மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்

Monday, 17 December 2018 - 20:14

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இன்று காலை சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்றது.

மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமையில் இருந்து நேற்றைய தினம்வரை முன்னெடுக்கப்படவில்லை.

கடந்த புதன்கிழமை 116 ஆவது நாளாக இடம் பெற்ற அகழ்வு பணி மற்றும் அளவிடும் பணிகளுக்கு பின்னர் அகழ்வு பணி இடம் பெறவில்லை.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றமையினால் இடம் பெறாதிருந்த அகழ்வு பணியனது இன்று 117 ஆவது நாளக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதை குழியில் இருந்து இதுவரை 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 276 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போது அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் முழுவதையும் அப்புறப்படுத்தும் பணிகள் அதிகளவில் இடம்பெற்றது.

அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அகழ்வு பணிகளின்போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மாதிரிகளை 'காபன்' பரிசோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் அளவில் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips