ஆப்கான் மருத்துவமனைத் தாக்குதல் - அமெரிக்கா விசாரணை

Sunday, 04 October 2015 - 14:09

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வாநூர்தியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் எம்.எஸ்.எப். தொண்டு நிறுவனத்தினால் நடத்தப்படும் மருத்துவ மனையில் பாரிய உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த தாக்குதலில் மருத்துவ மனையில் இருந்த 19 பேர் பலியாகியுள்ளனர்.

மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள் 12 பேரும், நோயாளிகள் ஏழு பேருமே பலியாகியுள்ளனர்.

இப்படியான தாக்குதல்களை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் இது குற்ற செயலாக கணிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பாங் கீ மூன் தெரிவித்துள்ளார்.

பக்கசார்பற்ற முழு அளவிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக தமது ஆழ்ந்த மனவருத்தத்தை தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, விசாரணை ஒன்றிற்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச மற்றும் ஆப்கானிஸ்தானிய யுத்த வாநூர்திகள், பொது மக்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளனர்.

குறிப்பாக உள்நாட்டு மோதல் ஒன்று இடம்பெறும் பிரதேசத்தில் பணியாற்றும் மருத்துவ தரப்பினருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

வாநூர்தி ஓட்டுனர்கள் இதனை முற்றாக உதாசீனம் செய்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ராட் அல ஹ_சேன் சைட் வருத்தத்தை வெளிபடுத்தியுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips