ட்ரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றங்கள் அதிரடி தடை - பதில் வழங்கியுள்ள ட்ரம்ப்

Monday, 06 February 2017 - 8:45

%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+-+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D
அமெரிக்காவுக்கு ஏதேனும் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு அமெரிக்க நீதித்துறையே பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஏழு நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு டொனால்ட் ட்ரம்ப் தடைவித்தார்.

எனினும் இது சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து அந்த நாட்டு நீதிமன்றங்கள் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தன.

இந்த நிலையில், நீதித்துறையின் தீர்ப்பை தம்மால் நிராகரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், குறித்த 7 நாடுகளைச் சேர்ந்தவர்களை கடுமையாக சோதனைகளுக்கு பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மீது அக்கறைக் கொண்டும், பாதுகாப்பு நலன் கருதியுமே தான் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும், நாட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நீதித்துறையே அதனை பொறுப்பேற்க வேண்டும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips