Top Story
இலங்கையில் கடந்த ஆண்டில் பல உயர்மட்டக் குற்றவியல் விசாரணைகள், ஊழல் எதிர்ப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் மனித உரிமைகள் முன்னெடுப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஆழமான சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களுக்கான வேகம் மந்தமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் எச்சரித்துள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உரையாற்றிய மனித உரிமைகளுக்கான ஐநா பிரதி உயர்ஸ்தானிகர் அவா டாபோ (Awa Dabo),மாற்றத்திற்கான ஆணையுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நேர்மறையான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் படுகொலை தொடர்பான குற்றப்பத்திரிகைத் தாக்கல், முன்னாள் உளவுத்துறை பிரதானியின் கைது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்பன சுட்டிக்காட்டப்பட்டன.

அத்துடன், இனவாதம் மற்றும் மதவாத அரசியலுக்கு எதிரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தொடர்ச்சியான கருத்துக்கள், 2025 ஆம் ஆண்டு நவம்பர் சூறாவளி மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் ஐநா வரவேற்றுள்ளது.

இருப்பினும், பரந்த அளவிலான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் வரம்பிற்குட்பட்டதாகவே உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.

ஆயுத மோதல் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக எவ்வித அர்த்தமுள்ள முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் மீதான அச்சறுத்தல்கள் தொடர்வதாகவும் அவா டாபோ சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து சுயாதீனமாக இயங்கும் 'சுயாதீன வழக்கு தொடுநர்' (Independent Public Prosecutor) பொறிமுறையை நிறுவும் வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், காவல்துறை மற்றும் இராணுவக் கட்டமைப்புகளில் தீவிர மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்தும், முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில ஆபத்தான சரத்துக்கள் குறித்தும் ஐநா மனித உரிமைகள் அலுவலகம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், இலங்கையின் கடன் சுமை ஒரு முக்கிய மனித உரிமைப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி உயர்ஸ்தானிகர், 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் அரச வருவாயில் சுமார் 82 சதவீதம் கடன் வட்டி மற்றும் கடன் மீள் செலுத்தலுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இது சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்தத் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதால், இலங்கைக்கு மேலதிக அபிவிருத்தி உதவிகள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
விபரங்களுக்கு
General08 September 2026
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் வரம்பிற்குட்பட்டதாகவே உள்ளது - ஐநா மனித உரிமைகள் அலுவலகம்
Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

சட்டவிரோத நடவடிக்கைகளால் பறிபோன சலுகை: தாய்லாந்துக்கான இலவச விசா வசதி திடீர் ரத்து!

General 08 September 2026
சட்டவிரோத நடவடிக்கைகளால் பறிபோன சலுகை: தாய்லாந்துக்கான இலவச விசா வசதி திடீர் ரத்து!

உள்நாட்டு பொறிமுறையிலேயே பொறுப்புகூறலில் நிலையான முன்னேற்றம் ஏற்படும் - ஜெனீவாவில் இலங்கை வலியுறுத்து!

General 08 September 2026
உள்நாட்டு பொறிமுறையிலேயே பொறுப்புகூறலில் நிலையான முன்னேற்றம் ஏற்படும் - ஜெனீவாவில் இலங்கை வலியுறுத்து!

20 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.450 கோடி நிவாரணம்

General 08 September 2026
20 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.450 கோடி நிவாரணம்

கொழும்பில் சர்வதேச மரதன் போட்டி - உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு!

General 08 September 2026
கொழும்பில் சர்வதேச மரதன் போட்டி - உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு!

அரச நிறுவனங்களில் டிஜிட்டல் புரட்சி: அனைத்துத் துறைகளிலும் புதிய அலகுகளை நிறுவ அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

General 08 September 2026
அரச நிறுவனங்களில் டிஜிட்டல் புரட்சி: அனைத்துத் துறைகளிலும் புதிய அலகுகளை நிறுவ அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

பலத்த காற்று குறித்த எச்சரிக்கை

General 08 September 2026
பலத்த காற்று குறித்த எச்சரிக்கை
International News

சட்டமன்ற உடல்மொழி சர்ச்சை குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்

International 08 September 2026
சட்டமன்ற உடல்மொழி சர்ச்சை குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்

ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல் : பாரிஸில் பரபரப்பு!

International 08 September 2026
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல் : பாரிஸில் பரபரப்பு!

உலக நாடுகளின் பார்வையை ஈர்த்த வட கொரியா - ரஷ்யா இணைப்புப் பாலம் திறப்பு!

International 08 September 2026
உலக நாடுகளின் பார்வையை ஈர்த்த வட கொரியா - ரஷ்யா இணைப்புப் பாலம் திறப்பு!

16 மணி நேர நரகம், 21 உயிரிழப்புகள்: வானூர்தி கடத்தலில் தப்பிய 15 வயதுச் சிறுமியின் இன்றைய நெகிழ்ச்சிப் பதிவு!

International 08 September 2026
16 மணி நேர நரகம், 21 உயிரிழப்புகள்: வானூர்தி கடத்தலில் தப்பிய 15 வயதுச் சிறுமியின் இன்றைய நெகிழ்ச்சிப் பதிவு!

2030ஆம் ஆண்டுக்குள் விலங்குகளுடன் மனிதர்கள் உரையாட முடியுமா? AI ஆய்வில் புதிய தகவல்

International 08 September 2026
2030ஆம் ஆண்டுக்குள் விலங்குகளுடன் மனிதர்கள் உரையாட முடியுமா? AI ஆய்வில் புதிய தகவல்

தமிழக சட்டமன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக - பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள்!

International 08 September 2026
தமிழக சட்டமன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக - பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள்!

ஆபத்தில் திபெத் பீடபூமி : வேகமாக மறையும் பனிப்பாறைகள் - பேராபத்து காத்திருக்கிறதா?

International 08 September 2026
ஆபத்தில் திபெத் பீடபூமி : வேகமாக மறையும் பனிப்பாறைகள் - பேராபத்து காத்திருக்கிறதா?

"சினிமா பாணியில் உரை - மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது" : முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி!

International 08 September 2026
"சினிமா பாணியில் உரை - மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது" : முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி!

முதலமைச்சர் விஜய் உருவக்கேலி செய்தமை கண்டிக்கும் முக்கிய கட்சி

International 08 September 2026
முதலமைச்சர் விஜய் உருவக்கேலி செய்தமை கண்டிக்கும் முக்கிய கட்சி

இராணுவ பயன்பாட்டிற்காக மனிதவடிவ ரோபோக்களை சோதனை செய்யும் சீனா!

International 08 September 2026
இராணுவ பயன்பாட்டிற்காக மனிதவடிவ ரோபோக்களை சோதனை செய்யும் சீனா!

விஜய்யின் 'சுறா' பட நகைச்சுவைக் காட்சி - வைரலாகும் உதயநிதியின் இன்ஸ்டாகிராம் பதிவு

International 08 September 2026
விஜய்யின் 'சுறா' பட நகைச்சுவைக் காட்சி - வைரலாகும் உதயநிதியின் இன்ஸ்டாகிராம் பதிவு

அமெரிக்கா - ஈரான் போரினால், எண்ணெய் விலையில் பாரிய அதிகரிப்பு

International 08 September 2026
அமெரிக்கா - ஈரான் போரினால், எண்ணெய் விலையில் பாரிய அதிகரிப்பு

“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !

International 08 September 2026
“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !

மேற்குக் கரைப் பாடசாலைகளில் பாலஸ்தீன பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் வன்முறையும்!

International 08 September 2026
மேற்குக் கரைப் பாடசாலைகளில் பாலஸ்தீன பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் வன்முறையும்!

ஈரானின் உள்நாட்டு நிலவரம் மற்றும் மோதல்கள்!

International 08 September 2026
ஈரானின் உள்நாட்டு நிலவரம் மற்றும் மோதல்கள்!
More News
General08 September 2026

அம்பிட்டியே சுமனரதன தேரருக்கு விளக்கமறியல்

அம்பிட்டியே சுமனரதன தேரரை எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
அம்பிட்டியே சுமனரதன தேரருக்கு விளக்கமறியல்
General08 September 2026

செப்.19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கை பயணிகள் மட்டுமன்றி, பின் இருக்கைப் பயணிகளும் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஆசனப்பட்டிகளைப் பொருத்துவதற்கோ அல்லது பழுதுபார்ப்பதற்கோ பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு, இந்த ஒழுங்குமுறை அமுல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.இருப்பினும், செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்தத் திகதிக்குப் பிறகு எந்தவொரு சாக்குப்போக்குகளுக்கு இடமோ அல்லது மேலதிக கால அவகாசமோ வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

விபரங்களுக்கு
செப்.19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்!
General08 September 2026

சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம்: சானக மதுகொட குற்றச்சாட்டு!

சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூலக்கேள்வி நேரத்திலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். சதொசவில் பொருட்கள் வாங்குவதற்காகச் செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும், ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தனியார் பல்பொருள் அங்காடிகளை விடவும் சதொசவில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது அரசாங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு உறுதிமொழியைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய வர்த்தக அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, கடனில் மூழ்கியிருந்த சதொச நிறுவனத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு எடுத்து வருவதாகத் தெரிவித்தார். கேள்விப்பத்திர முறையிலான கொள்முதல் தாமதங்களே பொருள் தட்டுப்பாடிற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அனைத்து மாவட்டங்களிலும் மொத்த விநியோகக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு, வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார்.

விபரங்களுக்கு
சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம்: சானக மதுகொட குற்றச்சாட்டு!
General08 September 2026

மஹிந்த தலைமையில் அனுராதபுர பேரணி: ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து!

அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து தெரிவிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
மஹிந்த தலைமையில் அனுராதபுர பேரணி: ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து!
General08 September 2026

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய அடையாள பணிப்புறக்கணிப்பு

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் நாளை (09) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. விரிவுரையாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்தச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.நாட்டின் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் விரிவுரையாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய அடையாள பணிப்புறக்கணிப்பு
International News

சட்டமன்ற உடல்மொழி சர்ச்சை குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்

International 08 September 2026
சட்டமன்ற உடல்மொழி சர்ச்சை குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்

ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல் : பாரிஸில் பரபரப்பு!

International 08 September 2026
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல் : பாரிஸில் பரபரப்பு!

உலக நாடுகளின் பார்வையை ஈர்த்த வட கொரியா - ரஷ்யா இணைப்புப் பாலம் திறப்பு!

International 08 September 2026
உலக நாடுகளின் பார்வையை ஈர்த்த வட கொரியா - ரஷ்யா இணைப்புப் பாலம் திறப்பு!

16 மணி நேர நரகம், 21 உயிரிழப்புகள்: வானூர்தி கடத்தலில் தப்பிய 15 வயதுச் சிறுமியின் இன்றைய நெகிழ்ச்சிப் பதிவு!

International 08 September 2026
16 மணி நேர நரகம், 21 உயிரிழப்புகள்: வானூர்தி கடத்தலில் தப்பிய 15 வயதுச் சிறுமியின் இன்றைய நெகிழ்ச்சிப் பதிவு!

2030ஆம் ஆண்டுக்குள் விலங்குகளுடன் மனிதர்கள் உரையாட முடியுமா? AI ஆய்வில் புதிய தகவல்

International 08 September 2026
2030ஆம் ஆண்டுக்குள் விலங்குகளுடன் மனிதர்கள் உரையாட முடியுமா? AI ஆய்வில் புதிய தகவல்

தமிழக சட்டமன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக - பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள்!

International 08 September 2026
தமிழக சட்டமன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக - பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள்!

ஆபத்தில் திபெத் பீடபூமி : வேகமாக மறையும் பனிப்பாறைகள் - பேராபத்து காத்திருக்கிறதா?

International 08 September 2026
ஆபத்தில் திபெத் பீடபூமி : வேகமாக மறையும் பனிப்பாறைகள் - பேராபத்து காத்திருக்கிறதா?

"சினிமா பாணியில் உரை - மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது" : முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி!

International 08 September 2026
"சினிமா பாணியில் உரை - மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது" : முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி!

முதலமைச்சர் விஜய் உருவக்கேலி செய்தமை கண்டிக்கும் முக்கிய கட்சி

International 08 September 2026
முதலமைச்சர் விஜய் உருவக்கேலி செய்தமை கண்டிக்கும் முக்கிய கட்சி

இராணுவ பயன்பாட்டிற்காக மனிதவடிவ ரோபோக்களை சோதனை செய்யும் சீனா!

International 08 September 2026
இராணுவ பயன்பாட்டிற்காக மனிதவடிவ ரோபோக்களை சோதனை செய்யும் சீனா!

விஜய்யின் 'சுறா' பட நகைச்சுவைக் காட்சி - வைரலாகும் உதயநிதியின் இன்ஸ்டாகிராம் பதிவு

International 08 September 2026
விஜய்யின் 'சுறா' பட நகைச்சுவைக் காட்சி - வைரலாகும் உதயநிதியின் இன்ஸ்டாகிராம் பதிவு

அமெரிக்கா - ஈரான் போரினால், எண்ணெய் விலையில் பாரிய அதிகரிப்பு

International 08 September 2026
அமெரிக்கா - ஈரான் போரினால், எண்ணெய் விலையில் பாரிய அதிகரிப்பு

“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !

International 08 September 2026
“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !

மேற்குக் கரைப் பாடசாலைகளில் பாலஸ்தீன பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் வன்முறையும்!

International 08 September 2026
மேற்குக் கரைப் பாடசாலைகளில் பாலஸ்தீன பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் வன்முறையும்!

ஈரானின் உள்நாட்டு நிலவரம் மற்றும் மோதல்கள்!

International 08 September 2026
ஈரானின் உள்நாட்டு நிலவரம் மற்றும் மோதல்கள்!
Sports Stories
Explore More
பாகிஸ்தானிய கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம் விதிப்பு!

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம் விதிப்பு!

ஆசியக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியின் போது மைதானத்தில் முறையற்ற செய்கை (gesturing) செய்ததற்காக பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவர் பாத்திமா சனா மீது (Fatima Sana) சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அவரின் போட்டி ஊதியத்தில் (match fee) 10 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக என்ற சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷபாலி வெர்மாவை (Shafali Verma) ஆட்டமிழக்கச் செய்த பின்னர், பாத்திமா சனா ,பார்வையாளர் அரங்கை நோக்கி முறையற்ற விதத்தில் சைகை காட்டியுள்ளார். இது ஐ.சி.சி நடத்தை விதிகளின் கீழ் குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமது தவறை ஒப்புக்கொண்ட சனாவுக்கு அபராதத்துடன், அவரது ஒழுக்கப் பதிவேட்டில் 1 தகுதிக்குறைப்புப் புள்ளியும் (demerit point) சேர்க்கப்பட்டுள்ளது. இது, கடந்த 24 மாதங்களில் அவர் பெறும் இரண்டாவது குற்றமாகும்.

விபரங்களுக்கு
இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்!

இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான, கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen) , இங்கிலாந்து வெள்ளைப் பந்து (ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20) கிரிக்கெட் அணிகளின் சிறப்பு ஆலோசகராகப் (Specialist Mentor) நியமிக்கப்பட்டுள்ளார். 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரை இலக்கு வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடரில் பயிற்றுவிப்பாளராக செயற்படும் பிரெண்டன் மெக்கல்லம் ( Brendon Mccullum) தலைமையிலான நிர்வாகக் குழுவுடன் பீட்டர்சன் இணையவுள்ளார். எதிர்வரும் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான சுற்றுப்பயணங்களின் போதும், எதிர்வரும் உள்நாட்டு தொடர்கள் மற்றும் 2027 உலகக் கிண்ணம் வரையிலான காலப்பகுதி கிரிக்கெட் தொடர் வரையிலும் இவர் இங்கிலாந்து அணியுடன் பணியாற்றுவார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நியமனம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பீட்டரசன் "தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தை வெல்லும் நோக்கில், இந்த அணிக்கு உதவ அழைக்கப்பட்டதை நான் பெரும் பெருமையாகக் கருதுகிறேன்," என தெரிவித்துள்ளார். 2014 இல் சர்வதேசப் போட்டியிலிருந்து ஓய்வுபெற்ற பீட்டர்சன், ஒருநாள் போட்டிகளில் 4,440 ஓட்டங்களையும், இருபதுக்கு 20 போட்டிகளில் 1,176 ஓட்டங்களையும் பெற்றுள்ளதோடு சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) 'ஹால் ஆஃப் ஃபேம்' (Hall Of Fame) விருதை வென்றவருமாவார். அத்துடன் 2010 இல் இங்கிலாந்து இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணியிலும் இவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
பிஃபா தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிஃபா தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனக்கு எதிரான பலத்த விமர்சனங்கள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கிடையில் எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டியிடப் போவதாக உலக கால்பந்தாட்ட சங்கமான பிஃபா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, 2027-இல் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என இன்ஃபான்டினோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கிண்ண ஆரம்ப விழாவின் போது இது குறித்த கேள்விகளை இன்ஃபான்டினோ தவிர்க்க முற்பட்டபோதிலும் பிஃபா செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, உலகக்கிண்ணப் போட்டிகளின் ஒளிபரப்பு மற்றும் வணிக உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் இவரது முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து, ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு உட்பட பல பிராந்தியக் கூட்டமைப்புகள் மற்றும் தேசிய சங்கங்கள் இவருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிஃபாவின் அடுத்த தலைவருக்கான தேர்தல் 2027 மார்ச் 18 அன்று மொராக்கோவின் ரபாத் நகரில் நடைபெறும். இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நவம்பர் 18-க்குள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.

விபரங்களுக்கு
மகளிர் ஆசியக் கிண்ணம் 2026: பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை!

மகளிர் ஆசியக் கிண்ணம் 2026: பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நடைபெற்று வரும் மகளிர் இருபதுக்கு20 ஆசியக் கிண்ண 2026 தொடரின் 'பி' பிரிவில் நடைபெற்ற தீர்க்கமான போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இந்தத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பங்களாதேஷ் அணி சார்பில் சோபனா மோஸ்தாரி (Sobhana Mostary) 34 ஓட்டங்களையும் திலாரா அக்பர் (Dilara Akter) 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சமூதி பிரபோத 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் சுகந்திகா குமாரி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பதிலுக்கு 115 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது. இலங்கை அணியின் வெற்றிக்குச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்ஷிதா சமரவிக்ரம 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைக் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு பக்கபலமாக நிலக்ஷி டி சில்வா 18 ஓட்டங்களையும் இமேஷா துலானி 12 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மருஃபா அக்பர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விபரங்களுக்கு
புடாபெஸ்டில் வரலாற்றுச் சமர்: ஈட்டி எறிதலில் உலகின் முதன்மை வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை வீரன்!

புடாபெஸ்டில் வரலாற்றுச் சமர்: ஈட்டி எறிதலில் உலகின் முதன்மை வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை வீரன்!

டைமண்ட் லீக் தடகளப் போட்டித் தொடர் நேற்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உலகின் முன்னணி தடகள வீரர்கள் போட்டியிடும் வேர்ல்ட் அல்டிமேட் சாம்பியன்ஷிப் (World Ultimate Championship) தடகளப் போட்டித் தொடர் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவும் இந்த போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளார். இதற்கமைய ஈட்டி எறிதல் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போது உலகின் முதன்மை ஈட்டி எறிதல் வீரராகக் கருதப்படும் ருமேஷ் தரங்கவுடன் ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் டிரினிடாட் அண்ட் டுபாகோவின் கேஷோர்ன் வால்காட் உள்ளிட்ட உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்கள் பலர் களமிறங்கவுள்ளனர். இந்த முறை வேர்ல்ட் அல்டிமேட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் வெற்றியாளர்களுக்கு வழங்குவதற்காக உலக தடகளச் சங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கமைய, ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு 1,50,000 அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கிடைக்கவுள்ளதுடன், இது இலங்கை நாணயமதிப்பில் சுமார் 5 கோடி ரூபாயாகும். எனவே, ருமேஷ் தரங்கவுக்கு உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களுடன் போட்டியிட்டு இலங்கைக்காகச் சிறந்த திறமையை வெளிப்படுத்துவதற்கு இது மற்றுமொரு முக்கியமான வாய்ப்பாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
துலீப் கிண்ணம் 2026 இறுதிப்போட்டி: முதல் நாளில் East Zone அணி வலுவான தொடக்கம்!

துலீப் கிண்ணம் 2026 இறுதிப்போட்டி: முதல் நாளில் East Zone அணி வலுவான தொடக்கம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் (Chepauk) தொடங்கி நடைபெற்று வரும் 2026 துலீப் கிண்ண இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், சவுத் சோன் (South Zone) அணிக்கு எதிராகக் ஈஸ்ட் சோன் (East Zone) அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஈஸ்ட் சோன் அணியின் தலைவர் ஈஷன் கிஷன் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஈஸ்ட் சோன் அணி சிறப்பான ஆரம்ப இணைப்பாட்டத்தை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஜோடி முதல் விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களை குவித்தனர். வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்களும் 01 ஆறு ஓட்டமும் அடங்கலாக 44 ஓட்டங்களையும் , அபிமன்யு ஈஸ்வரன் 86 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்களும் 01 ஆறு ஓட்டமும் அடங்கலாக 72 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய ஷிகர் மோகன் 120 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்களும் 03 ஆறு ஓட்டங்களும் அடங்கலாக 85 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அணித்தலைவர் ஈஷன் கிஷன் 14 நான்கு ஓட்டங்களும் 01 ஆறு ஓட்டமும் அடங்கலாக 111 ஓட்டங்களையும் (2 ஆவது துலீப் கிண்ணச் சதம்) அவருக்கு பக்கபலமாக இணைப்பாட்டத்தில் ஈடுபட்ட குமார் குஷாக்ரா 75 பந்துகளில் 04 நான்கு ஓட்டங்களும் 05 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 63 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் உள்ளனர். சவுத் சோன் அணி சார்பில் சாமா மிலிந்த் 2 விக்கெட்டுக்களையும் திரிபுரனா விஜய் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த நிலையில் அனுபவம் வாய்ந்த வீரர்களான மொஹமட் சிராஜ், னிதேஷ், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை .

விபரங்களுக்கு
துலீப் டிராபி 2026: சிராஜின் பந்துவீச்சை விளாசிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி!

துலீப் டிராபி 2026: சிராஜின் பந்துவீச்சை விளாசிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி!

சென்னை சேப்பாக்கம் (chepauk) மைதானத்தில் நடைபெற்று வரும் துலீப் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹட் சிராஜின் ஒரே ஓவரில் 14 ஓட்டங்களை விளாசி 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அசத்தியுள்ளார். சவுத் சோன் (South Zone) அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் முதல் நாளில், ஈஸ்ட் சோன் (East Zone) அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச அனுபவம் வாய்ந்த மொஹட் சிராஜின் பந்துவீச்சை அச்சமின்றி எதிர்கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டியின் 7 ஆவது ஓவரை வீசிய மொஹட் சிராஜின் பந்துவீச்சில் சூர்யவன்ஷி வரிசையாக 4, 6, 4 என ஒரே ஓவரில் 14 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சிராஜ், தனது முதல் 5 ஓவர்களில் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 41 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். 37 பந்துகளில் 5 நான்கு ஓட்டம் மற்றும் 1 ஆறு ஓட்டம் மற்றும் 118.91 துடுப்பாட்ட சராசரியுடன் 44 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிமன்யு ஈஸ்வரனுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 14.4 ஓவர்களில் 100 ஓட்டங்கள் சேர்த்து ஈஸ்ட் சோன் அணிக்குக் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

விபரங்களுக்கு
உலகக் கிரிக்கெட்டுக்கு வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய சொத்தாக இருப்பார்: முன்னாள் வீரர் பாராட்டு!

உலகக் கிரிக்கெட்டுக்கு வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய சொத்தாக இருப்பார்: முன்னாள் வீரர் பாராட்டு!

இந்திய அணியின் 15 வயது இளம் துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யவன்ஷியை முறையாக வழிநடத்தினால், அவர் உலகக் கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராகவும், உலகக் கிரிக்கெட்டுக்கே மிகப்பெரிய சொத்தாகவும் உருவெடுப்பார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (Krishnamachari Srikkanth) பாராட்டியுள்ளார். ஐபிஎல், உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அசத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கே.ஸ்ரீகாந்த் தனது யூடியூப் பக்கத்தில் வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷியைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அவரைச் சரியாக வழிநடத்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டின் பெருமையை மீண்டும் மீட்டெடுக்கும் அளவுக்கு அவர் உலகக் கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்தாக மாறுவார். சிவப்புப் பந்து கிரிக்கெட்டிலும் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை பயமின்றி சிக்ஸருக்குப் பறக்கவிடுகிறார். விரைவில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் அவர் ஆதிக்கம் செலுத்துவார். வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே பலரும் துலீப் டிராபி போட்டிகளைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். தனது மனைவியும் இவரது ஆட்டத்திற்காகவே கிரிக்கெட் பார்க்கிறார் என்றும் ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2026 ஆம் ஆண்டில் தொடர்ந்து வலிமையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.அதன்படி, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ஈட்டப்பட்ட மதிப்பிடப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 10.49 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.5 சதவீத அதிகரிப்பாகும்.ஒட்டுமொத்த ஏற்றுமதிச் செயல்பாட்டிற்குப் பொருட்கள் ஏற்றுமதியே அதிக பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தத் துறை 8.19 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.05 சதவீத அதிகரிப்பாகும். இலங்கை சுங்கத் திணைக்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி மதிப்புகளின் அடிப்படையில், 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. எனினும், இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 1.3 சதவீத சிறிய வீழ்ச்சியைக் குறிக்கிறது.இதற்கிடையில், சேவை ஏற்றுமதித் துறையும் தனது நேர்மறையான வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இந்தத் துறை 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிடப்பட்ட வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.02 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேவை ஏற்றுமதியானது தொடர்ந்து விரிவடைந்து, 2026 ஜூலை மாதத்தில் சுமார் 351.92 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.75 சதவீத அதிகரிப்பாகும்.இதன் விளைவாக, 2026 ஜூலை மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டின் மூலமான இலங்கையின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி வருமானம் சுமார் 1.64 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
இமயம் பாரதிராஜாவின் இறுதித் திரைப்பயணம்... 'புலவர்' சிறு முன்னோட்டம் வெளியீடு!

