சந்திரனின் தொலைதூர பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரிக்க ஆய்வு

Friday, 03 May 2024 - 21:09

%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
சந்திரனின் தொலைதூர பகுதியில் இருந்து மாதிரிகளைச் சேகரிப்பதற்கான ஆய்வு ஒன்றை சீனா ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, அண்டவெளி கோள் ஆராய்ச்சியில் சந்திரனின் அடுத்த தொலைதூர பகுதியில் ஆய்வுகளை ஆரம்பிக்கும் முதலாவது நாடாக சீனா காணப்படுகிறது.

வென்சாங் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆளில்லா ஏவுகணை இன்று ஏவப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

53 நாட்கள் பயணிக்கும் இந்த விண்கலம் இரண்டு கிலோகிராம் நிறையை கொண்ட சந்திரனின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

பூமியில் இருந்து பார்க்க முடியாத சந்திரனின் இருண்ட பகுதி என விபரிக்கப்படும் பகுதி அதிக பள்ளங்களை கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திரன் எவ்வாறு உருவானது என்பதை வெளிப்படுத்தக்கூடிய பொருட்கள் இந்த பகுதியில் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

விண்கலத்தை ஏவுவதற்கு முன்னர், சீனாவின் சந்திர ஆய்வு மற்றும் விண்வெளி பொறியியல் மையத்தின் பிரதி இயக்குனர் ஜீ பிங் செய்தியாளர்களிற்கு பல புதிய தகவல்களை வழங்கினார்.

சேஞ்ச் - 6 என பெயர் இடப்பட்ட இந்த விண்கலம், முதன் முறையாக சந்திரனின் வெகு தொலைவில் உள்ள மாதிரிகளை சேகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

சீன விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் சந்திரன், மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அப்பாலும் ஆய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விண்கலம் சந்திரனின் தென் துருவ ஐட்கன் பகுதியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிடப்பட்ட இந்த பகுதி 2,500 கிலோ மீற்றர் அகலத்தையும் 8 கிலோ மீற்றர் ஆழத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips