விலை குறைக்கப்பட்ட இரத்த மாதிரி பரிசோதனைக்கான கட்டணம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு...

Tuesday, 20 June 2017 - 16:15

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81...
தனியார் துறையில் இரத்த பரிசோதனையின் பொருட்டு அறவிடும் கட்டணம் குறைக்கப்பட்டதன் அனுகூலங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறுகின்றதா? என்பதை ஆராயுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, ஒளடத ஒழுங்கமைப்பு அதிகாரிக்கு இன்று இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதன்படி, தேசிய ஒளடத ஒழுங்கமைப்பு அதிகாரிகளும் ஒளடத சோதனையாளர்களும் இந்த சோதனைகளில் ஈடுபடவுள்ளனர்.

அந்த சோதனை தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதுபோல் விலை குறைப்பின் அனுகூலங்களை பொதுமக்களுக்கு வழங்காத தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வுக்கூடங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெங்கு நோய் தொற்று அதிகரித்துள்ளமைக் காரணமாக இரத்த பரிசோதனை பெருமளவு மேற்கொள்ளப்படுவதனால் இரத்த பரிசோதனைக்கான கட்டணம் 250 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், டெங்கு இரத்த பரிசோதனையின் பொருட்டு அறவிடப்படும் அதிகபட்ச தொகை ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips