ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 'செனல் 4' தொலைக்காட்சியில் வெளிப்படுத்தப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 'செனல் 4' தொலைக்காட்சியில் ஆவணப் படமொன்று வெளியிடப்பட்டது.
அதில் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவலாளரான ஹன்சீர் அஷாத் மௌலானா தெரிவித்திருந்தார்.
இதற்காக தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சாலேவுக்கும் தாக்குதல்தாரிகளுக்கும் இடையே தாம் சந்திப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேநேரம், இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரக்காந்தன் தமக்கு தாக்குதல்தாரிகளை அறிமுகப்படுத்தியதாகவும் தகவலாளரான ஹன்சீர் அஷாத் மௌலானா தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளனர்.
இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையில் குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் ஏ.சி.எம்.ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சூசா ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Latest News
மெக்காவை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது : சவூதி கூட்டுப்படை விளக்கம்!
Local
16 September 2026
களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!
Local
16 September 2026
வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு : இறுதி கெடு அறிவிப்பு - தவறினால் அபராதம் மற்றும் வட்டி!
Local
16 September 2026
ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!
Local
16 September 2026
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்!
Local
16 September 2026
ஈரான் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் பயணம்: சமரசத் தூதராகப் செயல்படுமா சீனா?
Local
16 September 2026
முதல் இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
Local
16 September 2026
இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை
Local
16 September 2026
அஞ்சல் மூல வாக்களிப்பு கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Local
16 September 2026
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இருபதுக்கு 20 தொடரை வென்றது இந்தியா: டெல்லி போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி!
Local
16 September 2026