General19 November 2024

கற்கோவளம் தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை அகற்றுமாறு உத்தரவு! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. 
 
இதன்படி, எதிர்வரும் 14 நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறும் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. 
 
இந்தநிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 
 
குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 
 
இந்தநிலையிலேயே, மூவருக்குச் சொந்தமான காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

 
No description available.
 
No description available.
No description available.
 
No description available.
No description available.
 
 
Related recommendation
Hiru TV News | Programmes