பிரதான வைத்தியசாலைகளின் நோயாளர் அனுமதிப்பு நடவடிக்கைகள் வழமைக்கு..

Tuesday, 20 June 2017 - 13:42

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..
டெங்கு நோய் உள்ளிட்ட காய்ச்சல் நோயாளர்கள் அதிகரித்துள்ளமை காரணமாக பிரதான மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் வரையறுக்கப்பட்டிருந்த நோயாளர்கள் அனுமதிப்பு தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் நேற்று பிற்பகல் வரையில், நோயாளர்களை அனுமதிப்பது வரையறுக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், டெங்கு மற்றும் காய்ச்சல் தொடர்பான ஏனைய நோயாளர்களை அனுமதிப்பது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போதுவரை டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் காரணமாக 349 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 73 பேரின் நிலைமை கவலைக்கிடமானது என்றும் மருத்துவமனை பணிப்பாளர் அனில் ஜாசிங்க எமது செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips