அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவற்துறையின் விசேட அறிவித்தல்!

Tuesday, 20 June 2017 - 15:21

%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேற்கொள்ளும் முறைப்பாடுகளுக்கான பிரதிகள் இலவசமாக வழங்கப்படும் என காவற்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி , வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்த / காணாமல் போன நபர்கள் தொடர்பில் மற்றும் வீடுகள் / சொத்துக்கள் மற்றும் பெறுமதியான ஆவணங்கள் சேதமடைந்துள்ளமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுளின் பிரதியை இலவசமாக வழங்க  சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

ஆகவே , இவ்வாறான முறைப்பாடுகளுக்கான பிரதிகளை இலவசமாக பெற்றுக்கொடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவற்துறை மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips