பழம்பெரும் "ஜோன் விக்" நடிகர் லான்ஸ் ரெட்டிக் காலமானார்!

Saturday, 18 March 2023 - 7:41

%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%22%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%22+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21
பிரபல தொலைக்காட்சி நாடகமான "தி வயர்" மற்றும் "ஜோன் விக்" என்ற அதிரடி திரைப்படத் தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் லான்ஸ் ரெட்டிக் காலமானார்.

காலமாகும் போது அவருக்கு வயது 60 என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரெட்டிக்கின் மரணம் குறித்து சக நடிகை மியா ஹேன்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரெட்டிக் நேற்று (17) இயற்கை எய்தியதாக தெரிவித்துள்ளார்.

அவரது மரணம் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட்டுள்ள TMZ இணையத்தளம், லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோ சிட்டி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ரெடிக் தனது இறுதி மூச்சை விட்டதாகத் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், "ஜோன் விக்" அதிரடி திரைப்படத் தொடரின் நான்காவது பாகம் எதிர்வரும் மார்ச் 24 திகதி வெளிவரவுள்ள தருணத்தில், சில நாட்களுக்கு முன்னதாகவே நடிகரின் மரணம் நிகழ்ந்தமை கலையுலகில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.