Top Story
நாட்டின் பல சிறைச்சாலைகளில் கடந்த சில நாட்களாகப் பதிவாகியுள்ள அமைதியின்மை நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 18 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற அமைதியின்மைச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், காவல்துறை மாஅதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறைக் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உரிய பொறிமுறையொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறினால், இந்த விடயத்தை ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா எச்சரித்துள்ளார்.
விபரங்களுக்கு
General09 August 2026
சிறைச்சாலை அமைதியின்மை: உயர் அதிகாரிகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை!
Video of the Day
Latest TV News Bulletin
International News

சவூதி அராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதிகள் தாக்குதல்: தீ முழுமையாகக் கட்டுப்பாடு

International 10 August 2026
சவூதி அராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதிகள் தாக்குதல்: தீ முழுமையாகக் கட்டுப்பாடு

மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு!

International 10 August 2026
மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு!

டொல்பின்' சூறாவளி தாக்குதல்: சீனாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

International 10 August 2026
டொல்பின்' சூறாவளி தாக்குதல்: சீனாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசி தாக்குதல்.!

International 09 August 2026
கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசி தாக்குதல்.!

காசாவுக்கான டொனால்ட் ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு!

International 09 August 2026
காசாவுக்கான டொனால்ட் ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு!

உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு!

International 09 August 2026
உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு!

மரங்களை கட்டியணைத்து கதறியழும் பெண் விவசாயி!

International 09 August 2026
மரங்களை கட்டியணைத்து கதறியழும் பெண் விவசாயி!

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்!

International 09 August 2026
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்!

பிரேசிலில் வானூர்தி விபத்துக்குள்ளாகி நால்வர் உயிரிழப்பு

International 09 August 2026
பிரேசிலில் வானூர்தி விபத்துக்குள்ளாகி நால்வர் உயிரிழப்பு

சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

International 09 August 2026
சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

பூமிக்கு மேலே ஒளிரும் பச்சை, சிவப்பு நிற அதிசயம் : ஐபோனில் எடுத்த அரிய பேரழகு!

International 09 August 2026
பூமிக்கு மேலே ஒளிரும் பச்சை, சிவப்பு நிற அதிசயம் : ஐபோனில் எடுத்த அரிய பேரழகு!

பயன்படுத்தப்பட்ட பாடசாலை நீச்சல் ஆடைகள் விற்பனைக்குத் தடை : ஜப்பானின் இணைய நிறுவனம் நடவடிக்கை!

International 09 August 2026
பயன்படுத்தப்பட்ட பாடசாலை நீச்சல் ஆடைகள் விற்பனைக்குத் தடை : ஜப்பானின் இணைய நிறுவனம் நடவடிக்கை!

121 வருடத்துக்கு பின் இப்படி ஒரு அதிசயமா? : பகலிலேயே இருளப்போகும் நாடுகள்!

International 09 August 2026
121 வருடத்துக்கு பின் இப்படி ஒரு அதிசயமா? : பகலிலேயே இருளப்போகும் நாடுகள்!

மூலிகை மருத்துவத்தை நாடி ஆபத்தில் சிக்கித் தவிக்கும் யேமன் மக்கள்!

International 09 August 2026
மூலிகை மருத்துவத்தை நாடி ஆபத்தில் சிக்கித் தவிக்கும் யேமன் மக்கள்!

35 கிலோ சைக்கிளை (ஈருருளியை) பற்களால் கவ்வி நடந்து சாதனை

International 09 August 2026
35 கிலோ சைக்கிளை (ஈருருளியை) பற்களால் கவ்வி நடந்து சாதனை
More News
General09 August 2026

இரத்மலானை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் - நான்கு பேர் கைது

இரத்மலானை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 5ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கல்கிஸ்ஸை காவல்துறையின் சிறப்புக் குழுவினால் மொரட்டுவை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெளிநாடொன்றில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரின் வழிகாட்டலிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவமானது இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையே நிலவிவரும் மோதல் நிலையின் பின்னணியிலேயே இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

விபரங்களுக்கு
இரத்மலானை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் - நான்கு பேர் கைது
General09 August 2026

மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்

மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீற்றரை விட அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்காரணமாக, மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்
General09 August 2026

30 ஆண்டுகால பழமையான அரச வேதன முறைமை மாறுகிறது : நிதியமைச்சு எடுத்த அதிரடி முடிவு!

தற்போதைய தொழில்நுட்பத்திற்குப் பொருந்தாத, 30 ஆண்டுகள் பழமையான அரச வேதன முறைமையை மாற்றுவதற்காக நிதியமைச்சகம் புதிய அரச வேதன முறைமைக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. ஆங்கில செய்தித்தாள் ஒன்றின் தகவல்படி, அரச நிறுவனங்களுக்கான வேதன முறைமையின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயலாக்கத்திற்கான கொள்முதல்" (Procurement of Design> Development and Implementation of a Payroll System for Government Organizations) என்ற கேள்விப்பத்திர அறிவிப்பை நிதியமைச்சின் மாநிலக் கணக்குகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. தற்போதைய ஜி.பி.எஸ் முறைமை 1996 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது அமைச்சகங்கள், திணைக்களங்கள், சிறப்புச் செலவின அலகுகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சில சட்டபூர்வ நிறுவனங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய முறைமையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதன் பலவீனமான பாதுகாப்பு நெறிமுறைகள் கையாளுதல்கள் மற்றும் வேதனம் தொடர்பான மோசடி அபாயங்களுக்கு உட்படுத்துகின்றன, இது அரசு நிதிக்கூறுகளின் நம்பகத்தன்மையை மற்றும் செயல்திறனைக் குலைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போதைய முறைமையில் ஒருங்கிணைந்த மனித வளம் மற்றும் வேதன முகாமைத் தளமாகச் செயற்படத் தேவையான நெகிழ்வுத்தன்மையும் அளவிடக்கூடிய தன்மையும் இல்லை, இதனால் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் தடைப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட, பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த வேதன செயலாக்க முறைமைக்கு மாறுவதற்கான தேவை அவசரமானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
30 ஆண்டுகால பழமையான அரச வேதன முறைமை மாறுகிறது : நிதியமைச்சு எடுத்த அதிரடி முடிவு!
General09 August 2026

அரச பங்களாக்களை தனியார் முதலீடுகளுக்கு வழங்க நடவடிக்கை

அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ அரச பங்களாக்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தீர்மானத்திற்கு அமைவாக, கொழும்பில் அமைந்துள்ள 7 அரசுக்குச் சொந்தமான பங்களாக்களைப் பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு யோசனைகளைக் கோரியுள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கமைய, 24 பங்களாக்களை பொது-தனியார் பங்களிப்பு அடிப்படையில் 30 வருட காலத்திற்கு குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக 7 பங்களாக்கள் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய பங்களாக்களே இவ்வாறு உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடப்படவுள்ளன.இதற்கான பிரேரணைகளை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 25ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
அரச பங்களாக்களை தனியார் முதலீடுகளுக்கு வழங்க நடவடிக்கை
General09 August 2026

சிறைச்சாலை மோதல் தொடர்பில் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு

குருவிட்ட, பல்லன்சேன மற்றும் புதிய மெகசின் ஆகிய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை (10) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.சிறைச்சாலை நிர்வாகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அறிக்கையே இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் குறிப்பிட்டார்.

விபரங்களுக்கு
சிறைச்சாலை மோதல் தொடர்பில் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
International News

சவூதி அராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதிகள் தாக்குதல்: தீ முழுமையாகக் கட்டுப்பாடு

International 10 August 2026
சவூதி அராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதிகள் தாக்குதல்: தீ முழுமையாகக் கட்டுப்பாடு

மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு!

International 10 August 2026
மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு!

டொல்பின்' சூறாவளி தாக்குதல்: சீனாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

International 10 August 2026
டொல்பின்' சூறாவளி தாக்குதல்: சீனாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசி தாக்குதல்.!

International 09 August 2026
கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசி தாக்குதல்.!

காசாவுக்கான டொனால்ட் ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு!

International 09 August 2026
காசாவுக்கான டொனால்ட் ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு!

உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு!

International 09 August 2026
உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு!

மரங்களை கட்டியணைத்து கதறியழும் பெண் விவசாயி!

International 09 August 2026
மரங்களை கட்டியணைத்து கதறியழும் பெண் விவசாயி!

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்!

International 09 August 2026
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்!

பிரேசிலில் வானூர்தி விபத்துக்குள்ளாகி நால்வர் உயிரிழப்பு

International 09 August 2026
பிரேசிலில் வானூர்தி விபத்துக்குள்ளாகி நால்வர் உயிரிழப்பு

சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

International 09 August 2026
சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

பூமிக்கு மேலே ஒளிரும் பச்சை, சிவப்பு நிற அதிசயம் : ஐபோனில் எடுத்த அரிய பேரழகு!

International 09 August 2026
பூமிக்கு மேலே ஒளிரும் பச்சை, சிவப்பு நிற அதிசயம் : ஐபோனில் எடுத்த அரிய பேரழகு!

பயன்படுத்தப்பட்ட பாடசாலை நீச்சல் ஆடைகள் விற்பனைக்குத் தடை : ஜப்பானின் இணைய நிறுவனம் நடவடிக்கை!

International 09 August 2026
பயன்படுத்தப்பட்ட பாடசாலை நீச்சல் ஆடைகள் விற்பனைக்குத் தடை : ஜப்பானின் இணைய நிறுவனம் நடவடிக்கை!

121 வருடத்துக்கு பின் இப்படி ஒரு அதிசயமா? : பகலிலேயே இருளப்போகும் நாடுகள்!

International 09 August 2026
121 வருடத்துக்கு பின் இப்படி ஒரு அதிசயமா? : பகலிலேயே இருளப்போகும் நாடுகள்!

மூலிகை மருத்துவத்தை நாடி ஆபத்தில் சிக்கித் தவிக்கும் யேமன் மக்கள்!

International 09 August 2026
மூலிகை மருத்துவத்தை நாடி ஆபத்தில் சிக்கித் தவிக்கும் யேமன் மக்கள்!

35 கிலோ சைக்கிளை (ஈருருளியை) பற்களால் கவ்வி நடந்து சாதனை

International 09 August 2026
35 கிலோ சைக்கிளை (ஈருருளியை) பற்களால் கவ்வி நடந்து சாதனை
Sports Stories
Explore More
சாய் சுதர்சனுக்கு பதில் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில்!

சாய் சுதர்சனுக்கு பதில் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில்!

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியத் துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியுள்ளதுடன், அவருக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.பெங்களூரிலுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த சாய் சுதர்சன், வலது கால் விரல் காயத்திலிருந்து மீண்டு வரும் போதிலும், தொடரில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மருத்துவக் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.இதனையடுத்து, ஆடவர் தேர்வுக்குழுவால் சர்ஃபராஸ் கான் மாற்று வீரராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் கொழும்பில் இந்திய அணியுடன் இணையவுள்ளார்.மாற்றியமைக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணி விவரம்:சுப்மன் கில் (அணித்தலைவர்), கே.எல். ராகுல் (துணைத் தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின், ஆகிப் நபி, சர்ஃபராஸ் கான்.

விபரங்களுக்கு
இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின்' முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தச் சங்கத்தின் ஆரம்பப் பொதுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் வனிந்து ஹசரங்க, சமரி அத்தபத்து உள்ளிட்ட நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.இலங்கையின் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களின் உரிமைகள், நலன்புரி சேவைகள் மற்றும் தொழில்முறை சார்ந்த விடயங்களில் சுதந்திரமான மற்றும் கூட்டுப் பிரதிநிதித்துவத்தை வழங்குவதையே இந்த புதிய சங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.தொழில்முறை கிரிக்கெட் வீரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச அமைப்பான சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் இந்த புதிய அமைப்பு இணைக்கப்படவுள்ளது.அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற உலகின் முன்னணி கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் வீரர்களின் சங்கங்கள் இயங்கி வரும் நிலையில், இலங்கையிலும் இவ்வாறான அமைப்பொன்று உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
15 வயதா? 18 வயதா? - வைபவ் சூர்யவன்சி குறித்து பிரெட் லீ கருத்து!

15 வயதா? 18 வயதா? - வைபவ் சூர்யவன்சி குறித்து பிரெட் லீ கருத்து!

இந்திய அணியின் இளம் அதிரடி துடுப்பாட்டக்காரர் வைபவ் சூர்யவன்சியின் (Vaibhav Sooryavanshi) உண்மையான வயது குறித்த சந்தேகங்கள் இந்தியாவிற்கு வெளியே இன்னமும் நீடிப்பதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ (Brett Lee) தெரிவித்துள்ளார். இருப்பினும், அவரது வயது முக்கியமல்ல என்றும், அவரது திறமையே முதன்மையானது என்றும் அவர் பாராட்டியுள்ளார். அந்த நாட்டுத் தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தனது கருத்துக்களைத் தெரிவித்த பிரெட் லீ, "இந்தியாவிற்கு வெளியே உள்ள பலரும் 'அவருக்கு உண்மையில் 15 வயதுதானா?' என்று என்னிடம் கேட்கிறார்கள். உலகளவில் தற்போது இதுவே பெரிய விவாதப் பொருளாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். "அவருக்கு 15 வயதாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி. ஒருவேளை 17 அல்லது 18 வயதாக இருந்தாலும் அதைப்பற்றி யாருக்கு என்ன கவலை? அந்தச் சிறுவனால் மிகச் சிறப்பாகக் கிரிக்கெட் விளையாட முடிகிறது, அதுவே முக்கியமானது" என்று பிரெட் லீ கூறியுள்ளார். அத்துடன், வைபவ் சூர்யவன்சி இந்திய கிரிக்கெட்டிற்குக் கிடைத்த மிகச்சிறந்த திறமைசாலி என்றும், அவர் மீது தேவையற்ற அழுத்தங்களைச் சுமத்தாமல், இயல்பாக விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு இன்டர் மியாமி வீரர் ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு இன்டர் மியாமி வீரர் ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ டி போல் (Rodrigo De Paul) மைதானத்தில் கோல் அடித்த பிறகு தனது உணர்வுபூர்வமான அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். முன்னணி கால்பந்து தொடரில் (MLS) இன்டர் மியாமி அணிக்காக விளையாடிய ரொட்ரிகோ டி போல், போட்டியின் 31-ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து ஒரு சிறப்பான கோலை அடித்தார். கோல் அடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடிய அவர், தனது ஜெர்ஸியைக் கழற்றி, அதனுள் அணிந்திருந்த மெஸ்ஸியின் 10-ஆம் இலக்க ஜெர்ஸியைக் காண்பித்து மெஸ்ஸியினுடைய குடும்பத்திற்குத் தனது ஆதரவையும் அஞ்சலியையும் வெளிப்படுத்தினார். மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி, ரொசாரியோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். லியோனல் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் அவரது தந்தை ஜோர்ஜ் முக்கியமான பங்கு வகித்தார். மெஸ்ஸியின் முகவராகவும், அவரது வணிக விவகாரங்களை நிர்வகிப்பவராகவும் செயற்பட்ட அவர், மெஸ்ஸி சிறுவயதாக இருந்தபோது பார்சிலோனா கால்பந்து கழக அணியின் 'லா மாசியா' தொழிற்பயிற்சிக் கூடத்தில் சேர்வதற்கு முக்கியக் காரணமாகவும் அவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - சிக்கலில் இலங்கை அணி!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - சிக்கலில் இலங்கை அணி!

இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, முன்னணி துடுப்பாட்ட வீரர்களான பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் காயம் காரணமாக இலங்கை அணி பாரிய தெரிவு சிக்கலை எதிர்கொண்டுள்ளது. காயங்களிலிருந்து மீண்டு வரும் பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் போட்டியில் நிஸ்ஸங்க விளையாடமாட்டார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குசல் மெண்டிஸ் முழுத் தொடரிலிருந்தும் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. நிஸ்ஸங்கவுக்குப் பதிலாக தொடக்க ஆட்டக்காரராக நிஷான் மதுஷ்க களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இவர் இந்தியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 66 ஓட்டங்களைப் பெற்று தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, குசல் மெண்டிஸுக்குப் பதிலாக விக்கெட் காப்பாளராக யாரை நியமிப்பது என்பதில் இலங்கை அணிக்கு பெரும் குழப்பம் நிலவுகிறது. விக்கெட் காப்பாளர்களாக சதீர சமரவிக்ரம, அஞ்சன பண்டார மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர். லஹிரு உதார அல்லது தினேஷ் சந்திமால் ஆகியோரை விக்கெட் காப்பாளர்களாகப் பயன்படுத்துவது குறித்தும் யோசிக்கப்பட்டாலும், அதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே உள்ளது. இலங்கை மற்றும் இந்தியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
பங்களாதேஷை பதறவைத்த 22 வயது இளம் புயல் - 54 ஓட்டங்களுக்கு சுருண்ட பங்களாதேஷ்

பங்களாதேஷை பதறவைத்த 22 வயது இளம் புயல் - 54 ஓட்டங்களுக்கு சுருண்ட பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன்படி குறித்த தொடருக்கு முன்னதான பயிற்சிப் போட்டியில், பங்களாதேஷ் அணி 54 ஓட்டங்களுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது. கிரிக்கெட் அவுஸ்திரேலியா XI அணிக்கு எதிரான 3 நாட்கள் கொண்ட இந்த பயிற்சிப் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில், இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கெம்ப்பெல் தொம்சனின் அதிரடி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பங்களாதேஷ் அணி திணறியது. வெறும் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்திய தொம்சன், பங்களாதேஷ் அணியை 17 ஓவர்களில் சுருட்டினார். ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் 92 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த பங்களாதேஷ் அணியில், தன்சித் ஹசன் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை (22) பெற்றார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ள பங்களாதேஷ் அணிக்கு, இந்தத் தோல்வி பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.

விபரங்களுக்கு
2027 ஒருநாள் உலகக் கிண்ணம் - நேரடி தகுதியை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்

2027 ஒருநாள் உலகக் கிண்ணம் - நேரடி தகுதியை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் அணி இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன்படி, இனி நடைபெறவுள்ள தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றால் மட்டுமே குறித்த அணியால் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் நேரடித் தகுதியைப் பெறுவது கடினம் எனக் கூறப்படுகிறது. 1975 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடர்ச்சியாக 3ஆவது முறையாகத் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு தகுதிச்சுற்று மூலம் உலகக் கிண்ணத்துக்குத் தெரிவான அந்த அணி, 2023ஆம் ஆண்டு தகுதிச்சுற்றில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை முற்றிலும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
LPL இறுதிப் போட்டி - கிண்ணத்தை வென்றது காலி அணி!

LPL இறுதிப் போட்டி - கிண்ணத்தை வென்றது காலி அணி!

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் காலி கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கெலன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜஃப்னா கிங்ஸ் அணியின் சார்பில் கமில் மிஷார அதிகபட்சமாக 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் காலி அணியின் சார்பில் சரித் அசலங்க மற்றும் ஈஷான் மலிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்தநிலையில் 124 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி 15.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதற்கமைய 2026ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் காலி கெலன்ட்ஸ் அணி கிண்ணத்தைத் தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
மீண்டும் திரையில் விஜய் - த்ரிஷா : ‘வெளியான அதிரடி அறிவிப்பு!

மீண்டும் திரையில் விஜய் - த்ரிஷா : ‘வெளியான அதிரடி அறிவிப்பு!

இயக்குநர் பேரரசு இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘திருப்பாச்சி’ திரைப்படம் ஒக்டோபர் 1 ஆம் திகதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாகவே மறுவெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக ஒக்டோபர் 1 ஆம் திகதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பசுபதி, மல்லிகா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் பேரரசுவுக்கு அறிமுகப் படமாக அமைந்த இந்த திரைப்படம், விஜய் மற்றும் த்ரிஷாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, விஜய் மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு

"எங்க அப்பா ரொம்ப சப்போர்ட்" – தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி

திரைப்பட இயக்கம் கற்க வெளிநாடு செல்ல விரும்பியபோது, தனது தந்தை விஜய் முழு ஆதரவளித்ததாக அவரது மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில், தனது சினிமா பயணம் மற்றும் தந்தையின் ஆதரவு குறித்து ஜேசன் சஞ்சய் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், “நான் வெளிநாடு சென்று தனியாகத் தங்கி திரைப்பட இயக்கம் தொடர்பான படிப்பை மேற்கொள்ள விரும்புவதாகக் கூறினேன். அதற்கு அப்பா சிறிதும் தயங்கவில்லை. முதலில் எனக்கு அனுமதி வழங்கியவரே அவர்தான். ‘நீ போய் செய்... அதைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்’ என்று என்னை ஊக்கப்படுத்தினார். எனது சினிமா மீதான ஆர்வத்திற்கும் பயணத்திற்கும் அவர் மிகவும் ஆதரவாக இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார். தனது விருப்பத்தைப் புரிந்துகொண்டு, திரைப்படத் துறையில் பயணிக்க தந்தை விஜய் முழுமையான ஆதரவை வழங்கியதாக ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

விபரங்களுக்கு
AI தொழில்நுட்பத்தால் வந்த வினை : இணையவாசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதி ஹாசனின் அதிரடி வழக்கு!

AI தொழில்நுட்பத்தால் வந்த வினை : இணையவாசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதி ஹாசனின் அதிரடி வழக்கு!

நடிகர் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன், தனது நிழற்படம், குரல் மற்றும் அடையாளம் செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்பேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது முகத்தை மாற்றியமைத்து, ஆபாசமான மற்றும் விரும்பத்தகாத நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இதுபோன்று தன்னை ஆபாசமாகச் சித்தரிக்கும் உள்ளடக்கங்களை உருவாக்கி பரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள அவ்வாறான நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது அனுமதியின்றி தனது பெயர், நிழற்படம் மற்றும் குரல் ஆகியவை வணிகப் பயன்பாடு மற்றும் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது அடையாளம் மற்றும் ஆளுமை உரிமைகள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஸ்ருதி ஹாசன், இதற்குக் காரணமானவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மும்பை உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

விபரங்களுக்கு

"அம்மா பற்றி ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த ஒரு விடயம்..." - இணையத்தில் வைரலாகும் நேர்காணல்!

தான் எவ்வளவு வளர்ந்தாலும், தனது தாயார் இன்றும் தன்னை ஒரு குழந்தையாகவே பார்ப்பதாக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய், தனது தாயார் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “நான் எவ்வளவு வளர்ந்தாலும், என் அம்மா இன்றும் என்னை ஒரு குழந்தையாகவே பார்க்கிறார். தற்போது வேலை காரணமாக மிகவும் பிஸியாக இருப்பதால், முன்புபோல் அம்மாவுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. இருப்பினும், அவர் தொடர்ந்து எனது நலனை விசாரிப்பதுடன், வேலையில் சோர்வடையும் நேரங்களில் என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவார். மேலும், சினிமா தொடர்பான விடயங்களில் என் அம்மாவின் கருத்துகளையும் விமர்சனங்களையும் நான் மிகவும் மதிக்கிறேன். எனது புதிய படத்தைப் பார்த்த பிறகு அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் ‘டொக்ஸிக்’ திரைப்பட ட்ரெய்லர்

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் ‘டொக்ஸிக்’ திரைப்பட ட்ரெய்லர்

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டொக்ஸிக்’ (Toxic) திரைப்படத்தின் உத்தியோகபூர்வ ட்ரெய்லர் நேற்று (08) வெளியானது.இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ரவி பஸ்ரூர் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.Pan-India திரைப்படமாக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் 26ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
திரையுலகில் 20 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி கூறிய வெங்கட் பிரபு!

திரையுலகில் 20 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி கூறிய வெங்கட் பிரபு!

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, இயக்குநராக தனது 20ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 2007ஆம் ஆண்டு வெளியான 'சென்னை 28' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு, கோட் என பல வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார். திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தனக்கு ஆதரவளித்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிய முயற்சிகளைச் செய்யவே விரும்பினேன். அதே ஆர்வத்துடன் தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் கதைகளை வழங்குவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்!

மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்!

இந்தியாவைச் சேர்ந்த ரேணு தரியால் (Renu Dhariyal) உலகின் மிக நீளமான கூந்தலைக் கொண்ட பெண் என்ற புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். இவரது கூந்தலின் நீளம் 271.50 செ.மீ (8 அடி 10 அங்குலம்) ஆகும். யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த அலியா நாசிரோவா (Aliia Nasyrova) என்பவரின் 257.33 செ.மீ (8 அடி 5.3 அங்குலம்) நீள கூந்தல் சாதனையை இவர் முறியடித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் தனது கூந்தலை ஒருமுறை கூட வெட்டவில்லை. இந்திய கலாச்சாரத்தில் நீண்ட கூந்தல் என்பது பாரம்பரியத்தின் அடையாளமாகக் கருதப்படுவதே, தன் கூந்தலை இவ்வளவு நீளமாக வளர்ப்பதற்கான முக்கியக் காரணம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
14 மாதங்கள் வீட்டில் இருந்தேன்: வருங்கால மனைவிதான் காரணம் – கடினமான காலம் குறித்து மனம் திறந்த விஷால்

14 மாதங்கள் வீட்டில் இருந்தேன்: வருங்கால மனைவிதான் காரணம் – கடினமான காலம் குறித்து மனம் திறந்த விஷால்

நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய விஷால், தனது திரையுலகப் பயணத்தில் சுமார் 14 மாதங்கள் நடிக்க முடியாமல் வீட்டில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். அந்தக் கடினமான காலகட்டத்தில் தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா வழங்கிய ஆதரவு தனக்கு மிகுந்த உதவியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மற்றும் திருப்பூர் சுப்ரமணியம் ஆகியோரும் தனக்கு ஆதரவாக இருந்ததாக விஷால் தெரிவித்துள்ளார்.‘மகுடம்’ திரைப்படம் நடிகராகவும் இயக்குநராகவும் தனக்கு சவாலானதாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இரு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.இயக்குநராக வேண்டும் என்பது தனது 35 ஆண்டுகால கனவு எனத் தெரிவித்த விஷால், தனது தந்தை மற்றும் தாயார் வழங்கிய ஆதரவே தனது திரையுலகப் பயணத்திற்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.தனது குருநாதரான நடிகர் அர்ஜுனுக்கும் நன்றி தெரிவித்த அவர், இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்திற்கு ராம்கோபால் வர்மா இயக்கிய ‘சிவா’ திரைப்படம் உந்துதலாக இருந்ததாகக் கூறியுள்ளார்.மேலும், ‘மகுடம்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இதுவரை பார்த்திராத வகையில் இருக்கும் என்றும், சுமார் எட்டு நிமிடங்கள் இடம்பெறும் அந்தக் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்ப்பதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////