தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை..

Sunday, 15 May 2016 - 11:57

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88..
நாளை தமிழகத்தில் சட்டசபைக்கான தேர்தல் வாக்கு பதிவுகள் இடம்பெறவுள்ள நிலையில் நேற்று பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்தன.

இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 776 வேற்பாளர்கள் 234 தொகுதிகளில் போட்டி இடுகின்றனர்.

தற்போதைய முதல்வரும் அகில இந்திய திராவிட முன்னேற்ற கலகத்தின் தலைவருமான ஜெயலலிதா ஜெயராம் போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் 45 வேற்பாளர்கள் போட்டி இடுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.

அதேபோல, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையிலான பிரமுகர்களும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொல் திருமாவளவன் தலைமையிலான குழுவினர் பிரசாரங்களில் பங்கு கொண்டனர்.

இதுதவிர, முத்துவேல் கருணாநிதி, விஜயகாந்த், வைகோபாலசாமி, அன்புமணி ராமராமதாஸ், சீமான், உட்பட பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் தமது கட்சிக்காக பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips