அருட்தந்தை சிறில் காமினி CID இல் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

Friday, 19 April 2024 - 22:18

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+CID+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D+5+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த பேராயர் இல்லத்தின் பேச்சாளர், அருட்தந்தை சிறில் காமினி இன்று பிற்பகல் 2.30 அளவில் அங்கிருந்து வெளியேறினார்.

அவரிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க, அருட்தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் முன்னிலையாகியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில், அவர் ஏற்கனவே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில், மீண்டும் குறித்த திணைக்களத்தினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு, நாளை மறுதினத்துடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இந்த நிலையில், இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips