'ஏக்கிய ராஜ்ய' என்பதை 'ஒருமித்த நாடு' என கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பன மத்திய செயற்குழு கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கம் முன்னேற்றகரமான விடயங்களை தருகின்றபோது அதனை ஏற்றுக்கொண்டாலும், தங்களின் கோரிக்கைகளில் தாங்கள் திடமாக இருப்பதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன், உத்தேச அரசியல் அமைப்பிற்கு அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் ஆதரவளிக்க முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்.

Follow US

Most Viewed Stories