மட்டக்களப்பு - களுதாவளை கிராமத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மிகவிரைவில் திறந்து வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்த்தான் தெரிவித்துள்ளார்.
இன்று (14) மாலை அங்கு விஜயம் மேற்கொண்ட அவர், விசேட பொருளாதார மத்திய நிலையத்தைப் பார்வையிட்டதுடன், இதுவரையில் திறக்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதனையடுத்து, பொருளாதார நிலையத்தை திறப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன், விரைவில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2017ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2018 இல் முடிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், அது இதுவரையில் திறந்து வைக்கப்படாமல் உள்ளது. இவ்வாறு அரசாங்கத்தின் நிதி வீணடிக்கப்படுவதென்பது பாரிய பிரச்சனையாகும்.
இதைத்தான் தற்கால இளைஞர்களும் தட்டிக் கேட்கின்றார்கள். எனவே நாம் இதனை விரைவாகத் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டியுள்ளது.
பொருளாதார நிலையம் திறக்கப்படும் பட்சத்தில் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரிதும் நன்மை கிடைக்க வேண்டும்.
எனவே, சில பழுதுபார்ப்பு வேலைகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகளை எமது அமைச்சினால் மேற்கொண்டு இதனை விரைவில் திறந்து வைக்கவுள்ளோம்.
இருந்த போதிலும் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் சிறப்பாக எவ்வாறு கையாளலாம் என்பது இப்பகுதி மக்களுடைய கையில்தான் உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
Latest News
க.பொ.த சாதாரண தர பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைப்பு:பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்!
Local
14 September 2026
குருநாகல் - மஹவ பகுதியில் தீ விபத்து: கணினி நிலையத்திற்குள் நேர்ந்த பெரும் சேதம்!
Local
14 September 2026
வெனிஸ் விழாவில் விருது பெற்ற ஆவணப்படம்: சொந்த நாட்டு இயக்குநர்கள் மீது பாயும் ‘தேசதுரோக’ குற்றம்!
Local
14 September 2026
மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
Local
14 September 2026
அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு!
Local
14 September 2026
வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்: பேராபத்தில் தெற்காசிய பிராந்தியம்! - ஆய்வில் தகவல்
Local
14 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து : சட்டபூர்வ பாதுகாப்புடன் 10,000 வேலைவாய்ப்புகள்
Local
14 September 2026
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Local
14 September 2026
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
Local
14 September 2026
எல் நினோ அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாரா? - அணுகுமுறையை மாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு
Local
14 September 2026