கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ரத்கம வர்த்தகர்களை விடுவிக்க கப்பம் கோரப்பட்டமை குறித்து விசாரணை

Tuesday, 26 February 2019 - 19:53

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+
கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ரத்கம வியாபாரிகள் இருவரது உறவினர்களிடம் இருந்து கப்பம் கோரி தொலைப்பேசி அழைப்பை எடுத்தவர்கள் தொடர்பில் இன்று ரத்கம காவற்துறையில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், குறித்த வர்த்தகர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டதன் பின்னர் சடலங்களை எரிப்பதற்காக கொண்டு சென்ற வாகனம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த தினம் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவருக்கு தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்ட ஒருவர், கப்பமாக 5 லட்சம் ரூபாவை வழங்கினால் அவர்களை விடுவிப்பதாக கூறி இருந்தார்.

இந்த தொலைப்பேசி அழைப்புத் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவு, உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட காலி – ரத்கம வர்த்தகர்கள் இருவரின் உடையன என சந்தேகிக்கப்படும், வலஸ்முல்ல – மெதகம்கொடை – கனுமுல்தெனிய காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் சில இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த காட்டுப்பகுதிக்கு இன்று காலை வலஸ்முல்ல நீதவான் சென்று கண்காணித்தமையை அடுத்து அவை இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பட்டுள்ளன.

இதற்கு முன்னரும் குறித்த வியாபாரிகளுடையன என சந்தேகிக்கப்படும் வகையில் சில எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.

அவை டி.என்.ஏ பரிசோதனைக்காக இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips