கட்டுநாயக்க விமானநிலையத் தாக்குதல் - குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு எதிரான வழக்கை சட்டமா அதிபர் திரும்பப் பெற்றார்...

Monday, 28 November 2016 - 7:46

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...
கட்டுநாயக்க விமானநிலையம் மற்றும் விமானப்படை முகாம் மீது தாக்குதல் மேற்கொண்டு ரூபாய் 5 ஆயிரத்து 505 கோடி நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, விடுதலை புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை திரும்பப் பெறுவதற்கான சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் இந்த சம்பவத்திற்காக இரண்டு தற்கொலை அங்கிகள்,4 கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி ஒன்றை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டை ஏற்றுகொண்டதால் தற்போது அவர் சிறை தண்டனை அனுபவிக்கும் நிலையில், இந்த வழக்கை திரும்பப் பெற ஆலோசிப்பதாக சட்டமா அதிபர், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பேரேரா, இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு, தற்போதுவரை கைது செய்யப்படாமல் தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமானப்படை முகாம் மீது தாக்குதல் மேற்கொண்டமை, இதற்கு திட்டம் தீட்டியமை மற்றும் தாக்குதலில் ஆறு ஏர் பஸ்கள் மற்றும் ஆறு விமானங்கள் சேதமடைந்தமை உட்பட 311 அதி குற்றச்சாட்டுக்களின் கீழ்  5 பேருக்கும் எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலில் விமானப்படை வீரர்கள் 7 பேர் பலியானதுடன், மேலும் 24 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips