நாட்டின் மேலும் சில பகுதிகள் நாளை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

Sunday, 03 January 2021 - 17:18

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
நாளை (04) அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலிலிருந்து மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்ர சில்வா தொிவித்துள்ளார்.

பொரள்ளை காவல்துறை அதிகாரத்திற்குட்பட்ட வனாத்தமுல்ல கிராம சேவகர் பிாிவு, மிாிஹானை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட தமிழ்நாடு என்பன நாளையுடன் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இதேவேளை பேலியகொடவத்தை, மீகஹவத்தை கிராம சேவகர் பிாிவு, ரோஹன விஹார மாவத்தை, நள்ளிகஹவத்தை, பூரணகொட்டுவத்தை ஆகிய பகுதிகளும் நாளை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.

அத்தோடு கிாிபத்கொட - விலேகொட வடக்கு கிராம சேவகர் பிாிவின் ஸ்ரீ ஜயந்தி மாவத்தையும் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips