இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் - ஜனாதிபதி ரணில்

Friday, 19 April 2024 - 21:42

%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+
இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தமக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் அரசியல் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இளைஞர் சமூகத்தை வலுவூட்டுவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் பிராந்திய இளைஞர் நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த பிரதேச இளைஞர் மையங்கள் மூலம் இளம் தொழில் முனைவோரை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக வங்கிக் கிளைகளின் முதன்மை அலுவலர்கள் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips