Top Story
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சையில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் தோற்றவுள்ளனர்.

குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் கடந்த 5ஆம் திகதி நள்ளிரவுடன் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பரீட்சை மையங்களுக்குள் பெற்றோர்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் தங்களது மன ஒருமைப்பாட்டைப் பேணவும், எவ்வித பதற்றமுமின்றி பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் வசதியாக, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாகவே, பரீட்சை மையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாளை காலை 9:30 முதல் 10:45 வரை இரண்டாம் பகுதி (Paper II) வினாத்தாளுக்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து வழங்கப்படும் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11:15 முதல் நண்பகல் 12:15 வரை முதலாம் பகுதி (Paper I) வினாத்தாளுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்படும்.

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து பரீட்சார்த்திகளும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை கவனமாகப் படித்து, தங்களது சுட்டெண்ணை துல்லியமாக எழுதுவதுடன், வினாத்தாளிலேயே தெளிவான கையெழுத்தில் பதில்களை நேரடியாக எழுத வேண்டும் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், பரீட்சை மண்டபத்தினுள் கைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது வேறு எந்த இலத்திரனியல் சாதனங்களையும் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏதேனும் அசாதாரண அல்லது அனர்த்த சூழ்நிலைகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, 0113 - 66 81 19, 0113 - 66 80 26, 0113 - 66 80 32 மற்றும் 0113 - 66 80 87 ஆகிய இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபரங்களுக்கு
General08 August 2026
நாளை இடம்பெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
International News

பாகிஸ்தானில் கடுமையாக உயரும் பொருட்கள் விலை: அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்

International 08 August 2026
பாகிஸ்தானில் கடுமையாக உயரும் பொருட்கள் விலை: அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்

தமிழகத்தில் கோயில்களுக்குள் கைபேசிகளுக்கு தடை: செப்டம்பர் 1 முதல் சட்ட நடவடிக்கை!

International 08 August 2026
தமிழகத்தில் கோயில்களுக்குள் கைபேசிகளுக்கு தடை: செப்டம்பர் 1 முதல் சட்ட நடவடிக்கை!

பிரித்தானியாவில் வீணடிக்கப்படும் மருந்துகளால் 75 நீச்சல் தடாகங்களை நிரப்ப முடியும் என அதிர்ச்சித் தகவல்!

International 08 August 2026
பிரித்தானியாவில் வீணடிக்கப்படும் மருந்துகளால் 75 நீச்சல் தடாகங்களை நிரப்ப முடியும் என அதிர்ச்சித் தகவல்!

ஜப்பானின் ஒகினாவாவைத் தாக்கியது 'டொல்பின்': துறைமுகங்களை மூடியது சீனா: போக்குவரத்தும் முடக்கம்!

International 08 August 2026
ஜப்பானின் ஒகினாவாவைத் தாக்கியது 'டொல்பின்': துறைமுகங்களை மூடியது சீனா: போக்குவரத்தும் முடக்கம்!

முதலமைச்சர் விவகாரத்தில் சமரசமா? மன்னிப்பு கேட்ட மார்க்கண்டேயன்!

International 08 August 2026
முதலமைச்சர் விவகாரத்தில் சமரசமா? மன்னிப்பு கேட்ட மார்க்கண்டேயன்!

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

International 08 August 2026
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

உள்நாட்டில் ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு: வெள்ளை மாளிகை மண்டபக் கட்டுமானத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

International 08 August 2026
உள்நாட்டில் ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு: வெள்ளை மாளிகை மண்டபக் கட்டுமானத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

ஃபிஃபா தலைவரின் சொகுசு வாழ்க்கை: ட்ரம்ப் உடனான நெருக்கமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

International 08 August 2026
ஃபிஃபா தலைவரின் சொகுசு வாழ்க்கை: ட்ரம்ப் உடனான நெருக்கமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

ஸ்பெயின் - இத்தாலி இடையே எல்லைக் கட்டுப்பாடுகள் தீவிரமடைகின்றன

International 08 August 2026
ஸ்பெயின் - இத்தாலி இடையே எல்லைக் கட்டுப்பாடுகள் தீவிரமடைகின்றன

இறுதி நாட்களில் டியாகோ மரடோனா மரணத்தை ஏற்கத் துணிந்தவராக செயற்பட்டார்.

International 08 August 2026
இறுதி நாட்களில் டியாகோ மரடோனா மரணத்தை ஏற்கத் துணிந்தவராக செயற்பட்டார்.

2026 ஜூலையில் ரஷ்யாவுக்கு 42,800 இழப்புகள்: யுக்ரைன் தகவல்

International 08 August 2026
2026 ஜூலையில் ரஷ்யாவுக்கு 42,800 இழப்புகள்: யுக்ரைன் தகவல்

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு

International 07 August 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு

இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!

International 07 August 2026
இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!

விஜய் – சங்கீதா வழக்கில் பரபரப்பு: தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

International 07 August 2026
விஜய் – சங்கீதா வழக்கில் பரபரப்பு: தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

International 07 August 2026
 தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!
More News
General08 August 2026

இலங்கையில் உச்சத்தைத் தொட்ட டெங்கு!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவிலான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையாகும். அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இலங்கையில் உச்சத்தைத் தொட்ட டெங்கு!
General08 August 2026

LPL இறுதிப் போட்டி - காலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் குறித்த போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கெலன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜஃப்னா கிங்ஸ் அணியின் சார்பில் கமில் மிஷார அதிகபட்சமாக 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் காலி அணியின் சார்பில் சரித் அசலங்க மற்றும் ஈஷான் மலிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்தநிலையில் காலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
LPL இறுதிப் போட்டி - காலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
General08 August 2026

கோல்டன் குளோப் விருது வென்ற ஹொலிவுட் நடிகை ரொசமண்ட் பைக் இலங்கைக்கு விஜயம்

கோல்டன் குளோப் மற்றும் எம்மி விருதுகளை வென்ற பிரபல ஹொலிவுட் நடிகையும், 'கண்ணிவெடி ஆலோசனை குழுவின்' (Mines Advisory Group - MAG) தூதுவருமான ரொசமண்ட் பைக் (Rosamund Pike) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.கடந்த 17 ஆண்டுகளில் இலங்கையில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் வெற்றிகரமாக அகற்றப்பட்ட மைல்கல்லைக் குறிப்பதே இவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.தமது விஜயத்தின்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள கண்ணிவெடி அகற்றும் பகுதிகளுக்குச் சென்ற ரொசமண்ட் பைக், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட மக்களையும், விபத்துகளில் இருந்து உயிர்தப்பியவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.அத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட கண்ணிவெடி ஆபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் அவர் பங்கேற்றார்.இதனிடையே, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளார்.இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், கண்ணிவெடிகளற்ற நாடாக மாறுவதற்கான பாதையில் இலங்கை மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.கடந்த 17 ஆண்டுகளில் நாட்டில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.வருடாந்த கண்ணிவெடி விபத்துகளின் எண்ணிக்கை 250 இலிருந்து 2024 ஆம் ஆண்டளவில் 3 ஆகக் குறைவடைந்துள்ளது.இந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளின் மூலம் இடம்பெயர்ந்த சுமார் ஒரு மில்லியன் மக்கள் மீண்டும் தங்களது சொந்த வீடுகளுக்குச் சென்று பாதுகாப்பாக வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபரங்களுக்கு
கோல்டன் குளோப் விருது வென்ற ஹொலிவுட் நடிகை ரொசமண்ட் பைக் இலங்கைக்கு விஜயம்
General08 August 2026

எது நடந்தாலும் “இது நாமலின் வேலைதான்” என குற்றம்சாட்ட அரசாங்கம் முயல்கிறது!

தற்போதைய அரசாங்கம் அசம்பாவிதங்களுக்கு பொறுப்பேற்பதை விடுத்து, எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சுமத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.11,000 பேர் மட்டுமே இருக்கக்கூடிய இடவசதி கொண்ட சிறைச்சாலைகளில் 45,000 பேர் வரை அடைக்கப்படும்போது அங்கு பாரிய நெருக்கடியும் அசௌகரியங்களும் ஏற்படுகின்றன. கடந்த பாதீட்டின்போது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு சிறைச்சாலைகளுக்கான அடிப்படை கழிப்பறை வசதிகளைக்கூட அரசாங்கம் சரிவர அமைத்துத்தரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் அல்லது சம்பவங்கள் நிகழும் போது, அன்றைய காலகட்டத்தில் எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று, "நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் உயிருக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்" எனக் கூறியதாக நினைவுகூர்ந்தார்.ஆனால், இன்றைக்கு அவர்களே ஆட்சியில் இருக்கும்போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால், அதற்கான பொறுப்பை ஏற்காமல், "இது கண்டிப்பாக நாமலின் வேலைதான்" என்று எதிர்க்கட்சியினரைக் குற்றம் சாட்டுவதற்கே அரசாங்கம் முயல்கிறது."என்னைப் பார்த்தால் அரசாங்கத்துக்கு எப்படித் தெரிகிறது என்று தெரியவில்லை. இவர் பார்க்கத்தான் இப்படி இருக்கிறாரே தவிர, இவர்தான் பின்னணியில் இருந்து ஒட்டுமொத்த நாட்டையும் இயங்க வைக்கிறார் என்று ஜனாதிபதி நினைக்கிறாரா அல்லது முடிவுகளை எடுக்கிறாரா என்று தெரியவில்லை" என நகைச்சுவையான பாணியில் அரசாங்கத்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சாடினார்.

விபரங்களுக்கு
எது நடந்தாலும் “இது நாமலின் வேலைதான்” என குற்றம்சாட்ட அரசாங்கம் முயல்கிறது!
General08 August 2026

கொண்டைக்கடலைக்கு தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லி வாயுவை சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழப்பு

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. விவசாயியான மல்லேஷ், அறுவடை செய்து வீட்டிற்குள் வைத்திருந்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருப்பதற்காகப் பகல் நேரத்தில் பூச்சி கொல்லி தெளித்துள்ளார். அன்று இரவு, வீட்டின் அறைக்குள் காற்று புக முடியாத சூழலில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியிலிருந்து நச்சு வாயு மெதுவாக வெளியேறியுள்ளது. அறையிலிருந்த நச்சு வாயுவை அறியாமல் சுவாசித்தவிவசாயிகளின் மகள்கள் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். அறுவடை செய்த தானியங்களைப் பாதுகாப்பதாக நினைத்துச் செய்த செயல், பிள்ளைகளின் உயிரை பறித்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
கொண்டைக்கடலைக்கு தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லி வாயுவை சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழப்பு
International News

பாகிஸ்தானில் கடுமையாக உயரும் பொருட்கள் விலை: அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்

International 08 August 2026
பாகிஸ்தானில் கடுமையாக உயரும் பொருட்கள் விலை: அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்

தமிழகத்தில் கோயில்களுக்குள் கைபேசிகளுக்கு தடை: செப்டம்பர் 1 முதல் சட்ட நடவடிக்கை!

International 08 August 2026
தமிழகத்தில் கோயில்களுக்குள் கைபேசிகளுக்கு தடை: செப்டம்பர் 1 முதல் சட்ட நடவடிக்கை!

பிரித்தானியாவில் வீணடிக்கப்படும் மருந்துகளால் 75 நீச்சல் தடாகங்களை நிரப்ப முடியும் என அதிர்ச்சித் தகவல்!

International 08 August 2026
பிரித்தானியாவில் வீணடிக்கப்படும் மருந்துகளால் 75 நீச்சல் தடாகங்களை நிரப்ப முடியும் என அதிர்ச்சித் தகவல்!

ஜப்பானின் ஒகினாவாவைத் தாக்கியது 'டொல்பின்': துறைமுகங்களை மூடியது சீனா: போக்குவரத்தும் முடக்கம்!

International 08 August 2026
ஜப்பானின் ஒகினாவாவைத் தாக்கியது 'டொல்பின்': துறைமுகங்களை மூடியது சீனா: போக்குவரத்தும் முடக்கம்!

முதலமைச்சர் விவகாரத்தில் சமரசமா? மன்னிப்பு கேட்ட மார்க்கண்டேயன்!

International 08 August 2026
முதலமைச்சர் விவகாரத்தில் சமரசமா? மன்னிப்பு கேட்ட மார்க்கண்டேயன்!

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

International 08 August 2026
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

உள்நாட்டில் ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு: வெள்ளை மாளிகை மண்டபக் கட்டுமானத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

International 08 August 2026
உள்நாட்டில் ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு: வெள்ளை மாளிகை மண்டபக் கட்டுமானத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

ஃபிஃபா தலைவரின் சொகுசு வாழ்க்கை: ட்ரம்ப் உடனான நெருக்கமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

International 08 August 2026
ஃபிஃபா தலைவரின் சொகுசு வாழ்க்கை: ட்ரம்ப் உடனான நெருக்கமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

ஸ்பெயின் - இத்தாலி இடையே எல்லைக் கட்டுப்பாடுகள் தீவிரமடைகின்றன

International 08 August 2026
ஸ்பெயின் - இத்தாலி இடையே எல்லைக் கட்டுப்பாடுகள் தீவிரமடைகின்றன

இறுதி நாட்களில் டியாகோ மரடோனா மரணத்தை ஏற்கத் துணிந்தவராக செயற்பட்டார்.

International 08 August 2026
இறுதி நாட்களில் டியாகோ மரடோனா மரணத்தை ஏற்கத் துணிந்தவராக செயற்பட்டார்.

2026 ஜூலையில் ரஷ்யாவுக்கு 42,800 இழப்புகள்: யுக்ரைன் தகவல்

International 08 August 2026
2026 ஜூலையில் ரஷ்யாவுக்கு 42,800 இழப்புகள்: யுக்ரைன் தகவல்

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு

International 07 August 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு

இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!

International 07 August 2026
இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!

விஜய் – சங்கீதா வழக்கில் பரபரப்பு: தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

International 07 August 2026
விஜய் – சங்கீதா வழக்கில் பரபரப்பு: தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

International 07 August 2026
 தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!
Sports Stories
Explore More
இலங்கைத் தொடருக்காக சாய் சுதர்சனுக்குப் பதிலாக இருவர் பரிசீலனை!

இலங்கைத் தொடருக்காக சாய் சுதர்சனுக்குப் பதிலாக இருவர் பரிசீலனை!

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன் உபாதை காரணமாக விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் இன்னும் முழுமையாகக் குணமடையாத காரணத்தினாலேயே இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்தியக் செய்திகள் தெரிவிக்கின்றன.இதனைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) அல்லது ஷேக் ரஷீத் (Shaik Rasheed) ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணியில் சேர்க்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்ஃபராஸ் கான் ஏற்கனவே பெங்களூரிலுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மையத்தில் உடற்தகுதிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அதேவேளை, அண்மையில் இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட 21 வயதான ஷேக் ரஷீத்தையும் இந்தியத் தெரிவுக்குழு பரிசீலித்து வருகிறது.சாய் சுதர்சன் விலகியுள்ள நிலையில், தொடக்க ஆட்டத்திற்குப் பிந்தைய 3 ஆம் இலக்கத் துடுப்பாட்ட வரிசையில் தேவ்தத் படிக்கல் களம் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி காலமானார்!

கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி காலமானார்!

ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தையும், அவரது முகவருமான ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) தனது 68 ஆவது வயதில் காலமானார்.நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், ஆர்ஜென்டினாவின் ரொசாரியோ (Rosario) நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.லியோனல் மெஸ்ஸியின் மகத்தான கால்பந்து வாழ்க்கைக்குப் பின்னால் மிக முக்கிய தூணாக இருந்தவர் அவரது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி ஆவார்.சிறுவயதில் மெஸ்ஸி சந்தித்த வளர்ச்சி ஹோர்மோன் குறைபாட்டிற்கான சிகிச்சை செலவை ஏற்க அப்போதைய கால்பந்து கழகங்கள் முன்வராத போது, தைரியமாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்று மெஸ்ஸியின் திறமையை உலகிற்கு அடையாளம் காட்டிய பெருமை இவரையே சாரும்.கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி, பார்சிலோனா கழகத்தின் அப்போதைய விளையாட்டுப் பணிப்பாளர் கார்லஸ் ரெக்சாச்சுடன் (Carles Rexach) ஒரு பேப்பர் நெப்கினில் கைச்சாத்திடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமே மெஸ்ஸியை பார்சிலோனா கழகத்தின் மிகச்சிறந்த வீரராக மாற்ற வழிவகுத்தது.தன் தந்தையின் மறைவால் துயருற்றுள்ள லியோனல் மெஸ்ஸிக்கும், தாய் செசிலியா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
சக வீராங்கனையுடன் தொடர்பு: அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணைத் தலைவி மீது முன்னாள் மனைவி பகிரங்கக் குற்றச்சாட்டு!

சக வீராங்கனையுடன் தொடர்பு: அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணைத் தலைவி மீது முன்னாள் மனைவி பகிரங்கக் குற்றச்சாட்டு!

அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைத் தலைவி ஆஷ்லே கார்ட்னர் (Ashleigh Gardner) தனது சக வீராங்கனையுடன்  தொடர்பு வைத்திருந்ததாக அவரது முன்னாள் மனைவி மோனிகா ரைட் (Monica Wright) பகிரங்கக் குற்றம் சாட்டியுள்ளார்.அவுஸ்திரேலிய அணியின் துணைத் தலைவி ஆஷ்லே கார்ட்னரும், மோனிகா ரைட்டும் காதலித்து வந்த நிலையில், 2025 ஏப்ரல் மாதம் தன்பாலின திருமணம் செய்து கொண்டனர்.இருப்பினும், திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.ஆஷ்லே கார்ட்னர் தன்னை ஏமாற்றிவிட்டு, தனது சக வீராங்கனையான ஜார்ஜியா வோலுடன்( Georgia Voll) தொடர்பு வைத்திருந்தார் என மோனிகா ரைட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ஒரு நாட்டின் பிரதிநிதியாக இருப்பவர் தார்மீக நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஜூனியர் வீராங்கனையுடன் இத்தகைய முறையற்ற தொடர்பு வைத்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் இது குறித்து மௌனம் காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.ஆஷ்லே கார்ட்னர் மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியின் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகல்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகல்!

இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் துடுப்பாட்டக்காரரான சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி நகரில் தொடங்கவிருந்த நிலையிலேயே சாய் சுதர்சன் விலகியுள்ளார். இதேவேளை 3 ஆம் இடத்தில் களம் இறங்கும் துடுப்பாட்ட வீரர் விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக எந்த வீரரை களமிறக்குவது என்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. முன்னதாக இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவும் காயத்தால் விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவின் சாதனையை முறியடிப்பாரா மிட்செல் ஸ்டார்க்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவின் சாதனையை முறியடிப்பாரா மிட்செல் ஸ்டார்க்!

பங்களாதேஷ் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவின் விக்கெட் சாதனையை அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13 ஆம் திகதி டார்வின் நகரில் தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்டுகளுடன் சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 11-வது இடத்தில் உள்ளார். பங்களாதேஷ் தொடரில் மிட்செல் ஸ்டார்க் இன்னும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் கபில்தேவின் சாதனையை முறியடித்து அவரை விட முன்னேறுவார். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஷேன் வார்னே (708), நாதன் லயன் (567) மற்றும் கிளென் மெக்ராத் (563) ஆகியோருக்கு அடுத்தபடியாக மிட்செல் ஸ்டார்க் (433) 4-வது இடத்தில் உள்ளார்.

விபரங்களுக்கு
இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் மற்றும் LPL இறுதிப்போட்டியில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி!

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் மற்றும் LPL இறுதிப்போட்டியில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கை LPL இறுதிப்போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.இதன்படி ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை காலியில் நடைபெறவுள்ள முதலாவது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 ஆம் நுழைவாயிலில் இலவசமாக பிரவேசிக்க முடியும்.அத்தோடு ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இரண்டாவது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் 3.4.5 மற்றும் 7 ஆம் நுழைவாயிலில் ரசிகர்களுக்கு இலவசமாக பிரவேசிக்க முடியும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.இதேவேளை இன்றைய தினம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 தொடரின் இறுதிப்போட்டியில் கோல் கேலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியைக் காண வரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட்டரங்கின் பார்வையாளர்கள் C Upper, C Lower, D Upper மற்றும் D Lower ஆகிய அரங்குகளில் இலவசமாக பார்வையிடலாம் எனவும் தெரிவித்துள்ளது.ரசிகர்கள் 4, 5, 6 மற்றும் 7 ஆகிய நுழைவு வாயில்கள் (Gates) வழியாக அரங்கிற்குள் முடியும் எனவும் மைதான வாயில்கள் மாலை 5.30 மணிக்கு திறக்கப்படவுள்ளதோடு இரவு 7.30 மணிக்கு போட்டி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
கிரிக்கெட் நட்சத்திரத்தின் வரி சாதனை: ரிஷப் பண்ட் செலுத்திய வரி எவ்வளவு தெரியுமா?

கிரிக்கெட் நட்சத்திரத்தின் வரி சாதனை: ரிஷப் பண்ட் செலுத்திய வரி எவ்வளவு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பண்ட், 2025–2026 நிதியாண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்திய தனிநபராக இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, குறித்த நிதியாண்டில் ரிஷப் பண்ட் மொத்தமாக 23.84 கோடி ரூபாய் வரியாகச் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.28 வயதான ரிஷப் பண்ட், உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடி வருவதுடன், உத்தரகாண்ட் மாநிலத்தில் வசித்து வருகிறார்.கடந்த நிதியாண்டிலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்திய தனிநபராக ரிஷப் பண்ட் இருந்ததாகவும், அப்போது அவர் 10.5 கோடி ரூபாய் வரியாகச் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிஷப் பண்ட்டின் வருமானத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (IPL), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) ஒப்பந்தம், சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கான போட்டி ஊதியம், அத்துடன் விளம்பர ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.IPL 2026 சீசனுக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் 27 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் ரிஷப் பண்ட் இணைந்திருந்தார்.இதேவேளை, வரி மதிப்பீட்டுக் காலத்தில் அவர் BCCI-யின் 'கிரேடு ஏ' ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வேதனம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் அவர் 'கிரேட் பி' ஒப்பந்தத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து, அவரது ஆண்டு ஒப்பந்தத் தொகை 3 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.இதற்கு மேலதிகமாக, IPL மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான போட்டி வேதனங்களும் ரிஷப் பண்ட்டின் வருமானத்தில் அடங்குகின்றன.மேலும், பல்வேறு விளம்பர நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மூலமாகவும் அவர் கணிசமான வருமானத்தைப் பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ரிஷப் பண்ட் செலுத்தியுள்ள வரித் தொகை மற்றும் அவரது வருமானம் தொடர்பான இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து அதிக வரி செலுத்தும் தனிநபர்களில் ஒருவராக அவர் இடம்பெற்றுள்ளார்.

விபரங்களுக்கு
LPL 2026: கொழும்பு அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது காலி கெலண்ட்ஸ்!

LPL 2026: கொழும்பு அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது காலி கெலண்ட்ஸ்!

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் இரண்டாவது போட்டியில், கொழும்பு கேப்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி காலி கெலண்ட்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கேப்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து, 177 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி கெலண்ட்ஸ் அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 177 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியடைந்தது. இந்தநிலையில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் எல்.பி.எல் 2026 தொடரின் பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி கெலண்ட்ஸ் ஆகிய அணிகள் செம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்!

மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்!

இந்தியாவைச் சேர்ந்த ரேணு தரியால் (Renu Dhariyal) உலகின் மிக நீளமான கூந்தலைக் கொண்ட பெண் என்ற புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். இவரது கூந்தலின் நீளம் 271.50 செ.மீ (8 அடி 10 அங்குலம்) ஆகும். யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த அலியா நாசிரோவா (Aliia Nasyrova) என்பவரின் 257.33 செ.மீ (8 அடி 5.3 அங்குலம்) நீள கூந்தல் சாதனையை இவர் முறியடித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் தனது கூந்தலை ஒருமுறை கூட வெட்டவில்லை. இந்திய கலாச்சாரத்தில் நீண்ட கூந்தல் என்பது பாரம்பரியத்தின் அடையாளமாகக் கருதப்படுவதே, தன் கூந்தலை இவ்வளவு நீளமாக வளர்ப்பதற்கான முக்கியக் காரணம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
14 மாதங்கள் வீட்டில் இருந்தேன்: வருங்கால மனைவிதான் காரணம் – கடினமான காலம் குறித்து மனம் திறந்த விஷால்

14 மாதங்கள் வீட்டில் இருந்தேன்: வருங்கால மனைவிதான் காரணம் – கடினமான காலம் குறித்து மனம் திறந்த விஷால்

நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய விஷால், தனது திரையுலகப் பயணத்தில் சுமார் 14 மாதங்கள் நடிக்க முடியாமல் வீட்டில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். அந்தக் கடினமான காலகட்டத்தில் தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா வழங்கிய ஆதரவு தனக்கு மிகுந்த உதவியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மற்றும் திருப்பூர் சுப்ரமணியம் ஆகியோரும் தனக்கு ஆதரவாக இருந்ததாக விஷால் தெரிவித்துள்ளார்.‘மகுடம்’ திரைப்படம் நடிகராகவும் இயக்குநராகவும் தனக்கு சவாலானதாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இரு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.இயக்குநராக வேண்டும் என்பது தனது 35 ஆண்டுகால கனவு எனத் தெரிவித்த விஷால், தனது தந்தை மற்றும் தாயார் வழங்கிய ஆதரவே தனது திரையுலகப் பயணத்திற்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.தனது குருநாதரான நடிகர் அர்ஜுனுக்கும் நன்றி தெரிவித்த அவர், இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்திற்கு ராம்கோபால் வர்மா இயக்கிய ‘சிவா’ திரைப்படம் உந்துதலாக இருந்ததாகக் கூறியுள்ளார்.மேலும், ‘மகுடம்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இதுவரை பார்த்திராத வகையில் இருக்கும் என்றும், சுமார் எட்டு நிமிடங்கள் இடம்பெறும் அந்தக் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்ப்பதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு

"நாய்க்கு நாய்னு பேரு வச்சது யாருடா?" இணையவாசிகளை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் AI அனிமேஷன் காணொளிகள்

சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதுவிதமான காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஆடு, மாடு, குரங்கு போன்ற விலங்குகள் மனிதர்களைப் போலப் பேசுவதும், பாட்டுப் பாடுவது போன்றும் உருவாக்கப்படும் அனிமேஷன் காணொளிகள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன. "நாய்க்கு நாய்னு பேரு வச்சது யாருடா?", "நாங்கதான் மாடு.. பக்கத்துல வந்து பாடு!" போன்ற வேடிக்கையான மற்றும் நகைச்சுவையான வரிகளைக் கொண்ட பாடல்களை இந்த AI விலங்கு கதாபாத்திரங்கள் பாடுவது போல உருவாக்கப்பட்டுள்ள காணொளிகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக AI தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் சூழலில், சினிமா மற்றும் தொழில்முறைத் தேவைகளுக்கு மட்டுமின்றி, இதுபோன்ற பொழுதுபோக்கு மற்றும் மீம்ஸ் (Memes) கலாசாரத்திலும் AI-ன் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதை இந்த வைரல் காணொளிகள் வெளிப்படுத்துகின்றன.

விபரங்களுக்கு
ஹோலிவுட் திரையுலகில் சாதனை: 1 பில்லியன் டொலர் வசூலைக் கடந்த கிறிஸ்டோபர் நோலனின் “தி ஒடிசி”!

ஹோலிவுட் திரையுலகில் சாதனை: 1 பில்லியன் டொலர் வசூலைக் கடந்த கிறிஸ்டோபர் நோலனின் “தி ஒடிசி”!

ஹோலிவுட்டின் முன்னணி இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'தி ஒடிசி' (The Odyssey) திரைப்படம் உலகளவில் 1 பில்லியன் டொலர் (சுமார் $1.008 billion) வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 2012-இல் வெளியான 'தி டார்க் நைட் ரைசஸ்' (The Dark Knight Rises) திரைப்படத்திற்குப் பிறகு, 1 பில்லியன் டொலர் வசூல் மைல்கல்லை எட்டும் கிறிஸ்டோபர் நோலனின் முதல் திரைப்படம் இதுவாகும். திரையரங்குகளில் வெளியான 3 வாரங்களிலேயே இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் 429.65 மில்லியன் டொலரையும், சர்வதேச அளவில் 578.8 மில்லியன் டொலரையும், வசூலித்து இந்தச் சாதனையை எட்டியுள்ளது. இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலில் IMAX திரையரங்குகள் மூலம் மட்டும் 257 மில்லியன் டொலர் வசூலாகியுள்ளது . 2026 ஆம் ஆண்டில் உலகளவில் 1 பில்லியன் டொலர் வசூலைக் கடக்கும் 5ஆவது திரைப்படம் என்ற பெருமையையும் 'தி ஒடிசி' பெற்றுள்ளது. இதேவேளை ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே , டாய் ஸ்டோரி 5 சூப்பர் மேரியோ கேலேக்ஸி , மைக்கேல் ஆகிய படங்கள் இந்த ஆண்டு 1 பில்லியன் டொலரை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
‘விஸ்வநாத் & சன்ஸ்’ கதை சொல்லுவது என்ன? – ரசிகர்களின் கவனம் சூர்யா மீது!

‘விஸ்வநாத் & சன்ஸ்’ கதை சொல்லுவது என்ன? – ரசிகர்களின் கவனம் சூர்யா மீது!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 14ஆம் திகதி உலகளவில் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் மமிதா பைஜூ, ராதிகா, ரவீணா டாண்டன், சுனில், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்நிலையில், திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று மாலை வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து, திரைப்படத்தின் கதைக்களம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.முன்னோட்டத்தில், 40 வயதைக் கடந்தும் தனது கனவுகளைத் தொடர்ந்து பயணிக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீரரான சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பது காட்டப்பட்டுள்ளது.சஞ்சய் விஸ்வநாத் தனது குழந்தையைத் தனியாக வளர்த்து வரும் தந்தையாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அவரது தாயாராக நடிகை ராதிகா நடித்துள்ளார்.குழந்தைக்கு ஏற்படும் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், மமிதா பைஜூவின் கதாபாத்திரம் சஞ்சயின் வாழ்க்கைக்குள் வருவது போன்ற காட்சிகளும் முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பின்னர், இருவருக்கும் இடையில் உருவாகும் உறவை மையமாகக் கொண்டு கதை நகர்வதாக முன்னோட்டம் மூலம் தெரியவருகிறது.இதனிடையே, கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில், திரைப்படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களம் மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அம்சங்கள் குறித்து படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.சிதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சுதந்திர தின வார இறுதியில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் எனப் படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

விபரங்களுக்கு

"காவி உடை அணிந்தது ஏன்?" – யூடியூபரின் சர்ச்சையான கேள்வி

'ஒரு அதார் லவ்' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவர் அண்மையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, யூடியூபர் ஒருவர் அவரது ஆடை குறித்துக் கேள்வி எழுப்பிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது. அவர் அணிந்திருந்த பிரகாசமான காவி நிற (Saffron) ஆடை குறித்து அந்த யூடியூபர், கேரளாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள 'ஓரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை காரணமாக இந்த நிறத்தைத் தேர்ந்தெடுத்தீர்களா என விளையாட்டாகக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பொறுமையுடன் பதிலளித்த பிரியா வாரியர், "இந்த ஆடையில் என்ன பிரச்சனை?" எனக் கேட்டதுடன், தான் விளம்பரம் செய்யும் நிறுவனத்தின் நிறத்துடன் பொருந்தியதால் மட்டுமே இந்த ஆடையைத் தேர்ந்தெடுத்ததாகவும், இதன் பின்னணியில் எவ்வித அரசியல் அல்லது மத ரீதியான நோக்கமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். இந்த உரையாடலின் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, தேவையற்ற கேள்வியைக் கேட்ட யூடியூபரை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒருவரின் ஆடை நிறத்தை அரசியலாக்கக் கூடாது என்றும், ஆடை சுதந்திரம் மற்றும் தனிநபர் விருப்பத்தை மதிக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
என்னை சாதியால் அடையாளப்படுத்த வேண்டாம் – மீண்டும் நீதிமன்றத்தை நாடிய பார்த்திபன்

என்னை சாதியால் அடையாளப்படுத்த வேண்டாம் – மீண்டும் நீதிமன்றத்தை நாடிய பார்த்திபன்

‘சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழைப் பெற்றுள்ள நடிகர் பார்த்திபன், இத்தகைய சான்றிதழை வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை விளக்கிய பார்த்திபன், சமூக நலனைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.அண்மையில் தான் நடித்த தெலுங்குத் திரைப்படத்தின் விழா ஒன்றில் உரையாற்றியபோது, தன்னை அறியாமல் தனது சாதியைக் குறிப்பிட்டு அடையாளப்படுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கும் கேலிப் பதிவுகளுக்கும் உள்ளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தனக்கு சாதி மற்றும் மதம் தொடர்பில் எந்தவிதமான தனிப்பட்ட பற்றும் இல்லை எனத் தெரிவித்த பார்த்திபன், இதன் காரணமாகவே ‘சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகியதாகக் கூறியுள்ளார்.இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டலின் அடிப்படையில் சான்றிதழைப் பெற முடிந்ததாகவும், அதற்காக சுமார் ஒன்றரை மாத காலம் முயற்சி மேற்கொண்டதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.மேலும், தன்னைப் போன்றே இத்தகைய சான்றிதழைப் பெற விரும்புவோருக்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது தற்போதைய சட்ட நடவடிக்கையின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.180 கோடி வியாபாரம'! – அஜித்-ஷாலினியின் 'டேர்டெவில்' படைத்த சாதனை!

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.180 கோடி வியாபாரம'! – அஜித்-ஷாலினியின் 'டேர்டெவில்' படைத்த சாதனை!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகை ஷாலினி தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு 'டேர்டெவில்' (Daredevil) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அஜித்தும் ஷாலினியும் நடிகர் - தயாரிப்பாளராக இணைந்து பணியாற்றுகின்றனர். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தநிலையில், குறித்த திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமை, ஓ.டி.டி. உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமை என ஒட்டுமொத்தமாக படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரூ.180 கோடி இந்திய ரூபாய் வரை நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////