இமயம் பாரதிராஜாவின் இறுதித் திரைப்பயணம்... 'புலவர்' சிறு முன்னோட்டம் வெளியீடு!

மறைந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா நடிகராகப் பங்களித்த கடைசி திரைப்படமான ‘புலவர்’ படத்தின் சிறு முன்னோட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் சிறு முன்னோட்டம் பிரபல நடிகர் ஆர்யா வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பாரதிராஜாவின் திரைப்பயணத்தில் அவர் நடிகராக முத்திரை பதித்த இறுதிப் படம் இதுவென்பதால், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் திகதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது த்ரிஷா அனுப்பிய அந்த ஒரு குறுஞ்செய்தி : மாளவிகா மோகனன் பகிர்ந்த இரகசியம்!

விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது த்ரிஷா அனுப்பிய அந்த ஒரு குறுஞ்செய்தி : மாளவிகா மோகனன் பகிர்ந்த இரகசியம்!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும், தனக்கு முதலில் குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்து தெரிவித்தவர் நடிகை த்ரிஷா என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை த்ரிஷா குறித்து பேசிய மாளவிகா மோகனன், ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த தகவல் வெளியானதும், முதலில் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்து தெரிவித்தது த்ரிஷாதான் எனக் குறிப்பிட்டுள்ளார். “ஹே பேப், இது பெரிய விஷயம். சூப்பரா பண்ணு” என த்ரிஷா தனக்கு குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்து தெரிவித்ததாக மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ரவி மோகன் – கெனிஷா புகைப்பிடிக்கும் காட்சியால் பரபரப்பு : கோவா காணொளியால் பரவும் புதிய சர்ச்சை!

ரவி மோகன் – கெனிஷா புகைப்பிடிக்கும் காட்சியால் பரபரப்பு : கோவா காணொளியால் பரவும் புதிய சர்ச்சை!

நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சை மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருவரும் பிரிந்துவிட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இருவரும் கோவாவில் ஒன்றாக இருப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் கடந்த 2024ஆம் ஆண்டு விவாகரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனுக்கும் கெனிஷா பிரான்சிஸுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆர்த்தி தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும், கெனிஷா தனக்கு மனநல ஆலோசனை வழங்கும் நெருங்கிய நண்பர் மட்டுமே என ரவி மோகன் முன்னதாக விளக்கம் அளித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளில் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் காணப்பட்டதுடன், ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்திலும் கெனிஷா இணைந்து செயல்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கிடையில், இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் பரவியதுடன், கெனிஷா தன்னை விட்டுச் சென்றுவிட்டதாக ரவி மோகன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது கோவாவில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த காணொளியில் இருவரும் புகைப்பிடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருவதுடன், இருவரின் தற்போதைய உறவு நிலை குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளும் எழுந்துள்ளன. எனினும், காணொளி எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், இந்த காணொளி தொடர்பாக ரவி மோகன் அல்லது கெனிஷா பிரான்சிஸ் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரபூர்வமான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. ஆர்த்தி – ரவி மோகன் விவாகரத்து விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களில் பல ரசிகர்கள் ரவி மோகனுக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டு வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள காணொளியைத் தொடர்ந்து சிலர் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கருத்துகளைப் பதிவிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபரங்களுக்கு
லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றுந்து பந்தயத்தை நேரில் காண முதலமைச்சர் விஜய் திட்டம்?

லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றுந்து பந்தயத்தை நேரில் காண முதலமைச்சர் விஜய் திட்டம்?

லண்டனில் நடைபெறவுள்ள சர்வதேச சிற்றுந்து பந்தயத்தில் பிரபல நடிகரும் சிற்றுந்து பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்கவுள்ள நிலையில், அந்தப் போட்டியை நேரில் பார்வையிட முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் குமார் சர்வதேச அளவில் நடைபெறும் 'Michelin Le Mans Cup' சிற்றுந்து பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். இதன் அடுத்தகட்ட போட்டிகள் லண்டனில் எதிர்வரும் 11 மற்றும் 12-ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணமும் திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் லண்டன் பயணமும், அஜித் குமார் பங்கேற்கும் சிற்றுந்து பந்தய நிகழ்வும் ஒரே நேரத்தில் அமைவதால், இந்த போட்டியை விஜய் நேரில் சென்று காணக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே சமயத்தில் இரு முன்னணி நட்சத்திரங்களின் நிகழ்வுகள் லண்டனில் அமைந்திருப்பது ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
சோம்பேறித்தனத்திற்கு கிடைத்த விசித்திர தண்டனை: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இளைஞரின் ஏஐ லீலை!

சோம்பேறித்தனத்திற்கு கிடைத்த விசித்திர தண்டனை: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இளைஞரின் ஏஐ லீலை!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான ஈரண்ணா என்ற இளைஞர், தோட்டத்தில் வேலை செய்வதற்கு குடும்பத்தினர் தொடர்ந்து வற்புறுத்தியதால், அதற்குச் செல்லாமல் தவிர்க்க வித்தியாசமான திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனது தோட்டத்தில் புலி ஒன்று நடமாடுவது போன்ற போலிப் புகைப்படத்தை உருவாக்கியுள்ளார். பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி, அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலிப் படம் என்பது தெரியவந்துள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட இளைஞர் ஈரண்ணாவிற்கு, வித்தியாசமான தண்டனையாக 50 தோப்புக்கரணம் போட வைத்து எச்சரித்து வனத்துறையினர் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. .

விபரங்களுக்கு
கடவுள் தந்த பரிசு: ராமராஜன் - இளையராஜா இணையும் 25வது படத்தின் மாஸ் டைட்டில்!

கடவுள் தந்த பரிசு: ராமராஜன் - இளையராஜா இணையும் 25வது படத்தின் மாஸ் டைட்டில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராமராஜன் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'கடவுள் தந்த பரிசு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா மற்றும் ராமராஜன் இணைப்பில் உருவாகும் 25-வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் காசிமாயன் இயக்க உள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனுடன் இணைந்து பிரபல நகைச்சுவை நடிகர்களான செந்தில் மற்றும் கோவை சரளா ஆகியோர் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இளையராஜாவின் இசை, ராமராஜனின் கதாநாயகன் அந்தஸ்து, மற்றும் செந்தில் - கோவை சரளா கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
விரைவில் வெளியாகிறது ரவி மோகன் - கெனிஷா கூட்டணியின் முதல் பாடல்: பின்னணி விவரங்கள் இதோ!

விரைவில் வெளியாகிறது ரவி மோகன் - கெனிஷா கூட்டணியின் முதல் பாடல்: பின்னணி விவரங்கள் இதோ!

இயக்குநர் ரவி மோகன் இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் ‘An Ordinary Man’ திரைப்படத்தின் மூலம் கெனிஷா ஃபிரான்சிஸ் இசையமைப்பாளராகத் திரையுலகில் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே, நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் இருவரும் பிரிந்துவிட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், அண்மையில் இருவரும் கோவாவில் ஒன்றாகச் சுற்றுலா சென்றதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியைத் தொடர்ந்து, இருவரது உறவு தொடர்பாக இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
போயஸ் கார்டனில் ரஜினிகாந்துடன் புதிய சங்க நிர்வாகிகள் சந்திப்பு: வெளியான முக்கிய அறிவிப்பு!

போயஸ் கார்டனில் ரஜினிகாந்துடன் புதிய சங்க நிர்வாகிகள் சந்திப்பு: வெளியான முக்கிய அறிவிப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புதிய உறுப்பினராக இணைய நடிகர் ரஜினிகாந்த் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் இயக்குனர் சேரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, சங்க நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணையுமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சங்கத்தில் புதிய உறுப்பினராக இணையச் சம்மதம் தெரிவித்ததுடன், புதிய நிர்வாகிகளுக்குத் தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்கியுள்ளார்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////