கீரவாணியை பாராட்டிய ரிச்சர்ட் கார்ப்பெண்டர்!

Thursday, 16 March 2023 - 13:02

%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%21
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டுப் பாடலுக்காகச் சிறந்த அசல் பாடலுக்கான ஒஸ்கார் விருதை கீரவாணி வென்றார்.

விழா மேடையில் விருது வாங்கிய பின் அவர் பேசுகையில், “கார்ப்பென்டர்ஸ் இசையைக் கேட்டு வளர்ந்தவன் நான்,” என்று குறிப்பிட்டார்.

அவர் குறிப்பிட்ட கார்ப்பென்டர்ஸ் என்பது 1970களில் இசையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட அமெரிக்க இசைக்குழவாகும்.

இது 1968 ஆம் ஆண்டு கரண் கார்ப்பென்டர், ரிச்சர்ட் கார்பென்டர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இசைக்குழுவாகும்.

இந்த இசைக்குழு 1970, 80களில் மிகவும் பிரபலமாக இருந்தது. கரண் கார்ப்பென்டரின் எதிர்பாராத மரணத்தால் அந்த இசைக்குழு காலப்போக்கில் பிரபலத்தை இழந்தது.

இந்தநிலையில், ஒஸ்கார் விருது விழா மேடையில் அந்த இசைக்குழுவின் பாடலில் சில புதிய வார்த்தைகளுடன் பாடி பேசியிருந்தார் கீரவாணி.

இதனைப் பற்றிக் கேள்விப்பட்ட ரிச்சர்ட் கார்ப்பென்டர், இசையாலேயே கீரவாணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“சிறந்த அசல் பாடலுக்காக நீங்கள் ஒஸ்கர் விருது வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு எங்களது குடும்பம் சார்பாக சிறிய பரிசு,” என்று அவரே இசைத்துப் பாடிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.