உலகின் மிகப்பெரிய வானிலை தொலைநோக்கி செயற்படத்தொடங்கியுள்ளது

Monday, 26 September 2016 - 14:25

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
சீனாவினால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய வானிலை தொலைநோக்கி செயற்படத்தொடங்கியுள்ளது.

வேற்றுகிரகவாசிகள் பற்றிய தேடுதலை மேற்கொள்ளவும், பிரபஞ்சத்தின் தோற்றத்தை புரிந்து கொள்ளவும் சுமார் 30 கால்பந்தாட்ட மைதானங்களின் அளவில் உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் இருந்து மர்மமான முறையில் பல ஒலிகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு நிறுவனம் ஏற்கனவே பதிவு செய்துள்ளது.

இந்த ஒலிகளை வேற்றுகிரகவாசிகள் அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து ஆய்வுகள் நடக்கின்றன.

அந்த ஒலிகளை மொழி மாற்றம் செய்ய முயற்சி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து வேற்றுகிரகவாசிகள் குறித்த தேடலில் சீனாவும் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள நட்சத்திர தொகுதிகளில் ஒளிக்கு பின்னால் கிரகங்கள் இருக்கின்றனவா? அதில் உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை அறிந்து கொள்வதிலும் சீனா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

இதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு மிகப்பெரிய தொலைநோக்கியை தயாரிக்கும் பணிகளை சீனா முன்னெடுத்தது
இந்தநிலையில் குய்சோ மாகாணத்தின் பிங்டாங் பகுதியில் உள்ள மலைசூழ்ந்த கர்ஸ்ட் பள்ளத் தாக்கு பகுதி இதற்காக தேர்வு செய்யப்பட்டு அங்கு தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் வானியல் அதிசயங்களை துல்லியமாக பதிவு செய்யும் வகையில் பள்ளத்தாக்கு அருகே 5 கிலோமீற்றர் சுற்று வட்டத்தில் வசித்து வந்த 8,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips