இந்திய மல்யுத்த வீர வீராங்கனைகள் ஆர்ப்பாட்டம்

Thursday, 19 January 2023 - 15:12

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரை பதவி நீக்குமாறு கோரி, 30க்கும் மேற்பட்ட மல்யுத்த வீர வீராங்கனைகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பதவியில் உள்ள பிரிஜ் பூஷன் ஷரண் சிங், மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தரும் விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் விளங்குகிறது.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா இதுவரை 7 பதக்கங்களை வென்றுள்ளது.

எவ்வாறாயினும், தம் மீதான குற்றச்சாட்டுக்களை இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மறுத்துள்ளார்.

அத்துடன், தம்மீதான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படும் பட்சத்தில், தாம் குறித்த பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.