இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு திடீர் பயணம்

Friday, 25 December 2015 - 17:26

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பாகிஸ்தான் பயணம் மேற்கொள்கிறார். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பும் வழியில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் செரீப்பை சந்தித்து பேச உள்ளார். பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்பு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பயணம் குறித்தான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. 
 
பிரதமர் மோடியின் இந்த பயணம் திட்டமிடப்படாதது என்றும், இன்றுதான் முடிவு செய்யப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 
ஆப்கானிஸ்தான் பயணம் கூட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணமாக முன்கூட்டி அறிவிக்கப்படவில்லை என்று ஆங்கில செய்தி சேனல் செய்தி வெளியிட்டது.
 
பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வதையொட்டி லாகூரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. லாகூர் விமான நிலையத்தை சுற்றிலும் பெரும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். 
 
லாகூர் விமான நிலையத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நவாஸ் செரீப் வரவேற்பார் என்று பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் பாகிஸ்தான் அறிவிப்பை அடுத்து லாகூரில்உள்ள அலாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையானது அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. லாகூர் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. 
 
முன்னதாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் காசி கலிலுல்லாஹ், நவாஸ் செரீப்பை சந்தித்துபேச இந்திய பிரதமர் நரேந்திர மோடி லாகூர் வருவார் என்று எங்களிடம் இந்திய தூதரகம் தெரிவித்து இருந்தது. விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று கூறியிருந்தார். 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips