138 பந்துகளில் 350 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து வீரர்

Monday, 20 April 2015 - 10:30

138+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+350+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+
இங்கிலாந்து கழகங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் போட்டியொன்றில் வீரரொருவர் 350 ஓட்டங்களைப் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 21 வயதான லியாம் லிவிங்ஸ்டன் என்ற வீரரே இவ் ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளார்.

இதன்போது லியாம் லிவிங்ஸ்டன் 138 பந்துகளில் , 34 நான்கு ஓட்டங்கள் மட்டும் 27 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 350 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

நேன்ட்விச் அணி வீரரான லிவிங்ஸ்டன், கெல்டி அணிக்கெதிரான போட்டியிலேயே இவ் அபார ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்துள்ளார்.



மேற்படி போட்டியில் நேன்ட்விச் அணி 45 ஓவர்களில் மொத்தமாக 579 பெற்றுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கெல்டி அணி 79 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 500 ஓட்டங்களால் மோசமான தோல்வியைக் கண்டுள்ளது.

இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் யோக்ஷயர் அணிக்கெதிரான போட்டியில் 204 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். இதேபோல் இந்திய வீர ரான நிகிலேஷ் சுரேந்திரன் , 2008 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் 334 ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளார்.



லிவிங்ஸ்டன் பெற்ற 350 ஓட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டியொன்றில் வீர ரொருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டபோதிலும் இதற்கு முன்னர் குறைந்தபட்சம் இரு சந்தர்ப்பங்களில் இரு வீரர்கள் இதனைவிட கூடிய ஓட்டங்களைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானின் ஷாஹசட் மாலிக் லேங்லி பெரி அணிக்காக 2005 ஆம் ஆண்டு , மிடில்செக்ஸ் தமிழ்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 403 ஓட்டங்களைப் பெற்றுள்ளதாகவும் , யுனைட ட் கிரிக்கெட் கழகத்திற்காக சபிர் மொஹமட் 2006 ஆம் ஆண்டில் 353 ஓட்டங்களைப் பெற்றதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.







Exclusive Clips