அரஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பிணையில் விடுதலை...

Tuesday, 26 February 2019 - 15:23

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88...
தெமட்டகொடை கனிய வள கூட்டுத்தாபனத்தின் தலைமையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியாகத்தருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் அவர் தாக்கல் செய்திருந்த பிணை மனு மீதான ஆராய்வின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 25 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும், 10 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல நீதிபதி அனுமதியளித்துள்ளார்.

அத்துடன் அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டையும் நீதிமன்றம் தம்வசப்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி கனிய வளக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் சிலர் காயமடைந்தனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips