்ணீர் வாக்குமூலம்!

International 29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கித் தப்பிய தமிழகப் பயணிகளின் திகிலூட்டும் கண்ணீர் வாக்குமூலம்!

34 வயதில் காலமானார் உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நியாம்பா: உகாண்டாவில் சோகம்!

International 29 August 2026
34 வயதில் காலமானார் உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நியாம்பா: உகாண்டாவில் சோகம்!

உயிரியல் ரீதியாகத் தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அவுஸ்திரேலியப் பெண்!

International 29 August 2026
உயிரியல் ரீதியாகத் தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அவுஸ்திரேலியப் பெண்!

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 12,921 இடங்களில் தீவிர கண்காணிப்பு: 'சிங்கப்பெண்' சிறப்புப் படை ரோந்து தீவிரம்!

International 29 August 2026
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 12,921 இடங்களில் தீவிர கண்காணிப்பு: 'சிங்கப்பெண்' சிறப்புப் படை ரோந்து தீவிரம்!

நேபாள வெள்ளப்பெருக்கு – இந்திய ஆற்றில் மிதந்து வந்த உடலங்கள்

International 29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு – இந்திய ஆற்றில் மிதந்து வந்த உடலங்கள்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' மாநில ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : முன்னாள் நிதியமைச்சர் கூற்று!

International 29 August 2026
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' மாநில ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : முன்னாள் நிதியமைச்சர் கூற்று!

திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிரடி மாற்றங்கள் – உதயநிதியின் கைகளுக்குச் செல்லும் அதிகாரங்கள்?

International 29 August 2026
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிரடி மாற்றங்கள் – உதயநிதியின் கைகளுக்குச் செல்லும் அதிகாரங்கள்?

வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு

International 29 August 2026
வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு
Sports Stories
Explore More
கிராண்ட் செஸ் தொடர் : இறுதிப்போட்டியை வென்று வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

கிராண்ட் செஸ் தொடர் : இறுதிப்போட்டியை வென்று வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற ‘கிராண்ட் செஸ் டூர் ’ தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் பிரபல வீரர் பேபியானோ கருவானாவை (Fabiano Caruana)எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, கிளாசிக்கல் சுற்றுகளின் முடிவில் 3-9 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கியிருந்தார். இருப்பினும், அடுத்து நடைபெற்ற ரேபிட் சுற்றில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அபார மீள்வருகை தந்தார். இந்த நிலையில் நடைபெற்ற பிளிட்ஸ் சுற்றுகளின் முடிவில் 15-13 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ‘கிராண்ட் செஸ் டூர்’ பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். செம்பியன் பட்டம் வென்ற அவருக்கு பரிசுத் தொகையாக சுமார் ரூ.1.68 கோடி கிடைத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
கிரிக்கெட்டில் அரசியல் சர்ச்சை - பதிலளிக்கத் திணறிய பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்!

கிரிக்கெட்டில் அரசியல் சர்ச்சை - பதிலளிக்கத் திணறிய பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்!

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சர்ஃபராஸ் அஹமட் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார்.பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் மகன்களான சுலைமான் மற்றும் காசிம் ஆகியோரை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் அதர்டன் 'ஸ்கை ஸ்போர்ட்ஸ்' ஊடகத்திற்காக நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் போட்டி இடைவேளையின் போது ஒளிபரப்பப்பட்டமைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.இந்தநிலையில், இரண்டாம் நாள் ஆட்டநிறைவின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது என்றும், தான் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் சர்ஃபராஸ் அஹமட் தெரிவித்தார்.மேலும், நேர்காணல் ஒளிபரப்பப்பட்டால் பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்க மாட்டார்கள் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா எனச் செய்தியாளர் கேள்வி கேட்டு முடிப்பதற்குள்ளேயே, அதனை அவர் அவசரமாக மறுத்தார். அந்த நேரத்தில் உணவருந்திக் கொண்டிருந்ததால் தங்களுக்கு நேர்காணல் பற்றி எதுவுமே தெரியாது எனக் கூறி அவர் அந்த விவகாரத்தைத் தவிர்க்க முயன்றார்.இம்ரான் கானின் மகன்கள் இந்த நேர்காணலில் சிறையில் உள்ள தமது தந்தையின் பாதுகாப்பு குறித்துப் பேசியிருந்தனர். இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக அச்சுறுத்தியபோதிலும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் அந்த நேர்காணலைத் திட்டமிட்டபடி ஒளிபரப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.அரசியல் ரீதியான இந்த விவகாரத்தில் செய்தியாளர் சந்திப்பில் சர்ஃபராஸ் அஹமட் நிலைகுலைந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
லஹிரு குமாரவுக்கு அனுமதி - துனித் வெல்லாலகேவுக்கு மறுப்பு!

லஹிரு குமாரவுக்கு அனுமதி - துனித் வெல்லாலகேவுக்கு மறுப்பு!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார, கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் 'டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்' (Trinbago Knight Riders) அணிக்காக விளையாடுவதற்காகக் கரீபியன் தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து, அவர் இந்த லீக் தொடரில் இணைவதற்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.இதனிடையே, இங்கிலாந்தின் 'ஹாம்ப்ஷயர்' (Hampshire) கவுண்டி அணிக்காகச் சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாடவிருந்த இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லாலகேவுக்கு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்க மறுத்துள்ளது.2026–2027 பருவகாலத்திற்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள வெல்லாலகேவுக்கு தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டதற்கான துல்லியமான காரணம் வெளியாகவில்லை. தடையில்லா சான்றிதழ் கிடைக்காததைத் தொடர்ந்து, ஹாம்ப்ஷயர் அணியில் வெளிநாட்டு வீரராக இணைவதற்கான அவரது வாய்ப்பு கைநழுவியுள்ளது.

விபரங்களுக்கு
முடிவுக்கு வரும் எதிர்பார்ப்பு: சென்னை அணியின் அடுத்த பயிற்றுவிப்பாளர் யார்? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

முடிவுக்கு வரும் எதிர்பார்ப்பு: சென்னை அணியின் அடுத்த பயிற்றுவிப்பாளர் யார்? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடந்த 18 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த ஸ்டீபன் பிளமிங், அந்தப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.இதனைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஏற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.குறிப்பாக, அணியின் முன்னாள் வீரரும் ஆலோசகருமான மகேந்திர சிங் தோனியுடன் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய அனுபவமுள்ள ஒருவரை பயிற்றுவிப்பாளர் பொறுப்புக்கு நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த வகையில், முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் மைக் ஹசி மற்றும் முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.கடந்த சில மாதங்களாக சிஎஸ்கே அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் யார் என்பது தொடர்பாகப் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செப்டம்பர் 20ஆம் திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனினும், புதிய பயிற்றுவிப்பாளர் குறித்த இறுதி முடிவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

விபரங்களுக்கு
திருநங்கை கிரிக்கெட் வீரர் அனயா பங்கருக்கு அவுஸ்திரேலியாவின் அங்கீகாரம் : எதிர்ப்பு தெரிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை!

திருநங்கை கிரிக்கெட் வீரர் அனயா பங்கருக்கு அவுஸ்திரேலியாவின் அங்கீகாரம் : எதிர்ப்பு தெரிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை!

திருநங்கை கிரிக்கெட் வீரரான அனயா பங்கருக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளதை, தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனை மரிசான் கப் கடுமையாக விமர்சித்துள்ளார். மகளிர் பிக்பேஷ் லீக் (WBBL) தொடரில் அனயா பங்கர் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியான பதிவுக்கு பதிலளித்துள்ள மரிசான் கப், "இது முற்றிலும் அபத்தமானது, இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரின் மகளான அனயா பங்கர், அவுஸ்திரேலியாவில் உள்ள மகளிர் உள்ளூர் மற்றும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் உடனடியாக விளையாட கிரிக்கெட் அவுஸ்திரேலியாவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கொள்கையின்படி, திருநங்கைகள் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி இல்லை. இருப்பினும், கிரிக்கெட் அவுஸ்திரேலியா தனது உள்நாட்டுப் போட்டிகளுக்காகத் தனித்துவமான கொள்கையைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
62 ஆவது பிறந்தநாளில் 62 புடவைகளைப் பரிசளித்து நடிகை நளினியை நெகிழ வைத்த சகோதரன்!

62 ஆவது பிறந்தநாளில் 62 புடவைகளைப் பரிசளித்து நடிகை நளினியை நெகிழ வைத்த சகோதரன்!

பிரபல தென்னிந்திய நடிகை நளினியின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அமெரிக்காவில் வசிக்கும் அவரது தம்பி கார்த்திக் ஸ்வாமி அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் 62 புடவைகளைப் பரிசளித்துள்ளார்.புடவைகள் (Saree) மீது மிகுந்த விருப்பம் கொண்ட நளினிக்கு, அவரது தம்பி, ஆச்சரியமூட்டும் வகையில் அமெரிக்காவிலிருந்து வருகை தந்து, தூக்கத்திலிருந்து எழுப்பி இந்த 62 புடவைகளையும் பரிசாக வழங்கியுள்ளார். நளினியைச் சுற்றிப் புடவைகள் குவிக்கப்பட்டு அவர் நெகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தம்பி அளித்த இந்த மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு மற்றும் அன்பு குறித்து நடிகை நளினி மிகுந்த மகிழ்ச்சியுடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விபரங்களுக்கு
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியானது!

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியானது!

‘பிரேமலு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில், நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.இந்தப் படத்தில் ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21 ஆம் திகதி மலையாளத்தில் வெளியான காதல் மற்றும் நகைச்சுவை சார்ந்த இந்தத் திரைப்படம், உலகளவில் 8 நாட்களில் ரூ.72 கோடி வசூலித்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. விரைவில் ரூ.100 கோடி வசூல் சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி தமிழில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விபரங்களுக்கு
“டைட்டானிக்” திரைப்பட சாதனையை முறியடித்தது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' : உலக அளவில் 4 ஆவது அதிக வசூல் சாதனை!

“டைட்டானிக்” திரைப்பட சாதனையை முறியடித்தது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' : உலக அளவில் 4 ஆவது அதிக வசூல் சாதனை!

ஹோலிவுட் நடிகர் டொம் ஹாலண்ட் (Tom Halland) நடிப்பில் வெளியான ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) திரைப்படம், உலகளாவிய பொக்ஸ் ஓப்பீஸ் வசூலில் ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற திரைப்படமான'டைட்டானிக்' கின் (Titanic) சாதனையை முறியடித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் 4 ஆவது இடத்தைப் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளது. டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் (Destin Daniel Cretton) இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம், உலக அளவில் இதுவரை சுமார் 2.3 பில்லியன் டொலருக்கு (230 கோடி டொலர்) மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 1997-இல் வெளியான 'டைட்டானிக்' படத்தின் 2.26 பில்லியன் டொலர் வசூல் சாதனையை இந்தத் திரைப்படம் வெற்றிகரமாகக் கடந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இந்தத் திரைப்படம் 858 மில்லியன் டொலருக்கும் அதிகமாக வசூலித்து, 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' (Avengers : Endgame) திரைப்படத்தின் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று படைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது உலக அளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் 'அவதார்' (Avatar), 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' (Avengers: Endgame) மற்றும் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' (Avatar: The Way of Water) ஆகிய மூன்று திரைப்படங்கள் மட்டுமே 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்திற்கு முன்னிலையில் உள்ளன.

விபரங்களுக்கு
அந்தப் பாடலில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நான்தான்!

அந்தப் பாடலில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நான்தான்!" - பூர்ணா உற்சாக நேர்காணல்!

படையப்பா' படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நானே ரஜினிகாந்துடன் நடனமாடுவதாகக் கற்பனை செய்துகொண்டதாக நடிகை ஷாம்னா காசிம் (பூர்ணா) அண்மையில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். சிறுவயதிலிருந்தே நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகையான தான், 'படையப்பா' படத்தில் இடம்பெற்ற 'மின்சார கண்ணா' பாடலை மிகவும் ரசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பாடலில் ரம்யா கிருஷ்ணனுக்குப் பதிலாகத் தானே ரஜினியுடன் நடனமாடுவதாகக் கற்பனை செய்துகொண்டதாகவும், தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான 'அலா பொலேலோ' பாடலை தனக்காகத் தானே உருவாக்கிக்கொண்டதாக நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
தொடரும் வெற்றி அலை : மமிதா பைஜூவுக்கு ஹட்ரிக் சாதனை – ஒரே ஆண்டில் மூன்று ரூ.100 கோடி வசூல் படங்கள்

தொடரும் வெற்றி அலை : மமிதா பைஜூவுக்கு ஹட்ரிக் சாதனை – ஒரே ஆண்டில் மூன்று ரூ.100 கோடி வசூல் படங்கள்

இந்த ஆண்டில் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ மற்றும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய இரு திரைப்படங்களும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளன. இந்நிலையில், அண்மையில் வெளியான மலையாளத் திரைப்படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூல் இலக்கை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரே ஆண்டில் மமிதா பைஜூ நடிப்பில் வெளியான மூன்று திரைப்படங்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஒரே ஆண்டில் மூன்று ரூ.100 கோடி வசூல் திரைப்படங்களில் இடம்பெற்ற நடிகை என்ற ஹட்ரிக் சாதனையை மமிதா பைஜூ படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விபரங்களுக்கு

"அந்தக் காட்சி எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது" : விஜய் குறித்து பகிரங்கமாகப் பேசிய நடிகை விஜயலட்சுமி!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ள விஜயலட்சுமி, விஜய்யின் நடிப்பு வழக்கம்போல சிறப்பாக இருந்ததாக பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக, திரைப்படத்தில் விஜய் தனது குழந்தையிடம் “தைரியமா இரு விஜிமா” எனக் கூறும் காட்சி தனக்கு ஆறுதல் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திரைப்படத்தில் பெண்களுக்கு ஆதரவாக இடம்பெற்றுள்ள கருத்துகள் மற்றும் காட்சிகளையும் விஜயலட்சுமி வெகுவாக பாராட்டியுள்ளார். இதனிடையே, ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தபோது இடம்பெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இருவரின் பெயரும் ‘விஜி’ என்பதால் படப்பிடிப்புத் தளத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். அத்துடன், அரசியல் பயணத்தை முன்னெடுத்து வரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜயலட்சுமி, வாய்ப்பு கிடைத்தால் அவரது கட்சியில் இணைவதற்கும் தயாராக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி : காணொளியை வெளியிட்டு ரசிகர்களை எச்சரித்த நடிகை சமந்தா!

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி : காணொளியை வெளியிட்டு ரசிகர்களை எச்சரித்த நடிகை சமந்தா!

கர்ப்ப காலத்திலும் மருத்துவரின் ஆலோசனையுடன் உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் நடிகை சமந்தா, அது தொடர்பான காணொளியொன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளியில், கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது தொடர்பான தனது அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதேவேளை, தான் மேற்கொள்ளும் பயிற்சிகளை மற்றவர்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம் எனவும் அவர் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள விரும்புவோர், தங்களது மருத்துவர் மற்றும் தகுதியான பயிற்சியாளரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே அவற்றை மேற்கொள்ள வேண்டும் என சமந்தா வலியுறுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
காதலைச் சொல்ல இப்படியொரு பிரம்மாண்டமா? - இணையத்தை அதிரவிட்ட யூடியூபர்!

காதலைச் சொல்ல இப்படியொரு பிரம்மாண்டமா? - இணையத்தை அதிரவிட்ட யூடியூபர்!

கன்னடத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் பிரம்மாண்டமான பூங்கொத்தை உருவாக்கி தனது காதலிக்கு மிக வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.அவரது இந்த பிரம்மாண்டமான காதல் வெளிப்படுத்தல் நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தி பேசுபொருளாகியுள்ளது.இந்தச் சிறப்புமிக்க தருணத்திற்காக 40,000 முதல் 45,000 வரை புதிய மலர்களைக் கொண்டு இராட்சத அளவில் இந்த பிரம்மாண்ட பூங்கொத்து தயாரிக்கப்பட்டுள்ளது.ஒரு மலரின் சராசரி விலை ரூ.20 என கணக்கிடப்பட்டால், இந்த பிரம்மாண்ட பூங்கொத்து தயாரிப்பதற்கான மலர்களின் செலவு மட்டும் சுமார் ரூ.9 இலட்சத்தை (இந்திய ரூபாவில்) எட்டும் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இருப்பினும், போக்குவரத்து மற்றும் தொழிலாளர் செலவுகளைப் பொறுத்து இதன் இறுதி மதிப்பு மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலை வெளிப்படுத்த இது ஒரு அதிநவீன மற்றும் பிரம்மாண்டமான வழியா அல்லது சமூக வலைதள விளம்பர உத்தியா என இணையவாசிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த வித்தியாசமான முயற்சி பலரையும் ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////