இவ்வருடத்தில் மதுவரி சுற்றிவளைப்புகளால் 61 மில்லியன் ரூபா வருமானம்

Wednesday, 28 July 2021 - 21:53

%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+61+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
இந்த வருடத்தின் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியாக 19 ஆயிரத்து 641 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுசாரத்தை கைவசம் வைத்திருந்தமை, விநியோகித்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் 9 ஆயிரத்து 932 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்யப்பட்ட 993 இடங்களும் சட்டவிரோத மதுபானத்தை கைவசம் வைத்திருந்தமை மற்றும் விநியோகம் செய்தமை தொடர்பில் 399 சுற்றி வளைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த சுற்றி வளைப்புக்களின் போது 19 ஆயிரத்து 641 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் இரண்டாயிரத்து 602 பேர் பெண்கள் என மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் 61 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்க பெற்றுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips