சிரியாவில் மருத்துவமனையினை ஒன்று ஐ.எஸ் தீவிரவாதிகள் வசம்

Sunday, 15 May 2016 - 10:53

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
கிழக்கு சிரிய நகரான டெர் அல் ஸோர் நகரில் உள்ள மருத்துவமனையொன்றை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதியளவு கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து 35 க்கும் அதிகமாக அரசாங்க சார்பு படையினர் கொல்லப்பட்டதுடன், மருத்துவமனை பணியாளர்கள் பலர் பணயமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையை கைப்பற்றும் மோதலின் போது 20 க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள அல் அஸாட் மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருத்துவமனையின் மற்றைய பகுதிகளை அரசாங்க துருப்பினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும், பணயக் கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

ஐ.எஸ். தீவிரவாதிகள் Deir al-Zour  நகரின் அரைவாசிக்கும் அதிகமான பகுதியை இதுவரை கைப்பற்றியுள்ள நிலையில், முழு நகரத்தையும் தமது கட்டுப்ப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips