நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையை கையில் எடுத்துள்ள ஐ.தே.கட்சி

Tuesday, 03 July 2018 - 7:36

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் செய்தி தாள் வெளியிட்ட கட்டுரை தொடர்பில் நாடாளுமன்றில் ஒத்திவைப்பு வேளை விவாதம் ஒன்றை கோர ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் இதனை தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் இந்த ஒத்திவைப்பு வேளை விவாதம் கோரப்பட்டு அது தொடர்பில் விரைவான சட்ட நடவடிக்கைக்கு செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் துஷார இந்துநில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட நீதியமைச்சர் தலதா அத்துகோரலவும் நியூயோர்க் டைம்ஸ் செய்தி தாளின் கட்டுரை குறித்து கருத்து தெரிவித்தார்.

இந்த பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அமெரிக்காவுக்கு எந்த வருத்தமும் இல்லை.

அமெரிக்கா இந்த விடயத்தில் அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் என்னவென்றால், இந்த நிதி விவகாரத்தில் இலங்கையில் உள்ள இரண்டு அமெரிக்க குடியுரிமை கொண்டவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

கோட்டபாய ராஜபக்ஷவும் பஷில் ராஜபக்ஷவும் இதில் தொடர்பு கொண்டுள்ளார்கள்.

அதனாலேயே, அமெரிக்கா இந்த விடயத்தில் அக்கறை கொண்டுள்ளது.

தமது நாட்டு பிரஜை எவ்வாறு சீனாவிடம் நிதிபெறுவது என்பது தொடர்பிலேயே அமெரிக்கா ஆராய்வதாகவும், வேறு காரணங்கள் இல்லை என்றும் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரல குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips