Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் கண்ணீர் புகை பிரயோகம்

General 07 August 2026
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் கண்ணீர் புகை பிரயோகம்

சிறைச்சாலைச் சம்பவங்களின் பின்னணியில் சதித்திட்டம் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு!

General 07 August 2026
சிறைச்சாலைச் சம்பவங்களின் பின்னணியில் சதித்திட்டம் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு!

லலித் – குகன் காணாமற்போன வழக்கு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி ஊடாக சாட்சியமளிக்க உத்தரவு

General 07 August 2026
லலித் – குகன் காணாமற்போன வழக்கு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி ஊடாக சாட்சியமளிக்க உத்தரவு

பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகளின் போராட்டம் தீவிரம்

General 07 August 2026
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகளின் போராட்டம் தீவிரம்

பிரதம நீதியரசர் மற்றும் காவல்துறை மாஅதிபரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அருகே காணொளி பதிவு செய்த சந்தேகநபர் கைது

General 07 August 2026
பிரதம நீதியரசர் மற்றும் காவல்துறை மாஅதிபரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அருகே காணொளி பதிவு செய்த சந்தேகநபர் கைது

ரவி செனவிரத்னவிற்கு எதிரான வழக்குக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது மேல் நீதிமன்றம்!

General 07 August 2026
ரவி செனவிரத்னவிற்கு எதிரான வழக்குக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது மேல் நீதிமன்றம்!
International News

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு

International 07 August 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு

இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!

International 07 August 2026
இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!

விஜய் – சங்கீதா வழக்கில் பரபரப்பு: தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

International 07 August 2026
விஜய் – சங்கீதா வழக்கில் பரபரப்பு: தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

International 07 August 2026
 தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

காஸாவில் நாளொன்றுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு: தொடரும் இஸ்ரேலின் தாண்டவம்!

International 07 August 2026
காஸாவில் நாளொன்றுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு: தொடரும் இஸ்ரேலின் தாண்டவம்!

நடிகர் சங்கக் கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்: நடிகர் விஷால் தகவல்!

International 07 August 2026
நடிகர் சங்கக் கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்: நடிகர் விஷால் தகவல்!

ஈரான் மீதான போர் 'மிக விரைவில்' முடிவுக்கு வரும் எனத் தாம் நினைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

International 07 August 2026
ஈரான் மீதான போர் 'மிக விரைவில்' முடிவுக்கு வரும் எனத் தாம் நினைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

பாலஸ்தீன நிலத்தில் இருந்து மரங்களை அகற்றும் இஸ்ரேல்!

International 07 August 2026
பாலஸ்தீன நிலத்தில் இருந்து மரங்களை அகற்றும் இஸ்ரேல்!

ஈரான் விடயத்தில் தோல்வியடைந்த அதிகாரிகளை தண்டித்த இஸ்ரேல்!

International 07 August 2026
ஈரான் விடயத்தில் தோல்வியடைந்த அதிகாரிகளை தண்டித்த இஸ்ரேல்!

தனது கின்னஸ் உலக சாதனையைத் தானே மீண்டும் புதுப்பித்த பெண்!

International 07 August 2026
தனது கின்னஸ் உலக சாதனையைத் தானே மீண்டும் புதுப்பித்த பெண்!

ஏமன் படை முகாம்கள் மீது தாக்குதல்: 30 பேர் பலி, பலர் காயம்

International 06 August 2026
ஏமன் படை முகாம்கள் மீது தாக்குதல்: 30 பேர் பலி, பலர் காயம்

தாயகம் திரும்புவதற்கு ஷேக் ஹசீனா தயார் - பங்களாதேஷில் மீண்டும் பதற்றம்

International 06 August 2026
தாயகம் திரும்புவதற்கு ஷேக் ஹசீனா தயார் - பங்களாதேஷில் மீண்டும் பதற்றம்

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

International 06 August 2026
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

800 பச்சை குத்தல்களால் கழிப்பறை சுத்தம் செய்யும் வேலையும் கிடைக்கவில்லையா? : தாய் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்!

International 06 August 2026
800 பச்சை குத்தல்களால் கழிப்பறை சுத்தம் செய்யும் வேலையும் கிடைக்கவில்லையா? : தாய் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்!

'உறங்கும் பெண்மணி' தோற்றம் : உலகைக் கவரும் அபூர்வ இயற்கை மலைத்தொடர்!

International 06 August 2026
'உறங்கும் பெண்மணி' தோற்றம் : உலகைக் கவரும் அபூர்வ இயற்கை மலைத்தொடர்!
More News
General07 August 2026

குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 15 பேர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதி

இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 15 பேர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபரங்களுக்கு
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 15 பேர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதி
General07 August 2026

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்!

சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) முதல் தங்களது விடுதிகளுக்குத் திரும்ப முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்!
General07 August 2026

கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: காயமடைந்த 11 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள், சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 09 கைதிகள் வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: காயமடைந்த 11 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி
General07 August 2026

வாகனம் செலுத்தும் போது காணொளி பார்க்க வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை

வாகனம் செலுத்தும் போது காணொளிகளைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளதுடன்,சில வினாடி கவனச்சிதறல் கூட பாரிய உயிராபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.பொது பாதுகாப்புத் தொடர்பான விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ள காவல்துறை, காணொளிகளைப் பார்ப்பதற்காக வீதியிலிருந்து கவனத்தைத் திருப்புவதன் மூலம் எதிரே வாகனம், பாதசாரி அல்லது ஏனைய தடைகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முக்கியமான எதிர்வினை நேரத்தை சாரதிகள் இழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது."நீங்கள் பார்க்கும் காணொளியினால் சில வினாடிகள் மட்டுமே வீதியிலிருந்து உங்களது கவனம் திசைதிருப்பப்பட்டாலும், ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து தப்பிப்பதற்கான மதிப்புமிக்க நேரத்தை இழக்கிறீர்கள்" என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன், சாரதிகள் தங்களது உயிரை மட்டுமன்றி பயணிகள், பாதசாரிகளின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையவர்கள் என்பதையும் நினைவூட்டியுள்ளது.பயணத்தை நிறைவு செய்த பின்னரே காணொளிகள் மற்றும் பிற பொழுதுபோக்குகளைப் பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ள காவல்துறை, காணொளிகளைப் பின்னர் பார்க்கலாம்; ஆனால் "இழந்த உயிரை மீண்டும் பெற முடியாது" என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.எனவே, வீதியைப் பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ள காவல்துறை, விபத்துகளின்றி பாதுகாப்பாக இலக்குகளை அடைய சாரதிகள் முழு கவனத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

விபரங்களுக்கு
வாகனம் செலுத்தும் போது காணொளி பார்க்க வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை
General07 August 2026

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம் - நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைப் பிரயோகம்!

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக, நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவிக்கின்றார்.நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சூரியன் செய்திப் பிரிவுக்கு அமைச்சர் குறிப்பிட்டார்.இந்த நிலையில், பதற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபரங்களுக்கு
 குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம் - நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைப் பிரயோகம்!
International News

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு

International 07 August 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு

இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!

International 07 August 2026
இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!

விஜய் – சங்கீதா வழக்கில் பரபரப்பு: தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

International 07 August 2026
விஜய் – சங்கீதா வழக்கில் பரபரப்பு: தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

International 07 August 2026
 தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

காஸாவில் நாளொன்றுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு: தொடரும் இஸ்ரேலின் தாண்டவம்!

International 07 August 2026
காஸாவில் நாளொன்றுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு: தொடரும் இஸ்ரேலின் தாண்டவம்!

நடிகர் சங்கக் கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்: நடிகர் விஷால் தகவல்!

International 07 August 2026
நடிகர் சங்கக் கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்: நடிகர் விஷால் தகவல்!

ஈரான் மீதான போர் 'மிக விரைவில்' முடிவுக்கு வரும் எனத் தாம் நினைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

International 07 August 2026
ஈரான் மீதான போர் 'மிக விரைவில்' முடிவுக்கு வரும் எனத் தாம் நினைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

பாலஸ்தீன நிலத்தில் இருந்து மரங்களை அகற்றும் இஸ்ரேல்!

International 07 August 2026
பாலஸ்தீன நிலத்தில் இருந்து மரங்களை அகற்றும் இஸ்ரேல்!

ஈரான் விடயத்தில் தோல்வியடைந்த அதிகாரிகளை தண்டித்த இஸ்ரேல்!

International 07 August 2026
ஈரான் விடயத்தில் தோல்வியடைந்த அதிகாரிகளை தண்டித்த இஸ்ரேல்!

தனது கின்னஸ் உலக சாதனையைத் தானே மீண்டும் புதுப்பித்த பெண்!

International 07 August 2026
தனது கின்னஸ் உலக சாதனையைத் தானே மீண்டும் புதுப்பித்த பெண்!

ஏமன் படை முகாம்கள் மீது தாக்குதல்: 30 பேர் பலி, பலர் காயம்

International 06 August 2026
ஏமன் படை முகாம்கள் மீது தாக்குதல்: 30 பேர் பலி, பலர் காயம்

தாயகம் திரும்புவதற்கு ஷேக் ஹசீனா தயார் - பங்களாதேஷில் மீண்டும் பதற்றம்

International 06 August 2026
தாயகம் திரும்புவதற்கு ஷேக் ஹசீனா தயார் - பங்களாதேஷில் மீண்டும் பதற்றம்

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

International 06 August 2026
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

800 பச்சை குத்தல்களால் கழிப்பறை சுத்தம் செய்யும் வேலையும் கிடைக்கவில்லையா? : தாய் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்!

International 06 August 2026
800 பச்சை குத்தல்களால் கழிப்பறை சுத்தம் செய்யும் வேலையும் கிடைக்கவில்லையா? : தாய் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்!

'உறங்கும் பெண்மணி' தோற்றம் : உலகைக் கவரும் அபூர்வ இயற்கை மலைத்தொடர்!

International 06 August 2026
'உறங்கும் பெண்மணி' தோற்றம் : உலகைக் கவரும் அபூர்வ இயற்கை மலைத்தொடர்!
Sports Stories
Explore More
பிஃபா தலைவரை தொடர்ந்தும் நெருக்கும் ஐரோப்பிய கால்பந்தாட்ட அமைப்பு!

பிஃபா தலைவரை தொடர்ந்தும் நெருக்கும் ஐரோப்பிய கால்பந்தாட்ட அமைப்பு!

பிஃபா என்ற உலக கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜிஅன்னி இன்ஃபன்டினோவுக்கு (Gianni Infantino) அளிக்கும் ஆதரவை, பிஃபா அமைப்பு நியாயப்படுத்துவது "எதையும் மாற்றப்போவதில்லை" என்று ஐரோப்பிய கால்பந்தாட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் உலகக்கிண்ணம் உட்பட்ட போட்டிகளைப் புறக்கணிக்க ஐரோப்பிய அணிகள் இன்னமும் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்ஃபன்டினோவிற்கான தனது ஆதரவை திரும்பப்பெறுவதாக இங்கிலாந்து கால்பந்து சங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது. இன்ஃபன்டினோவின் திட்டம் கைவிடப்பட்ட போதிலும், தங்களது நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஐரோப்பிய கால்பந்து அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. முதலாவதாக, முக்கிய போட்டிகளை விற்பனை செய்யும் முன்மொழிவுகள் திரும்பப் பெறப்பட வேண்டும், இரண்டாவதாக, கால்பந்து விளையாட்டை இந்த வழியில் சீர்குலைக்கும் இதுபோன்ற முயற்சிகள் இனி ஒருபோதும் மேற்கொள்ளப்படாது என்பதற்கான உறுதிமொழிகள் வழங்கப்பட வேண்டும்" என்று ஐரோப்பிய சங்கம் கோருகிறது. எனினும் இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இலங்கைக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சவாலுக்கு தயார் : பயிற்றுவிப்பாளர் கம்பீர் பதிவு!

இலங்கைக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சவாலுக்கு தயார் : பயிற்றுவிப்பாளர் கம்பீர் பதிவு!

இலங்கைக்கு அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சவாலை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக இருக்க வேண்டும் எனத் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15-ஆம் திகதி காலியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23-ஆம் திகதி கொழும்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் சிறப்பாகச் செயல்படும் இந்திய அணி, சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 எனவும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 0-3 எனவும் இந்திய அணி இழந்திருந்தது. இதன் காரணமாக பயிற்றுவிப்பாளர் கம்பீருக்கு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இந்த இலங்கைத் தொடர் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2025: சிறந்த வீரராக பெத்தும் நிஸ்ஸங்க, வீராங்கனையாக சமரி அதபத்து தேர்வு!

இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2025: சிறந்த வீரராக பெத்தும் நிஸ்ஸங்க, வீராங்கனையாக சமரி அதபத்து தேர்வு!

2025 ஆம் ஆண்டின் சிறந்த இலங்கை கிரிக்கெட் வீரராக தொடக்க ஆட்டக்காரர் பெத்தும் நிஸ்ஸங்க (Pathum Nissanka) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். நேற்று (06) நடைபெற்ற 'இலங்கை கிரிக்கெட் விருதுகள்' வழங்கும் விழாவிலேயே இந்த விருது வழங்கப்பட்டது. அத்துடன், இதில் 2025 ஆம் ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அதபத்து (Chamari Athapaththu) விருதைப் பெற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு முழுவதும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெளிப்படுத்திய திறமைகளைப் பாராட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது விழாவில், உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய பல வீர, வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர். சிறந்த டெஸ்ட் சகலதுறை ஆட்டக்காரருக்கான விருதை தனஞ்சய டி சில்வா (Dhananjaya De Silva ) பெற்றுக்கொண்ட அதேவேளை சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான விருதை பிரபாத் ஜெயசூரிய (Prabath Jayasuriya) பெற்றுக்கொண்டார். சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக வனிது ஹசரங்க (Wanindhu Hasaranga) விருதினை பெற்றுக்கொண்டதோடு , சிறந்த துடுப்பாட்டக் காரருக்கான விருதை சரித் அசலங்க (Charith Asalanka) பெற்றுக்கொண்டார். 2025 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளராக அசித பெர்னாண்டோ (Asitha Fernando) கௌரவிக்கப்பட்டதோடு, 2025 ஆம் ஆண்டின் சிறந்த இருபதுக்கு 20 பந்துவீச்சாளராக துஷ்மந்த சமீர (Dushmantha Chameera) விருதைப் பெற்றுக் கொண்டார். அத்துடன், கடந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர் மற்றும் சகலதுறை வீராங்கனையாக சமரி அதபத்து (Chamari Athapaththu) விருதுகளைப் பெற்ற நிலையில், சிறந்த துடுப்பாட்டக்காரராக ஹர்ஷிதா சமரவிக்ரம (Harshitha Samarawickrama) விருது பெற்றார்.

விபரங்களுக்கு
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்: ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம்!

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்: ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம்!

குயின்ஸ் பார்க் ஓவல் (Queen's Park Oval) மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 344 ஓட்டங்களை பெற்றது.இதையடுத்து தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் 387 ஓட்டங்களை பெற்றது.இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை பெற்றதையடுத்து 75 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 77 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியுள்ளது.இந்த வெற்றியின் மூலம் வெளிநாட்டு மண்ணில் கடந்த 8 டெஸ்ட் போட்டிகளாக வெற்றி பெறாமல் இருந்த பின்னடைவுக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.மேலும், கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தான் அணி பதிவு செய்த முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.இந்த வெற்றியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (2025-2027) புள்ளிப்பட்டியலுக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி 8 ஆம் இடத்தில் உள்ளது.இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி மோதவுள்ள இந்திய மற்றும் இலங்கை அணிகள் புள்ளிப்பட்டியலில் முறை 5 மற்றும் 6 ஆம் இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இங்கிலாந்து, அயர்லாந்து தொடர் தோல்விகள்: பிசிசிஐயின் ஆய்வுக் கூட்டம் தள்ளிப்போவது ஏன்?

இங்கிலாந்து, அயர்லாந்து தொடர் தோல்விகள்: பிசிசிஐயின் ஆய்வுக் கூட்டம் தள்ளிப்போவது ஏன்?

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடர்கள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகள் குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) நடத்தவிருந்த முக்கிய ஆய்வுக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளரான தேவஜித் சைகியா (Devajit Saikia) திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளதே இந்த ஆய்வுக் கூட்டம் தாமதமாவதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு விரைவில் நடைபெறும் என்றும், அதில் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கெளதம் கம்பீர் இணையவழியில் (virtually) பங்கேற்பார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற இருபதுக்கு 20 தொடர்களில் அயர்லாந்திடம் 2-0 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்த இந்திய அணி, அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடர்களையும் இழந்தது. 2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற தலைவர் சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் புதிய டி20 தலைவராகப் பொறுப்பேற்ற நிலையில், இந்திய அணி சந்தித்த தொடர்ச்சியான பின்னடைவுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. இந்த தோல்விகள் குறித்துப் பேசிய தேவஜித் சைகியா, "இது இந்திய அணி சந்தித்துள்ள தற்காலிகமான ஒரு மோசமான கட்டம் மட்டுமே" என்று தெரிவித்துள்ளார். அதேவேளை வரவிருக்கும் ஆய்வுக் கூட்டத்தில் அணியின் செயல்பாடுகள் மற்றும் தவறுகளைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து மட்டுமே தீவிரமாக ஆலோசிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இலங்கை வரவுள்ள சாய் சுதர்சன்: இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என எதிர்பார்ப்பு!

இலங்கை வரவுள்ள சாய் சுதர்சன்: இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என எதிர்பார்ப்பு!

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் இந்திய அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான சாய் சுதர்சன், இந்த வார இறுதிக்குள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெருவிரலில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) தேசிய சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்  தற்போது அவர் மீண்டும் துடுப்பாட்ட பயிற்சியைத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவக் குழுவின் இறுதி அனுமதி கிடைத்தவுடன் இலங்கை வந்து சேரவுள்ள நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி மைதானத்தில் தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் முழு உடற்தகுதியுடன் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என ஏதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
போட்டிபோடும் அணிகள் : வாய்ப்பை தக்கவைப்பாரா வினீசியஸ் ஜூனியர் ?

போட்டிபோடும் அணிகள் : வாய்ப்பை தக்கவைப்பாரா வினீசியஸ் ஜூனியர் ?

பிரேஸில் கால்பந்தாட்ட அணியின் ஆட்டக்காரரான வினீசியஸ் ஜூனியரை (Vinicius Jr) அணியில் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் (Real Madrid) கால்பந்து கழகம் அவருக்கு மேம்படுத்தப்பட்ட புதிய ஒப்பந்த முன்மொழிவை வழங்கியுள்ளது. 26 வயதான வினீசியஸ் ஜூனியரின் ஒப்பந்தத்தில் கடைசி 12 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அவரை ஒப்பந்தம் செய்ய இங்கிலாந்தின் ஆர்சனல் (Arsenal) கால்பந்து கழகம் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது ரியல் மெட்ரிட் வழங்கியுள்ள புதிய நிபந்தனைகளை வினீசியஸ் ஜூனியர் சாதகமாகப் பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீண்டும் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள ஜோஸ் மொரின்ஹோ (Jose Mourinho) உள்ளிட்ட ரியல் மெட்ரிட் அணியின் உயர்மட்ட நிர்வாகிகள், வினீசியஸ் ஜூனியர் புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஒருவேளை அவர் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தால், அவரை வாங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த ஆர்சனல் (Arsenal) கால்பந்து கழகம் தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
தனது லயோலா கல்லூரி சிரேஷ்ட மாணவர், தனது வகுப்பு மாணவரைக் கைது செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை

தனது லயோலா கல்லூரி சிரேஷ்ட மாணவர், தனது வகுப்பு மாணவரைக் கைது செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை

தனது லயோலா கல்லூரி சிரேஷ்ட மாணவர், தன்னுடைய வகுப்பு மாணவரைக் கைது செய்வார் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரட்டை அர்த்தப் பேச்சு வழக்கில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மூவரும் லயோலா கல்லூரியில் பயின்றவர்கள் என்பதை நினைவுகூர்ந்த விஷால், சிரேஷ்ட மாணவர் தன்னுடைய வகுப்பு மாணவரைக் கைது செய்வார் என கல்லூரியில் படிக்கும்போது கனவில் கூட நினைக்கவில்லை என்றார். உதயநிதி பலவற்றைப் பார்த்திருப்பதாகவும், அவர் பேசியது தவறு என்பதற்காகவே காவல்துறையினர் அவரைக் கைது செய்ததாகவும் விஷால் தெரிவித்தார். உதயநிதியைக் கைது செய்த நடவடிக்கையைத் தவிர்த்திருக்கலாம் என்ற விவாதமும் எழுந்ததாகக் குறிப்பிட்ட விஷால், அரசியல் என்றால் இதுதான் என்றும் கூறினார். புதிதாக வந்திருக்கும் ஆட்சியை விமர்சிக்கும்போது எதிர்க்கட்சிகள் எதிர்வினையைச் சந்திக்க நேரிடும் எனவும், கடந்த ஆட்சிகளிலும் இதற்கான உதாரணங்கள் பல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விபரங்களுக்கு
'ஜனநாயகன்' தந்த விழிப்புணர்வு: 'குட் டச், பேட் டச்' காட்சியால் தைரியம் பெற்ற 8 வயது சிறுமி

'ஜனநாயகன்' தந்த விழிப்புணர்வு: 'குட் டச், பேட் டச்' காட்சியால் தைரியம் பெற்ற 8 வயது சிறுமி

தளபதி விஜய் நடிப்பில் வெளியான "ஜனநாயகன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "குட் டச், பேட் டச்" (Good Touch, Bad Touch) விழிப்புணர்வுக் காட்சியத்தைப் பார்த்த 8 வயது சிறுமி ஒருவர், தன்னிடம் நபர் ஒருவர் அத்துமீறியமை குறித்து தனது தந்தையிடம் தைரியமாகத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படமான "ஜனநாயகன்" கடந்த மாதம் 23 ஆம் திகதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகளவில் இந்த திரைப்படம் 300 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், குறித்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "குட் டச், பேட் டச்" விழிப்புணர்வுக் காட்சியத்தைப் பார்த்த சிறுமி, தன்னிடம் நபர் ஒருவர் அத்துமீறியமை குறித்துத் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில், அவரது தாயார் வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் மீது சிறுமியின் தந்தை முறைப்பாடு அளித்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பேரில், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
நடிகை திரிஷா முதலமைச்சர் ஆவார்! இயக்குநர் ஒருவரின் கணிப்பு

நடிகை திரிஷா முதலமைச்சர் ஆவார்! இயக்குநர் ஒருவரின் கணிப்பு

25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா குறித்து, 'ஜோடி' திரைப்படத்தின் இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. 1999-இல் தாம் இயக்கிய 'ஜோடி' படப்பிடிப்பின் போது, 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த திரிஷா, அனுபவத்திற்காகவே அதில் பங்கேற்றார். திரையுலகில் ஆர்வமில்லாமல் இருந்த திரிஷாவுக்கு 'லேசா லேசா' வாய்ப்பு கிடைத்தது. பின்னர் மிஸ் சென்னை பட்டம் வென்று முன்னணி நடிகையானார். 'ஜோடி' படப்பிடிப்பின் போதே திரிஷாவின் ஜாதகத்தைப் பார்த்த பிரவீன் காந்தி, அவர் சினிமாவில் நீண்ட காலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும், "ஒரு நாள் முதலமைச்சர் ஆகும் யோகம் கொண்டவர்" என்றும் அவரது தாயாரிடம் கணித்துக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மதுரையில் திரிஷாவை அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய்யின் ரசிகர்கள் பிரவீன் காந்தியின் இந்தக் கருத்துக்கு இணையத்தில் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

விபரங்களுக்கு
ஜேசன் சஞ்சய்யின் நேர்காணலுக்கு சங்கீதா போட்ட நிபந்தனை : அனைவரையும் வியக்க வைத்த சம்பவம்!

ஜேசன் சஞ்சய்யின் நேர்காணலுக்கு சங்கீதா போட்ட நிபந்தனை : அனைவரையும் வியக்க வைத்த சம்பவம்!

நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், அண்மையில் தமிழகத்தின் பிரபல தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. குறித்த நேர்காணலில் சஞ்சய் வழங்கிய அமைதியான, தெளிவான மற்றும் நேர்த்தியான பதில்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த சில நாட்களாக இந்த நேர்காணல் மற்றும் சஞ்சய் குறித்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. சஞ்சய்யிடம் அவரது திரைப்படம் தொடர்பான கேள்விகளே பெரும்பாலும் கேட்கப்பட்டதாகவும், அதனுடன் விஜய், தாய் சங்கீதா, தங்கை ஷாஷா உள்ளிட்ட குடும்பம் தொடர்பான சில கேள்விகளுக்கும் அவர் பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்ட சில சர்ச்சைக்குரிய கேள்விகளைத் தவிர்த்து, சஞ்சய் மிகவும் முதிர்ச்சியான முறையில் பதிலளித்தமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், நேர்காணலுக்கு முன்பாக கேள்விகள் தொடர்பாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், குடும்பம் சார்ந்த தனிப்பட்ட விடயங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை. சஞ்சய்யின் எதிர்கால பயணத்திற்கு குடும்பப் பிரச்சினைகள் தாக்கம் ஏற்படுத்தக் கூடாது என்பதில் அவரது தாய் சங்கீதா கவனம் செலுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, நேர்காணலில் சஞ்சய் எந்த எதிர்மறையான கருத்துக்களையும் வெளியிடாமல், மிகவும் நிதானமாகவும் அறிவார்ந்த முறையிலும் பதிலளித்தமைக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரது பேச்சு மற்றும் அணுகுமுறையை விஜய்யுடன் ஒப்பிட்டு கருத்துகளைப் பகிர்ந்துள்ள நிலையில், சஞ்சய்யின் இந்த முதற்கட்ட ஊடகப் பயணம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

விபரங்களுக்கு
அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் ஷாருக் கான்? படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்

அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் ஷாருக் கான்? படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் ஷாருக் கான் இணைந்துள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் திரைப்படக் குழு விளக்கமளித்துள்ளது. அதன்படி, ‘ராக்கா’ திரைப்படத்தில் நடிகர் ஷாருக் கான் நடிக்கவில்லை என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் குறித்த திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இருப்பினும், எதிர்காலத்தில் இந்த திரைப்படத்தில் ஷாருக் கான் நடிப்பாரா என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விபரங்களுக்கு
மருத்துவ உலகின் மறுபக்கத்தை பேசும் ‘செய் செய்யாதே’ – சிறப்புத் தோற்றத்தில் எச். ராஜா

மருத்துவ உலகின் மறுபக்கத்தை பேசும் ‘செய் செய்யாதே’ – சிறப்புத் தோற்றத்தில் எச். ராஜா

மருத்துவ விழிப்புணர்வு, குடும்ப உறவுகள் மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘செய் செய்யாதே’. மருத்துவத் துறையின் மனிதநேயப் பார்வையை பதிவு செய்யும் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், இந்திய அரசியல் தலைவர் எச். ராஜா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கதையின் முக்கியமான பகுதியில் இடம்பெறும் அவரது கதாபாத்திரம் படத்தின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, அமெரிக்காவைச் சேர்ந்த பி.எஸ்.சி. நர்சிங் பட்டதாரி சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ளார். மருத்துவரும் திரைப்பட இயக்குநருமான எஸ். ராஜா இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்காவில் மருத்துவத் துறையில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ விழிப்புணர்வு கருத்துகளை சினிமா வடிவில் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கதாநாயகனாக குரு விஜய் நடித்துள்ள நிலையில், மருத்துவர்களின் பங்களிப்பு, நோயாளிகளின் நம்பிக்கை, செவிலியர்கள் மற்றும் சுகாதார அமைப்பின் முக்கியத்துவம் உள்ளிட்ட விடயங்களை திரைப்படம் பேசுகிறது. திருநெல்வேலி, கொடைக்கானல் மற்றும் மதுரை பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், சுமார் ரூ.4 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் எஸ். ராஜா, தர்ஷினி ரெட்டி, டபிதா குணரத்தினே, மோனிகா ப்ரீத்தி வி, குழந்தை நட்சத்திரம் பிரதீக்ஷா மனோ பிரஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ராம்நாடு பி. வாசு மேற்கொண்டுள்ளதுடன், தேசிய திரைப்பட விருது பெற்ற படத்தொகுப்பாளர் ராஜா முகமது படத்தொகுப்பை கவனித்துள்ளார். “மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல, அது மனிதநேயம், நம்பிக்கை மற்றும் பொறுப்பின் வெளிப்பாடு என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த திரைப்படத்தின் நோக்கம்” என இயக்குநர் எஸ். ராஜா தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு

"இந்த ஜென்மத்திற்கு விடை பெறுகிறேன்" : 'சீதா ராமம்' திரைப்படம் குறித்து வெளியாகியுள்ள நெகிழ்ச்சி தகவல்!

துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூர் நடித்த 'சீதா ராமம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. காதல் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இந்த திரைப்படம், வெளியாகியபோது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. திரைப்படம் வெளியாகி நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, படக்குழுவினர் சமூக வலைத்தளங்கள் மூலம் படத்தின் நினைவுகளைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அந்த பதிவுகளில், திரைப்படத்தின் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற "இந்த ஜென்மத்திற்கு விடை பெறுகிறேன்... Princess... நூர்ஜஹான்" என்ற வசனத்தையும் குறிப்பிட்டு, படத்துடனான இனிய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து, ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் திரைப்படத்தின் மறக்க முடியாத காட்சிகள், பாடல்கள் மற்றும் வசனங்களைப் பகிர்ந்து, 'சீதா ராமம்' திரைப்படத்தின் நான்காவது ஆண்டு நிறைவைக் கொண்டாடி வருகின்றனர்.

விபரங்களுக்கு
தமிழக பாதீடு அறிக்கை தாக்கலில் ஜெபமாலை : அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பிய விவாதம்!

தமிழக பாதீடு அறிக்கை தாக்கலில் ஜெபமாலை : அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பிய விவாதம்!

தமிழக பாதீடு அறிக்கை தாக்கலின்போது நிதி அமைச்சர் ஜெபமாலையுடன் வந்தது அவரது தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசியல் விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ஒருவரின் தனிப்பட்ட மத நம்பிக்கையை அரசியல் சர்ச்சையாக மாற்றக் கூடாது என்ற கருத்தையும் முன்வைத்தார். இதனையடுத்து, அரசியல் விமர்சகர் மருத்துவர் ஷர்மிளா சமூக வலைத்தளத்தில் பதிலளித்து, "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இராமர் சிலையுடன் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ வந்தாலும் இதையே சொல்வீர்களா சேர்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் தரப்புகளிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////