Live Football Scores
International News

மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ், தனது 89-வது வயதில் காலமானார்.

International 18 July 2026
மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ், தனது 89-வது வயதில் காலமானார்.

மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: 7.4 மெக்னிடியூட் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.

International 17 July 2026
மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: 7.4 மெக்னிடியூட் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.

தூக்கமின்மையால் அவதிப்படும் இந்தியர்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

International 17 July 2026
தூக்கமின்மையால் அவதிப்படும் இந்தியர்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பசி போக்கிப் படிப்பு தந்த பெருந்தலைவன் காமராசரின் கல்விப் புரட்சியை விவரித்த சீமான்!

International 17 July 2026
பசி போக்கிப் படிப்பு தந்த பெருந்தலைவன் காமராசரின் கல்விப் புரட்சியை விவரித்த சீமான்!

சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து விபத்து - 20 மாணவர்கள் உயிரிழப்பு

International 17 July 2026
சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து விபத்து - 20 மாணவர்கள் உயிரிழப்பு

ஹைட்ரஜன் தொடருந்து சேவை தொடக்கம்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர்!

International 17 July 2026
ஹைட்ரஜன் தொடருந்து சேவை தொடக்கம்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர்!

ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல் ராஜதந்திர மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.

International 17 July 2026
ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல் ராஜதந்திர மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.

யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: தெருக்களில் இறங்கி போராடும் மக்கள்

International 17 July 2026
யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: தெருக்களில் இறங்கி போராடும் மக்கள்

அரசியலுக்குள் கலந்துவிட்ட பிரேசிலின் கால்பந்து ஜேர்சி

International 17 July 2026
அரசியலுக்குள் கலந்துவிட்ட பிரேசிலின் கால்பந்து ஜேர்சி

ஈரானின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள்: குற்ற நோக்கம் கொண்டவை

International 17 July 2026
ஈரானின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள்: குற்ற நோக்கம் கொண்டவை

'ரீல்ஸ்' காணொளிகள் எடுக்க அமைச்சர்களுக்கு அதிரடித் தடை - முதலமைச்சர் விஜய் உத்தரவு

International 16 July 2026
'ரீல்ஸ்' காணொளிகள் எடுக்க அமைச்சர்களுக்கு அதிரடித் தடை - முதலமைச்சர் விஜய் உத்தரவு

ரூ.11 இலட்சம் வருமானம் பெறும் பெண்ணின் திருமண நிபந்தனை வைரல்!

International 16 July 2026
ரூ.11 இலட்சம் வருமானம் பெறும் பெண்ணின் திருமண நிபந்தனை வைரல்!

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு : தொடரும் மீட்புப் பணிகள்!

International 16 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு : தொடரும் மீட்புப் பணிகள்!

எண்ணெய் விலையில் திடீர் ஏற்றம் - என்ன காரணம்? : இன்றைய சந்தை நிலவரம் இதோ!

International 16 July 2026
எண்ணெய் விலையில் திடீர் ஏற்றம் - என்ன காரணம்? : இன்றைய சந்தை நிலவரம் இதோ!

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி : இலங்கையில் விலை குறையுமா?

International 16 July 2026
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி : இலங்கையில் விலை குறையுமா?
More News
General17 July 2026

மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நான்கு பேரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ஆந்திராவில் 67 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது பாதிக்கப்பட்டவர்களில் மூவர் வீட்டுத் தனிமையிலும், இருவர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
General17 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இறுதிச் சடங்குகள் இன்று

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சமீபத்தில் உயிரிழந்த இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இறுதிச் சடங்குகள் இன்று (17) நடைபெறுகின்றன. 25 வயதான சிறைச்சாலை காவலர் ஆர்.பி. மதுசார மற்றும் சிறைச்சாலை காவல்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான 39 வயது சந்திக லஷான் குணவர்தன ஆகியோரே அண்மையில் உயிரிழந்தனர். இவர்களின் உடலங்களுக்கு வெலிகடை சிறைச்சாலையில் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இதுவரை 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இறுதிச் சடங்குகள் இன்று
General17 July 2026

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

நாட்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாகக் காய்ச்சல் அல்லது அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விபரங்களுக்கு
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு
General17 July 2026

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தர இடமாற்றம்

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தர, உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. அவர் காவல்துறை தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தர இடமாற்றம்
General17 July 2026

சவூதிக்கு , அமெரிக்கா வழங்கப்போகும் 196 கோடி டொலர் பெறுமதியான ஆயுதங்கள்

மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியாவிற்கு சுமார் 196 கோடி டொலர் பெறுமதியான  ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். இந்தநிலையில், சவூதி அரேபியா கோரியுள்ள ஆயுதங்களில் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட துல்லியமான தாக்குதல் ஆயுத அமைப்புகளும் அடங்கும். அவை குறைந்த சேதத்துடன் இலக்குகளைத் துல்லியமாக அழிக்கக்கூடியவை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
சவூதிக்கு , அமெரிக்கா வழங்கப்போகும் 196 கோடி டொலர் பெறுமதியான ஆயுதங்கள்
International News

மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ், தனது 89-வது வயதில் காலமானார்.

International 18 July 2026
மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ், தனது 89-வது வயதில் காலமானார்.

மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: 7.4 மெக்னிடியூட் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.

International 17 July 2026
மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: 7.4 மெக்னிடியூட் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.

தூக்கமின்மையால் அவதிப்படும் இந்தியர்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

International 17 July 2026
தூக்கமின்மையால் அவதிப்படும் இந்தியர்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பசி போக்கிப் படிப்பு தந்த பெருந்தலைவன் காமராசரின் கல்விப் புரட்சியை விவரித்த சீமான்!

International 17 July 2026
பசி போக்கிப் படிப்பு தந்த பெருந்தலைவன் காமராசரின் கல்விப் புரட்சியை விவரித்த சீமான்!

சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து விபத்து - 20 மாணவர்கள் உயிரிழப்பு

International 17 July 2026
சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து விபத்து - 20 மாணவர்கள் உயிரிழப்பு

ஹைட்ரஜன் தொடருந்து சேவை தொடக்கம்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர்!

International 17 July 2026
ஹைட்ரஜன் தொடருந்து சேவை தொடக்கம்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர்!

ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல் ராஜதந்திர மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.

International 17 July 2026
ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல் ராஜதந்திர மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.

யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: தெருக்களில் இறங்கி போராடும் மக்கள்

International 17 July 2026
யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: தெருக்களில் இறங்கி போராடும் மக்கள்

அரசியலுக்குள் கலந்துவிட்ட பிரேசிலின் கால்பந்து ஜேர்சி

International 17 July 2026
அரசியலுக்குள் கலந்துவிட்ட பிரேசிலின் கால்பந்து ஜேர்சி

ஈரானின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள்: குற்ற நோக்கம் கொண்டவை

International 17 July 2026
ஈரானின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள்: குற்ற நோக்கம் கொண்டவை

'ரீல்ஸ்' காணொளிகள் எடுக்க அமைச்சர்களுக்கு அதிரடித் தடை - முதலமைச்சர் விஜய் உத்தரவு

International 16 July 2026
'ரீல்ஸ்' காணொளிகள் எடுக்க அமைச்சர்களுக்கு அதிரடித் தடை - முதலமைச்சர் விஜய் உத்தரவு

ரூ.11 இலட்சம் வருமானம் பெறும் பெண்ணின் திருமண நிபந்தனை வைரல்!

International 16 July 2026
ரூ.11 இலட்சம் வருமானம் பெறும் பெண்ணின் திருமண நிபந்தனை வைரல்!

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு : தொடரும் மீட்புப் பணிகள்!

International 16 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு : தொடரும் மீட்புப் பணிகள்!

எண்ணெய் விலையில் திடீர் ஏற்றம் - என்ன காரணம்? : இன்றைய சந்தை நிலவரம் இதோ!

International 16 July 2026
எண்ணெய் விலையில் திடீர் ஏற்றம் - என்ன காரணம்? : இன்றைய சந்தை நிலவரம் இதோ!

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி : இலங்கையில் விலை குறையுமா?

International 16 July 2026
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி : இலங்கையில் விலை குறையுமா?
Sports Stories
Explore More
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் ரோகித்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் ரோகித்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், நேற்று (16) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன.இதனைத் தொடர்ந்து, தொடரின் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி, எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியே ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.இந்த தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 11 ஓட்டங்களையும், இரண்டாவது போட்டியில் 26 ஓட்டங்களையும் மட்டுமே ரோகித் சர்மா பெற்றிருந்தார். கடந்த எட்டு ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே விளாசியுள்ள அவர், சராசரியாக 30.1 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், பிசிசிஐ இந்த தொடருக்குப் பிறகு ரோகித் சர்மாவுக்கு அணியில் வாய்ப்பளிக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.கடந்த வாரம் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுவினர் ரோகித் சர்மாவுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத்துடன் இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்தும், 2025ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள ரோகித் சர்மா, இந்தப் போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விடைபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவிப்பார் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபரங்களுக்கு
ஜோ ரூட் அபாரம் - இங்கிலாந்து அணி வெற்றி

ஜோ ரூட் அபாரம் - இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 44 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் ஸ்ரேயஸ் ஐயர் 66 ஓட்டங்களையுப் விராட் கோலி 65 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கஸ் அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தநிலையில் 234 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 44.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.

விபரங்களுக்கு
இங்கிலாந்து கோல்கீப்பரின் பெனால்டி குறிப்புகள் வைரல்

இங்கிலாந்து கோல்கீப்பரின் பெனால்டி குறிப்புகள் வைரல்

2026 கால்பந்து செம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. போட்டி முடிவடைந்த பிறகு, இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்டின் தண்ணீர் போத்தலை ஆர்ஜென்டினா வீரர்கள் கவனித்தனர். அந்தத் தண்ணீர் போத்தலில், ஆர்ஜென்டினா வீரர்களின் பெனால்டி உத்திகள் குறித்த இரகசியக் குறிப்புகள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்த லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது சக வீரர்கள், அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் போனதை எண்ணிச் சிரித்துக்கொண்டே தலையசைத்தனர். ஒருவேளை பெனால்டி ஷூட்-அவுட் முறைக்குச் சென்றால், ஆர்ஜென்டினா வீரர்களைச் சமாளிக்க பிக்ஃபோர்ட் இந்தத் திட்டங்களை முன்கூட்டியே தயார் செய்திருந்தார். ஆனால், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் லௌட்டாரோ மார்டினெஸ் கோல் அடித்து ஆர்ஜென்டினாவை வெற்றிபெறச் செய்ததால், பெனால்டி ஷூட்-அவுட் தேவைப்படாமல் போனது. இந்தச் சம்பவம், பதற்றமான சூழலிலும் ஆர்ஜென்டினா வீரர்கள் காட்டிய உற்சாகத்தையும், மெஸ்ஸியின் நிதானத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. இதேவேளை, ஆர்ஜென்டினா தனது இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ள உள்ளது.

விபரங்களுக்கு
எல்லைக் கோட்டுக்கு அப்பால் ஆயிரம் முறை! பொல்லார்டின் அபார சாதனை

எல்லைக் கோட்டுக்கு அப்பால் ஆயிரம் முறை! பொல்லார்டின் அபார சாதனை

இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் 1,000 ஆறு ஓட்டங்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட் படைத்துள்ளார். இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்றொரு ஜாம்பவானான கிறிஸ் கெய்ல் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்திருந்தார்.இந்த நிலையில், கீரன் பொல்லார்ட் இதுவரை விளையாடிய 662 இன்னிங்ஸ்களில் 1,001 ஆறு ஓட்டங்களை விளாசி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன், கிறிஸ் கெய்ல் 455 இன்னிங்ஸ்களில் 1,056 ஆறு ஓட்டங்களை பெற்று இந்தத் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.இதன் மூலம், இருபதுக்கு இருபது கிரிக்கெட்டில் 1,000 ஆறு ஓட்டங்களை கடந்த வீரர்களின் பட்டியலில் கீரன் பொல்லார்ட் இணைந்துள்ளார்.

விபரங்களுக்கு
விளையாட்டு உலகை அதிர வைக்கும் இரு இளம் வீரர்கள்

விளையாட்டு உலகை அதிர வைக்கும் இரு இளம் வீரர்கள்

தற்போதைய உலக விளையாட்டுத் துறையில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய இருவேறு களங்களில் தங்களது திறமையால் அனைவரையும் வியக்க வைக்கும் இரு இளம் வீரர்களாக , ஸ்பெயினின் லமின் யமால் மற்றும் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் மிளிர்கின்றனர்.19 வயதான யமால், எஃப்.சி. பார்சிலோனா கழகத்தின் நட்சத்திர வீரராகவும், ஸ்பெயின் அணியின் கால்பந்து கிண்ண இறுதிப்போட்டிப் பயணத்தில் முக்கிய வீரராகவும் திகழ்கிறார். தனது இடது காலின் அபாரத் திறமையால் கோல்களைக் குவிக்கும் யமால், உலகின் இளம் தலைமுறை நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.2007-ஆம் ஆண்டு, ஒரு தொண்டு நிறுவனப் புகைப்படத்திற்காக லியோனல் மெஸ்ஸியின் கைகளில் தவழ்ந்த அதே குழந்தை, இன்று கால்பந்து கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸிக்கே சவாலாகக் களமிறங்குகிறது என்பது வரலாற்று அதிசயம்.மறுபுறம், இந்தியாவின் 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான துடுப்பாட்டம் மூலம் உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக 14 வயதில், 23 நாட்களில் களமிறங்கி, ஐ.பி.எல். தொடரில் விளையாடிய இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் இளம் சர்வதேச கிரிக்கெட் வீரராகவும் உருவெடுத்துள்ளார்.2026 ஐ.பி.எல். தொடரில் 776 ஓட்டங்களைக் குவித்து, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி Orange Cap வென்று சாதனை படைத்துள்ளார்.இருவருமே விளையாட்டுப் பயணங்களுக்கு இடையே கல்வியிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.யமால் யூரோ 2024 தொடரின் போது தனது பாடசாலைப் பரீட்சைகளை எழுதினார். சூர்யவன்ஷி,10-ஆம் வகுப்புத் தேர்வுக்குத் தயாராகியிருந்தாலும், கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக அதை எழுத முடியாத சூழல் ஏற்பட்டது.விளையாட்டின் உச்சத்தைத் தொட்டு வரும் இந்த இரு இளம் திறமைகளும், தத்தமது துறைகளில் புதிய வரலாறுகளை எழுதி வருகின்றனர்.

விபரங்களுக்கு
உலக கிரிக்கெட்டில் புதிய மாற்றங்கள்! மொரீஷியஸுக்கு ஐசிசி அங்கீகாரம்

உலக கிரிக்கெட்டில் புதிய மாற்றங்கள்! மொரீஷியஸுக்கு ஐசிசி அங்கீகாரம்

ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் நிர்வாகம், உறுப்பினர் தகுதி மற்றும் நிதி தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மொரீஷியஸ் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 111வது உறுப்பினர் நாடாக அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.அதேவேளை, உறுப்பினர் தகுதிக்கான விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட பிரான்ஸ் கிரிக்கெட் அமைப்புக்கு ஐசிசி அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், இதுவரை கூடுதல் ஒழுங்கு நடவடிக்கைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.மேலும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு 12.82 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.கனடா கிரிக்கெட் அணி தொடர்பில், உறுப்பினர் கடமைகளில் கடுமையான மீறல்கள் ஏற்பட்டதாகக் கூறி கடந்த ஜூன் மாதம் விதிக்கப்பட்ட இடைநீக்கம் தொடர்கிறது. எனினும், அந்த இடைநீக்கத்தை நீக்குவதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளையும் ஐசிசி நிர்ணயித்துள்ளது.

விபரங்களுக்கு
விராட் கோலியின் விஸ்வரூபம்! சச்சின், கங்குலியை மிஞ்சிய சாதனை

விராட் கோலியின் விஸ்வரூபம்! சச்சின், கங்குலியை மிஞ்சிய சாதனை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், தங்களது முதல் 300 இன்னிங்ஸ்களில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.அதன்படி, விராட் கோலி 14,802 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 12,015 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும், சவுரவ் கங்குலி 11,363 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். குறிப்பாக, விராட் கோலி மற்ற வீரர்களைக் காட்டிலும் மிக அதிக ஓட்டங்களைக் குவித்து, ஒருநாள் போட்டிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
டி20 உலகக் கிண்ண தொடரில் புதிய மாற்றம்: சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிரடி அறிவிப்பு!

டி20 உலகக் கிண்ண தொடரில் புதிய மாற்றம்: சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிரடி அறிவிப்பு!

2028 ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான புதிய போட்டி வடிவத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.எடின்பரோவில் நடந்த அதன் வருடாந்த கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி இந்தமுறை போட்டிகளின் எண்ணிக்கை மாறாமல், Knockout சுற்றுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கு முன் 5 அணிகள் கொண்ட 4 குழுக்களாக போட்டிகள் இடம்பெற்றன. இனி 4 அணிகள் கொண்ட 5 குழுக்களாக (மொத்தம் 20 அணிகள்) போட்டிகள் நடத்தப்படும்.இதனால் முதல் சுற்று போட்டிகள் 40 இல் இருந்து 30 ஆக குறையும்.முதல் சுற்றின் ஒவ்வொரு குழுவிலும் உள்ள முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'சுப்பர் 10' சுற்றுக்கு முன்னேறும். இது 5 அணிகள் கொண்ட 2 குழுக்களாக பிரிக்கப்படும்.சுப்பர் 10 சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.ஒவ்வொரு குழுவிலும் 2 மற்றும் 3 ஆம் இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'எலிமினேட்டர்' (Eliminator) போட்டிகளில் மோத வேண்டும்.இதில் வெற்றி பெறும் அணிகளே மற்ற இரு அரையிறுதி இடங்களை உறுதி செய்யும்.வளர்ந்து வரும் நாடுகளின் சிறப்பான ஆட்டத்திறன் காரணமாகவே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.இதன் மூலம் சுப்பர் 10 சுற்றின் இறுதிப் போட்டிகள் சுவாரசியமாக மாறுவதுடன், முக்கியத்துவம் இல்லாத போட்டிகள் தவிர்க்கப்படும்.2028 உலகக் கிண்ணத்திற்கு தொடரை நடத்துவதற்கு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.மேலும் முந்தைய தொடரின் அடிப்படையில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், சிம்பாப்வே ஆகிய அணிகளும், தரவரிசை அடிப்படையில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், அயர்லாந்து ஆகிய அணிகளும் தகுதிபெற்றுள்ளன.மீதமுள்ள 8 இடங்களைத் தீர்மானிக்க 16 அணிகள் பங்கேற்கும் உலகளாவிய தகுதிச்சுற்று நடத்தப்படவுள்ளது.இதில் ஏற்கனவே விளையாடிய கனடா, இத்தாலி, நமீபியா, நேபாளம், நெதர்லாந்து, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் அமெரிக்கா (USA) ஆகிய 8 அணிகளுடன், பிராந்திய தகுதிச்சுற்றுகள் (ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, கிழக்கு ஆசியா/பசிபிக்) மூலம் வரும் மேலும் 8 அணிகள் மோதும்.கடந்த தொடரில் மாற்று அணியாக விளையாடிய ஸ்கொட்லாந்து அணி, இம்முறை ஐரோப்பிய பிராந்திய தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடியே வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று அடுத்த ஆண்டு தென்னாபிரிக்க பிராந்தியத்தில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ண தொடரிலும் சில வடிவ மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
கணவர் ஜெகத் தேசாயுடன் அமலா பாலின் புதிய புகைப்படங்கள் வைரல்!

கணவர் ஜெகத் தேசாயுடன் அமலா பாலின் புதிய புகைப்படங்கள் வைரல்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான அமலா பால், தனது கணவர் ஜெகத் தேசாயுடன் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 'மைனா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்ற நடிகை அமலா பால், சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவராவார். தனது தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளை ரசிகர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், தற்போது தனது கணவர் ஜெகத் தேசாயுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்படுகின்றன. திரையில் தீவிரமான கதாபாத்திரங்களில் நடிக்கும் அமலா பால், நிஜ வாழ்க்கையில் இவ்வளவு உற்சாகமாகவும் அன்பாகவும் இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் - மாலை 6.30க்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி

விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் - மாலை 6.30க்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி

ஹெச். வினோத் இயக்கத்தில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவல் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'அடியே என் பூந்தேனே' பாடல் வீடியோ இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என கே.வி.என் புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ரவி ஜி ஆகியோர் இந்த பாடலைப் பாடியுள்ளனர். பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். ஜூலை 23 ஆம் திகதி இந்தத் திரைப்படம் திரையரங்குகளுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
தனது வருங்கால கணவர் குறித்து மனம் திறந்தார் நடிகை பிரீத்தி முகுந்தன்

தனது வருங்கால கணவர் குறித்து மனம் திறந்தார் நடிகை பிரீத்தி முகுந்தன்

சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்க்கைத்துணை குறித்த எதிர்பார்ப்புகள் எப்போதும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், நடிகை பிரீத்தி முகுந்தன் தனது வருங்கால கணவர் குறித்து வெளிப்படையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தனது எதிர்கால வாழ்க்கைத்துணை அன்பானவராகவும், தனது உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொள்பவராகவும் இருக்க வேண்டும் என்று நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். ஒரு நேர்காணலில், தனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அவரின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
தமிழ்நாட்டுக்குள் இனி வர முடியாது - மீண்டும் விவாதத்துக்கு வந்த விஜய் - திரிஷா விவகாரம்

தமிழ்நாட்டுக்குள் இனி வர முடியாது - மீண்டும் விவாதத்துக்கு வந்த விஜய் - திரிஷா விவகாரம்

மலையாளத் திரைப்பட விழா மேடை ஒன்றில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் நகைச்சுவையாகப் பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் நடைபெற்ற திரைப்பட விழாவொன்றில் பங்கேற்ற நடிகர் தியான் ஸ்ரீனிவாசன், தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பு நிகழ்வில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டதைக் குறிப்பிடும் வகையில் கிண்டலாகப் பேசியுள்ளார்.தான் கேரளா முதலமைச்சராகப் பதவியேற்கும் தருணத்தில், நடிகை நவ்யா நாயர் புடவை அணிந்து, கண்களில் கண்ணீருடன் முன் வரிசையில் அமர்ந்திருக்க வேண்டும் எனத் தியான் ஸ்ரீனிவாசன் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நடிகை நவ்யா நாயரும் மேடையிலேயே நகைச்சுவையாகப் பதிலளித்தார்.இவர்களின் இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்தாலும், இணையத்தில் இது குறித்துக் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் அஜு வர்கீஸ், "தியான் மற்றும் நவ்யா பேசியதைப் பார்க்கும்போது, இனி என்னால் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது என்று தோன்றுகிறது. தமிழக முதல்வர் விஜய், என் நண்பனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது, தயவுசெய்து எங்களை மன்னித்துவிடுங்கள்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

விபரங்களுக்கு
முன்பதிவில் வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்: இதுவரை இத்தனை கோடியா?

முன்பதிவில் வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்: இதுவரை இத்தனை கோடியா?

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் 23-ஆம் திகதி வெளியாகவுள்ளது. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் வெளியாகாமல் இந்த படம் தற்போது உலகம் முழுவதும் சுமார் 7,000 முதல் 8,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ரூ. 4.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் காலங்களிலும் வசூலில் மாபெரும் சாதனையை ஜனநாயகன் திரைப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
விரைவில் திரைக்கு வருகிறது சூர்யா 47

விரைவில் திரைக்கு வருகிறது சூர்யா 47

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 'சாகரம் ஸ்டுடியோஸ்' (Zhagaram Studios) சமூக வலைதளங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசிம் மற்றும் நஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜித்து மாதவன் தமிழில் இயக்கும் முதல் படம் இதுவாகும். இந்தப் படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வெளியீட்டுத் திகதி மற்றும் பிற விபரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
அன்பைத் தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி : . இளஞ்சிவப்பு நிறக் கூடைகள் மூலம் புதிய முயற்சி!

அன்பைத் தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி : . இளஞ்சிவப்பு நிறக் கூடைகள் மூலம் புதிய முயற்சி!

பின்லாந்தில் உள்ள சில சிறப்பு அங்காடிகளில், தனியாக இருப்பவர்கள் தங்களைப் பிறருக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய முயற்சியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காதல் உறவுக்குத் தயாராக இருப்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில், சிறப்பு அங்காடிகளில் இளஞ்சிவப்பு நிறக் கூடைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த இளஞ்சிவப்பு நிறக் கூடைகளைப் பயன்படுத்துபவர்கள், தங்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்கும் ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாக இது கருதப்படுகிறது. காதல் தேடலில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வித்தியாசமான முயற்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////