ஜோன் கெரி டெல்லியில்...

Tuesday, 30 August 2016 - 16:29

%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் பங்களாதேஷ் பிரிவினைவாத குழுவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இந்த எச்சரிக்கை கலந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

பங்களாதேஷிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று டாக்கா நகரில் வைத்து இதனை தெரிவித்தார்.

இந்த நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்து விடுபட பங்களாதேஷிற்கு உதவ, அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜோன் கெரி பங்களாதேஷிற்கு மேற்கொண்ட அந்த குறுகிய கால விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவையும் சந்தித்தார்.

இதன்போது இரு தரப்பிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இணங்கப்பட்டது.

இதனிடையே, தமது பங்களாதேஷ் விஜயத்தை நிறைவு செய்து கொண்ட அமெரிக்க ராஜாங்க செயலாளர் நேற்றிரவு புதுடெல்லி நோக்கி பயணமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பாதுகாப்பு அமைப்பு சேவை தொடர்பில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நேற்று ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.

வோஷிங்டன் நகரில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.

ஒப்பந்தத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோஹர் பரிக்கார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்காவும் இந்தியாவும், நிலம், வான் மற்றும் கடல் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips