அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம்

Wednesday, 24 April 2024 - 20:03

%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
நடிகை அபர்ணா தாஸ் மற்றும் மலையாள நடிகர் தீபக் பரம்போல் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

பகத் பாசில் நடித்து வெளியான ஞான் பிராக்ஷன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ்.

இதைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்தப் படத்தின் மூலம் தமிழ் இரசிகர்கள் மத்தியில் பிரபலமான அபர்ணா தாஸ் டாடா படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்தத் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகர் தீபக் பரம்போல் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மஞ்சும்மல் போய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை அபர்ணா தாஸ் மற்றும் மலையாள நடிகர் தீபக் பரம்போல் இன்று காலை திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.







Exclusive Clips